Thursday, 19 August 2010
ஆசை மேல் ஆசை...
Posted by மௌனமான நேரம் | Thursday, 19 August 2010 | Category:
கவிதை
|
0
பின்னூட்டங்கள்
ஆசை மேல் ஆசை...
மாசற்ற மழலையாய்
மகிழ்ந்திருந்த நேரத்தில்
தள்ளி விழுந்த பந்தெடுக்க
தவழ்ந்திட ஆசை ..
அழகழகாய் தவழ்ந்தோட
ஆரம்பித்த அந்நாளில்
அடி மேல் அடி எடுத்து
அதிர்ந்து நடக்க ஆசை ..
தத்தி தடுமாறி
தடம் பதிக்கும் நாட்களில்
பெரிய அண்ணன் அக்கா போல
பாய்ந்தோட ஆசை ...
ஆடி ஓடி விளையாடி
ஆர்ப்பரிக்கும் வேளையில்
புத்தக பை தூக்கி
பள்ளி செல்ல ஆசை ..
புத்தகங்கள் கனம் பார்த்து
பயந்திருந்த சமயத்தில்
வேலை செல்லும் பெரியவர் போல்
வீறு நடை போட ஆசை ..
இன்று விடியலில் எழுந்து
இமைக்காது உழன்று
இல்லை என்பதில்லாத
இந்நிலையில் இருக்கையில் ..
பளிங்கு நிலா காட்டி
பாலூட்டிய அன்னையும் ..
விழுந்து எழுந்து நடை பயில
வேகம் தந்த தந்தையும்..
பால் மணம் மாறாத
பசுமையான மனமும்..
நாளைய நாளை பற்றி நினையாத
நல்லினிய நிலையும் ..
திரும்பி கையில் கிட்டாதா
தினம் இனிமை சேராதா ..
இதுவரையில் ஆசைப்பட்டது
இம்மெனும் முன் நடந்தது ..
இத்தனை தூரம் கடந்த பின்
இன்று வந்த இந்த ஆசை ..
எத்தனை கொடுத்தாலும்
எந்தனுக்கு கிட்டிடுமா ??
மாசற்ற மழலையாய்
மகிழ்ந்திருந்த நேரத்தில்
தள்ளி விழுந்த பந்தெடுக்க
தவழ்ந்திட ஆசை ..
அழகழகாய் தவழ்ந்தோட
ஆரம்பித்த அந்நாளில்
அடி மேல் அடி எடுத்து
அதிர்ந்து நடக்க ஆசை ..
தத்தி தடுமாறி
தடம் பதிக்கும் நாட்களில்
பெரிய அண்ணன் அக்கா போல
பாய்ந்தோட ஆசை ...
ஆடி ஓடி விளையாடி
ஆர்ப்பரிக்கும் வேளையில்
புத்தக பை தூக்கி
பள்ளி செல்ல ஆசை ..
புத்தகங்கள் கனம் பார்த்து
பயந்திருந்த சமயத்தில்
வேலை செல்லும் பெரியவர் போல்
வீறு நடை போட ஆசை ..
இன்று விடியலில் எழுந்து
இமைக்காது உழன்று
இல்லை என்பதில்லாத
இந்நிலையில் இருக்கையில் ..
பளிங்கு நிலா காட்டி
பாலூட்டிய அன்னையும் ..
விழுந்து எழுந்து நடை பயில
வேகம் தந்த தந்தையும்..
பால் மணம் மாறாத
பசுமையான மனமும்..
நாளைய நாளை பற்றி நினையாத
நல்லினிய நிலையும் ..
திரும்பி கையில் கிட்டாதா
தினம் இனிமை சேராதா ..
இதுவரையில் ஆசைப்பட்டது
இம்மெனும் முன் நடந்தது ..
இத்தனை தூரம் கடந்த பின்
இன்று வந்த இந்த ஆசை ..
எத்தனை கொடுத்தாலும்
எந்தனுக்கு கிட்டிடுமா ??
Tuesday, 17 August 2010
சுட சுட பிரயாணி!!!
Posted by மௌனமான நேரம் | Tuesday, 17 August 2010 | Category:
சமையல்
|
0
பின்னூட்டங்கள்
ஏதோ சத்தம் மட்டும் கேக்குது...
