Saturday, 12 December 2009

கமல் ஜோடி தமன்னா!!
நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவிருக்கிறார். உன்னைப்போல் ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், டைரக்டர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி வருகிறாராம்.தசாவதாரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளது. முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக எடுக்கப்படும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புள்ள இடுகைகள்: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: