மௌனமான நேரம்

 

Saturday, 31 July 2010

விஜய் ஜோடி நம்பர் 1 - ஜெயிக்க போவது யாரு?

Posted by மௌனமான நேரம் | Saturday, 31 July 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
விஜய் ஜோடி நம்பர் 1 - ஜெயிக்க போவது யாரு?

விஜய் டிவியில் ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி போகுது... அதுல ஜெயிக்க போவது யாரு? நீங்க விரும்பும் ஜோடி எது?

1) மணிகண்டன் & ரெஜினி
2) வாங் & சுனிதா
3) ஸ்ரீகார்த்திக் & பிரியா
4) கீத்தன் & திவ்யா
5) சதீஷ் & திவ்யதர்சனி
6) ஷெரிப் & சாய் பிரமோதிதா
7) பிரேம் கோபால் & பிரேமினி
8) சுரேஷ் & ஜெயலக்ஷ்மி












Saturday, 6 February 2010

குடிமகன் பற்றிய முழு விவரங்கள் சேகரிக்க புதிய திட்டம்!

Posted by மௌனமான நேரம் | Saturday, 6 February 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கு, டெலிபோன் இணைப்பு, காப்பீடு உள்ளிட்ட அனைத்து முழுமையான தகவல்களையும் ஒன்று திரட்டி, விரல் நுனியில் வைத்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தபின், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். உள்நாட்டு பாதுகாப்பின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரிப்பதற்காக, நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு அடையாள எண் அட்டை வழங்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தால் வழங்கப்படும் அட்டையில், ஒவ்வொரு குடிமகனின் பிறந்த தேதி, அவரின் கல்வித் தகுதி உட்பட அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நவீன தொழில் நுட்ப வசதிகளை, தங்களின் சதித் திட்டங்களுக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால், சிறப்பு அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தால் திரட்டப்படும் தகவல்கள், உள்நாட்டு பாதுகாப்புக்கு போதுமானதாக இருக்காது என, அரசு கருதுகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் வங்கி கணக்கு, காப்பீடு, நிலம், டெலிபோன் இணைப்பு, வீடு உள்ளிட்ட முக்கிய தகவல்களை திரட்ட, அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் ஏஜன்சிகள் மூலம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டு, தேசிய புலனாய்வு தொகுப்பின் கட்டுப் பாட்டில் வைக்கப்படும். புலனாய்வு அமைப்பு, ரா, ராணுவ புலனாய்வு,வருவாய் புலனாய்வு, தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட 11 ஏஜன்சிகளுக்கு மட்டுமே, இந்த தகவல்களை பெறும் வசதி கிடைக்கும். இந்த தகவல்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, மேற்கண்ட ஏஜன்சிகள், தங்களுக்குள் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ளும். ஒருவரைப் பற்றிய தகவல்கள் வேண்டுமெனில், அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாக பெறுவதற்கு வசதியாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக செயல்படும் ஏஜன்சிகளுக்கு இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும்.

இதுபற்றிய ரகசியங்கள் வெளியில் கசிந்து விடாமல் இருப்பதற்கு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மகிந்திரா சிறப்பு பணிகள் குழுமத்தில் பணியாற்றிய கேப்டன் ரகுராமன், இந்த பணிகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து விவரங்களும் திரட்டப்பட்டு, தேசிய புலனாய்வு தொகுப்புடன் அவை இணைக்கப்படும். ரயில்வே, ஏர்- இந்தியா, வருமான வரித்துறை, மாநில போலீசார் உள்ளிட்ட அரசு துறைகளும், வங்கி, காப்பீடு, தொலைத் தொடர்பு, உள்ளிட்ட தனியார் துறைகளும், தகவல் களை அளிக்கும் விஷயத்தில் இணைந்து செயல்படும்.