குரல் 1: எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. இனி நீ ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். நல்ல சாப்பிடணும். உடம்ப பாத்துக்கணும். உன்ன பாத்துக்கறது மட்டும் தான் என் வேலை இனி.
குரல் 2: அழுகை...
குரல் 1: எப்போவும் சந்தோஷமா இருக்க சொல்றேன். நீ அழறியா??
குரல் 2: இல்லங்க இது சந்தோசம்.. சரி கொழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்??
குரல் 1: நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்.. பையனா இருந்தா சுந்தர். பொண்ணாயிருந்தா சுந்தரி.
குரல் 2: ம்ம்.. :) சரி.. அம்மா அப்பா ன்னு கூப்பிட சொல்லலாமா இல்லை டாட் மாம் ன்னா?
குரல் 1: அம்மா அப்பாவே சொல்லலாம்.. எனக்கு அதுதான் பிடிக்கும். உனக்கு?
குரல் 2: எனக்கும் தான்.
அம்மா.. அப்பா வா... ம்ம்.. என்னக்கும் பிடிச்சிருக்கு... நீங்க எப்படி இருப்பீங்க? என்னக்கு உங்கள பாக்கணும்னு ஆசையா இருக்கு..
2 மாதங்களுக்கு பின்....
குரல் 1: மெதுவா மெதுவா.. ஸ்கேன் சிம்பிள் ஆ முடிஞ்சிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார். நானும் கூட இருக்கலாமாம். என்னக்கு ஒரே குஷியா இருக்கு.
குரல் 2: என்னாகும் தாங்க. ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு.
குரல் 1: சீ சீ. .. பயப்படாதே.. சும்மா டெஸ்ட் தானே.
நீங்க என்னை பாக்க போறீங்களா..... ம்ம்.. எனக்கு ரொம்ப ரொம்ப குஷியா இருக்கு...
4 மாதங்களுக்கு பின்..
குரல் 1: என்னங்க குழந்தை உதைக்குதுங்க.. ஹ ஹ ஹ ஹி.. ஹி .. ஹி...
குரல் 2: எங்க ... எங்க.... அதுக்குள்ள வா... பையன் தான் போல... இப்போவே குறும்பு பாரேன்...
குரல் 1: உங்கள மாதிரி தானே இருக்கும்..
அம்மா.. அப்பா... நான் தான்... சந்தோசத்துலே குதிச்சிட்டு இருக்கேன்..... ஹ ஹ ஹ ஹ ஹ...
சில நாட்களுக்கு பிறகு..
குரல் 1: என்னங்க ரொம்ப தல சுத்துது... (மயங்கி சாய்கிறாள்.)
குரல் 2: என்னம்மா... என்ன ஆச்சி????
பலவேறு சத்தங்கள்....
குரல் 1: டாக்டர் .. என்னாச்சி டாக்டர்??
குரல் 2: சாரி சார். அபோர்ஷன் ஆயிடிச்சி..
குரல் 1: ரொம்ப பத்திரமா தானே இருந்தோம்... எப்படி. ..?
குரல் 2: சரியான காரணம் தெரியலே... மருந்து எழுதி தரேன் சரியா சாப்பிட சொல்லுங்க. அவங்க கூடவே இருங்க...
(விசும்பலோடு ) அப்பா.... அம்மா..... உங்களை பாக்கணும் உங்க கூட விளையாடனும்னு நினைச்சேனே.... முடியவே முடியாதா.... நான் என்ன பண்ணுவேன்... !!!!!!!!!!!!!!!!!
யார் இது?
Sunday, 1 August 2010
இயற்கையால் நாசமாய் போவீர்கள்!!
Posted by மௌனமான நேரம் | Sunday, 1 August 2010 | Category:
அலசல்
|
0
பின்னூட்டங்கள்
இயற்கையால் நாசமாய் போவீர்கள்!!
இன்று இணைய தளங்களை புரட்டி பார்த்துக்கொண்டு இருந்தபோது சில வரிகள் என்னை ரொம்பவும் வேதனை பட வைத்தது.....
முதலாவது,
"எங்களை கொன்றுவிடுங்கள்: ஈழத்தமிழர்கள் கண்ணீர்" - இது செய்தித்தாள் செய்தி.
