மௌனமான நேரம்

 

Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Thursday, 7 October 2010

நண்பனின் மனைவி

Posted by மௌனமான நேரம் | Thursday, 7 October 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்

சாயங்காலம் சரியா 4 மணி இருக்கும்... 

"டேய் கணேஷ், அவன் என்னை திட்டிட்டு போயிட்டான்டா மச்சான்"

பக்கத்துக்கு வீட்டு  செல்லதுரை அலறி அடிச்சி, கணேஷ் வீட்டை நோக்கி ஓட,

"எவன்டா மச்சான்"

- இன்னு கணேஷ் மாடி படி குதிச்சு ஓட, தெருவே அமர்களமாகி போச்சு...

கணேஷ், செல்லதுரை இரண்டு பேரும் சின்ன வயசு நண்பர்கள்.....மில்டரி- ல இருந்து செல்லதுரை வந்து கிட்ட தட்ட ரெண்டு வருஷம் ஆச்சு.....

அன்று,

"ஒரே தட்டுல சாப்படுற நாய்களா, இப்படி நான்டுகிட்டு  நிக்குதுங்க..!"

- பெருசு ஒன்னு புலம்பிட்டு  போறது கேட்டு...

"யோவ் பெருசு, என்ன புலம்பிட்டு?"

பக்கத்துக்கு வீட்டு ராமசாமி பொண்டாட்டி கேட்க...

"இல்லம்மா.....இந்த மாடி வீடு செல்லதுரை இல்ல......"

"...நல்லத்தான இருந்தான், என்ன ஆச்சு அவனுக்கு ...."

"அவனுக்கு ஒன்னும் இல்ல புள்ள ....."

"அப்பறம் என்னவாம்?"

"எப்பவும் ரெண்டு நாயும் சேந்து, எவன்கிட்டையாவது  மல்லுக்கு நிக்கும்...இன்னக்கு ஒன்னுக்கு ஒன்னு வேட்டிய மடிச்சுகிட்டு......"

"...."

"புள்ள, என்ன அப்படி பாக்குத....நிசம் புள்ள..."
"சொல்லுத கேளு....."


 "டேய் கணேஷா!!.....கணேஷா!!...."  -   செல்லதுரை கூப்பிட,

"என்னடா மாப்பிள்ளை!..." இன்னு கணேஷ்....

"மச்சான்,  கொஞ்சம் கட்டிங்-டா மச்சான்..வா டவுன் போலாம்....."

"இதோ வாரேண்டா மாப்பிள்ளை!..."

சொன்ன கணேஷ், பட பட இன்னு மாடி படி ஏற,

"என்னெங்க எங்க அவசரமா? ...."

"இதோ டவுன்  வர.."

" என்னெங்க, கொஞ்சம் வீட்டுல இருக்க கூடாதா?"

"இல்லடி  இதோ வந்துடுறேன்..."

" ...ம்ம்"

" நீங்க வீட்லேயே கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிடுங்க ...."

" அப்போ செல்லதுரை ....?"

"...ம்ம், சரி... ஆனா....!!"

"என்னடி ஆனா...?"

"ஆனா....!! லிமிட்டா இருக்கணும்"...

"டேய் கணேஷ் ....இன்னைக்கு நம்ம வீட்டுல பார்ட்டி...."

செல்லதுரை  சொல்ல,கணேஷ்மும் தலைய ஆட்ட ......

பார்ட்டி ஆரம்பம் ....

"......"

"......"

" கொஞ்சம் போதும்டா மச்சான்..."

" இல்லடா மாப்பிள்ளை, இன்னும் ஒரு ரவுண்டு ...."

"... ருக்கு ....ருக்கு .."   கணேஷ் கூப்பிட,

கணேஷ் பொண்டாட்டி,

".. என்னெங்க.."

".. கொஞ்சம் ஊறுகாய் குடு புள்ள ...."

ருக்கு ஊறுகாய் கொண்டு வைக்க, செல்லதுரை ருக்கு கையே பார்த்திட்டு இருந்தான் ...

அடுத்த ரூம்க்கு ருக்கு போயிட்டா...

" என்னடா மச்சான், எப்படி பார்க்கற?"

" இல்லடா , ஒன்னும் இல்ல..."

அடுத்த ரவுண்டுமும் ஓவர் ......


"... ருக்கு ....ருக்கு .." கணேஷ் மறுபடியும் கூப்பிட,

".. என்னெங்க.."
 
".. இன்னும் கொஞ்சம் ஊறுகாய் குடு புள்ள ...."


ருக்கு ஊறுகாய் கொண்டு வைக்க, செல்லதுரை ருக்கு கையே திரும்ப திரும்ப பார்த்திட்டு இருந்தான் .......

திடீருன்னு செல்லதுரை, ருக்கு கையை பிடிச்சு இழுக்க,  அழுதுகிட்டே அடுத்த ரூம்க்கு ருக்கு போயிட்டா...ருக்கு .....

 " வெளிய போடா நாயே!!!" .... கணேஷ் கத்த....

"ஆரம்பிச்ச சண்டை,  ஒன்னுக்கு ஒன்னு வேட்டிய மடிச்சுகிட்டு மல்லுக்கு நிக்குதுக....."  இன்னு பெருசு சொல்லிகிட்டே நடக்க,

"என்ன பொழப்பு .."  இன்னு ராமசாமி பொண்டாட்டி சொன்னது நாம காதுக்கு கேட்டுச்சு....

Tuesday, 17 August 2010

வெளிச்சத்திற்கு வரும் முன்....

Posted by மௌனமான நேரம் | Tuesday, 17 August 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
ஒரே இருட்டாயிருக்கே.... சுத்தி முத்தி ஒண்ணுமே தெரியலியே..

ஏதோ சத்தம் மட்டும் கேக்குது...

குரல் 1: எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. இனி நீ ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். நல்ல சாப்பிடணும். உடம்ப பாத்துக்கணும். உன்ன பாத்துக்கறது மட்டும் தான் என் வேலை இனி.

குரல் 2: அழுகை...

குரல் 1: எப்போவும் சந்தோஷமா இருக்க சொல்றேன். நீ அழறியா??

குரல் 2: இல்லங்க இது சந்தோசம்.. சரி கொழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்??

குரல் 1: நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்.. பையனா இருந்தா சுந்தர். பொண்ணாயிருந்தா சுந்தரி.

குரல் 2: ம்ம்.. :) சரி.. அம்மா அப்பா ன்னு கூப்பிட சொல்லலாமா இல்லை டாட் மாம் ன்னா?

குரல் 1: அம்மா அப்பாவே சொல்லலாம்.. எனக்கு அதுதான் பிடிக்கும். உனக்கு?

குரல் 2: எனக்கும் தான்.

அம்மா.. அப்பா வா... ம்ம்.. என்னக்கும் பிடிச்சிருக்கு... நீங்க எப்படி இருப்பீங்க? என்னக்கு உங்கள பாக்கணும்னு ஆசையா இருக்கு..

2 மாதங்களுக்கு பின்....

குரல் 1: மெதுவா மெதுவா.. ஸ்கேன் சிம்பிள் ஆ முடிஞ்சிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார். நானும் கூட இருக்கலாமாம். என்னக்கு ஒரே குஷியா இருக்கு.

குரல் 2: என்னாகும் தாங்க. ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு.

குரல் 1: சீ சீ. .. பயப்படாதே.. சும்மா டெஸ்ட் தானே.

நீங்க என்னை பாக்க போறீங்களா..... ம்ம்.. எனக்கு ரொம்ப ரொம்ப குஷியா இருக்கு...

4 மாதங்களுக்கு பின்..

குரல் 1: என்னங்க குழந்தை உதைக்குதுங்க.. ஹ ஹ ஹ ஹி.. ஹி .. ஹி...

குரல் 2: எங்க ... எங்க.... அதுக்குள்ள வா... பையன் தான் போல... இப்போவே குறும்பு பாரேன்...

குரல் 1: உங்கள மாதிரி தானே இருக்கும்..

அம்மா.. அப்பா... நான் தான்... சந்தோசத்துலே குதிச்சிட்டு இருக்கேன்..... ஹ ஹ ஹ ஹ ஹ...

சில நாட்களுக்கு பிறகு..

குரல் 1: என்னங்க ரொம்ப தல சுத்துது... (மயங்கி சாய்கிறாள்.)

குரல் 2: என்னம்மா... என்ன ஆச்சி????

பலவேறு சத்தங்கள்....

குரல் 1: டாக்டர் .. என்னாச்சி டாக்டர்??

குரல் 2: சாரி சார். அபோர்ஷன் ஆயிடிச்சி..

குரல் 1: ரொம்ப பத்திரமா தானே இருந்தோம்... எப்படி. ..?

குரல் 2: சரியான காரணம் தெரியலே... மருந்து எழுதி தரேன் சரியா சாப்பிட சொல்லுங்க. அவங்க கூடவே இருங்க...

(விசும்பலோடு ) அப்பா.... அம்மா..... உங்களை பாக்கணும் உங்க கூட விளையாடனும்னு நினைச்சேனே.... முடியவே முடியாதா.... நான் என்ன பண்ணுவேன்... !!!!!!!!!!!!!!!!!

யார் இது?

Wednesday, 26 August 2009

மனசு ஒத்து பிரிஞ்சிடலாம்!!!!!!

Posted by மௌனமான நேரம் | Wednesday, 26 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
நான் சுகந்தன். ஒரு வக்கீல். தெரிஞ்சோ தெரியாமலோ , விரும்பியோ விரும்பாமலோ நான் ஒரு விவாகரத்து specialist ஆகிட்டேன். இத சொல்றதுக்கு எனக்கு சத்தியமா பெருமை இல்ல. ஆனா இந்த நிமிஷம் வரை வருத்தமாவும் இல்ல. இப்போ திடீர்னு ஏன் வருத்தம்? எல்லாத்துக்கும் காரணம் என உயிர் நண்பன் வினோத் தான். வினோதினியும் தான்.

நான், வினோத், வினோதினி மூவரும் ஒரே ஊரில் பிறந்து, ஒரே தெருவில் உருண்டு புரண்டு, ஒரே பாலர் பள்ளியில் சேர்ந்து, சேர்ந்து படித்து, சேர்ந்து விளையாடி, சேர்ந்து சண்டை போட்டு, ஒரே மாங்காயை காக்கை கடி கடித்து, இப்படி சேர்ந்து சேர்ந்து வளர்ந்தோம். ஆனால் மேற்படிப்பு என்று வரும்போது நான் வக்கீல் ஆனேன். அவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆனார்கள். இதற்கிடையில், அவர்களுக்குள்ளே காதலும் வளர்ந்தது.

எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் அவர்களை பார்த்து ஆச்சரியப்படாத, பொறாமைபடாத ஆளே கிடையாது. பெயரிலிருந்து செயல் வரை எல்லாவற்றிலுமே அப்படி ஒரு பொருத்தம். அவர்கள் இருவருக்கும் பெரிய சண்டை வந்து கூட நாங்கள் பார்த்தது இல்லை. ரெண்டு பெரும் மாறி மாறி வினும்மா என்று கொஞ்சுவதை எல்லோரும் கேலி செய்தாலும் ரொம்ப ரசிப்போம் என்பது தான் உண்மை.

அவர்கள் பெற்றோருக்கும் இவர்கள் காதலில் எதிர்ப்பு ஒன்றும் இருக்கவில்லை. சாதி, மதம், அந்தஸ்து என்று எல்லாவற்றிலுமே ஒரே நிலையில் இருந்தது தான் காரணமோ என்னமோ தெரியவில்லை. எது எப்படியோ, ஆசைப்பட்டு காதலித்து , ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணமும் பண்ணி... ஹ்ம்ம்.. முன்னெல்லாம் ஒரே ஊரில் இருந்ததால் எப்போதும் சேர்ந்தே இருந்தோம். வேலை என்று வந்த பிறகு வெவ்வேறு ஊர்களில் இருக்க வேண்டியது வந்தது. ஆனாலும், கண்டிப்பாக 2 நாளுக்கு ஒரு முறையாவது பேசிவிடுவோம். ஆனால் அவர்கள் கல்யாணத்திற்கு பிறகு அது மாதம் ஒரு முறை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று ஆகி இப்போ இன்னும் குறைந்து விட்டது.

அந்த வினோத் தான் இன்று என்னை பார்க்க வந்திருக்கிறான்.