இத்திட்டம் அமலுக்கு வந்தால், குடிமக்களில் யாராவது ஒருவர் புதிதாக நிலம் வாங்கினாலோ, வங்கி கணக்கு துவங்கினாலோ அல்லது தங்கள் பெயரில் காப்பீடு எடுத்தாலோ, அதுபற்றிய விவரங்கள் அடுத்த நிமிடமே, அரசுக்கு தெரிந்து, கண்காணிப்புக்கு வந்து விடும். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக, இத்திட்டம் காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்தபின், இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி தினமலர்!

Wednesday, 3 February 2010

இலவச உதவி!!

Posted by மௌனமான நேரம் | Wednesday, 3 February 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
ஒரு தனியார் நிறுவனத்துக்கு வந்த இ-மெயில் செய்தியை உங்கள் பார்வைக்கு....

இதன் மூலம் ஒருவரேனும் பயன் அடைந்தால், எங்களுக்கு மகிழ்ச்சி!!

ஜேர்மன் நாட்டு மருத்துவ குழு ஒன்று கொடைக்கானலுக்கு வருகை தருகிறது. இவர்கள் பாசம் மருத்துவமனையுடன் சேர்ந்து தீ விபத்து அல்லது பிறவி குறைபாடு (காது, மூக்கு மற்றும் தொண்டை) உள்ளவர்களுக்கு என ஒரு இலவச மருத்துவ முகாம் நடத்த உள்ளது. இதில் பிளாஸ்டிக் சர்ஜெரியும் உள்ளடக்கம்...

இது ஒரு முற்றிலும் இலவசம்!!!

இடம்: பாசம் மருத்துவமனை, கொடைக்கானல்
தேதி: 23-மார்ச்-2010 முதல் 04-ஏப்ரல்-2010
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: 04542-240668, 245732

இ-மெயில்:  pasam.vision@gmail.com

http://www.thehindu.com/2009/01/11/stories/2009011151570300.htm

Monday, 1 February 2010

ஜோக் புரியுதா?

Posted by மௌனமான நேரம் | Monday, 1 February 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
மூளையின் செயல்திறனை ஆராயும் நோக்கில் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடத்திய ஆய்வில் ஆண்கள் ஜோக்குகளை எளிதில் புரிந்து கொள்கிறார்கள் ஆனால் பெண்களுக்கு சற்று நேரம் பிடிக்கிறது என்று தெரிவிக்கிறது.

அதே சமயம் பெண்கள் எல்லா ஜோக்குகளையும் நன்கு ரசித்து சிரிக்கிறார்கள், ஆண்கள் லேசாகச் சிரித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது. ஜோக்குகளைப் படிக்கும்போதும் கேட்கும்போதும் அவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக இருக்கின்றனர். ஜோக்கு சொல்லி முடித்த பிறகே அதன் தன்மை உணர்ந்து சிரிக்கின்றனர். ஆனால் அந்தச் சிரிப்பு முழுமையாக இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் நினைத்து நினைத்தும் சிரிக்கிறார்கள்.

Sunday, 31 January 2010

Corn Flakes விலை உயர்வு!!

Posted by மௌனமான நேரம் | Sunday, 31 January 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
காலை உணவுக்கு பயன்படுத்தப்படும் கெலாக்ஸ் கார்ன்பிளேக்சின் விலை அதிகரிக்க உள்ளது. இந்தியாவில் காலை உணவு தயாரிக்கும் பெரிய நிறுவனமான, கெலாக் இந்தியா நிறுவனம், கோதுமை, சோளம் மற்றும் கோகோ போன்றவற்றை மூலப்பொருட்களின் விலை உயர்வால், தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.

இதுகுறித்து, கெலாக் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அனுபம் தத்தா கூறுகையில், 'ஐந்தாண்டுகளாக, எங்கள் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்காமல் சமாளித்தோம். அதே விலையையே தொடர விரும்பினோம். ஆனால், மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தயாரிப்புகளின் விலையை சிறிது அதிகரிக்க வேண்டி உள்ளது' என்றார்.

