Friday, 14 August 2009
இந்தியா, பிரிட்டன் இடையே சிக்கன் டிக்கா மசாலாக்கு சண்டை??
இந்தியா பாரம்பரிய உணவு வகைகளில் சிக்கன் டிக்கா மசாலாக்கு என்று தனி ஒரு இடம் உண்டு. ஆனால் அது தங்களுடைய பாரம்பரிய உணவு என்று பிரிட்டன் சண்டை போடுகிறது. சிக்கன் டிக்கா மசாலா விவகாரம் இன்னும் கொஞ்சம் நாளில், காரம் ஆக போகுது போங்க!!!
அது இருக்கட்டும், உங்களுக்கு சிக்கன் டிக்கா மசாலா தயாரிக்கும் முறை தெரியுமா? தெரியாதவங்க மேலும் படிங்க...
தேவையான பொருட்கள்

மல்லி தூள்- 3 டீஸ்பூன்
சீரகம் பொடி- 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு- 3 டீஸ்பூன்
மிளகாய் பொடி- 1 டீஸ்பூன்
முதலில் தக்காளி , வெங்காயம், கேப்சிகம் ஆகியவற்றை சதுரமாக சற்று பெரியதாக வெட்டி கொள்ளவும். தக்களியை முந்திரி பருப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பவுலில் மஞ்சள்பொடி,தயிர் ,லெமன், உப்பு, சிறிதளவு எண்ணை போட்டு, மிளகாய் பொடி, கசூரிமேத்தி பவுடர்,மல்லிதூள் ,இஞ்சிபூண்டு ஆகியவற்றை கொடுத்துள்ள அளவில் பாதி எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் கலந்து வெட்டி வைத்துள்ள தக்காளி , வெங்காயம், கேப்சிகம் ஆகியவற்றில் சிறிதளவும், மீதியை சிக்கனிலும் பிரட்டி வைக்கவும்.
ஒரு நான் ஸ்டிக் பானில் சிறிதளவு எண்ணை விட்டு சிக்கனை அதில் போடவும்.சிறிதளவு வெந்தவுடன் தக்களி, வெங்காயம், கேப்சிகம் ஆகியவற்றையும் அதில் சேர்க்கவும். சிறுதீயில் நன்கு வேக வைக்கவும். பிறகு வெங்காயம் மல்லி இலையை பொடியாக வெட்டி வைக்கவும். பிறகு இன்னொரு பானில் எண்ணை விட்டு பட்டை ஏலம் போடவும் பிறகு சீரகம் போடவும். பொரிந்தவுடன் வெட்டி வைத்துள்ள வெங்காயம், உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு கார்ன் ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றி 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.
சுவையான சிக்கன் டிக்கா மசாலா ரெடி. மல்லி இலை தூவி பறிமாறவும்..
Wednesday, 12 August 2009
பன்றி காய்ச்சலை தடுக்க தேவை ரூ 1. 50 மட்டுமே!!
கடந்த ஆண்டு பறவைக் காய்ச்சல் (சிக்குன் குன்யா) என்ற நோய் உலகளவில் பல்லாயிரக் கணக்கான மக்களை வாட்டி வதைத்ததை போல், இந்த ஆண்டில் பன்றிக் காய்ச்சல் நோய் உலக மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.இந்நோய் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நோய் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளிடம் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் மருத்துவப் பரிசோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், இந்நோய் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துக்கொள்வதும், அதிலிருந்து நம்மை நாமே வருமுன் காப்பதும் முக்கியம்.
பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?: பன்றிக் காய்ச்சல் (Swine flu) என்று அழைக்கப்படும் இந்த நோய், சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் புளூவைரஸின் ஓர் உட்பிரிவான H1N1 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி, கடுமையான காய்ச்சலை உருவாக்கி, படிப்படியாக உடல் உறுப்புகளை செயல் இழக்க வைத்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ், பன்றிகளை மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் தாக்குகிறது. 1930-ல் முதன் முறையாக பன்றி இனங்களில் இந்நோய் கண்டறியப்பட்டது என்றாலும், இன்றும் முழுமையான எதிர்ப்பு மருந்துகள் கண்டறியப்பட வில்லை என்பது தான் உண்மை.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் என்ன? : உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி, தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்.
