Saturday, 12 December 2009
எப்படி திருத்துவது இவர்களை?
இதுதொடர்பாக சென்னையில் இன்று நிருபர்கள் சந்திப்பில், தமிழகத்தை பிரிக்க வேண்டும் என ஒரு சில அமைப்புகள் வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், "சிறியதே அழகானது. பெரிய மாநிலங்களில் இருந்து பிரிக்கப்பட்ட சிறிய மாநிலங்கள் இப்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. எனவே, நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டு மாநிலங்களாகப் பிரிப்பதே நல்லது," என்றார்.
எனினும், தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பன பற்றிய விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது, பல தரப்பில் இருந்தும் தனக்கு நெருக்கடி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, 'தனி தெலுங்கானா என்பது 60 ஆண்டுகால போராட்டம். இதற்கு, இப்போதிருக்கும் மாநிலங்களை சிறிய மாநிலங்களாக பிரிப்பது என்பது அர்த்தமல்ல. மாநிலங்களை பிரிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஒரு மாநிலம் உருவாவதற்கு பல்வேறு படிநிலைகள் உள்ளன. இப்போது இருப்பது வெறும் அடிப்படை நிலைதான்,' என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.
கமல் ஜோடி தமன்னா!!
நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவிருக்கிறார். உன்னைப்போல் ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், டைரக்டர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி வருகிறாராம்.
தசாவதாரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளது. முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக எடுக்கப்படும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Thursday, 10 December 2009
விபசாரத்தை ஏன் சட்டபூர்வமாக ஆக்கக் கூடாது?
சிறுமிகளும், பெண்களும் கடத்தப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதை மத்திய அரசு தடுக்ககோரி பச்சப்பன் பச்சோ அந்தோலன் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை (09.12.2009) விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், விபசாரத்தை சட்டப்பூர்வமாக தடுப்பது கடினமாக உள்ளது என்று தெரிவித்தார்.
பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுவதை தடுக்க அதை சட்டப்பூர்வமாக ஆக்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும். தண்டனை அளிப்பதன் மூலம் உலகில் எங்குமே விபசாரத் தொழிலை தடுக்க முடியவில்லை.
ஏதாவது ஒரு வகையில் இந்த உலகில் விபசாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எங்குமே சட்டப்பூர்வமாக தடுக்கமுடியவில்லை. எனவே, நீங்கள் ஏன் அதை சட்டப்பூர்வமாக ஆக்க கூடாது?... என்று நீதிபதிகள் கூறினர்.
இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், இதை கவனத்தில் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், நீதிபதிகள் இருவரும் கூறுகையில், "நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி பற்றி நாம் பெருமையுடன் பேசுகிறோம். ஆனால், நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தில் இருந்து தற்போது 37 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. 5, 6 குடும்பங்களின் வளர்ச்சியை வைத்து, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து இருப்பதாக கருதக் கூடாது. ஒழிக்கப்படவேண்டிய வறுமை நிலை காரணமாகத்தான் சிறுமிகள், பெண்கள் கடத்தப்படுவதும், விபசாரத் தொழில் செழிப்பாகவும் நடப்பதற்கு முக்கிய காரணம்'' என்று தெரிவித்தனர்.
Sunday, 6 December 2009
இந்தியாவில் புது இரண்டு சக்கர வாகனங்கள்!!
ஐந்து கண்கவர் வண்ணங்களில் இவை வெளிவந்துள்ளன. டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், முன்புற டிஸ்க் பிரேக், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்டி, டஃப் அப் டியூப், கோம்பி-பிரேக் சிஸ்டம், பராமரிப்பு தேவைப்படாத பேட்டரி, விஸ்கோஸ் ஏர் ஃபில்டர் ஆகியன இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களாகும். அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்தப்பட உள்ள பாரத்-3 சுற்றுச் சூழல் விதிமுறைக்கேற்ப சான்றிதழ் பெற்ற வாகனமாக இது வெளிவந்துள்ளது.
டி.வி.எஸ்: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் புதிய வகை பைக் மற்றும் ஸ்கூட்டர் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. புதிய பைக் மற்றும் ஸ்கூட்டரின் தனித்துவம் என்னவென்றால், கிளெட்ச் இல்லாமல் தானாக இயங்கும் கியர்கள் கொண்டு இருப்பதே ஆகும். டிவிஎஸ் ஜைவ்...டிவிஎஸ் ஜைவ் மோட்டார் சைக்கிள் கிளெட்ச் இல்லாமல் தானாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக் எந்த கியரில் சென்று கொண்டிருந்தாலும் உடனடியாக நியூட்ரலுக்குக் கொண்டு வர முடியும்.
கியரை படிப்படியாகக் குறைத்து நியூட்ரலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. பைக்கை எந்த கியரில் நிறுத்தினாலும், அதே கியரில் வண்டியை தொடர்ந்து இயக்க முடியும். 110 சிசி என்ஜின், 12 லிட்டர் கொள்ளளவு உள்ள பெட்ரோல் டேங்க் ஆகியவற்றுடன் கூடுதலாக பைக் இருக்கையின் அடியில் பொருள்களை வைத்துக் கொள்ள இட வசதி உள்ளது. இதில் ஒரு குடை, தண்ணீர் பாட்டில், ஃபைல் ஆகியவைகளை வைத்துக் கொள்ளலாம். இதன் விலை ரூ. 41 ஆயிரமாகும்.டிவிஎஸ் வீகோ 110 சிசி என்ஜின், 12 அங்குல அளவுள்ள அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் குடும்பத்தில் உள்ள அனைவரும் எளிதில் ஓட்டக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் பின்புறத்தில் பெட்ரோல் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்க்,செல்போனை சார்ஜ் செய்யும் வசதி உள்ளிட்டவை இதில் உள்ளன. கருப்பு, கருநீலம், கேப்பச்சீனோ ப்ரெüன், சில்வர் உள்ளிட்ட ஐந்து நிறங்கள் கொண்ட இதன் விலை ரூ. 42 ஆயிரம் ஆகும்.
