மௌனமான நேரம்

 

Monday, 30 November 2009

திருமணம் - அவசியமா அனாவசியமா?

Posted by மௌனமான நேரம் | Monday, 30 November 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
திருமணம் - அவசியமா அனாவசியமா?

'எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை' என்று சொல்வது இப்போ கொஞ்சம் பேஷன் ஆகிவிட்டது. சினிமாவில் உள்ளவர்களும், மேல் தட்டு மக்களும் என்ன நினைகிறார்கள் என்பதை விட.. இந்த எண்ணம் நடுத்தர வர்க்கம் நடுவில் கூட இருப்பது தான் கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது.

சமீபத்தில், என்னக்கு தெரிந்த ஒரு ஜோடியை சந்திக்க நேர்ந்தது. அவர் மிகவும் மதிக்கப்டும் ஒரு ஆசிரியர். ஆனால் திருமணம் என்னும் சடங்கில் அவருக்கு நம்பிக்கை இல்லையாம். 'உன்னை காதலிக்கிறேன். ஆனால் திருமணத்தில் என்னக்கு நம்பிக்கை இல்லை' என்று சொல்லிவிட்டார். அந்த பெண்ணின் வீட்டில் அவள் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர். அவளும் திருமணத்திற்கு தயாராகத்தான் இருந்தால். ஆனால் திருமணம் செய்து கொள்ள அவர் தயாராக இல்லை. திருமணம் செய்யாமால் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ் என்று சொல்லி வழியனுப்பும் அளவுக்கு அவள் பெற்றோருக்கு பரந்த மனது இல்லை. அந்த ஜோடி என்ன செய்ய போகிறார்களோ தெரியவில்லை.

இப்படி திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூறும் ஒரு காரணம் - மனதில் இவருடன் தான் வாழவேண்டும் என்று முடிவு செய்த பின் திருமணம் எதற்கு என்பதுதான்.


சரிதான்!!!


நன்றாக வண்டி ஓட்ட தெரிந்தவனுக்கு, சாலை விதிகளை பின்பற்றுபவனுக்கு அந்த விதிகள் தேவை இல்லை தான். ஆனால் உலகில் எல்லோரும் அப்படி இல்லையே. அதற்காக, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதி வைக்க முடியுமா? அப்படி வைத்தால் அந்த விதிமுறைகளால் என்ன பயன் தான் கிடைக்கும்?

திருமணம் என்பது மனிதனை ஒரு கட்டுகொப்புக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உருவாக்கபட்டது என்பது என் எண்ணம். இன்னார் என்று இல்லாமல் எல்லோருடனும் சேர்ந்து இருக்கும் விலங்குகளில் இருந்து மாறி, தனக்கென்று கோட்பாடுகள், வரையறைகள் வகுத்து மனிதன் வளர்ச்சி அடைந்து இருக்கும் இந்த கால நிலையில் திருமணம் என்பது அவசியம் என்ற எண்ணமே என் மனதில் மேலோங்கி நிற்கிறது!!!!

Sunday, 29 November 2009

இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை சூடு பிடிக்கிறது!

Posted by மௌனமான நேரம் | Sunday, 29 November 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை சூடு பிடிக்கிறது!

நானோ கார்களுக்கான முன்பதிவுக்கு எல்லாரும் முண்டியடிக்கும் இந்தியாவில்தான், அதிக விலையுள்ள சொகுசு கார்களும் அதிகளவில் விற்பனையாகின்றன. சொகுசு கார்களின் சொர்க்கமான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இப்போது சிறிய, எரிபொருள் சிக்கனம் வழங்கும் கார்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் 15 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை விலையுள்ள உயர்தர சொகுசு கார்கள் அதிகமாக விற்பனையாகின்றன. இந்த ஆண்டு இலக்கு மூவாயிரம் கார்கள். வோல்க்ஸ்வேகன் பசாட் (24 லட்ச ரூபாய்), டயோட்டா பார்ச்சூனர் (20 லட்ச ரூபாய்), ஹோண்டா சிஆர்-வி (22 லட்ச ரூபாய்) கார்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக விற்றுத் தீர்த்திருக்கின்றன.


