Friday, 8 October 2010
பூனைக்கு மணி கட்ட போவது யார்? - தொடர்ச்சி ...
Posted by மௌனமான நேரம் | Friday, 8 October 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்
19, ஆகஸ்ட் 2009 - இல் "பூனைக்கு மணி கட்ட போவது யார்? " என்ற தலைப்பில் மேற்கத்திய நாடுகளின் விமான நிலையங்களில் இந்திய வி.ஐ.பிகள் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவமானப்படுத்தப்படுவது குறித்து எழுதினோம்...
ஒன்று, உலக வி.ஐ.பிகள் பட்டியல் எடுத்து, எல்லா வி.ஐ.பிகளும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்...இல்லை, எல்லோரும் சமம்.. என்று எல்லா வி.ஐ.பிகளும் மக்களோடு மக்களாக சோதனைக்கு உட்படுத்தவேண்டும்..
மத்திய விமானப் போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல், கனடா நாட்டின் தலைநகர் மாண்ட்ரில் நகருக்கு அரசுமுறை பயணமாக கடந்த திங்கட்கிழமை சென்றார். வழியில் தனது சொந்த வேலையாக அமெரிக்காவின் சிகாகோ நகர் விமான நிலையத்தில் அன்று இரவு இறங்கினார்.
அமெரிக்க உளவுத்துறை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு அளித்துள்ள சந்தேகத்துக்கிடமான நபர்களின் பெயர் பட்டியலில் பிரபுல் படேல் என்பவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. அந்த நபரின் பிறந்த தேதியும், மந்திரி பிரபுல் படேலின் பிறந்த தேதியும் ஒரே தேதியாக இருந்தது. இதனால், மத்திய மந்திரி பிரபுல் படேல்தான், பட்டியலில் உள்ள சந்தேகத்துக்கிடமான நபர் என்று கருதி, விமான நிலையத்தில் இருந்த குடியுரிமை அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.
அவரிடம் குடியுரிமை அதிகாரிகள், துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். ``அமெரிக்காவுக்கு என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்? இதற்கு முன்பு அமெரிக்காவில் தங்கி இருக்கிறீர்களா?'' என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டனர்.
அதற்கு, பிரபுல் படேல், தான் இந்திய விமானப் போக்குவரத்துறை மந்திரி என்றும், கனடா செல்லும் வழியில் சொந்த வேலையாக இங்கு இறங்கினேன் என்றும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் கேட்கவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதுடன், அவரது உடைமைகளையும் சோதனையிட்டனர்.
அதற்குள், விமான நிலையத்தில் மந்திரி பிரபுல் படேல் தடுத்து நிறுத்தப்பட்ட தகவல் அறிந்த இந்திய தூதரக அதிகாரிகள், உடனடியாக அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலவரத்தை எடுத்து சொன்னார்கள். அதன் பின்னரே பிரபுல் படேலை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் விடுவித்தனர். ஆனாலும், இந்த சம்பவம் காரணமாக பிரபுல் படேல் சுமார் 2 மணி நேரம் சிகாகோ விமான நிலையத்தில் பரிதவித்தார்.
இது பற்றிய தகவல் அறிந்த அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி ஜேனெட் நபோலிடானோ, மத்திய மந்திரி பிரபுல் படேலிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். எதிர் காலத்தில் இது போன்ற தவறுகள், குளறுபடிகள் நடக்காமல் தடுக்கும் வண்ணம் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
ஆனால், மத்திய மந்திரி பிரபுல் படேல் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. விமான நிலையங்களில் இவ்வாறு நிறுத்தப்படுவதும், சோதனையிடுவதும், விசாரணை நடத்தப்படுவதும் வழக்கமான நடைமுறைகள்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"நான் மாண்ட்ரீல் நகரில் இருக்கிறேன். எனது பெயர், எனது பிறந்த தேதியில் இன்னொருவர் பெயரும், பிறந்த தேதியும் இருந்ததால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டது. அதனால் அமெரிக்க அதிகாரிகள் சோதனை நடத்தி, விசாரணை நடத்த வேண்டியதாயிற்று. பதற்றப்படும் அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை. ஆகவே இந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை'' என்று பிரபுல் படேல் கூறினார்.