இந்தியாவில் அதிகம் பாதிக்க பட்ட பகுதி: மும்பை, புனே நகரங்கள் அதிகம் பாதிக்க பட்ட பகுதியாக சொல்ல படுகிறது.
* கை குலுக்குவதையும், கட்டி தழுவதுவையும் தவிர்க்கவும்.
* நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.
* கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
பன்றி காய்ச்சலை ரூ 1. 50 -ல் தடுப்பது எப்படி?
பன்றி காய்ச்சலை தடுக்க தேவை ரூ 1. 50 மட்டுமே என்றால் ஆச்சர்யமா இருக்கா?
முன்னெச்சரிகை நடவடிக்கையாக முகமூடி அணிந்தால் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த முகமூடி ரூ 1.50 -ல் இருந்து ரூ 50.00 வரைக்கு விற்கிறது. ஒரு முறை மட்டும் உபயோக படும் முகமூடிகள் ரூ 1.50 க்கும், கொஞ்சம் தரமான நிரந்தர உபயோக படும் முகமூடிகள் ரூ 50.00 க்கும் கிடைக்கிறது.Tuesday, 11 August 2009
அவசர அவசரமா பாலிசி மாற்றம் செய்யும் சாப்ட்வேர் நிறுவனங்கள்!!
உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கிடப்பதால், பல நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வேலையிழப்போர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும், மாற்றம் தெரிவது போன்ற தோற்றம் இருந்தாலும், இன்னும் நிலைமை சரியாக வில்லை என்பதுதான் உண்மை. இப்படி வேலை இல்லா திண்டாண்டம் அதிகரித்து கொண்டு இருக்க, இதை எல்லாம் சில சாப்ட்வேர் நிறுவனங்கள் வேறு விதமாக பயன்படுத்த தொடங்கி விட்டன. அது கஷ்டப்பட்டு வேலையை தக்க வைத்திருக்கும் மீதமிருக்கும் ஊழியர்கள் மேல் பாய தொடங்கி இருக்கிறது. இது தான் கொஞ்சம் வேதனை தரும் விஷயம்.
என்ன முழிக்கிறேங்க !!! ஆமாங்க .... அதற்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் எடுத்து இருக்கும் ஆயுதம் தான் Human Resources Policy ("HR Policy") மாற்றம்.
மாற்று வேலைக்கு வாய்ப்புகள் குறைவு என்பதால் அவசர அவசரமாக சில சாப்ட்வேர் நிறுவனங்கள் ஏற்கனவே தீர்மானம் செய்து பிரகடன படுத்த முடியாத பணியாளர் சாதகமில்லாத கிடப்பில் போடப்பட்ட பல திட்டங்களையும் தூசி தட்டி எடுத்து பாலிசி மாற்றம் என்ற பெயரில் தங்களுக்கு மேலும் சாதகமாக்கி செயல் படுத்த தொடங்கி விட்டன. இது ஊழியர்களை மேலும் கவலை அடைய செய்கிறது.
என்ன கொடுமைடா சரவணா ?
4) சம்பளம் இல்லா கட்டாய விடுப்பு (உதாரணமாக 30 Days in a Year)
5) Organization restructuring என்ற பெயரில் De-promotion policy. (Demotion Policy)
பொருளாதாரம் வீழ்வது மாறி, மீள ஆரம்பித்த பின்... HR பாலிசியும் வீழ்வது மாறி மீளுமா?
மீளாது என்பது தான் உண்மை!!!
Sunday, 9 August 2009
நடிகராக அப்துல் கலாம்...
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், "மேய்ன் கலாம் ஹூன்" (Mein Kalam Hoon) என்ற பாலிவுட் படத்தில் தோன்றி நடிக்கிறார். இப்படத்தில் சிறு குழந்தைகளுடன் நடிக்கும் கலாம், நடிக்க ஒத்துக்கொண்டதே குழந்தைகளுக்காக தானாம். (கலாம், நமக்கு கிடைத்த இரண்டாவது நேரு.)திரையுலகில் அறிமுகமாகி, பின் பிரபலமாகி, அரசியலில் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை பிடித்த நடிகர்கள் கூட்டம் ஒரு பக்கம் இருக்க, விஜயகாந்த், சரத், சிரஞ்சீவி என அடுத்த கூட்டம் போட்டி போட, இது தான் இன்றைய நிலை..