சர்வதேச அளவில் மிகப் பிரபலமான ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் சொகுசு கார்கள், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார்கள், டாடா நிறுவனம் மூலம் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜாகுவார் கார்கள் மூன்று மாடல்களில் விற்பனைக்கு வருகின்றன. இவற்றின் விலை 63 லட்சத்தில் இருந்து 93 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாண்ட் ரோவர் கார்களும் மூன்று மாடல்களில் விற்பனைக்கு வருகின்றன. பிரிட்டனின் கவுரவம் மிக்க இந்த சொகுசு கார்கள் தயாரிப்பில் டாடா நிறுவனமும் ஈடுபட்டிருக்கிறது.

டாடா நிறுவன சேர்மன் ரத்தன் டாடா கூறுகையில், 'சொகுசு கார்கள் பயன் பாட்டை இந்திய மக்கள் அனுபவிக்க வசதியாக இந்த சிறப்பு மிக்க கார்கள் இங்கே விற்கப்படும். டாடா நிறுவனம் சம்பந்தப்பட்டிருப்பதால், இதுவரை பிரிட்டிஷார் பெருமை என்று கருதப்பட்ட இவை, இனி இங்கே விற்பனைக்கு வருகின்றன' என்றார்.

Saturday, 28 November 2009

கலியுக சிலந்தி மனிதன் (Spider Man)

Posted by மௌனமான நேரம் | Saturday, 28 November 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
கலியுக சிலந்தி மனிதன் (Spider Man)

அலைன் ராபர்ட் (Alain Robert, 47) ஒரு கலியுக சிலந்தி மனிதன் (Spider Man) என்றே சொல்லலாம். கயிற்றின் உதவி இன்றி உயர்ந்த கட்டடங்களில் ஏறுவது இவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. ஈபில் டவர் (Eiffel Tower) , லண்டன் கானரி வார்ப் (London's Canary Wharf building) , நியூ யார்க் எம்பைர் ஸ்டேட் பில்டிங் (New York's Empire State Building) and சிகாகோ சீயார் டவர் (Chicago's Sear's Tower) ஆகிவை இவர் ஏற்கனவே ஏறி சாதித்த சிகரங்கள். இவர் ஏறிய கட்டடங்கள் மொத்தம் 80.


இவர் மலேசியா வில் தன்னுடைய அடுத்த சாதனையை நிகழ்த்தும்போது காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர் . 88 அடுக்கு மாடி கட்டடத்தை பெட்ரோனாஸ் ட்வின் டவர்-ஐ (Petronas Twin tower) ஒரு மணி 45 நிமிடங்களில் ஏறி இருக்கிறார்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே உயரம் என்றால் ரொம்ப பயமாம், தனக்கு கொஞ்சம் கூட தன்னம்பிக்கை இருந்ததில்லை என்கிறார்.

ரணில் விக்ரமசிங்கே? பொன்சேகா? மகிந்தரா ராஜபக்ஷே?

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ரணில் விக்ரமசிங்கே? பொன்சேகா? மகிந்தரா ராஜபக்ஷே?

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் சுதந்திர கட்சி சார்பில் அதிபர் மகிந்தரா ராஜபக்ஷே போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஐக்கிய தேசிய கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டது.

இதன் சார்பில் ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து விலகிய சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

இந்த நிலையிலும், இலங்கை அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெற்று அதிபரானால் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவார் என இலங்கை சுதந்திர மகாஜன கட்சி அறிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 25 ஆண்டுகளாக நீடித்து வந்த சண்டை, கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. ராணுவ வெற்றிக்கு, அப்போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தான் காரணம் எனக் கூறப்பட்டது. வெற்றியை தேடித் தந்ததற்கு பரிசாக, இலங்கை ராணுவத்தின் முப்படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக பொன்சேகா நியமிக்கப் பட்டார்.

