Thursday, 31 December 2009
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு ஒபாமா கண்டனம்!
புதுமை காண்போம், புதியன படைப்போம்: கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து!!
தமிழர் வரலாற்றில் பொன்னேடு பதித்த 2009-ஆம் ஆண்டு விடை பெற்று புதிய 2010-ஆம் ஆண்டு பிறக்கிறது. 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும், தமிழக சட்டப் பேரவைக்கு நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் நமது கூட்டணிக்கு தமிழக மக்கள் பெருவாரியாக வாக்களித்து வெற்றியைத் தந்திருக்கிறார்கள்.
2011-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலுக்கு முந்தைய ஆண்டான இந்த 2010-ல் மக்களுக்கு ஆற்ற வேண்டிய அளப்பரிய பணிகளை ஒருக்கணம் எனக்கு நானே எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன்.
2010 ஆம் ஆண்டில்தான் தமிழக சட்டப் பேரவைக்கான புதிய கட்டிடம் திறக்கப்படவுள்ளது. பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் மிகப்பெரிய அளவிலே கட்டப்பட்டு, அதுவும் திறக்கப்பட உள்ளது.
தமிழ்மொழியின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையை மேதினியில் மீண்டும் நிலைநாட்டிடும் திருப்பணியாக- கோவை மாநகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திட அரசு ஆயத்தமாகி வருகிறது. ஏழை எளியோர் 3 கோடியே 28 லட்சம் பேருக்கு ரூ.256 கோடி செலவில் இலவச வேட்டி- சேலை வழங்கும் திட்டத்துடன் 2010-ஆம் ஆண்டு மலர்வது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏழை எளிய சாமானிய மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வரும் இந்த அரசு 2006-க்குப்பின் புதிய வரி விதிப்பு, எதுவும் இல்லாமலேயே, வரிச்சலுகைகள் பல வழங்கி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள், விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6000 நிதியுதவி, ஏழை மகளிர் திருமணத்திற்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி, மகளிர் பொருளாதாரம் மேம்பட சுய உதவிக் குழுக்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு தனித்தனி நல வாரியங்கள் போன்ற நலிந்தோர் நலம் காக்கும் திட்டங்களுடன் அவசர கால மருத்துவ ஊர்தி “108” சேவைத் திட்டம், உயிர்க் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட் டம் ஆகியனவும் மக்களால் பாராட்டப்பட்டு வரவேற்கப்படுகின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அரசாணைகள் வாயிலாக 35 புதிய தொழிற்சாலைகள், தமிழமெங்கும் சாலை மேம்பாட்டுப் பணிகள், பாலங்கள், மின் திட்டங்கள், குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடைத் திட்டங்கள் போன்ற பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஆங்காங்கே உருவாக்கப்படுகின்றன.
இந்நாளில் “புதுமை காண்போம், புதியன படைப்போம், புதிய வரலாற்றை உருவாக்குவோம்” என அன்பிற்கினிய தமிழக மக்களை அழைத்து, அனைவருக்கும் எனது உள மார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.
என்.டி.திவாரியின் இன்னொரு செக்ஸ் “வீடியோ டேப்”
என்.டி.திவாரியின் இன்னொரு செக்ஸ் “வீடியோ டேப்”
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி. திவாரி மீது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. 3 பெண்களுடன் அவர் படுக்கையில் இருப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் ஆந்திரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவரிடம் இருந்து ஆந்திர கவர்னர் பதவி பறிக்கப்பட்டது.
86 வயதாகும் என்.டி. திவாரி தன் மீதான செக்ஸ் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக அவர் கூறினார். என்றாலும் என்.டி. திவாரி பற்றி புதிய செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் வரத் தொடங்கி உள்ளன.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு 1980-களில் என்.டி. திவாரி ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ- டேப் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த காலக்கட்டத்தில் என்.டி.திவாரி மத்திய மந்திரியாக இருந்தார்.
அரசு முறை பயணமாக ஒரு தடவை அவர் ஆந்திரா வந்தார். அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் நன்கு செய்யுமாறு அப்போதைய ஆந்திரா முதல்- மந்திரி என்.டி. ராமராவ் உத்தரவிட்டிருந்தார். டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த என்.டி. திவாரி அரசு காரில் கவர்னர் மாளிகைக்கு சென்றார்.
