மௌனமான நேரம்

 

Friday, 8 October 2010

பூனைக்கு மணி கட்ட போவது யார்? - தொடர்ச்சி ...

Posted by மௌனமான நேரம் | Friday, 8 October 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
19, ஆகஸ்ட் 2009 - இல்  "பூனைக்கு மணி கட்ட போவது யார்? " என்ற தலைப்பில் மேற்கத்திய நாடுகளின் விமான நிலையங்களில் இந்திய வி.ஐ.பிகள் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவமானப்படுத்தப்படுவது குறித்து எழுதினோம்...


த்திய விமானப் போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல், கனடா நாட்டின் தலைநகர் மாண்ட்ரில் நகருக்கு அரசுமுறை பயணமாக கடந்த திங்கட்கிழமை சென்றார். வழியில் தனது சொந்த வேலையாக அமெரிக்காவின் சிகாகோ நகர் விமான நிலையத்தில் அன்று இரவு இறங்கினார்.

மெரிக்க உளவுத்துறை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு அளித்துள்ள சந்தேகத்துக்கிடமான நபர்களின் பெயர் பட்டியலில் பிரபுல் படேல் என்பவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. அந்த நபரின் பிறந்த தேதியும், மந்திரி பிரபுல் படேலின் பிறந்த தேதியும் ஒரே தேதியாக இருந்தது. இதனால், மத்திய மந்திரி பிரபுல் படேல்தான், பட்டியலில் உள்ள சந்தேகத்துக்கிடமான நபர் என்று கருதி, விமான நிலையத்தில் இருந்த குடியுரிமை அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.

வரிடம் குடியுரிமை அதிகாரிகள், துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். ``அமெரிக்காவுக்கு என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்? இதற்கு முன்பு அமெரிக்காவில் தங்கி இருக்கிறீர்களா?'' என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டனர்.

தற்கு, பிரபுல் படேல், தான் இந்திய விமானப் போக்குவரத்துறை மந்திரி என்றும், கனடா செல்லும் வழியில் சொந்த வேலையாக இங்கு இறங்கினேன் என்றும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் கேட்கவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதுடன், அவரது உடைமைகளையும் சோதனையிட்டனர்.

தற்குள், விமான நிலையத்தில் மந்திரி பிரபுல் படேல் தடுத்து நிறுத்தப்பட்ட தகவல் அறிந்த இந்திய தூதரக அதிகாரிகள், உடனடியாக அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலவரத்தை எடுத்து சொன்னார்கள். அதன் பின்னரே பிரபுல் படேலை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் விடுவித்தனர். ஆனாலும், இந்த சம்பவம் காரணமாக பிரபுல் படேல் சுமார் 2 மணி நேரம் சிகாகோ விமான நிலையத்தில் பரிதவித்தார்.

து பற்றிய தகவல் அறிந்த அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி ஜேனெட் நபோலிடானோ, மத்திய மந்திரி பிரபுல் படேலிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். எதிர் காலத்தில் இது போன்ற தவறுகள், குளறுபடிகள் நடக்காமல் தடுக்கும் வண்ணம் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

னால், மத்திய மந்திரி பிரபுல் படேல் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. விமான நிலையங்களில் இவ்வாறு நிறுத்தப்படுவதும், சோதனையிடுவதும், விசாரணை நடத்தப்படுவதும் வழக்கமான நடைமுறைகள்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

"நான் மாண்ட்ரீல் நகரில் இருக்கிறேன். எனது பெயர், எனது பிறந்த தேதியில் இன்னொருவர் பெயரும், பிறந்த தேதியும் இருந்ததால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டது. அதனால் அமெரிக்க அதிகாரிகள் சோதனை நடத்தி, விசாரணை நடத்த வேண்டியதாயிற்று. பதற்றப்படும் அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை. ஆகவே இந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை'' என்று பிரபுல் படேல் கூறினார்.

Source: தினதந்தி

தற்காக அவரிடம் அமெரிக்க மந்திரி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

 து பற்றி பேச போனால், எல்லாருடைய பாதுகாப்புக்கு என்று தான் இதை செய்தோம், இல்லை நாங்கள் செய்கிறோம் என்று எல்லோரும் சப்பை கட்டு கட்டுவார்கள்...

து போன்ற கசப்பான சம்பவம் ஒரு அமெரிக்க வி.ஐ.பிக்கோ, மேற்கத்திய நாட்டு வி.ஐ.பிக்கோ நடந்து இருந்தால், என்ன ஆகி இருக்கும்?