அந்த வரிகள்......
"கேட்காமல் கொன்றீர்கள் ..இப்பொழுது அவர்களே கேட்கிறர்கள், கொன்று விடுங்கள்.....சிறிலங்காவுக்கு உதவிசெய்த அத்தனை நாடுகளும் இயற்கையால் நாசமாய் போவீர்கள்.....பார்க்கதானே போகிறோம்...."
இரண்டாவது,
இந்த வீடியோ காட்சியை உங்களில் பலர் பார்த்து இருக்கலாம். இது "விஜய் டிவி உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" நிகழ்ச்சியில் பிரேம்கோபாலின் நடனம்....
அதில், பிரேம்கோபாலின் வரிகள் "இந்த முடிவுல சமாதானத்தை வேண்டுறோம். சமாதான புறா ஒன்னு அனுப்புவோம் இன்னு புறா ஒன்னு குடுங்க இன்னு கேட்டேன்.. அப்போ இவங்க சொல்லிட்டாங்க, தர மாட்டோம் இன்னு, அட பாவிகளா! இங்கே மிருகவதைச் சட்டம்...!!! ஆனால், அங்கே உறவுகள்....."
(அவரின் நடனத்தைப் பார்க்க/வரிகளை கேட்க , கீழ்கண்ட லிங்கை கிளிக்கவும்.)
Saturday, 31 July 2010
விஜய் ஜோடி நம்பர் 1 - ஜெயிக்க போவது யாரு?
Posted by மௌனமான நேரம் | Saturday, 31 July 2010 | Category:
டிவி
|
0
பின்னூட்டங்கள்
விஜய் ஜோடி நம்பர் 1 - ஜெயிக்க போவது யாரு?
விஜய் டிவியில் ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி போகுது... அதுல ஜெயிக்க போவது யாரு? நீங்க விரும்பும் ஜோடி எது?
1) மணிகண்டன் & ரெஜினி
2) வாங் & சுனிதா
3) ஸ்ரீகார்த்திக் & பிரியா
4) கீத்தன் & திவ்யா
5) சதீஷ் & திவ்யதர்சனி
6) ஷெரிப் & சாய் பிரமோதிதா
7) பிரேம் கோபால் & பிரேமினி
8) சுரேஷ் & ஜெயலக்ஷ்மி
Saturday, 6 February 2010
குடிமகன் பற்றிய முழு விவரங்கள் சேகரிக்க புதிய திட்டம்!
Posted by மௌனமான நேரம் | Saturday, 6 February 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கு, டெலிபோன் இணைப்பு, காப்பீடு உள்ளிட்ட அனைத்து முழுமையான தகவல்களையும் ஒன்று திரட்டி, விரல் நுனியில் வைத்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தபின், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். உள்நாட்டு பாதுகாப்பின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரிப்பதற்காக, நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு அடையாள எண் அட்டை வழங்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தால் வழங்கப்படும் அட்டையில், ஒவ்வொரு குடிமகனின் பிறந்த தேதி, அவரின் கல்வித் தகுதி உட்பட அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நவீன தொழில் நுட்ப வசதிகளை, தங்களின் சதித் திட்டங்களுக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால், சிறப்பு அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தால் திரட்டப்படும் தகவல்கள், உள்நாட்டு பாதுகாப்புக்கு போதுமானதாக இருக்காது என, அரசு கருதுகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் வங்கி கணக்கு, காப்பீடு, நிலம், டெலிபோன் இணைப்பு, வீடு உள்ளிட்ட முக்கிய தகவல்களை திரட்ட, அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் ஏஜன்சிகள் மூலம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டு, தேசிய புலனாய்வு தொகுப்பின் கட்டுப் பாட்டில் வைக்கப்படும். புலனாய்வு அமைப்பு, ரா, ராணுவ புலனாய்வு,வருவாய் புலனாய்வு, தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட 11 ஏஜன்சிகளுக்கு மட்டுமே, இந்த தகவல்களை பெறும் வசதி கிடைக்கும். இந்த தகவல்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, மேற்கண்ட ஏஜன்சிகள், தங்களுக்குள் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ளும். ஒருவரைப் பற்றிய தகவல்கள் வேண்டுமெனில், அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாக பெறுவதற்கு வசதியாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக செயல்படும் ஏஜன்சிகளுக்கு இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும்.