என்பீல்டு: டில்லியில் கிளாசிக் 350 ராயல் என்பீல்டு பைக் அறிமுகப் படுத்தப் பட்டது. எஜ்சர் குரூப் எம்.டி., மற்றும் சி.இ.ஓ., சித்தார்த் லால் மற்றும் பைக் வடிவமைப்பாளர் சிக்கா ஆகியோர் பைக்கை அறிமுகப் படுத்தினர்.
பஜாஜ்: பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஜப்பானின் கவாஸாக்கி நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் பல சொகுசு பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், கவாஸாக்கி பஜாஜ் சார்பில், நின்ஜா 250 ஆர் என்ற பெயரில் புதிய பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த பைக்கின் விலை ரூ.2.69 லட்சமாக இருக்கும். ஐரோப்பிய நடைமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபியூல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பம் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 42 கி.மீ., மைலேஜ் தரக் கூடியது. இந்தியாவில் ஏற்கனவே, யமஹா மற்றும் சுசூகி நிறுவனங்கள் சார்பில் சொகுசு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு போட்டியாக தற்போது, நின்ஜா 250 ஆர் பைக் களத்தில் குதித்து உள்ளது.
டெலஸ்கோபிக ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் யுனி டிரக் சஸ்பென்ஷன் ஆகியவை இந்த பைக்கின் முன்பக்க மற்றும் பின் பக்க பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக், கவாஸாக்கி நிறுவனத்தின் தாய்லாந்து தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் ஒன்றாக இணைக்கப்படும். வெளிநாட்டில் இருந்து முழுமையான பைக்காக இறக்குமதி செய்தால், 100 சதவீத வரி செலுத்த வேண்டும். இதை தவிர்ப்பதற்காகவே, உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு முழு மைக்காக உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக 11 சதவீத வரி தான் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் தான், நின்ஜா 250 ஆர் பைக்கின் விலை ரூ.2.69 லட்சம் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.
இந்தியா நம்பர்- 1, கிரிக்கெட் டெஸ்ட் அரங்கில் 77 ஆண்டு வரலாற்றில் முதல் சாதனை!!
Saturday, 5 December 2009
தமிழ் திரையுலகமே தமன்னா பக்கம் சாய்ந்திருக்கிறது. சொல்லிக்கிற மாதிரி அப்படி ஒன்றும் அழகு இல்லை என்று ஆரம்பத்தில் ஓரங்கட்டப்பட்ட தமன்னாவுக்கு இப்போ செம மவுசு.
ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நயன்தாரா மறுப்பு....
ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நயன்தாரா மறுப்பு.... சந்தையில் புதுசு - இந்தியாவில் புதிய ரக கார்கள் அறிமுகம்
சந்தையில் புதுசு - இந்தியாவில் புதிய ரக கார்கள் அறிமுகம்சென்னையில் நியூ மெர்சிடிஸ் பென்ஸ் ஈ350 சி.டி.ஐ., ப்ளூ எபியன்சி கார் அறிமுகப் படுத்தப் பட்டது. குறைந்த எரி பொருள் செலவில், புதிய இ350 கார் அறிமுகப் படுத்தப் பட்டது. டீசலில் இயங்க கூடிய இந்த காரை பிரபல சொகுசு கார் நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஜ் அறிமுகப் படுத்தி உள்ளது. இதன் மதிப்பு 45 லட்ச ரூபாயாகும். இதனை, மெர்சிடிஸ்-பென்ஜ் இந்தியா தலைமை செயல் அதிகாரி வில்பிரைட் ஆல்பர் அறிமுகப் படுத்தினார். இந்நிறுவனம், ஏற்கனவே அறிமுகப்படுத்திய இதே ரக கார்களை விட, இ350 ரக காருக்கு 13 விழுக்காடு எரிபொருள் குறைவாக செலவழியும். இதன் மற்றொரு சிறப்பம்சம் சுற்றுச் சூழல் மாசுபடுத்தாத தன்மையாகும்.

மும்பையில் பிரிமியர் ரியோ கார் அறிமுகப் படுத்தப் பட்டது. முதல் காம்பாக்ட் டீசல் மினி-எஸ்.யு.வி.,வை அறிமுகப் படுத்தி வைப்பவர் பிரீமியர் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மைதிரியா தோஷி.
எஸ்.எம்.எஸ் - ஒரு காசு: ரிலையன்ஸ் அதிரடி!
எஸ்.எம்.எஸ் - ஒரு காசு: ரிலையன்ஸ் அதிரடி!ஒரு எஸ்.எம்.எஸ்., ஒரு காசு என்ற கட்டணத்தில் புதிய திட்டத்தை ரிலையன்ஸ் இன்று முதல் அறிமுகம் செய்கிறது.
இந்தியாவில் தங்கம் விலை திடீர் வீழ்ச்சி!
வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.1707 ஆக இருந்தது. நேற்று அது ரூ.1687 ஆக குறைந்தது. இன்று (சனி) தங்கம் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் இன்று காலை நிலரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1638 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஒரு பவுன் ஆபரண தங்கம் இன்று காலை ரூ.13,104 ஆக விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய விலையை விட ரூ.392 குறைவாகும்.
ஒரு கிராமிற்கு 49 ரூபாய் சரிவு ஏற்பட்டதால் இன்று நகை வாங்க சென்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2 நாட்களில் ஒரு பவுன் தங்கம் விலை 624 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