ன்று, உலக வி.ஐ.பிகள் பட்டியல் எடுத்து, எல்லா வி.ஐ.பிகளும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்...இல்லை, எல்லோரும் சமம்.. என்று எல்லா வி.ஐ.பிகளும் மக்களோடு மக்களாக சோதனைக்கு உட்படுத்தவேண்டும்..

ந்த முடிவு உலகளாவிய அளவில் இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்...

அனுஷ்கா ரசிகன்....

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ம்புக்கு சிம்பு என்றிருந்த நிலையிலிருந்து ரொம்ப மாறி இருக்கிறார் சிம்பு. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்றால், ""நீங்கள்லாம் எழுதி எழுதி சொன்ன பாடம்தான் இந்த மாற்றத் துக்குக் காரணம்னு வெச்சிக்கோங்க ளேன்! கிசுகிசுக்களா என்னைப் பத்தி எழுதின நீங்க, "விண்ணைத் தாண்டி வருவாயா'வுக்கு அப்பு றம் நல்லபடியா எழுதறீங்க. சந்தோஷமா இருக்கு!'' என்று கூலாக- கோப மில்லாமல் பதில் சொல் கிறார் சிம்பு.

உங்களை விட அனுஷ்கா உயரமாச்சே? என்ற கேள்விக்கு "வேணும்னா பக்கத்துல போய் நிக்குறேன். அளந்துக்கங்க" என்றார் சிம்பு. ஆரம்பத்தில் ஜோதிகாவின் ரசிகன் நான் என்று சொல்லி வந்த சிம்பு, இப்போது அனுஷ்காவின் தீவிர ரசிகன் ஆகி விட்டாராம். அருந்ததி படம் பார்த்ததில் இருந்து அனுஷ்கா ரசிகராகி விட்டேன் என்று சொன்ன சிம்பு, அந்த படத்தில் அனுஷ்காவின் பர்பாமென்ஸ் பக்காவா இருந்துச்சி, என்று கூறி பாராட்டினார்.
வானம் படத்தில் அனுஷ்காவுடன் சேர்ந்து ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடுகிறாராம் சிம்பு.

Thursday, 7 October 2010

நண்பனின் மனைவி

Posted by மௌனமான நேரம் | Thursday, 7 October 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்

சாயங்காலம் சரியா 4 மணி இருக்கும்... 

"டேய் கணேஷ், அவன் என்னை திட்டிட்டு போயிட்டான்டா மச்சான்"

பக்கத்துக்கு வீட்டு  செல்லதுரை அலறி அடிச்சி, கணேஷ் வீட்டை நோக்கி ஓட,

"எவன்டா மச்சான்"

- இன்னு கணேஷ் மாடி படி குதிச்சு ஓட, தெருவே அமர்களமாகி போச்சு...

கணேஷ், செல்லதுரை இரண்டு பேரும் சின்ன வயசு நண்பர்கள்.....மில்டரி- ல இருந்து செல்லதுரை வந்து கிட்ட தட்ட ரெண்டு வருஷம் ஆச்சு.....

அன்று,

"ஒரே தட்டுல சாப்படுற நாய்களா, இப்படி நான்டுகிட்டு  நிக்குதுங்க..!"

- பெருசு ஒன்னு புலம்பிட்டு  போறது கேட்டு...

"யோவ் பெருசு, என்ன புலம்பிட்டு?"

பக்கத்துக்கு வீட்டு ராமசாமி பொண்டாட்டி கேட்க...

"இல்லம்மா.....இந்த மாடி வீடு செல்லதுரை இல்ல......"

"...நல்லத்தான இருந்தான், என்ன ஆச்சு அவனுக்கு ...."

"அவனுக்கு ஒன்னும் இல்ல புள்ள ....."

"அப்பறம் என்னவாம்?"

"எப்பவும் ரெண்டு நாயும் சேந்து, எவன்கிட்டையாவது  மல்லுக்கு நிக்கும்...இன்னக்கு ஒன்னுக்கு ஒன்னு வேட்டிய மடிச்சுகிட்டு......"

"...."

"புள்ள, என்ன அப்படி பாக்குத....நிசம் புள்ள..."
"சொல்லுத கேளு....."


 "டேய் கணேஷா!!.....கணேஷா!!...."  -   செல்லதுரை கூப்பிட,

"என்னடா மாப்பிள்ளை!..." இன்னு கணேஷ்....

"மச்சான்,  கொஞ்சம் கட்டிங்-டா மச்சான்..வா டவுன் போலாம்....."

"இதோ வாரேண்டா மாப்பிள்ளை!..."

சொன்ன கணேஷ், பட பட இன்னு மாடி படி ஏற,

"என்னெங்க எங்க அவசரமா? ...."

"இதோ டவுன்  வர.."

" என்னெங்க, கொஞ்சம் வீட்டுல இருக்க கூடாதா?"

"இல்லடி  இதோ வந்துடுறேன்..."

" ...ம்ம்"

" நீங்க வீட்லேயே கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிடுங்க ...."

" அப்போ செல்லதுரை ....?"

"...ம்ம், சரி... ஆனா....!!"

"என்னடி ஆனா...?"

"ஆனா....!! லிமிட்டா இருக்கணும்"...

"டேய் கணேஷ் ....இன்னைக்கு நம்ம வீட்டுல பார்ட்டி...."

செல்லதுரை  சொல்ல,கணேஷ்மும் தலைய ஆட்ட ......

பார்ட்டி ஆரம்பம் ....

"......"

"......"

" கொஞ்சம் போதும்டா மச்சான்..."

" இல்லடா மாப்பிள்ளை, இன்னும் ஒரு ரவுண்டு ...."

"... ருக்கு ....ருக்கு .."   கணேஷ் கூப்பிட,

கணேஷ் பொண்டாட்டி,

".. என்னெங்க.."

".. கொஞ்சம் ஊறுகாய் குடு புள்ள ...."

ருக்கு ஊறுகாய் கொண்டு வைக்க, செல்லதுரை ருக்கு கையே பார்த்திட்டு இருந்தான் ...

அடுத்த ரூம்க்கு ருக்கு போயிட்டா...

" என்னடா மச்சான், எப்படி பார்க்கற?"

" இல்லடா , ஒன்னும் இல்ல..."

அடுத்த ரவுண்டுமும் ஓவர் ......


"... ருக்கு ....ருக்கு .." கணேஷ் மறுபடியும் கூப்பிட,

".. என்னெங்க.."
 
".. இன்னும் கொஞ்சம் ஊறுகாய் குடு புள்ள ...."


ருக்கு ஊறுகாய் கொண்டு வைக்க, செல்லதுரை ருக்கு கையே திரும்ப திரும்ப பார்த்திட்டு இருந்தான் .......

திடீருன்னு செல்லதுரை, ருக்கு கையை பிடிச்சு இழுக்க,  அழுதுகிட்டே அடுத்த ரூம்க்கு ருக்கு போயிட்டா...ருக்கு .....

 " வெளிய போடா நாயே!!!" .... கணேஷ் கத்த....

"ஆரம்பிச்ச சண்டை,  ஒன்னுக்கு ஒன்னு வேட்டிய மடிச்சுகிட்டு மல்லுக்கு நிக்குதுக....."  இன்னு பெருசு சொல்லிகிட்டே நடக்க,

"என்ன பொழப்பு .."  இன்னு ராமசாமி பொண்டாட்டி சொன்னது நாம காதுக்கு கேட்டுச்சு....

Thursday, 19 August 2010

ஆசை மேல் ஆசை...

Posted by மௌனமான நேரம் | Thursday, 19 August 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
ஆசை மேல் ஆசை...


மாசற்ற மழலையாய்
மகிழ்ந்திருந்த நேரத்தில்
தள்ளி விழுந்த பந்தெடுக்க
தவழ்ந்திட ஆசை ..

அழகழகாய் தவழ்ந்தோட
ஆரம்பித்த அந்நாளில்
அடி மேல் அடி எடுத்து
அதிர்ந்து நடக்க ஆசை ..

தத்தி தடுமாறி
தடம் பதிக்கும் நாட்களில்
பெரிய அண்ணன் அக்கா போல
பாய்ந்தோட ஆசை ...

ஆடி ஓடி விளையாடி
ஆர்ப்பரிக்கும் வேளையில்
புத்தக பை தூக்கி
பள்ளி செல்ல ஆசை ..

புத்தகங்கள் கனம் பார்த்து
பயந்திருந்த சமயத்தில்
வேலை செல்லும் பெரியவர் போல்
வீறு நடை போட ஆசை ..

இன்று விடியலில் எழுந்து
இமைக்காது உழன்று
இல்லை என்பதில்லாத
இந்நிலையில் இருக்கையில் ..

பளிங்கு நிலா காட்டி
பாலூட்டிய அன்னையும் ..
விழுந்து எழுந்து நடை பயில
வேகம் தந்த தந்தையும்..

பால் மணம் மாறாத
பசுமையான மனமும்..
நாளைய நாளை பற்றி நினையாத
நல்லினிய நிலையும் ..

திரும்பி கையில் கிட்டாதா
தினம் இனிமை சேராதா ..
இதுவரையில் ஆசைப்பட்டது
இம்மெனும் முன் நடந்தது ..