இந்நிலையில் சரத் பொன்சேகா, தனது ராணுவ பதவியை சில வாரங்களுக்கு முன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்படத்தக்கது.

Friday, 6 November 2009

என்னத்த தான் எழுதறது??

Posted by மௌனமான நேரம் | Friday, 6 November 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

என்னவோ எழுதனும்னு தான் தோணுது.... ஆனா என்ன எழுதறதுன்னு தெரியல்லியே!!!!!!!!!!!!!!..........

தமிழ்நாட்டு அரசியல் பத்தி எழுதலாமா....??

அச்சச்சோ.. அப்பறம் யாராவது அடிக்க வந்துட்டா...

ம்ம்.. அப்போ உலக அரசியல் பத்தி எழுதலாம்...

ஆத்தி...கற்றது கைமண்ணளவு ஆச்சே... நமக்கெதுக்கு வம்பு!!

கோலிவுட்.. பாலிவுட்.. ஹாலிவுட் பத்தி ஏதாவது???...

ஐயோ... வேண்டாம்பா... ஏதாவது ஏடாகூடமா எழுதி.. கேஸ் கீசுன்னு போய்ட்டா..!!!

இயற்கை, அறிவியல், புவியியல், இதுலே எதாவது ஒரு இயல பத்தி எழுதலாமோ???

ஆஹ.... அப்பறம் எழுதி முடிச்சிட்டு நான் மட்டும் தானே உக்காந்து படிக்கணும்.... !!!

குட் ஐடியா... சொந்த அனுபவம்....... ?????

நோ..நோ.. நான் என்ன அப்துல் கலாமா??

சரி சரி... நல்ல நல்ல சிந்தனைகள கொஞ்சம் எழுதுவோமா????

ஆமா நமக்கு நல்ல சிந்தனைன்னு தோன்றது வேற எல்லாருக்கும் சோதனையா தோணிட்டா..!!

ம்ம்.... சமுதாய சீர்திருத்த கருத்துக்கள்?????

stop it.... யாரும் படிக்க வேண்டாமா???????

வாவ்!!! கவிதை எழுதலாமே.... !!!

ம்ம்... எழுதலாம்... ஆனா கவிதைன்னு தலைப்பு போட்டிருந்தியே கவிதையை காணோமே ....எங்கே...எங்கே??? ன்னு எல்லாரும் கேட்டுட்டா???? - 'தேடுங்க.. தேடுங்க... தேடிக்கிட்டே இருங்க....தேடினாலும் கிடைக்காது....' ன்னு சொல்ல வேண்டி வந்துடிச்சின்னா??

ஓகே... கதை தான் கரெக்ட்...

No way... எழுத்தாளர்களும்... மேதைகளும் எழுதற எடத்துலே நாம போய் பேக்கு மாதிரி எதாவது எழுதி கேவலபடனுமா....

முயற்சியே பண்ணலைன்னா எப்படித்தான் முன்னுக்கு வர்றது.... ???

எல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு... அப்பரம் எல்லாரும் சேர்ந்து கும்மி எடுக்கும் போது வடிவேலு ஸ்டைல் லே.... 'என்ன நல்லவன்னு சொல்லிட்டாய்ங்கன்னு' சிரிச்சிகிட்ட வாங்கிக்கவா முடியும்...'

என்ன இப்படி தூக்கம் கண்ண சொக்குது... யோசிச்சி யோசிச்சி tired ஆகிட்டேனோ.... சரி இப்போ தூங்கிட்டு இனி நாளைக்கு யோசிச்சிக்கலாம்...

Tuesday, 13 October 2009

பதினாறும் பெற்று........

Posted by மௌனமான நேரம் | Tuesday, 13 October 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேல் சாக் (Dale Chalk, 31), தாரன் (Darren ) தம்பதியினர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்று இரு முறை சாதனை புரிந்த பிறகு மூன்றாம் முறையாக ஒரே பிரசவத்தில் இரட்டையரை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் செயற்கை முறையில் கருத்தரித்ததாக தெரிகிறது.