துவரம் பருப்பு திடீரென விலை சரிவு!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், துவரம்பருப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு 1,200 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டது, வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'விலை மேலும் சரியும்' என்று வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவி வருவதால், பருப்பு இருப்பு வைத்துள்ள வியாபாரிகள் கிலியடைந்துள்ளனர்.

இந்திய அளவில் 2008 டிசம்பர் முதல் துவரம் பருப்பு விலையில் கடும் உயர்வு ஏற்பட்டது. உச்சகட்டமாக, 2009 டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் கிலோ 88 ரூபாயாக விலை உயர்ந்தது. விரைவில் 100 ரூபாயாக உயரும் என்ற கருத்தும், அப்போது வியாபாரிகள் மத்தியில் நிலவியது. பருப்பு விலை, நேற்று குவிண்டாலுக்கு 1,200 ரூபாய் சரிவு ஏற்பட்டு குவிண்டால் 5,800 ரூபாய்க்கும், கிலோ 58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விலையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து மொத்த விலையிலும் சரிவு ஏற்படுவது தான் வழக்கம். ஆனால், வியாபாரிகள் கடந்த மாதமே அதிக விலை கொடுத்து பருப்பை விற்பனைக்காக வாங்கியதால் பருப்பு விலையை குறைக்க முன்வரவில்லை . 'சில்லரை கடைகளில் இன்று முதல் விலை குறைப்பு செய்யப்படும்' என வியாபாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக, வடமாநில வியாபாரிகள் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பருப்புகளையும் விற்பனைக்கு கொண்டு வரத்துவங்கியுள்ளனர்.

தூங்கா நகரம்!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தயாரிக்கும் 2வது படம் தூங்கா நகரம். இப்படத்தின் சூட்டிங்கை மதுரையில் அழகிரி தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு துரை தயாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின்னர் அவர் தூங்கா நகரம் படம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். வாரணம் ஆயிரம் படத்தை வெளியிட எனக்கு வாய்ப்பு கிடைத்ததால்தான் நான் தொடர்ந்து சினிமாத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். தூங்கா நகரம் படத்தில் 4 கதாநாயகர்கள். பசங்க படத்தில் நடித்த விமல், ரேனிகுண்டா நிஷாந்த், நா‌டோடிகள் பரணி, படத்தை இயக்கும் கவுரவ் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த படம் வெளியூரில் இருந்து மதுரை வந்து வாழ்க்கை நடத்தும் வாலிபர்களின் கதை. மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். மே மாதத்தில் தூங்கா நகரம் திரைக்கு வரும், என்று துரை தயாநிதி கூறினார்.

Thursday, 31 December 2009

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு ஒபாமா கண்டனம்!

Posted by மௌனமான நேரம் | Thursday, 31 December 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
நைஜீரிய குற்றவாளியின் தந்தை அந்த நாட்டில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் தன் மகனைப்பற்றி எச்சரித்து இருக்கிறார்.

ஒரு வாரத்துக்கு முன்பு இந்த தகவல் நம் உளவுத்துறைக்கு கிடைத்து உள்ளது. ஆனால் அவர் பெயர் விமானத்தில் பறக்க கூடாத அளவுக்கு பயங்கரமானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. உளவுத்துறையின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த தவறு பற்றி விசாரித்து 31-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு நைஜீரிய தீவிரவாதி பற்றிய தகவல்கள் தெரியும். ஆனால் அதை மற்ற துறைகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து உஷார் படுத்த தவறியதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்தார்.

புதுமை காண்போம், புதியன படைப்போம்: கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
புதுமை காண்போம், புதியன படைப்போம்: கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து!!

தமிழர் வரலாற்றில் பொன்னேடு பதித்த 2009-ஆம் ஆண்டு விடை பெற்று புதிய 2010-ஆம் ஆண்டு பிறக்கிறது. 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும், தமிழக சட்டப் பேரவைக்கு நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் நமது கூட்டணிக்கு தமிழக மக்கள் பெருவாரியாக வாக்களித்து வெற்றியைத் தந்திருக்கிறார்கள்.