இத்தனை தூரம் கடந்த பின்
இன்று வந்த இந்த ஆசை ..
எத்தனை கொடுத்தாலும்
எந்தனுக்கு கிட்டிடுமா ??

Tuesday, 17 August 2010

சுட சுட பிரயாணி!!!

Posted by மௌனமான நேரம் | Tuesday, 17 August 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
சுட சுட பிரியாணி தயார் பண்ணுவது எப்படி? வீடியோ பார்த்து கற்று கொள்ளுங்கள்!!!

செய்து பார்த்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

(நான் கற்று கொண்டது இப்படி தான்!!)வெளிச்சத்திற்கு வரும் முன்....

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ஒரே இருட்டாயிருக்கே.... சுத்தி முத்தி ஒண்ணுமே தெரியலியே..

ஏதோ சத்தம் மட்டும் கேக்குது...

குரல் 1: எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. இனி நீ ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். நல்ல சாப்பிடணும். உடம்ப பாத்துக்கணும். உன்ன பாத்துக்கறது மட்டும் தான் என் வேலை இனி.

குரல் 2: அழுகை...

குரல் 1: எப்போவும் சந்தோஷமா இருக்க சொல்றேன். நீ அழறியா??

குரல் 2: இல்லங்க இது சந்தோசம்.. சரி கொழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்??

குரல் 1: நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்.. பையனா இருந்தா சுந்தர். பொண்ணாயிருந்தா சுந்தரி.

குரல் 2: ம்ம்.. :) சரி.. அம்மா அப்பா ன்னு கூப்பிட சொல்லலாமா இல்லை டாட் மாம் ன்னா?

குரல் 1: அம்மா அப்பாவே சொல்லலாம்.. எனக்கு அதுதான் பிடிக்கும். உனக்கு?

குரல் 2: எனக்கும் தான்.

அம்மா.. அப்பா வா... ம்ம்.. என்னக்கும் பிடிச்சிருக்கு... நீங்க எப்படி இருப்பீங்க? என்னக்கு உங்கள பாக்கணும்னு ஆசையா இருக்கு..

2 மாதங்களுக்கு பின்....

குரல் 1: மெதுவா மெதுவா.. ஸ்கேன் சிம்பிள் ஆ முடிஞ்சிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார். நானும் கூட இருக்கலாமாம். என்னக்கு ஒரே குஷியா இருக்கு.

குரல் 2: என்னாகும் தாங்க. ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு.

குரல் 1: சீ சீ. .. பயப்படாதே.. சும்மா டெஸ்ட் தானே.

நீங்க என்னை பாக்க போறீங்களா..... ம்ம்.. எனக்கு ரொம்ப ரொம்ப குஷியா இருக்கு...

4 மாதங்களுக்கு பின்..

குரல் 1: என்னங்க குழந்தை உதைக்குதுங்க.. ஹ ஹ ஹ ஹி.. ஹி .. ஹி...

குரல் 2: எங்க ... எங்க.... அதுக்குள்ள வா... பையன் தான் போல... இப்போவே குறும்பு பாரேன்...

குரல் 1: உங்கள மாதிரி தானே இருக்கும்..

அம்மா.. அப்பா... நான் தான்... சந்தோசத்துலே குதிச்சிட்டு இருக்கேன்..... ஹ ஹ ஹ ஹ ஹ...

சில நாட்களுக்கு பிறகு..

குரல் 1: என்னங்க ரொம்ப தல சுத்துது... (மயங்கி சாய்கிறாள்.)

குரல் 2: என்னம்மா... என்ன ஆச்சி????

பலவேறு சத்தங்கள்....

குரல் 1: டாக்டர் .. என்னாச்சி டாக்டர்??

குரல் 2: சாரி சார். அபோர்ஷன் ஆயிடிச்சி..

குரல் 1: ரொம்ப பத்திரமா தானே இருந்தோம்... எப்படி. ..?

குரல் 2: சரியான காரணம் தெரியலே... மருந்து எழுதி தரேன் சரியா சாப்பிட சொல்லுங்க. அவங்க கூடவே இருங்க...

(விசும்பலோடு ) அப்பா.... அம்மா..... உங்களை பாக்கணும் உங்க கூட விளையாடனும்னு நினைச்சேனே.... முடியவே முடியாதா.... நான் என்ன பண்ணுவேன்... !!!!!!!!!!!!!!!!!

யார் இது?

Sunday, 1 August 2010

இயற்கையால் நாசமாய் போவீர்கள்!!