Source: தினதந்தி
இதற்காக அவரிடம் அமெரிக்க மந்திரி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இது பற்றி பேச போனால், எல்லாருடைய பாதுகாப்புக்கு என்று தான் இதை செய்தோம், இல்லை நாங்கள் செய்கிறோம் என்று எல்லோரும் சப்பை கட்டு கட்டுவார்கள்...
இது போன்ற கசப்பான சம்பவம் ஒரு அமெரிக்க வி.ஐ.பிக்கோ, மேற்கத்திய நாட்டு வி.ஐ.பிக்கோ நடந்து இருந்தால், என்ன ஆகி இருக்கும்?
ஒன்று, உலக வி.ஐ.பிகள் பட்டியல் எடுத்து, எல்லா வி.ஐ.பிகளும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்...இல்லை, எல்லோரும் சமம்.. என்று எல்லா வி.ஐ.பிகளும் மக்களோடு மக்களாக சோதனைக்கு உட்படுத்தவேண்டும்..
இந்த முடிவு உலகளாவிய அளவில் இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்...
வம்புக்கு சிம்பு என்றிருந்த நிலையிலிருந்து ரொம்ப மாறி இருக்கிறார் சிம்பு. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்றால், ""நீங்கள்லாம் எழுதி எழுதி சொன்ன பாடம்தான் இந்த மாற்றத் துக்குக் காரணம்னு வெச்சிக்கோங்க ளேன்! கிசுகிசுக்களா என்னைப் பத்தி எழுதின நீங்க, "விண்ணைத் தாண்டி வருவாயா'வுக்கு அப்பு றம் நல்லபடியா எழுதறீங்க. சந்தோஷமா இருக்கு!'' என்று கூலாக- கோப மில்லாமல் பதில் சொல் கிறார் சிம்பு.
உங்களை விட அனுஷ்கா உயரமாச்சே? என்ற கேள்விக்கு "வேணும்னா பக்கத்துல போய் நிக்குறேன். அளந்துக்கங்க" என்றார் சிம்பு. ஆரம்பத்தில் ஜோதிகாவின் ரசிகன் நான் என்று சொல்லி வந்த சிம்பு, இப்போது அனுஷ்காவின் தீவிர ரசிகன் ஆகி விட்டாராம். அருந்ததி படம் பார்த்ததில் இருந்து அனுஷ்கா ரசிகராகி விட்டேன் என்று சொன்ன சிம்பு, அந்த படத்தில் அனுஷ்காவின் பர்பாமென்ஸ் பக்காவா இருந்துச்சி, என்று கூறி பாராட்டினார்.
வானம் படத்தில் அனுஷ்காவுடன் சேர்ந்து ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடுகிறாராம் சிம்பு.

Thursday, 7 October 2010
சாயங்காலம் சரியா 4 மணி இருக்கும்...
"டேய் கணேஷ், அவன் என்னை திட்டிட்டு போயிட்டான்டா மச்சான்"
பக்கத்துக்கு வீட்டு செல்லதுரை அலறி அடிச்சி, கணேஷ் வீட்டை நோக்கி ஓட,
"எவன்டா மச்சான்"
- இன்னு கணேஷ் மாடி படி குதிச்சு ஓட, தெருவே அமர்களமாகி போச்சு...
கணேஷ், செல்லதுரை இரண்டு பேரும் சின்ன வயசு நண்பர்கள்.....மில்டரி- ல இருந்து செல்லதுரை வந்து கிட்ட தட்ட ரெண்டு வருஷம் ஆச்சு.....
கணேஷ், செல்லதுரை இரண்டு பேரும் சின்ன வயசு நண்பர்கள்.....மில்டரி- ல இருந்து செல்லதுரை வந்து கிட்ட தட்ட ரெண்டு வருஷம் ஆச்சு.....
அன்று,
"ஒரே தட்டுல சாப்படுற நாய்களா, இப்படி நான்டுகிட்டு நிக்குதுங்க..!"
- பெருசு ஒன்னு புலம்பிட்டு போறது கேட்டு...
"யோவ் பெருசு, என்ன புலம்பிட்டு?"