'டேய்.. ரொம்ப நாள் ஆச்சி பாத்து.. போன் பண்ணனும்னு நினைக்கிறேன்,,, ஆனா பண்ண முடியறதில்லை.. ரொம்ப சந்தோஷம்டா ... '..

நானே பேசிகொண்டிருந்தேன்... இப்போதுதான் கவனித்தேன்.. அவன் முகம் வாடியிருப்பதை..

'ஏன்டா எதாவது பிரச்சனையா? வினு எங்கே? வரலியா? என்ன??' பதட்டம் தொற்றி கொண்டது.

'அவ வரமாட்டா!!'

' அவளுக்கு உடம்புக்கு எதாவது????'

'உடம்பெல்லாம் கொழுப்பு அதிகமானது தவிர நல்லா தான் இருக்கா ...'

'என்னடா இந்த வயசிலேயே cholestrol-எ . டாக்டர் கிட்ட போனீங்களா ?'

'ஏன்டா நீ வேற... கல்லு மாதிரி நல்லா தான் இருக்கா...'

'சண்டையா?

'ஒத்து வராதுடா.. அதான் உன்கிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்'

'என்ன விளையாடரியா? '

'இல்லடா சீரியஸ் தான் பேசறேன். ஒத்து வராதுன்னு ஆயிடிச்சி. அதான் ரெண்டு பெரும் மனசு ஒத்து பிரிஞ்சிடலாம்னு...'

நானும் அவன்கிட்ட எவ்வளவோ பேசி பார்த்தேன். அவன் கொஞ்சம் கூட பிடி தளர்த்தவே இல்ல. நான் நொந்து போனது தான் மிச்சம். எவ்வளவு கேட்டும் 'ஒத்துவராது' ன்னு மட்டும் தான் சொல்றான். ஏன் ன்னு சொல்ல மாட்டேங்கறான்.

'சரி. நீ இப்போ கிளம்பு. நான் நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்'.

'நான் நாளைக்கு லீவ் தான் 10 மணிக்கு வா, அப்போ தான் அவ இருக்க மாட்டா.'

தலையில் அடிச்சிக்கலாம் போல இருந்தது எனக்கு. அவனை அனுப்பிட்டு நேரா கிளம்பி விநோதினியை பாக்க போனேன். ஒரு மணி நேர பயணம். ஆனால் போன் இல் பேசுவதை விட நேரில் பேசுவதுதான் நல்லது என்று தோணியது. எப்போதும் கலகலப்பாக சிரித்த முகத்துடன் வரவேற்கும் வினோதினி வேண்டா வெறுப்பாக பார்த்தாள்.

'எப்படி இருக்கே வினோதினி?'

'இருக்கேன்... '

'நேத்து வினோத் வீட்டுக்கு வந்திருந்தான்.'

'ம்ம்...'

'என்ன பிரச்சனைன்னு கேட்டேன். ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறான். '

விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். பிரச்சனை இதுதான். வேலைக்கு போகும் வரை இருவருக்கும் நிறைய நேரம் இருந்தது.. பேச, புரிந்து கொள்ள... இப்போது ரெண்டு பேரும் அவரவர் வேலையில் பிஸி ஆகி விட்டதால் பேச கூட நேரமில்லை. சேர்ந்திருக்கும் கொஞ்ச நேரமும் சின்ன சின்ன பிரச்சனை.. அதை தீர்க்க நேரமில்லாமல் இப்போது பூதாகரமாக ஆகிவிட்டிருக்கிறது..அவளை சமாதான படுத்திவிட்டு கிளம்பினேன்..

அடுத்த நாள் நன்றாக யோசித்து வினோத்துக்கு போன் பண்ணினேன். ரொம்ப நேரம் பேசி கஷ்டப்பட்டு அவனை சம்மதிக்க வைத்தேன்.

நான் சொன்னது இதுதான். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது இருவரும் சேர்ந்து இருக்கவேண்டும், அந்நேரம் எதாவது ஒரு காரியம் சேர்ந்தே செய்ய வேண்டும். அந்த நேரத்தில் பள்ளி காலத்தில் எப்படி பேசினார்களோ அதை போல் பேசி கொள்ள வேண்டும். திருமணம் ஆனதை அடியோடு மறந்து விட வேண்டும்.