2011-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலுக்கு முந்தைய ஆண்டான இந்த 2010-ல் மக்களுக்கு ஆற்ற வேண்டிய அளப்பரிய பணிகளை ஒருக்கணம் எனக்கு நானே எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன்.

2010 ஆம் ஆண்டில்தான் தமிழக சட்டப் பேரவைக்கான புதிய கட்டிடம் திறக்கப்படவுள்ளது. பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் மிகப்பெரிய அளவிலே கட்டப்பட்டு, அதுவும் திறக்கப்பட உள்ளது.

தமிழ்மொழியின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையை மேதினியில் மீண்டும் நிலைநாட்டிடும் திருப்பணியாக- கோவை மாநகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திட அரசு ஆயத்தமாகி வருகிறது. ஏழை எளியோர் 3 கோடியே 28 லட்சம் பேருக்கு ரூ.256 கோடி செலவில் இலவச வேட்டி- சேலை வழங்கும் திட்டத்துடன் 2010-ஆம் ஆண்டு மலர்வது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏழை எளிய சாமானிய மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வரும் இந்த அரசு 2006-க்குப்பின் புதிய வரி விதிப்பு, எதுவும் இல்லாமலேயே, வரிச்சலுகைகள் பல வழங்கி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள், விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6000 நிதியுதவி, ஏழை மகளிர் திருமணத்திற்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி, மகளிர் பொருளாதாரம் மேம்பட சுய உதவிக் குழுக்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு தனித்தனி நல வாரியங்கள் போன்ற நலிந்தோர் நலம் காக்கும் திட்டங்களுடன் அவசர கால மருத்துவ ஊர்தி “108” சேவைத் திட்டம், உயிர்க் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட் டம் ஆகியனவும் மக்களால் பாராட்டப்பட்டு வரவேற்கப்படுகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அரசாணைகள் வாயிலாக 35 புதிய தொழிற்சாலைகள், தமிழமெங்கும் சாலை மேம்பாட்டுப் பணிகள், பாலங்கள், மின் திட்டங்கள், குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடைத் திட்டங்கள் போன்ற பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஆங்காங்கே உருவாக்கப்படுகின்றன.

இந்நாளில் “புதுமை காண்போம், புதியன படைப்போம், புதிய வரலாற்றை உருவாக்குவோம்” என அன்பிற்கினிய தமிழக மக்களை அழைத்து, அனைவருக்கும் எனது உள மார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.

என்.டி.திவாரியின் இன்னொரு செக்ஸ் “வீடியோ டேப்”

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்

என்.டி.திவாரியின் இன்னொரு செக்ஸ் “வீடியோ டேப்”


காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி. திவாரி மீது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. 3 பெண்களுடன் அவர் படுக்கையில் இருப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் ஆந்திரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவரிடம் இருந்து ஆந்திர கவர்னர் பதவி பறிக்கப்பட்டது.

86 வயதாகும் என்.டி. திவாரி தன் மீதான செக்ஸ் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக அவர் கூறினார். என்றாலும் என்.டி. திவாரி பற்றி புதிய செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் வரத் தொடங்கி உள்ளன.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு 1980-களில் என்.டி. திவாரி ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ- டேப் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த காலக்கட்டத்தில் என்.டி.திவாரி மத்திய மந்திரியாக இருந்தார்.

அரசு முறை பயணமாக ஒரு தடவை அவர் ஆந்திரா வந்தார். அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் நன்கு செய்யுமாறு அப்போதைய ஆந்திரா முதல்- மந்திரி என்.டி. ராமராவ் உத்தரவிட்டிருந்தார். டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த என்.டி. திவாரி அரசு காரில் கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

அன்றிரவு தனியார் ஒருவரின் சாதாரண காரில் என்.டி.திவாரி ரகசியமாக வெளியில் புறப்பட்டுச் சென்றார். அமீப் பேட் பகுதியில் உள்ள ஒரு பங்களாவுக்கு அவர் சென்றார்.

