Sunday, 30 August 2009
மத்திய அரசு 100 நாள் சாதனைகளும் வேதனைகளும்
Posted by மௌனமான நேரம் | Sunday, 30 August 2009 | Category:
அலசல்
|

மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த இருக்கும் 25 அம்ச திட்டங்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளியிட்டு இருந்தார்.
அதன் படி, 100 நாள் செயல் திட்டத்தை அனைத்து அமைச்சகங்களும் வகுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த 100 நாள் நிறைவான நிலையில் சில துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், பலவற்றில் கடும் சோதனைகளை மத்திய அரசு சந்தித்து வருகிறது.
சில சாதனைகள்:
1. உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்ற பின் உள்நாட்டுப் பாதுகாப்பு மேம்பட்டிருப்பது
2. நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது
3. 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி மசோதா நிறைவேற்றப்பட்டது
4. பஞ்சாயத்துகளில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது,
இவை எல்லாம் சாதனைகளாக கருத படுகிறது.
சில வேதனைகள்:
1. நாடு முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் சுகாதார அமைச்சகத்துக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது
2. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு
3. பருவ மழை தவறும் நிலையில், உணவுப் பொருள்களின் உற்பத்தி குறையும். இந்நிலையில், விலைவாசி கட்டுக்குள் கொண்டு வர பெரும்பாடு பட வேண்டும்.
அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த படும் என்று சொன்ன 25 அம்ச திட்டங்கள் முழுமையாக நிறைவேற்ற படாத நிலையில், மிக அவசியமான திட்டங்களை சீக்கிரமே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தொடர்புள்ள இடுகைகள்: அலசல்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: