மௌனமான நேரம்

 

Thursday 19 August 2010

ஆசை மேல் ஆசை...

Posted by மௌனமான நேரம் | Thursday 19 August 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
ஆசை மேல் ஆசை...


மாசற்ற மழலையாய்
மகிழ்ந்திருந்த நேரத்தில்
தள்ளி விழுந்த பந்தெடுக்க
தவழ்ந்திட ஆசை ..

அழகழகாய் தவழ்ந்தோட
ஆரம்பித்த அந்நாளில்
அடி மேல் அடி எடுத்து
அதிர்ந்து நடக்க ஆசை ..

தத்தி தடுமாறி
தடம் பதிக்கும் நாட்களில்
பெரிய அண்ணன் அக்கா போல
பாய்ந்தோட ஆசை ...

ஆடி ஓடி விளையாடி
ஆர்ப்பரிக்கும் வேளையில்
புத்தக பை தூக்கி
பள்ளி செல்ல ஆசை ..

புத்தகங்கள் கனம் பார்த்து
பயந்திருந்த சமயத்தில்
வேலை செல்லும் பெரியவர் போல்
வீறு நடை போட ஆசை ..

இன்று விடியலில் எழுந்து
இமைக்காது உழன்று
இல்லை என்பதில்லாத
இந்நிலையில் இருக்கையில் ..

பளிங்கு நிலா காட்டி
பாலூட்டிய அன்னையும் ..
விழுந்து எழுந்து நடை பயில
வேகம் தந்த தந்தையும்..

பால் மணம் மாறாத
பசுமையான மனமும்..
நாளைய நாளை பற்றி நினையாத
நல்லினிய நிலையும் ..

திரும்பி கையில் கிட்டாதா
தினம் இனிமை சேராதா ..
இதுவரையில் ஆசைப்பட்டது
இம்மெனும் முன் நடந்தது ..

இத்தனை தூரம் கடந்த பின்
இன்று வந்த இந்த ஆசை ..
எத்தனை கொடுத்தாலும்
எந்தனுக்கு கிட்டிடுமா ??

Tuesday 17 August 2010

சுட சுட பிரயாணி!!!

Posted by மௌனமான நேரம் | Tuesday 17 August 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
சுட சுட பிரியாணி தயார் பண்ணுவது எப்படி? வீடியோ பார்த்து கற்று கொள்ளுங்கள்!!!

செய்து பார்த்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

(நான் கற்று கொண்டது இப்படி தான்!!)



வெளிச்சத்திற்கு வரும் முன்....

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ஒரே இருட்டாயிருக்கே.... சுத்தி முத்தி ஒண்ணுமே தெரியலியே..

ஏதோ சத்தம் மட்டும் கேக்குது...

குரல் 1: எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. இனி நீ ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். நல்ல சாப்பிடணும். உடம்ப பாத்துக்கணும். உன்ன பாத்துக்கறது மட்டும் தான் என் வேலை இனி.

குரல் 2: அழுகை...

குரல் 1: எப்போவும் சந்தோஷமா இருக்க சொல்றேன். நீ அழறியா??

குரல் 2: இல்லங்க இது சந்தோசம்.. சரி கொழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்??

குரல் 1: நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்.. பையனா இருந்தா சுந்தர். பொண்ணாயிருந்தா சுந்தரி.

குரல் 2: ம்ம்.. :) சரி.. அம்மா அப்பா ன்னு கூப்பிட சொல்லலாமா இல்லை டாட் மாம் ன்னா?

குரல் 1: அம்மா அப்பாவே சொல்லலாம்.. எனக்கு அதுதான் பிடிக்கும். உனக்கு?

குரல் 2: எனக்கும் தான்.

அம்மா.. அப்பா வா... ம்ம்.. என்னக்கும் பிடிச்சிருக்கு... நீங்க எப்படி இருப்பீங்க? என்னக்கு உங்கள பாக்கணும்னு ஆசையா இருக்கு..

2 மாதங்களுக்கு பின்....