அவருக்காகவே அங்கு ஒரு இளம்பெண் தயாராக வைக்கப்பட்டிருந்தார். அன்றிரவு முழுவதும் அந்த பெண்ணுடன் பங்களாவில் என்.டி.திவாரி தங்கி இருந்தார். விடிய, விடிய அவர் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

என்.டி.திவாரியின் பெண் சபலத்தை அறிந்த உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர், அதை வீடியோவில் பதிவு செய்ய முடிவு செய்தார். என்.டி.திவாரி தங்கிய படுக்கை அறை ஜன்னலில் அவர் ரகசிய வீடியோ காமிராவை பொருத்தி உள்ளே நடந்த செக்ஸ் காட்சிகள் அனைத்தையும் பதிவு செய்தார்.

சுமார் 2 1/2 மணி நேரம் திவாரியின் செக்ஸ் லீலை காட்சிகளை அந்த போலீஸ் அதிகாரி பதிவு செய்தார். அந்த செக்ஸ் காட்சிகளை ஒரு பிரதி எடுத்துக்கொண்டு டேப்பை அவர் உயர் அதிகாரியிடம் கொடுத்துவிட்டார். ஆந்திரா உளவுத்துறை அந்த வீடியோ- டேப்பை தற்போதும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

என்.டி.திவாரி செக்ஸ் லீலைகளை படம் பிடித்த உளவுத்துறை அதிகாரி அது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. போலீஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அந்த வீடியோ- டேப்பை அந்த அதிகாரி வைத்திருந்தார். தற்போது திவாரி பற்றி செக்ஸ் தகவல்கள் வெளி வருவதால் அந்த போலீஸ் அதிகாரி தானாக முன் வந்து இந்த தகவலை வெளியிட்டார்.

என்.டி.திவாரியின் அந்தரங்கத்தை வீடியோவில் பதிவு செய்தது, தங்களது துறை ரீதியிலான கடமைகளில் ஒன்று. இதில் எந்த தவறும் இலலை என்று அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

தற்போதும் அரசியல் தலைவர்களின் ரகசிய பணிகள் உளவுப்துறையால் படம் பிடித்து பதிவு செய்யப்படுவதாக அவர் கூறினார். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் தகவல்களை தெரிவிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Wednesday, 30 December 2009

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனத்துக்கு தடை!

Posted by மௌனமான நேரம் | Wednesday, 30 December 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனத்துக்கு தடை!


புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னை தயாராகி வருகிறது. நட்சத்திர ஓட்டல்களிலும், பண்ணை வீடுகளிலும், பல்வேறு நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று முன் கூட்டியே போலீசார் நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தி விட்டனர்.


குறிப்பாக பெண்களை, வாலிபர்கள் சில்மிஷம் செய்யும் நடவடிக்கைக்கு வழிவகுக்கும் ஆபாச நடனத்தை நடத்த கூடாது, இரவு 11 மணிக்கு மேல் மதுபார்களை திறந்து மது பரிமாறக்கூடாது, குடி போதையில் வாகனம் ஓட்டி செல்ல அனுமதிக்க கூடாது என்ற உத்தரவுகள் ஏற்க கூடியதல்ல. வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்து விடும் என்று கூறுகின்றனர்.

சென்னையில் போலீசாரின் உத்தரவை மீறி ஆபாச நடனம் நடந்தாலோ, 11 மணிக்கு மேல் மது பரி மாற்றம் நடந்தாலோ அந்த ஓட்டலின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்.


பல்வேறு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் ஊழியர்களை உற்சாகப்படுத்த பிரபல நடிகைகள், கவர்ச்சி நடிகைகள், மாடல் அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.

ஓடிப்போலாமா!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ஓடிப்போலாமா!

கல்லூரி மாணவர் பரிமள். படிப்பு ஏறாமல் ஒன்பது பாடங்களில் அரியர் வைத்து நண்பர்களுடன் தான்தோன்றித்தனமாக சுற்றுகிறார். அவர் கண்ணில் சந்தியா பட காதல்...

பழைய வீட்டை காலி செய்து தாய் சுதாவுடன் சந்தியா எதிர் வீட்டில் குடியேறி காதல் கணை வீசுகிறார். ஆனால் சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. ஒன்பது அரியர் வைத்திருக்கும் நீ எனக்கு தகுதி இல்லை என்கிறார். இதனால் பரிமள் ராப்பகலாக படித்து அனைத்து பாடங்களிலும் தேறுகிறார்.

ஆனாலும் சந்தியா மனம் மாறவில்லை. தனது தந்தை கோட்டா சீனிவாசுக்கும் மாமா மகாதேவனுக்கும் தீராத பகை. இரு குடும்பத்தினரையும் ஒன்று சேர்க்க சந்தியா போராடுகிறார். வீட்டை விட்டு ஓடிவிடு. திரும்பி வரும்போது உன்னை யாரும் கட்டிக்கமாட்டார்கள். வேறு வழியின்றி எனக்கு உன் தந்தை திருமணம் செய்து வைப்பார் பிரிந்த குடும்பம் சேர்ந்து விடும் என்று மாமா மகன் ஆலோசனை சொல்ல அதன்படி வீட்டை விட்டு ஓடுகிறார்.

பரிமளும் வேறு விதமாய் காய் நகர்த்த அதே நாளில் வீட்டை விட்டு ஓடுகிறார். இருவரும் காதலித்து ஓடிவிட்டதாக அபார்ட்மென்ட் அல்லோலப்படுகிறது. ஊட்டிக்கு செல்லும் சந்தியாவை பின் தொடர்ந்து செல்லும் பரிமள் அவரை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்.

ஒரே வீட்டில் தங்குகின்னர். சந்தியா தன் மீது வைத்துள்ள நம்பிக்கை அவரை மனம்மாறச் செய்கிறது. இருவரும் ஊருக்கு திரும்புகின்றனர். ஓடிப்போன அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் இருவருமே நாங்கள் காதலிக்கவில்லை என்று மறுக்கின்றனர்.

இதையடுத்து முறைப்பையனுடன் சந்தியாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது தன் மீதுள்ள காதலில் பரிமள் ஊட்டிக்கு வந்ததும் தன் மீது அவர் வைத்துள்ள ஆழமான அன்பும் சந்தியாவுக்கு தெரிகிறது. பரிமள் மேல் காதல் கொள்கிறார். இன்னொரு புறம் சந்தியா முறைப்பையனை திருமணம் செய்ய ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து இருவரும் மணக்கோலத்தில் மணமேடையில் நிறுத்தப்படுகின்றனர். காதல் வென்றதா? என்பது கிளைமாக்ஸ்.

நடிகை சங்கீதாவின் சித்தி மகன் பரிமள் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம். துறுதுறு மாணவனாக வரும் அவர் காதல் வயப்பட்டதும் படிப்பில் சீரியஸ் ஆகி அனைத்து பாடங்களிலும் பாஸ் செய்வதும் காதல் கை கூடாமல் துவண்டு நிற்பதும் பக்குவப்பட்ட நடிப்பு.சந்தியாவை மடக்க அவருக்கு தெரியாமல் பின்னால் ஓடிப்போனதும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. காதலிக்காக குளிரில் நடுங்கி டீ கடையில் உறங்கும்போது பரிதாப பட வைக்கிறார்.

ஆரம்பத்தில் பரிமளை உதாசீனம் செய்யும் சந்தியா தனது செருப்பு, பையை பீரோவில் பாதுகாத்து வரும் பரிமள் காதலை உணர்ந்து தடுமாறுவது ஜீவன்.

காதல் தூது போய் தோட்டா சீனிவாசராவிடம் அடிபடும் சுமன் ஷெட்டி சிரிக்க வைக்கிறார். இமான் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றனர். கலகலப்பான திரைக்கதையில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கண்மணி. வீடு, காம்பவுண்ட் என நகரும் நாடகத்தன காட்சிகள் வேகத்தடை போடுகின்றன.


நன்றி: மாலை மலர்