ஆனால் இவர்களில் இருந்து எல்லாம் மாறுபட்டு, கலாம் திரைப்பட உலகில் கால் பதிக்கிறார். "மேய்ன் கலாம் ஹூன்" (Mein Kalam Hoon) என்ற பாலிவுட் படத்தில் தோன்றி நடிக்கிறார்.
ஏராளமான குழந்தைகள் நடிக்கும் இந்தப் படத்தை மாதவ் பாண்டியா இயக்குகிறார். ஸ்மைல் அறக்கட்டளை இந்தப் படத்தை தயாரிக்கிறது. குழந்தைகள் நடிக்கும் படம் என்பதால் குழந்தைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கலாம் உடனடியாக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
கலாம், அப்துல் கலாமாகவே தோன்றி நடிக்கும் இந்தப் படத்தில் கலாமால் ஈர்க்கப்படும் ஒரு ராஜஸ்தானை சேர்ந்த சிறுவன் பெரிய அளவில் கனவு காண்பது தான் இப்படத்தின் கதை.
Saturday, 8 August 2009
ATM -ல் பணம் எடுப்பவரா? உஷார்...
ATM அருகில் சிறுவர்கள் விளையாடி கொண்டுருப்பார்கள். நீங்கள் ATM-ல் இருந்து பணம் எடுத்துகிட்டு வரும் போது, ஒரு சிறுவன், ஒன்றும் தெரியாது போல, தண்ணியை உங்கள் டிரஸ் மேல பீச்சி அடிப்பான்.... உடனேயே, இன்னொரு சிறுவன் ஓடி வந்து, 'சார் உங்க டிரஸ் அழுக்கா போச்சு சார், நான் துடைச்சி விடுகிறேன்' இன்னு சொல்லி சுத்தம் செய்ய (நடிக்க), இன்னொருவன் உங்க சட்டை பையில் இருந்த பணத்தை சுட்டு விட்டு ஓடி விடுகிறான்...
15 முதல் 20 வயது உள்ள இளம் சிறுவர்கள் இந்த திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றும் ATM -ல் பணம் எடுப்பர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் போலீஸ் எச்சரித்துள்ளது...
அடுத்தடுத்து சில சம்பவங்கள், இது போன்று ஆந்திரா எல்லை ஓரத்தில் நடந்துள்ளது.... உஷார் மாம்ஸ்.... ... உஷார் ...
Friday, 7 August 2009
2011 - ல கிரிக்கெட் உலக கோப்பை நமக்கு - சச்சின்
2011-ல கிரிக்கெட் உலக கோப்பையை பெற்று தருவது தான், தனது லட்சியம் இன்னு சச்சின் சொல்லுறாரு.."... இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தருவதும், டெஸ்டில் 15,000 ரன்-க்கு மேல குவிப்பதும் தான் தனது லட்சியம் ..." இன்னு செய்தித்தாள் ஒன்றுக்கு சச்சின் பேட்டி குடுத்து இருக்கார்... மேலும், இப்போதைக்கு ஓய்வு பெற போகும் எண்ணம் இல்லை என்றும் பணத்துக்காக விளையாடவில்லை, கிரிக்கெட் மீது உள்ள நேசத்தால் தான் விளையாடுவதாக மேலும் தெரிவிச்சு இருக்கார்..
சச்சினுக்கு எமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!!
ரயில்லே கரப்பான் பூச்சி பார்த்தா பயப்படறவங்களா நீங்க? அப்போ விமானத்துலே முதலை பார்த்தா என்ன பண்ணுவீங்க.... ஓடவும் முடியாது... கீழே இறங்கவும் முடியாது.....Thursday, 6 August 2009
சுனேனா உடன் காதலா? - நகுலின் பதில்....
அஜித்துடன் ஜோடி சேர மாட்டேன்.....நடிகை பேட்டி?
ஆசை நாயகன் அஜித்தின் மனைவியும், மாஜி நடிகையுமான ஷாலினியின் தங்கை ஷாம்லி. 'ஓய்' பட தோல்விக்கு பிறகு, இப்போது எந்த ஒரு படத்திலும் நடிக்காததால் பல்வேறு புரளிகள் பரவி வருகின்றன.நடிகர் சித்தார்த் உடன் ஜோடியாக நடித்த 'ஓய்' படம் எதிர்பார்த்த அளவு போகாததால்,ஷாம்லி நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் என்று ஒரு செய்தியும்,அஜித்தின் அடுத்த படத்தில் ஜோடியா நடிக்க போகிறார் என்று இன்னொரு செய்தியும் பரவலாக பேசறாங்க...
