மௌனமான நேரம்

 

Monday 30 November 2009

திருமணம் - அவசியமா அனாவசியமா?

Posted by மௌனமான நேரம் | Monday 30 November 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
திருமணம் - அவசியமா அனாவசியமா?

'எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை' என்று சொல்வது இப்போ கொஞ்சம் பேஷன் ஆகிவிட்டது. சினிமாவில் உள்ளவர்களும், மேல் தட்டு மக்களும் என்ன நினைகிறார்கள் என்பதை விட.. இந்த எண்ணம் நடுத்தர வர்க்கம் நடுவில் கூட இருப்பது தான் கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது.

சமீபத்தில், என்னக்கு தெரிந்த ஒரு ஜோடியை சந்திக்க நேர்ந்தது. அவர் மிகவும் மதிக்கப்டும் ஒரு ஆசிரியர். ஆனால் திருமணம் என்னும் சடங்கில் அவருக்கு நம்பிக்கை இல்லையாம். 'உன்னை காதலிக்கிறேன். ஆனால் திருமணத்தில் என்னக்கு நம்பிக்கை இல்லை' என்று சொல்லிவிட்டார். அந்த பெண்ணின் வீட்டில் அவள் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர். அவளும் திருமணத்திற்கு தயாராகத்தான் இருந்தால். ஆனால் திருமணம் செய்து கொள்ள அவர் தயாராக இல்லை. திருமணம் செய்யாமால் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ் என்று சொல்லி வழியனுப்பும் அளவுக்கு அவள் பெற்றோருக்கு பரந்த மனது இல்லை. அந்த ஜோடி என்ன செய்ய போகிறார்களோ தெரியவில்லை.

இப்படி திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூறும் ஒரு காரணம் - மனதில் இவருடன் தான் வாழவேண்டும் என்று முடிவு செய்த பின் திருமணம் எதற்கு என்பதுதான்.


சரிதான்!!!


நன்றாக வண்டி ஓட்ட தெரிந்தவனுக்கு, சாலை விதிகளை பின்பற்றுபவனுக்கு அந்த விதிகள் தேவை இல்லை தான். ஆனால் உலகில் எல்லோரும் அப்படி இல்லையே. அதற்காக, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதி வைக்க முடியுமா? அப்படி வைத்தால் அந்த விதிமுறைகளால் என்ன பயன் தான் கிடைக்கும்?

திருமணம் என்பது மனிதனை ஒரு கட்டுகொப்புக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உருவாக்கபட்டது என்பது என் எண்ணம். இன்னார் என்று இல்லாமல் எல்லோருடனும் சேர்ந்து இருக்கும் விலங்குகளில் இருந்து மாறி, தனக்கென்று கோட்பாடுகள், வரையறைகள் வகுத்து மனிதன் வளர்ச்சி அடைந்து இருக்கும் இந்த கால நிலையில் திருமணம் என்பது அவசியம் என்ற எண்ணமே என் மனதில் மேலோங்கி நிற்கிறது!!!!

Sunday 29 November 2009

இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை சூடு பிடிக்கிறது!

Posted by மௌனமான நேரம் | Sunday 29 November 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை சூடு பிடிக்கிறது!

நானோ கார்களுக்கான முன்பதிவுக்கு எல்லாரும் முண்டியடிக்கும் இந்தியாவில்தான், அதிக விலையுள்ள சொகுசு கார்களும் அதிகளவில் விற்பனையாகின்றன. சொகுசு கார்களின் சொர்க்கமான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இப்போது சிறிய, எரிபொருள் சிக்கனம் வழங்கும் கார்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் 15 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை விலையுள்ள உயர்தர சொகுசு கார்கள் அதிகமாக விற்பனையாகின்றன. இந்த ஆண்டு இலக்கு மூவாயிரம் கார்கள். வோல்க்ஸ்வேகன் பசாட் (24 லட்ச ரூபாய்), டயோட்டா பார்ச்சூனர் (20 லட்ச ரூபாய்), ஹோண்டா சிஆர்-வி (22 லட்ச ரூபாய்) கார்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக விற்றுத் தீர்த்திருக்கின்றன.


சர்வதேச அளவில் மிகப் பிரபலமான ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் சொகுசு கார்கள், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார்கள், டாடா நிறுவனம் மூலம் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜாகுவார் கார்கள் மூன்று மாடல்களில் விற்பனைக்கு வருகின்றன. இவற்றின் விலை 63 லட்சத்தில் இருந்து 93 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாண்ட் ரோவர் கார்களும் மூன்று மாடல்களில் விற்பனைக்கு வருகின்றன. பிரிட்டனின் கவுரவம் மிக்க இந்த சொகுசு கார்கள் தயாரிப்பில் டாடா நிறுவனமும் ஈடுபட்டிருக்கிறது.

டாடா நிறுவன சேர்மன் ரத்தன் டாடா கூறுகையில், 'சொகுசு கார்கள் பயன் பாட்டை இந்திய மக்கள் அனுபவிக்க வசதியாக இந்த சிறப்பு மிக்க கார்கள் இங்கே விற்கப்படும். டாடா நிறுவனம் சம்பந்தப்பட்டிருப்பதால், இதுவரை பிரிட்டிஷார் பெருமை என்று கருதப்பட்ட இவை, இனி இங்கே விற்பனைக்கு வருகின்றன' என்றார்.