அன்றிரவு தனியார் ஒருவரின் சாதாரண காரில் என்.டி.திவாரி ரகசியமாக வெளியில் புறப்பட்டுச் சென்றார். அமீப் பேட் பகுதியில் உள்ள ஒரு பங்களாவுக்கு அவர் சென்றார்.
அவருக்காகவே அங்கு ஒரு இளம்பெண் தயாராக வைக்கப்பட்டிருந்தார். அன்றிரவு முழுவதும் அந்த பெண்ணுடன் பங்களாவில் என்.டி.திவாரி தங்கி இருந்தார். விடிய, விடிய அவர் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
என்.டி.திவாரியின் பெண் சபலத்தை அறிந்த உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர், அதை வீடியோவில் பதிவு செய்ய முடிவு செய்தார். என்.டி.திவாரி தங்கிய படுக்கை அறை ஜன்னலில் அவர் ரகசிய வீடியோ காமிராவை பொருத்தி உள்ளே நடந்த செக்ஸ் காட்சிகள் அனைத்தையும் பதிவு செய்தார்.
சுமார் 2 1/2 மணி நேரம் திவாரியின் செக்ஸ் லீலை காட்சிகளை அந்த போலீஸ் அதிகாரி பதிவு செய்தார். அந்த செக்ஸ் காட்சிகளை ஒரு பிரதி எடுத்துக்கொண்டு டேப்பை அவர் உயர் அதிகாரியிடம் கொடுத்துவிட்டார். ஆந்திரா உளவுத்துறை அந்த வீடியோ- டேப்பை தற்போதும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
என்.டி.திவாரி செக்ஸ் லீலைகளை படம் பிடித்த உளவுத்துறை அதிகாரி அது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. போலீஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அந்த வீடியோ- டேப்பை அந்த அதிகாரி வைத்திருந்தார். தற்போது திவாரி பற்றி செக்ஸ் தகவல்கள் வெளி வருவதால் அந்த போலீஸ் அதிகாரி தானாக முன் வந்து இந்த தகவலை வெளியிட்டார்.
என்.டி.திவாரியின் அந்தரங்கத்தை வீடியோவில் பதிவு செய்தது, தங்களது துறை ரீதியிலான கடமைகளில் ஒன்று. இதில் எந்த தவறும் இலலை என்று அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
தற்போதும் அரசியல் தலைவர்களின் ரகசிய பணிகள் உளவுப்துறையால் படம் பிடித்து பதிவு செய்யப்படுவதாக அவர் கூறினார். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் தகவல்களை தெரிவிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
Wednesday, 30 December 2009
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனத்துக்கு தடை!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனத்துக்கு தடை!
சென்னையில் போலீசாரின் உத்தரவை மீறி ஆபாச நடனம் நடந்தாலோ, 11 மணிக்கு மேல் மது பரி மாற்றம் நடந்தாலோ அந்த ஓட்டலின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்.
ஓடிப்போலாமா!பழைய வீட்டை காலி செய்து தாய் சுதாவுடன் சந்தியா எதிர் வீட்டில் குடியேறி காதல் கணை வீசுகிறார். ஆனால் சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. ஒன்பது அரியர் வைத்திருக்கும் நீ எனக்கு தகுதி இல்லை என்கிறார். இதனால் பரிமள் ராப்பகலாக படித்து அனைத்து பாடங்களிலும் தேறுகிறார்.
ஆனாலும் சந்தியா மனம் மாறவில்லை. தனது தந்தை கோட்டா சீனிவாசுக்கும் மாமா மகாதேவனுக்கும் தீராத பகை. இரு குடும்பத்தினரையும் ஒன்று சேர்க்க சந்தியா போராடுகிறார். வீட்டை விட்டு ஓடிவிடு. திரும்பி வரும்போது உன்னை யாரும் கட்டிக்கமாட்டார்கள். வேறு வழியின்றி எனக்கு உன் தந்தை திருமணம் செய்து வைப்பார் பிரிந்த குடும்பம் சேர்ந்து விடும் என்று மாமா மகன் ஆலோசனை சொல்ல அதன்படி வீட்டை விட்டு ஓடுகிறார்.