பக்கத்துக்கு வீட்டு ராமசாமி பொண்டாட்டி கேட்க...
"இல்லம்மா.....இந்த மாடி வீடு செல்லதுரை இல்ல......"
"...நல்லத்தான இருந்தான், என்ன ஆச்சு அவனுக்கு ...."
"அவனுக்கு ஒன்னும் இல்ல புள்ள ....."
"அப்பறம் என்னவாம்?"
"எப்பவும் ரெண்டு நாயும் சேந்து, எவன்கிட்டையாவது மல்லுக்கு நிக்கும்...இன்னக்கு ஒன்னுக்கு ஒன்னு வேட்டிய மடிச்சுகிட்டு......"
"...."
"புள்ள, என்ன அப்படி பாக்குத....நிசம் புள்ள..."
"சொல்லுத கேளு....."
"டேய் கணேஷா!!.....கணேஷா!!...." - செல்லதுரை கூப்பிட,
"என்னடா மாப்பிள்ளை!..." இன்னு கணேஷ்....
"மச்சான், கொஞ்சம் கட்டிங்-டா மச்சான்..வா டவுன் போலாம்....."
"இதோ வாரேண்டா மாப்பிள்ளை!..."
சொன்ன கணேஷ், பட பட இன்னு மாடி படி ஏற,
"என்னெங்க எங்க அவசரமா? ...."
"இதோ டவுன் வர.."
" என்னெங்க, கொஞ்சம் வீட்டுல இருக்க கூடாதா?"
"இல்லடி இதோ வந்துடுறேன்..."
" ...ம்ம்"
" நீங்க வீட்லேயே கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிடுங்க ...."
" அப்போ செல்லதுரை ....?"
"...ம்ம், சரி... ஆனா....!!"
"என்னடி ஆனா...?"
"ஆனா....!! லிமிட்டா இருக்கணும்"...
"டேய் கணேஷ் ....இன்னைக்கு நம்ம வீட்டுல பார்ட்டி...."
செல்லதுரை சொல்ல,கணேஷ்மும் தலைய ஆட்ட ......
பார்ட்டி ஆரம்பம் ....
"......"
"......"
" கொஞ்சம் போதும்டா மச்சான்..."
" இல்லடா மாப்பிள்ளை, இன்னும் ஒரு ரவுண்டு ...."
"... ருக்கு ....ருக்கு .." கணேஷ் கூப்பிட,
கணேஷ் பொண்டாட்டி,
".. என்னெங்க.."
".. கொஞ்சம் ஊறுகாய் குடு புள்ள ...."
ருக்கு ஊறுகாய் கொண்டு வைக்க, செல்லதுரை ருக்கு கையே பார்த்திட்டு இருந்தான் ...
அடுத்த ரூம்க்கு ருக்கு போயிட்டா...
" என்னடா மச்சான், எப்படி பார்க்கற?"
" இல்லடா , ஒன்னும் இல்ல..."
அடுத்த ரவுண்டுமும் ஓவர் ......
"... ருக்கு ....ருக்கு .." கணேஷ் மறுபடியும் கூப்பிட,
".. என்னெங்க.."
".. இன்னும் கொஞ்சம் ஊறுகாய் குடு புள்ள ...."
ருக்கு ஊறுகாய் கொண்டு வைக்க, செல்லதுரை ருக்கு கையே திரும்ப திரும்ப பார்த்திட்டு இருந்தான் .......
திடீருன்னு செல்லதுரை, ருக்கு கையை பிடிச்சு இழுக்க, அழுதுகிட்டே அடுத்த ரூம்க்கு ருக்கு போயிட்டா...ருக்கு .....
" வெளிய போடா நாயே!!!" .... கணேஷ் கத்த....
"ஆரம்பிச்ச சண்டை, ஒன்னுக்கு ஒன்னு வேட்டிய மடிச்சுகிட்டு மல்லுக்கு நிக்குதுக....." இன்னு பெருசு சொல்லிகிட்டே நடக்க,
"என்ன பொழப்பு .." இன்னு ராமசாமி பொண்டாட்டி சொன்னது நாம காதுக்கு கேட்டுச்சு....

Subscribe to:
Posts (Atom)