இவர்களுக்கு இதோடு 11 குழந்தைகள் ஆகிறது. 'எங்களுக்கு இன்னும் வேண்டுமென்று ஆசைதான் ஆனால் இன்னும் பெரிய பேருந்து வாங்க வேண்டியது இருக்கும்' என்று சொல்லியிருக்கின்றனர் இந்த பெற்றோர்.

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க ன்னு சொல்லுவாங்களே.. அதுலே இன்னும் அஞ்சு கொறையுது. அந்த தம்பதிகளை நாமும் வாழ்த்துவோம்!!!

Wednesday, 2 September 2009

மான்கறி வைத்தியர்!!

Posted by மௌனமான நேரம் | Wednesday, 2 September 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
சென்னை, மைலாப்பூரில் பரம்பரை ராஜவைத்திய சாலை நடத்தி வந்தவர் டாக்டர் விஜயகுமார். மான் கறி மூலம் தயார் செய்யப்படும் மருந்தில் சகல வியாதிகளையும் குணமாக்க முடியும் என்று விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி ஈரோட்டை சேர்ந்த பெண் நடக்க முடியாத தனது மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார். அவருக்கு மான்கறி வைத்தியம் செய்வதாக சொல்லி லட்சக்கணக்கில் பணத்தை கறந்தார் விஜயகுமார். ஆனால் நோய் குணமாக வில்லை.

மேலும் ஒரு ராஜவைத்தியம் செய்தால் உன் மகன் நடப்பான். அதற்கு இன்னும் நிறைய செலவாகும் என்று கூறி இருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஏற்கனவே கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

உடனே ஆத்திரம் அடைந்த விஜயகுமார் அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார். இது பற்றி மைலாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்ததால் வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஜெயிலில் இருந்த விஜயகுமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். துணை கமிஷனர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேலும் பல புதிய தகவல்கள் தெரிய வந்தது. சென்னையில் 5 இடங்களில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த ஒரு நோயாளியை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார். தனது ராஜ வைத்தியத்துக்காக மதுரையில் மான் வேட்டையாடி மான்கறியை எடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

எனவே போலீசார் மான்கறி வைத்தியர் மீது சொத்து குவிப்பு, ஆயுத தடுப்பு சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், விதிகளை மீறி டி.வி.க்களில் விளம்பரம் செய்தது ஆகிய 4 வழக்குகளை புதிதாக தொடர்ந்துள்ளனர்.

[நன்றி: மாலை மலர்]


இந்த மான்கறி வைத்தியர் போல, கீரை வைத்தியம், அரேபிய வைத்தியம் என்று பலவிதமான போலி வைத்தியர் சுதந்திரமாக போலி வைத்தியம் பார்த்து வருகிறார்கள்.

பொதுமக்களாகிய நாம் தான், இது போன்ற விளம்பரங்களை கண்டு ஏமாற கூடாது...

டி.வி நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும் இது போன்ற விளம்பரங்களை ஊக்குவிக்க கூடாது...

இன்னும் புரியாத பெயர சொல்லி வைத்தியம் பார்க்கும் ஆசாமிகளையும் காவல்துறை கைது செய்தால், இன்னும் பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்கலாம்..

Monday, 31 August 2009

சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அத்துமீறல்!!

Posted by மௌனமான நேரம் | Monday, 31 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் உள்ள லடாக் மலைப் பகுதியில் சில இடங்களில் எல்லையை நிர்ணயிப்பதில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்தப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைவதும், பின்னர் அவர்கள் பகுதிக்கு திரும்பிச் செல்வதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

இப்பிரச்சனை பகுதியில், சீன ஹெலிகாப்டர்கள் தாழ்வாகப் பறந்து காலாவதியான உணவுப் பாக்கெட்களை வீசிச் சென்றுள்ளது.

இது குறித்து சீன அரசிடம் ஏற்கெனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர் கூறியுள்ளார்.

இந்த அத்துமீறல் உடனடியாக கண்டுபிடிக்க படவில்லை. இத்தகையான அத்துமீறல்களை தடுக்கவும், உடனடியாக கண்டுபிடிக்கவும் இந்தியா தன் இராணுவ திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும்..