பரிமளும் வேறு விதமாய் காய் நகர்த்த அதே நாளில் வீட்டை விட்டு ஓடுகிறார். இருவரும் காதலித்து ஓடிவிட்டதாக அபார்ட்மென்ட் அல்லோலப்படுகிறது. ஊட்டிக்கு செல்லும் சந்தியாவை பின் தொடர்ந்து செல்லும் பரிமள் அவரை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்.
ஒரே வீட்டில் தங்குகின்னர். சந்தியா தன் மீது வைத்துள்ள நம்பிக்கை அவரை மனம்மாறச் செய்கிறது. இருவரும் ஊருக்கு திரும்புகின்றனர். ஓடிப்போன அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் இருவருமே நாங்கள் காதலிக்கவில்லை என்று மறுக்கின்றனர்.
இதையடுத்து முறைப்பையனுடன் சந்தியாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது தன் மீதுள்ள காதலில் பரிமள் ஊட்டிக்கு வந்ததும் தன் மீது அவர் வைத்துள்ள ஆழமான அன்பும் சந்தியாவுக்கு தெரிகிறது. பரிமள் மேல் காதல் கொள்கிறார். இன்னொரு புறம் சந்தியா முறைப்பையனை திருமணம் செய்ய ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து இருவரும் மணக்கோலத்தில் மணமேடையில் நிறுத்தப்படுகின்றனர். காதல் வென்றதா? என்பது கிளைமாக்ஸ்.
நடிகை சங்கீதாவின் சித்தி மகன் பரிமள் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம். துறுதுறு மாணவனாக வரும் அவர் காதல் வயப்பட்டதும் படிப்பில் சீரியஸ் ஆகி அனைத்து பாடங்களிலும் பாஸ் செய்வதும் காதல் கை கூடாமல் துவண்டு நிற்பதும் பக்குவப்பட்ட நடிப்பு.சந்தியாவை மடக்க அவருக்கு தெரியாமல் பின்னால் ஓடிப்போனதும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. காதலிக்காக குளிரில் நடுங்கி டீ கடையில் உறங்கும்போது பரிதாப பட வைக்கிறார்.
ஆரம்பத்தில் பரிமளை உதாசீனம் செய்யும் சந்தியா தனது செருப்பு, பையை பீரோவில் பாதுகாத்து வரும் பரிமள் காதலை உணர்ந்து தடுமாறுவது ஜீவன்.
காதல் தூது போய் தோட்டா சீனிவாசராவிடம் அடிபடும் சுமன் ஷெட்டி சிரிக்க வைக்கிறார். இமான் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றனர். கலகலப்பான திரைக்கதையில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கண்மணி. வீடு, காம்பவுண்ட் என நகரும் நாடகத்தன காட்சிகள் வேகத்தடை போடுகின்றன.
Sunday, 13 December 2009
தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி!!
இந்தியாவின் பலத்தை காட்டிட அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்த வேண்டியுள்ளது. விஞ்ஞான ரீதியாக முன்னேற்றம் காணும் நாடுகளில் நாமும் ஒரு சேர வருகிறோம் என அவ்வப்போது இந்தியா நிரூபித்து வருகிறது. இன்று காலை வங்கக்கடல் பகுதியில் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையினர் , கப்பற்படை இணைந்து உருவாக்கிய இந்த தனுஷ் ஏவுகணை ஏறக்குறைய பிரிதிவியின் சற்று முன்னேற்ற வடிவம் ஆகும்.
இது அணு ஆயுதம் சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. இது கடல் மற்றும் கடலோர பகுதியில் 350 கிமீ தூரம் வரையிலான இலக்குகளையும் தாக்கக் கூடிய திறன் பெற்றது.
கடந்த 2000 ல் ஏப்ரல் 11ம் தேதி தனுஷ் ஏவுகணையின் முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது தோல்வியை தழுவியது. சில தொழில்நுட்ப கோளாறுகளால், ஏவுகணையின் பல பகுதிகள் வெடித்து சிதறின. இந்த ஏவுகணையின் சோதனை கடந்த 2007ம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
Saturday, 12 December 2009
தேர்தல் சிறப்பு அசைவ உணவகம்..வாங்க.. வாங்க!!
தேர்தல் காலத்தை குறிவைத்து திறக்கப்பட்ட இந்த ஓட்டலில் விதவிதமான அசைவ உணவுகள் கிடைப்பதால், மூன்று வேளையும் கட்சிக்காரர்களின் கூட் டம் அதிகம் காணப்படுகிறது. சாதாரண நாட்களில் அதிக விலை கொடுத்து அசைவ உணவு சாப்பிட பலரும் யோசிப்பர்.
இடைத்தேர்தலையொட்டி, கையில் ஆயிரம், ஐநூறு என தாராளமாக பணம் புரள்வதால், விலையைப்பற்றி கட்சித் தொண்டர்கள் கவலைப்படாமல் விரும்பியதை உண்டு மகிழ்கின்றனர்.
உலக அழகி!
தென்னாப்ரிக்கா, ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த உலக அழகி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த பூஜா சோப்ரா உட்பட, 112 நாடுகளை ச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதில், ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த கைனே அல்டோரினோ, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு உலக அழகிக்கான பட்டம் சூட்டப்பட்டது.
இருபத்திரண்டு வயதாகும் கைனே அல்டோரினோ, மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றி வருகிறார். உலக அழகி பட்டம் வென்ற பின், கண்களில் கண்ணீர் மல்க, "நன்றி தென்னாப்ரிக்கா' என, நெகிழ்ந்தார். இந்தப் போட்டியில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெர்லா பெல்ட்ரான் இரண்டாவது இடத்தையும், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த டட்டும் கேஷ்வர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு, 'வள்ளுவர்' என்று சொல்வதற்கு பதிலாக 'வலுவர்' என்றும், 'குத்தகைதாரர்' என்பதற்கு பதிலாக 'குத்துகைகாரர்'' என்றும் கூறினார். 'உளியின் ஓசை' என்பதற்கு 'ஒளியின் ஓசை' என்றார்.
இதற்கெல்லாம் மேலாக, "பெரியாரின் கொள்கைகளை" என்று சொல்வதற்கு பதிலாக "பெரியாரின் கொள்ளைகளை" என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.
அப்போது, சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்காக முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை அறிவிக்கும் நேரத்தில், சற்றே உஷாரான அமைச்சர் பரிதிஇளம்வழுதி, அவசரம் அவசரமாக குஷ்புவின் பேச்சை இடைமறித்து, முதலமைச்சர் பற்றிய முன்னுரையை தானே அறிவித்தார். அப்போது மேடையில் இருந்து குஷ்பு சென்றுவிட்டார். அதன்பிறகு, நிகழ்ச்சியின் இறுதிவரை அமைச்சரே தொகுத்து வழங்கினார்.
இந்த தமிழ் குளறுபடியை தனது உரையில் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கருணாநிதி, "நான் எழுதிய வசனங்களை வைத்துக் கொண்டே ஒரு கற்பனை நாடகத்தை இங்கே நடத்தினார்கள். அதில் வசந்த சேனைக்கு பதிலாக இப்போது ஆங்கிலம் வந்து அமர்ந்திருப்பதை எடுத்துச் சொல்லி, தமிழைக் காப்பாற்றியே தீருவோம் என்றனர்.
தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழின் அந்த மொழி வல்லமை எத்தகையது என்பதை நாம் உணரலாம். தமிழுக்கு அத்தகைய சக்தி உண்டு. அதனால் தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கின்றது," என்றார் முதலமைச்சர் கருணாநிதி.
சமத்துவபுரம்!
2001-ம் ஆண்டு தேர்தலில் அச்சிறுப்பாக்கம் தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு வென்ற செல்வராஜ் சில மாதங்களிலேயே இறந்து போனார்.
அப்போது நடந்த அவருடைய படத்திறப்பு விழாவுக்கு வந்த டாக்டர் ராமதாஸ், ''செல்வராஜ் குடும்பத்தினர் குடிசையில் வாழ்வதைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. சீக்கிரமே ஒரு வீடு கட்டித் தருகிறேன்'' என்று சூளுரைத்தார். அதன் பிறகு ஆண்டுகள் உருண்டோடியதுதான் மிச்சம்; வீடு வரவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தி.மு.க. ஆத்தூரில் தொடங்கப்பட்ட சமத்துவபுரத்தில் செல்வராஜின் குடும்பத்துக்கு முதல் வீட்டை கொடுத்து அசத்திவிட்டார்கள்!