குரல் 1: மெதுவா மெதுவா.. ஸ்கேன் சிம்பிள் ஆ முடிஞ்சிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார். நானும் கூட இருக்கலாமாம். என்னக்கு ஒரே குஷியா இருக்கு.

குரல் 2: என்னாகும் தாங்க. ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு.

குரல் 1: சீ சீ. .. பயப்படாதே.. சும்மா டெஸ்ட் தானே.

நீங்க என்னை பாக்க போறீங்களா..... ம்ம்.. எனக்கு ரொம்ப ரொம்ப குஷியா இருக்கு...

4 மாதங்களுக்கு பின்..

குரல் 1: என்னங்க குழந்தை உதைக்குதுங்க.. ஹ ஹ ஹ ஹி.. ஹி .. ஹி...

குரல் 2: எங்க ... எங்க.... அதுக்குள்ள வா... பையன் தான் போல... இப்போவே குறும்பு பாரேன்...

குரல் 1: உங்கள மாதிரி தானே இருக்கும்..

அம்மா.. அப்பா... நான் தான்... சந்தோசத்துலே குதிச்சிட்டு இருக்கேன்..... ஹ ஹ ஹ ஹ ஹ...

சில நாட்களுக்கு பிறகு..

குரல் 1: என்னங்க ரொம்ப தல சுத்துது... (மயங்கி சாய்கிறாள்.)

குரல் 2: என்னம்மா... என்ன ஆச்சி????

பலவேறு சத்தங்கள்....

குரல் 1: டாக்டர் .. என்னாச்சி டாக்டர்??

குரல் 2: சாரி சார். அபோர்ஷன் ஆயிடிச்சி..

குரல் 1: ரொம்ப பத்திரமா தானே இருந்தோம்... எப்படி. ..?

குரல் 2: சரியான காரணம் தெரியலே... மருந்து எழுதி தரேன் சரியா சாப்பிட சொல்லுங்க. அவங்க கூடவே இருங்க...

(விசும்பலோடு ) அப்பா.... அம்மா..... உங்களை பாக்கணும் உங்க கூட விளையாடனும்னு நினைச்சேனே.... முடியவே முடியாதா.... நான் என்ன பண்ணுவேன்... !!!!!!!!!!!!!!!!!

யார் இது?

Sunday 1 August 2010

இயற்கையால் நாசமாய் போவீர்கள்!!

Posted by மௌனமான நேரம் | Sunday 1 August 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
இயற்கையால் நாசமாய் போவீர்கள்!!

இன்று இணைய தளங்களை புரட்டி பார்த்துக்கொண்டு இருந்தபோது சில வரிகள் என்னை ரொம்பவும் வேதனை பட வைத்தது.....

முதலாவது,

"எங்களை கொன்றுவிடுங்கள்: ஈழத்தமிழர்கள் கண்ணீர்" - இது செய்தித்தாள் செய்தி.

அந்த வரிகள்......

"கேட்காமல் கொன்றீர்கள் ..இப்பொழுது அவர்களே கேட்கிறர்கள், கொன்று விடுங்கள்.....சிறிலங்காவுக்கு உதவிசெய்த அத்தனை நாடுகளும் இயற்கையால் நாசமாய் போவீர்கள்.....பார்க்கதானே போகிறோம்...."

இரண்டாவது,

இந்த வீடியோ காட்சியை உங்களில் பலர் பார்த்து இருக்கலாம். இது "விஜய் டிவி உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" நிகழ்ச்சியில் பிரேம்கோபாலின் நடனம்....

அதில், பிரேம்கோபாலின் வரிகள் "இந்த முடிவுல சமாதானத்தை வேண்டுறோம். சமாதான புறா ஒன்னு அனுப்புவோம் இன்னு புறா ஒன்னு குடுங்க இன்னு கேட்டேன்.. அப்போ இவங்க சொல்லிட்டாங்க, தர மாட்டோம் இன்னு, அட பாவிகளா! இங்கே மிருகவதைச் சட்டம்...!!! ஆனால், அங்கே உறவுகள்....."

(அவரின் நடனத்தைப் பார்க்க/வரிகளை கேட்க , கீழ்கண்ட லிங்கை கிளிக்கவும்.)