வரும் முன் காப்பதே சிறந்தது!!..

Sunday, 30 August 2009

மத்திய அரசு 100 நாள் சாதனைகளும் வேதனைகளும்

Posted by மௌனமான நேரம் | Sunday, 30 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 2-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று, சனிக்கிழமையோடு 100 நாள் நிறைவு ஆகிறது.

மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த இருக்கும் 25 அம்ச திட்டங்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளியிட்டு இருந்தார்.

அதன் படி, 100 நாள் செயல் திட்டத்தை அனைத்து அமைச்சகங்களும் வகுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த 100 நாள் நிறைவான நிலையில் சில துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், பலவற்றில் கடும் சோதனைகளை மத்திய அரசு சந்தித்து வருகிறது.



சில சாதனைகள்:

1. உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்ற பின் உள்நாட்டுப் பாதுகாப்பு மேம்பட்டிருப்பது

2. நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது

3. 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி மசோதா நிறைவேற்றப்பட்டது

4. பஞ்சாயத்துகளில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது,

இவை எல்லாம் சாதனைகளாக கருத படுகிறது.

சில வேதனைகள்:

1. நாடு முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் சுகாதார அமைச்சகத்துக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது

2. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு

3. பருவ மழை தவறும் நிலையில், உணவுப் பொருள்களின் உற்பத்தி குறையும். இந்நிலையில், விலைவாசி கட்டுக்குள் கொண்டு வர பெரும்பாடு பட வேண்டும்.

அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த படும் என்று சொன்ன 25 அம்ச திட்டங்கள் முழுமையாக நிறைவேற்ற படாத நிலையில், மிக அவசியமான திட்டங்களை சீக்கிரமே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Saturday, 29 August 2009

சோம்நாத் ஒரு ஜென்டில்மேன்!

Posted by மௌனமான நேரம் | Saturday, 29 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
அவசியம் இல்லாமல், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அலையும் அரசியல் தலைவர்கள் மற்றும் வி. ஐ. பி - களுக்கு மத்தியில் சோம்நாத் ஒரு ஜென்டில்மேன்!.

மக்களவைத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு பெரும்பாலும் கோல்கத்தாவில் இருந்து வரும் சோம்நாத், தில்லி வரும் சமயங்களில் அவர் தங்கியிருக்கும் இடத்தில் பாதுகாவலர்கள் போடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில், பாதுகாப்பு தருமாறு நான் கோரவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெறவேண்டும் என்று மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டு நலனில் அக்கறையுள்ள சோம்நாத் சாட்டர்ஜி உண்மையில் ஒரு ஜென்டில்மேன் தான்.

எப்படியாவது பிரதமர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு - ஜஸ்வந்த் சிங்

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
"அவுட்லுக்' என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் ஜஸ்வந்த் சிங்,

"....எப்படியாவது பிரதமர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு இருந்தது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வது என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

பார்ப்பதற்கே வினோதமாக இருந்த ஒருவர் பையில் கட்டுகட்டாக பணம் எடுத்துவந்தார். அவையெல்லாம் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகக் கொடுத்தவை என்று கூறப்பட்டது. சுதீந்திர குல்கர்னி அந்த நபருடன் இருந்தார். அந்த நபரைப் பற்றிக் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட அத்வானி, ""இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டுபோய் மக்களவையில் அப்படியே காட்டுங்கள்'' என்று அந்த 3 உறுப்பினர்களிடம் கூறிவிட்டார்.

ஆளும் கூட்டணி அரசைக் கவிழ்ப்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர் அவசரப்பட்டதைப் போலவே தெரிந்தது.

தலைமைப் பதவிக்கு வர நினைப்பவர்களுக்கு இவையெல்லாம் அழகு அல்ல என்பதை அவர் உணரவில்லை. அந்தப் பணம் அப்படியே ஆளும் கூட்டணி தரப்பிலிருந்து தரப்பட்டிருந்தாலும் முதலில் அதை மக்களவைத் தலைவரிடம் கூறி, அவரின் கவனத்துக்குக் கொண்டுவந்துவிட்டு அவர் என்ன கூறுகிறாரோ அதன்படி செயல்பட்டிருக்கலாம்.