இதுபற்றிய ரகசியங்கள் வெளியில் கசிந்து விடாமல் இருப்பதற்கு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மகிந்திரா சிறப்பு பணிகள் குழுமத்தில் பணியாற்றிய கேப்டன் ரகுராமன், இந்த பணிகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து விவரங்களும் திரட்டப்பட்டு, தேசிய புலனாய்வு தொகுப்புடன் அவை இணைக்கப்படும். ரயில்வே, ஏர்- இந்தியா, வருமான வரித்துறை, மாநில போலீசார் உள்ளிட்ட அரசு துறைகளும், வங்கி, காப்பீடு, தொலைத் தொடர்பு, உள்ளிட்ட தனியார் துறைகளும், தகவல் களை அளிக்கும் விஷயத்தில் இணைந்து செயல்படும்.
இத்திட்டம் அமலுக்கு வந்தால், குடிமக்களில் யாராவது ஒருவர் புதிதாக நிலம் வாங்கினாலோ, வங்கி கணக்கு துவங்கினாலோ அல்லது தங்கள் பெயரில் காப்பீடு எடுத்தாலோ, அதுபற்றிய விவரங்கள் அடுத்த நிமிடமே, அரசுக்கு தெரிந்து, கண்காணிப்புக்கு வந்து விடும். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக, இத்திட்டம் காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்தபின், இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி தினமலர்!
Wednesday, 3 February 2010
இலவச உதவி!!
Posted by மௌனமான நேரம் | Wednesday, 3 February 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்
ஒரு தனியார் நிறுவனத்துக்கு வந்த இ-மெயில் செய்தியை உங்கள் பார்வைக்கு....இதன் மூலம் ஒருவரேனும் பயன் அடைந்தால், எங்களுக்கு மகிழ்ச்சி!!
ஜேர்மன் நாட்டு மருத்துவ குழு ஒன்று கொடைக்கானலுக்கு வருகை தருகிறது. இவர்கள் பாசம் மருத்துவமனையுடன் சேர்ந்து தீ விபத்து அல்லது பிறவி குறைபாடு (காது, மூக்கு மற்றும் தொண்டை) உள்ளவர்களுக்கு என ஒரு இலவச மருத்துவ முகாம் நடத்த உள்ளது. இதில் பிளாஸ்டிக் சர்ஜெரியும் உள்ளடக்கம்...
இது ஒரு முற்றிலும் இலவசம்!!!
இடம்: பாசம் மருத்துவமனை, கொடைக்கானல்
தேதி: 23-மார்ச்-2010 முதல் 04-ஏப்ரல்-2010
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: 04542-240668, 245732
இ-மெயில்: pasam.vision@gmail.com
http://www.thehindu.com/2009/01/11/stories/2009011151570300.htm
Monday, 1 February 2010
ஜோக் புரியுதா?
Posted by மௌனமான நேரம் | Monday, 1 February 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்
மூளையின் செயல்திறனை ஆராயும் நோக்கில் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடத்திய ஆய்வில் ஆண்கள் ஜோக்குகளை எளிதில் புரிந்து கொள்கிறார்கள் ஆனால் பெண்களுக்கு சற்று நேரம் பிடிக்கிறது என்று தெரிவிக்கிறது.அதே சமயம் பெண்கள் எல்லா ஜோக்குகளையும் நன்கு ரசித்து சிரிக்கிறார்கள், ஆண்கள் லேசாகச் சிரித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது. ஜோக்குகளைப் படிக்கும்போதும் கேட்கும்போதும் அவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக இருக்கின்றனர். ஜோக்கு சொல்லி முடித்த பிறகே அதன் தன்மை உணர்ந்து சிரிக்கின்றனர். ஆனால் அந்தச் சிரிப்பு முழுமையாக இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் நினைத்து நினைத்தும் சிரிக்கிறார்கள்.
Sunday, 31 January 2010
Corn Flakes விலை உயர்வு!!