விநோதினிக்கும் போன் பண்ணி இதையே சொன்னேன். 'இதென்ன சிறுபிள்ளைத்தனம்' என்றாள். கடைசியில் ஒரு வழியாக சம்மதித்தாள். இது நடந்து ஒரு வாரமாக அவர்கள் இருவரும் என்னிடம் பேசவே இல்லை. நான் கூட என் master plan failure ஆகி விட்டதோ என்று நினைத்தேன்.

அவர்களை பிரித்து வைக்க மனம் ஒப்பவில்லை. ஓடி போயிடலாம் போல இருக்கு. சரி எதுக்கும் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன்.

ஆச்சரியம்... ரெண்டு பேருமே வீட்டில் இருக்காங்க ... ஆண்டவனை வேண்டிகிட்டே உள்ளே போனேன். ரெண்டு பேர் முகத்தையும் பாத்து ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலே. சரி அவங்களே ஆரம்பிக்கட்டும் என்று பேசாமல் இருந்தேன்.

'ரொம்ப தேங்க்ஸ் டா...'

ரெண்டு பேரும் சேர்ந்து தான் சொன்னாங்க.

'எங்களுக்குள்ள இருந்தது பிரச்சனை இல்லை ...மனதளவில் தூரம் தான் இருந்தது.. இப்போ ஒரு வாரமா எவ்வளவு வேலை இருந்தாலும் நீ சொன்ன மாதிரி ஒரு மணி நேரம் சேர்ந்து இருக்கிறோம்..சும்மா பேசிட்டு.... சிரிச்சிட்டு. .. இவ்வளவு நாள் எத இழந்திருக்கோமோன்னு இப்போ புரியுது. நாங்க கொஞ்ச நேரம் சேர்ந்து spend பண்ண ஆரம்பிச்ச பிறகு முன்னாடி வந்த பிரச்சனைகள் எதுவுமே வரலே. அப்படியே வந்தாலும் பேசி தீத்துக்கறோம். 2 வாரம் லீவ் எடுத்துட்டு எங்கேயாவது போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம்.

எல்லாமே உன்னாலே தாண்டா.. '

நான் ஒண்ணுமே சொல்லலே..

இப்போ தான் ஒரு நிம்மதி மனசுலே. காரணமே இல்லாம பிரிய இருந்த ஜோடியை சேர்துட்டோம்னு ஒரு நிம்மதி எனக்கு.

உறவு பலப்பட மனசு விட்டு பேசறது எவ்வளவு முக்கியம்.. இது புரிஞ்சாலே பாதி பிரச்சனை தீந்துடும்.

Tuesday, 4 August 2009

காதல் தீ!

Posted by மௌனமான நேரம் | Tuesday, 4 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
அவள் அவனது தோளில் சாய்ந்து இருந்தாள். அவன் அவளது தோளை மென்மையாக பிடித்து அணைத்து இருந்தான். காற்று சிலுப்பிய அவள் கேசத்தை கொஞ்சி கோதிகொண்டிருந்தான்.

அவர்கள் இருவருக்கும் இப்படி லால் பாகில் , அந்த நீர் தேக்கத்தின் அருகில் உள்ள இருக்கையில் அணைத்தபடி அமர்ந்து , அமைதியாக இயற்கையை ரசிக்க பிடிக்கும்.

அவள் விழி மூடி, முகத்தில் மோதும் தென்றலை ரசித்து கொண்டிருந்தாள். அவன் அவள் முகம் பார்த்து பார்த்து ரசித்து கொண்டிருந்தான்... 'என்னவள்......!!!'

இன்று அவளுக்கு பிறந்த நாள். அவளுக்கு பிடித்த நீல நிறத்தில் , ரோஜா பூக்களை தெளித்து போல் ஒரு சில்க் காட்டன் புடவை பரிசளிதிருந்தான் . அவளுக்கு காட்டன் புடவை தன் ரொம்ப இஷ்டம்.


Bidaroo.com
'சுமீம்மா.... இந்த புடவையில் நீ தேவதை மாதிரி இருக்கே .... தெரியுமா...'

'எந்த ஊர் தேவதைடா நீல கலர் புடவ கட்டும்???' சிரித்து கொண்டே கேட்டாள்.