Saturday 28 November 2009

கலியுக சிலந்தி மனிதன் (Spider Man)

Posted by மௌனமான நேரம் | Saturday 28 November 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
கலியுக சிலந்தி மனிதன் (Spider Man)

அலைன் ராபர்ட் (Alain Robert, 47) ஒரு கலியுக சிலந்தி மனிதன் (Spider Man) என்றே சொல்லலாம். கயிற்றின் உதவி இன்றி உயர்ந்த கட்டடங்களில் ஏறுவது இவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. ஈபில் டவர் (Eiffel Tower) , லண்டன் கானரி வார்ப் (London's Canary Wharf building) , நியூ யார்க் எம்பைர் ஸ்டேட் பில்டிங் (New York's Empire State Building) and சிகாகோ சீயார் டவர் (Chicago's Sear's Tower) ஆகிவை இவர் ஏற்கனவே ஏறி சாதித்த சிகரங்கள். இவர் ஏறிய கட்டடங்கள் மொத்தம் 80.


இவர் மலேசியா வில் தன்னுடைய அடுத்த சாதனையை நிகழ்த்தும்போது காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர் . 88 அடுக்கு மாடி கட்டடத்தை பெட்ரோனாஸ் ட்வின் டவர்-ஐ (Petronas Twin tower) ஒரு மணி 45 நிமிடங்களில் ஏறி இருக்கிறார்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே உயரம் என்றால் ரொம்ப பயமாம், தனக்கு கொஞ்சம் கூட தன்னம்பிக்கை இருந்ததில்லை என்கிறார்.

ரணில் விக்ரமசிங்கே? பொன்சேகா? மகிந்தரா ராஜபக்ஷே?

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ரணில் விக்ரமசிங்கே? பொன்சேகா? மகிந்தரா ராஜபக்ஷே?

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் சுதந்திர கட்சி சார்பில் அதிபர் மகிந்தரா ராஜபக்ஷே போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஐக்கிய தேசிய கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டது.

இதன் சார்பில் ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து விலகிய சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

இந்த நிலையிலும், இலங்கை அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெற்று அதிபரானால் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவார் என இலங்கை சுதந்திர மகாஜன கட்சி அறிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 25 ஆண்டுகளாக நீடித்து வந்த சண்டை, கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. ராணுவ வெற்றிக்கு, அப்போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தான் காரணம் எனக் கூறப்பட்டது. வெற்றியை தேடித் தந்ததற்கு பரிசாக, இலங்கை ராணுவத்தின் முப்படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக பொன்சேகா நியமிக்கப் பட்டார்.

இந்நிலையில் சரத் பொன்சேகா, தனது ராணுவ பதவியை சில வாரங்களுக்கு முன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்படத்தக்கது.

Friday 6 November 2009

என்னத்த தான் எழுதறது??

Posted by மௌனமான நேரம் | Friday 6 November 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

என்னவோ எழுதனும்னு தான் தோணுது.... ஆனா என்ன எழுதறதுன்னு தெரியல்லியே!!!!!!!!!!!!!!..........

தமிழ்நாட்டு அரசியல் பத்தி எழுதலாமா....??

அச்சச்சோ.. அப்பறம் யாராவது அடிக்க வந்துட்டா...

ம்ம்.. அப்போ உலக அரசியல் பத்தி எழுதலாம்...

ஆத்தி...கற்றது கைமண்ணளவு ஆச்சே... நமக்கெதுக்கு வம்பு!!

கோலிவுட்.. பாலிவுட்.. ஹாலிவுட் பத்தி ஏதாவது???...

ஐயோ... வேண்டாம்பா... ஏதாவது ஏடாகூடமா எழுதி.. கேஸ் கீசுன்னு போய்ட்டா..!!!

இயற்கை, அறிவியல், புவியியல், இதுலே எதாவது ஒரு இயல பத்தி எழுதலாமோ???

ஆஹ.... அப்பறம் எழுதி முடிச்சிட்டு நான் மட்டும் தானே உக்காந்து படிக்கணும்.... !!!

குட் ஐடியா... சொந்த அனுபவம்....... ?????

நோ..நோ.. நான் என்ன அப்துல் கலாமா??

சரி சரி... நல்ல நல்ல சிந்தனைகள கொஞ்சம் எழுதுவோமா????

ஆமா நமக்கு நல்ல சிந்தனைன்னு தோன்றது வேற எல்லாருக்கும் சோதனையா தோணிட்டா..!!

ம்ம்.... சமுதாய சீர்திருத்த கருத்துக்கள்?????

stop it.... யாரும் படிக்க வேண்டாமா???????

வாவ்!!! கவிதை எழுதலாமே.... !!!

ம்ம்... எழுதலாம்... ஆனா கவிதைன்னு தலைப்பு போட்டிருந்தியே கவிதையை காணோமே ....எங்கே...எங்கே??? ன்னு எல்லாரும் கேட்டுட்டா???? - 'தேடுங்க.. தேடுங்க... தேடிக்கிட்டே இருங்க....தேடினாலும் கிடைக்காது....' ன்னு சொல்ல வேண்டி வந்துடிச்சின்னா??

ஓகே... கதை தான் கரெக்ட்...

No way... எழுத்தாளர்களும்... மேதைகளும் எழுதற எடத்துலே நாம போய் பேக்கு மாதிரி எதாவது எழுதி கேவலபடனுமா....

முயற்சியே பண்ணலைன்னா எப்படித்தான் முன்னுக்கு வர்றது.... ???

எல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு... அப்பரம் எல்லாரும் சேர்ந்து கும்மி எடுக்கும் போது வடிவேலு ஸ்டைல் லே.... 'என்ன நல்லவன்னு சொல்லிட்டாய்ங்கன்னு' சிரிச்சிகிட்ட வாங்கிக்கவா முடியும்...'

என்ன இப்படி தூக்கம் கண்ண சொக்குது... யோசிச்சி யோசிச்சி tired ஆகிட்டேனோ.... சரி இப்போ தூங்கிட்டு இனி நாளைக்கு யோசிச்சிக்கலாம்...