Posted by மௌனமான நேரம் | Sunday, 31 January 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்
காலை உணவுக்கு பயன்படுத்தப்படும் கெலாக்ஸ் கார்ன்பிளேக்சின் விலை அதிகரிக்க உள்ளது. இந்தியாவில் காலை உணவு தயாரிக்கும் பெரிய நிறுவனமான, கெலாக் இந்தியா நிறுவனம், கோதுமை, சோளம் மற்றும் கோகோ போன்றவற்றை மூலப்பொருட்களின் விலை உயர்வால், தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. இதுகுறித்து, கெலாக் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அனுபம் தத்தா கூறுகையில், 'ஐந்தாண்டுகளாக, எங்கள் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்காமல் சமாளித்தோம். அதே விலையையே தொடர விரும்பினோம். ஆனால், மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தயாரிப்புகளின் விலையை சிறிது அதிகரிக்க வேண்டி உள்ளது' என்றார்.
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், துவரம்பருப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு 1,200 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டது, வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'விலை மேலும் சரியும்' என்று வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவி வருவதால், பருப்பு இருப்பு வைத்துள்ள வியாபாரிகள் கிலியடைந்துள்ளனர்.இந்திய அளவில் 2008 டிசம்பர் முதல் துவரம் பருப்பு விலையில் கடும் உயர்வு ஏற்பட்டது. உச்சகட்டமாக, 2009 டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் கிலோ 88 ரூபாயாக விலை உயர்ந்தது. விரைவில் 100 ரூபாயாக உயரும் என்ற கருத்தும், அப்போது வியாபாரிகள் மத்தியில் நிலவியது. பருப்பு விலை, நேற்று குவிண்டாலுக்கு 1,200 ரூபாய் சரிவு ஏற்பட்டு குவிண்டால் 5,800 ரூபாய்க்கும், கிலோ 58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விலையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து மொத்த விலையிலும் சரிவு ஏற்படுவது தான் வழக்கம். ஆனால், வியாபாரிகள் கடந்த மாதமே அதிக விலை கொடுத்து பருப்பை விற்பனைக்காக வாங்கியதால் பருப்பு விலையை குறைக்க முன்வரவில்லை . 'சில்லரை கடைகளில் இன்று முதல் விலை குறைப்பு செய்யப்படும்' என வியாபாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக, வடமாநில வியாபாரிகள் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பருப்புகளையும் விற்பனைக்கு கொண்டு வரத்துவங்கியுள்ளனர்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தயாரிக்கும் 2வது படம் தூங்கா நகரம். இப்படத்தின் சூட்டிங்கை மதுரையில் அழகிரி தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு துரை தயாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின்னர் அவர் தூங்கா நகரம் படம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். வாரணம் ஆயிரம் படத்தை வெளியிட எனக்கு வாய்ப்பு கிடைத்ததால்தான் நான் தொடர்ந்து சினிமாத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். தூங்கா நகரம் படத்தில் 4 கதாநாயகர்கள். பசங்க படத்தில் நடித்த விமல், ரேனிகுண்டா நிஷாந்த், நாடோடிகள் பரணி, படத்தை இயக்கும் கவுரவ் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த படம் வெளியூரில் இருந்து மதுரை வந்து வாழ்க்கை நடத்தும் வாலிபர்களின் கதை. மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். மே மாதத்தில் தூங்கா நகரம் திரைக்கு வரும், என்று துரை தயாநிதி கூறினார்.Thursday, 31 December 2009
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு ஒபாமா கண்டனம்!
Posted by மௌனமான நேரம் | Thursday, 31 December 2009 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்
நைஜீரிய குற்றவாளியின் தந்தை அந்த நாட்டில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் தன் மகனைப்பற்றி எச்சரித்து இருக்கிறார்.
ஒரு வாரத்துக்கு முன்பு இந்த தகவல் நம் உளவுத்துறைக்கு கிடைத்து உள்ளது. ஆனால் அவர் பெயர் விமானத்தில் பறக்க கூடாத அளவுக்கு பயங்கரமானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. உளவுத்துறையின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்த தவறு பற்றி விசாரித்து 31-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு நைஜீரிய தீவிரவாதி பற்றிய தகவல்கள் தெரியும். ஆனால் அதை மற்ற துறைகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து உஷார் படுத்த தவறியதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)