'என் தேவதை... எங்க ஊர் தேவதை..... ' என்றான் அவளை ஆசையாக பார்த்து கொண்டே...

'பாக்றத பாரு...' ... அப்படியொரு வெட்கம் அவளுக்கு.

'அம்மாடிய்... என்னடி இப்படி வெக்க படறே.... '

'சீ.. போடா... நான் ஒன்னும் வெக்கபடலே....' சொன்னாலும் வெட்கம் கூடியதை கண்கள் காட்டி கொடுத்தது...

'நேரமாச்சி.. போலாமா?....'

'போகவே மனசில்லடா... இப்படியே இங்கயே...உன் கூடவே இருக்கணும் போல இருக்கு. ...'

'ம்ம்... இருக்கலாம்தான்..ஆனா கேட் பூட்டிருவான்களே ... பரவயில்லையா?? ' குறும்பாக சிரித்தாள்.

செல்லமாக தலையில் குட்டி விட்டு... அழகாக கன்னத்தில் முத்தமிட்டான்...

'போகலாம்.'.....

சொல்லிக்கொண்டே அருகிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள் அந்த எழுபது வயது இளஞ்சோடிகள்....

Sunday, 26 July 2009

காதலை ஏற்கிறேன்!

Posted by மௌனமான நேரம் | Sunday, 26 July 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்

ஆறு மணிக்கு நான் கோவிலுக்கு வருவது தெரிந்து நீ ஐந்தரைக்கே ஆண்டவனை பார்க்க ஆஜரானாய். அது பிடித்தது.




என்னிடம் இரண்டு நிமிடங்கள் பேச நீ இரண்டு மைல் பயணபட்டு வந்தாய். அது பிடித்தது.

நான் கொந்தளிக்கும் கோபத்துடன் வந்தாலும், ஒரு பார்வையில் என்னை சிரிக்க வைத்தாய். அது பிடித்தது.


மனதில் பட்டதை உன்னிடம் மறைக்காமல் பேச மறைமுகமாக ஆதரவு தந்தாய். அது பிடித்தது.


என் தோழர்களிடமும் தோழிகளிடமும் அடிக்கடி பேசும்போது, வெளியே சொல்லாமல் உள்ளுக்குள் கொஞ்சம் பொறாமை கொண்டாய். அது பிடித்தது.


உன் மீது நான் கொஞ்சம் பாசமாய் சொன்ன இரண்டு வார்த்தை கேட்டு உன் கண்ணில் பெரிய திருப்தி. அது பிடித்தது.


எனக்கு பிடித்த நிறத்தில் நீ உடை உடுத்தி, அது எனக்கு புரிய வேண்டும் என்று நீ பட்ட பாடு. அது பிடித்தது.


என்னை பேச விட்டு, நான் சொல்லும் ஒவ்வொன்றையும் ரசித்து கேட்டாய். குழந்தைதனமான புலம்பல்களையும் கூட. அது பிடித்தது.


நான் தெரியாமல் செய்யும் சின்ன தவறை கண்டிப்பாக கண்டிப்பாய். அது பிடித்தது.


உன்னிடம் பிடிக்காதது எத்தனை இருந்தாலும் உன்னுடன் இருக்கும்போது அது எல்லாமே மறந்து விடுகிறது. அது பிடித்தது.


ஆயிரம் பேர் கூட்டத்திலும், அனாயாசமாய் என்னை கண்டுபிடிப்பாய். அது பிடித்தது.


என் குடும்பத்துடன் ஜென்ம ஜென்மமாய் பழகியது போல் அழகாக ஐக்கியமானாய். அது பிடித்தது.


250x250



என்னை ஒரு நாள் பார்க்காததால் வாடிய முகத்துடன் அடுத்த நாள் அவசரமாக நீ ஓடி வந்தாய். அது பிடித்தது.

காதலிக்கிறேன் என்று சொல்லாமல் என்னை கல்யாணம் செய்ய வேண்டும் என்று நீ நேற்று சொன்னாய். அது பிடித்தது.

இத்தனை 'பிடித்ததுகளின்' மொத்தமான உன்னை ரொம்ப பிடித்தது.

உன் காதலை ஏற்கிறேன்.

உன்,
ஓவியா....