மக்களவைத் தலைவர் பாரபட்சமாக நடந்து கொண்டுவிடுவார் என்ற அச்சம் இருந்திருந்தால் அந்தப் பணத்தை அவைக்குக் கொண்டுவந்துவிட்டு, அதைப் பற்றிப்பேசி புகார் தெரிவித்துவிட்டு பிறகு அவையின் தலைவரிடம் ஒப்படைத்திருக்கலாம்.

இதனால் மக்களவையின் மாண்பும் நாட்டின் மரியாதையும் காப்பாற்றப்பட்டிருக்கும். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான என்னிடம் கூட ஆலோசனை கலக்காமலேயே அத்வானி இதைச் செய்தார்.

ராணுவத்தில் தளபதிகளுக்குக் கூறப்படும் இலக்கணமே வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் முன்னணியில் நின்று அதை ஏற்பதுதான். அத்வானிக்கு அந்த குணமே கிடையாது. தவறு நடந்தது என்றால் அந்தப் பழி தன் மீது வந்துவிடக்கூடாது என்று நினைப்பார். நெருக்கடி வந்தால் மௌனம் சாதிப்பார் அல்லது பொறுப்பை யார் மீதாவது சுமத்திவிடுவார்.

ராஜ்நாத் சிங் ஒரு மாநிலத்துக்குத்தான் கட்சித் தலைவராக இருக்கத் தகுதியானவர். அவரை தேசியத் தலைவராக்கியது தவறு.

பாரதிய ஜனதா அரசியல் கட்சியாகவே இல்லை. ஒரு வழிபாட்டுக் கூட்டம், தலைவன் சொல்படி செயல்படும் கும்பல் என்ற அளவுக்குச் சுருங்கிவிட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமான சொத்துபோல ஆகிவிட்டது.

நான் வெளிநாடு சென்றிருந்தபோதுதான் பாகிஸ்தானுக்கு இந்திய விமானங்கள் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, எல்லைகளில் நமது துருப்புகள் கொண்டுபோய் நிறுத்தப்பட்டனர். நான் அவ்விரு முடிவுகளையும் ஏற்கவில்லை.

எல்லை பாதுகாப்புப் படையினரை வங்கதேசத்துக்குள் அனுப்புவது என்ற முடிவும் என்னைக் கேட்காமலேயே எடுக்கப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் இறந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவரை மூங்கிலில் கட்டி தூங்கிவந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு மனம் பதைத்தேன். எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) என்பது உள்துறை அமைச்சகத்தின் கட்டளைப்படிதான் செயல்படும். வங்கதேசத்துக்கு பி.எஸ்.எஃப்-பை அனுப்பியது யார் என்று நான் கேட்டதற்கு எனக்குக் கடைசி வரையில் பதிலே சொல்லவில்லை.." என்றார் ஜஸ்வந்த் சிங்.

பன்றிக் காய்ச்சல் மாத்திரைகள் இனி கடைகளில் கிடைக்கும்!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்குத் தேவைப்படும் "ஓசல்டாமிவிர்'' (டாமிபுளூ) மாத்திரைகள் இன்னும் 10 அல்லது 12 நாள்களில் இந்திய மருந்துக் கடைகளில் சில்லரையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த மருந்தைத் தயாரிக்கும் அனுமதியை ரன்பாக்ஸி, சிப்ளா, மெட்கோ, ஹெடரோ, ஸ்ட்ரைட்ஸ், ரோச் ஆகிய 6 பெரிய மருந்து நிறுவனங்கள் பெற்றுள்ளன.


இந்த மருந்துகளை சில்லரை விற்பனை மூலம் விற்கலாம் என்ற அறிவிப்பை இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்னும் 10 அல்லது 12 நாள்களில் பிறப்பிக்கும்.