இதுபற்றி ஷாம்லி சொன்னது...
"....விரைவில் தமிழ் படங்களில் நடிப்பேன். அஜித்துடன் ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை. நான் அவருக்கு ஒரு குழந்தை மாதிரி...அஜித்தும் அதனை விரும்ப மாட்டார்....."
Wednesday, 5 August 2009
நயன்தாரா மறுப்பு....
ஆனால் தற்போது தென் ஆப்ரிக்காவில் ஆதவன் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் அம்மணி, நோ சொல்லி விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுகறாங்க...
Tuesday, 4 August 2009
அவள் அவனது தோளில் சாய்ந்து இருந்தாள். அவன் அவளது தோளை மென்மையாக பிடித்து அணைத்து இருந்தான். காற்று சிலுப்பிய அவள் கேசத்தை கொஞ்சி கோதிகொண்டிருந்தான்.அவர்கள் இருவருக்கும் இப்படி லால் பாகில் , அந்த நீர் தேக்கத்தின் அருகில் உள்ள இருக்கையில் அணைத்தபடி அமர்ந்து , அமைதியாக இயற்கையை ரசிக்க பிடிக்கும்.
அவள் விழி மூடி, முகத்தில் மோதும் தென்றலை ரசித்து கொண்டிருந்தாள். அவன் அவள் முகம் பார்த்து பார்த்து ரசித்து கொண்டிருந்தான்... 'என்னவள்......!!!'
இன்று அவளுக்கு பிறந்த நாள். அவளுக்கு பிடித்த நீல நிறத்தில் , ரோஜா பூக்களை தெளித்து போல் ஒரு சில்க் காட்டன் புடவை பரிசளிதிருந்தான் . அவளுக்கு காட்டன் புடவை தன் ரொம்ப இஷ்டம்.
'சுமீம்மா.... இந்த புடவையில் நீ தேவதை மாதிரி இருக்கே .... தெரியுமா...'
'எந்த ஊர் தேவதைடா நீல கலர் புடவ கட்டும்???' சிரித்து கொண்டே கேட்டாள்.
'என் தேவதை... எங்க ஊர் தேவதை..... ' என்றான் அவளை ஆசையாக பார்த்து கொண்டே...
'பாக்றத பாரு...' ... அப்படியொரு வெட்கம் அவளுக்கு.
'அம்மாடிய்... என்னடி இப்படி வெக்க படறே.... '
'சீ.. போடா... நான் ஒன்னும் வெக்கபடலே....' சொன்னாலும் வெட்கம் கூடியதை கண்கள் காட்டி கொடுத்தது...
'நேரமாச்சி.. போலாமா?....'
'போகவே மனசில்லடா... இப்படியே இங்கயே...உன் கூடவே இருக்கணும் போல இருக்கு. ...'
'ம்ம்... இருக்கலாம்தான்..ஆனா கேட் பூட்டிருவான்களே ... பரவயில்லையா?? ' குறும்பாக சிரித்தாள்.
செல்லமாக தலையில் குட்டி விட்டு... அழகாக கன்னத்தில் முத்தமிட்டான்...
'போகலாம்.'.....
சொல்லிக்கொண்டே அருகிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள் அந்த எழுபது வயது இளஞ்சோடிகள்....
சிம்பு - த்ரிஷா டும்...டும்டும்...??
டும்...டும்டும்...:சிம்பு - த்ரிஷா சங்கதியை எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை கதையாய் பெரிசாக்கி வருகிறார் இயக்குனர் ஒருவர் (செய்தித்தாள் சேதி). இதனால் இயக்குனர் மீது சிம்புவுக்கும், த்ரிஷாவுக்கும் ஆசை கோபம்!
அவர்கள் இருவரையும் வைத்து தான் இயக்கும் படத்திற்கு அப்படியாவது ஒரு பெரும் பப்ளிசிட்டி கிடைக்கட்டும் இன்னு இயக்குனர் நினைப்பாரோ?
நமக்கு என்ன .... பொறுத்து இருந்து பாக்கலாம்... நீங்க உங்களுக்கு தெரிந்த செய்தி எல்லாம் கமெண்ட்ஸ்ல போடுங்க !!!!