Posted by மௌனமான நேரம் | Sunday, 1 August 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
இயற்கையால் நாசமாய் போவீர்கள்!!

இன்று இணைய தளங்களை புரட்டி பார்த்துக்கொண்டு இருந்தபோது சில வரிகள் என்னை ரொம்பவும் வேதனை பட வைத்தது.....

முதலாவது,

"எங்களை கொன்றுவிடுங்கள்: ஈழத்தமிழர்கள் கண்ணீர்" - இது செய்தித்தாள் செய்தி.

அந்த வரிகள்......

"கேட்காமல் கொன்றீர்கள் ..இப்பொழுது அவர்களே கேட்கிறர்கள், கொன்று விடுங்கள்.....சிறிலங்காவுக்கு உதவிசெய்த அத்தனை நாடுகளும் இயற்கையால் நாசமாய் போவீர்கள்.....பார்க்கதானே போகிறோம்...."

இரண்டாவது,

இந்த வீடியோ காட்சியை உங்களில் பலர் பார்த்து இருக்கலாம். இது "விஜய் டிவி உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" நிகழ்ச்சியில் பிரேம்கோபாலின் நடனம்....

அதில், பிரேம்கோபாலின் வரிகள் "இந்த முடிவுல சமாதானத்தை வேண்டுறோம். சமாதான புறா ஒன்னு அனுப்புவோம் இன்னு புறா ஒன்னு குடுங்க இன்னு கேட்டேன்.. அப்போ இவங்க சொல்லிட்டாங்க, தர மாட்டோம் இன்னு, அட பாவிகளா! இங்கே மிருகவதைச் சட்டம்...!!! ஆனால், அங்கே உறவுகள்....."

(அவரின் நடனத்தைப் பார்க்க/வரிகளை கேட்க , கீழ்கண்ட லிங்கை கிளிக்கவும்.)Saturday, 31 July 2010

விஜய் ஜோடி நம்பர் 1 - ஜெயிக்க போவது யாரு?

Posted by மௌனமான நேரம் | Saturday, 31 July 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
விஜய் ஜோடி நம்பர் 1 - ஜெயிக்க போவது யாரு?

விஜய் டிவியில் ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி போகுது... அதுல ஜெயிக்க போவது யாரு? நீங்க விரும்பும் ஜோடி எது?

1) மணிகண்டன் & ரெஜினி
2) வாங் & சுனிதா
3) ஸ்ரீகார்த்திக் & பிரியா
4) கீத்தன் & திவ்யா
5) சதீஷ் & திவ்யதர்சனி
6) ஷெரிப் & சாய் பிரமோதிதா
7) பிரேம் கோபால் & பிரேமினி
8) சுரேஷ் & ஜெயலக்ஷ்மி
Saturday, 6 February 2010

குடிமகன் பற்றிய முழு விவரங்கள் சேகரிக்க புதிய திட்டம்!

Posted by மௌனமான நேரம் | Saturday, 6 February 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கு, டெலிபோன் இணைப்பு, காப்பீடு உள்ளிட்ட அனைத்து முழுமையான தகவல்களையும் ஒன்று திரட்டி, விரல் நுனியில் வைத்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தபின், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். உள்நாட்டு பாதுகாப்பின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரிப்பதற்காக, நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு அடையாள எண் அட்டை வழங்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தால் வழங்கப்படும் அட்டையில், ஒவ்வொரு குடிமகனின் பிறந்த தேதி, அவரின் கல்வித் தகுதி உட்பட அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நவீன தொழில் நுட்ப வசதிகளை, தங்களின் சதித் திட்டங்களுக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால், சிறப்பு அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தால் திரட்டப்படும் தகவல்கள், உள்நாட்டு பாதுகாப்புக்கு போதுமானதாக இருக்காது என, அரசு கருதுகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் வங்கி கணக்கு, காப்பீடு, நிலம், டெலிபோன் இணைப்பு, வீடு உள்ளிட்ட முக்கிய தகவல்களை திரட்ட, அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் ஏஜன்சிகள் மூலம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டு, தேசிய புலனாய்வு தொகுப்பின் கட்டுப் பாட்டில் வைக்கப்படும். புலனாய்வு அமைப்பு, ரா, ராணுவ புலனாய்வு,வருவாய் புலனாய்வு, தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட 11 ஏஜன்சிகளுக்கு மட்டுமே, இந்த தகவல்களை பெறும் வசதி கிடைக்கும். இந்த தகவல்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, மேற்கண்ட ஏஜன்சிகள், தங்களுக்குள் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ளும். ஒருவரைப் பற்றிய தகவல்கள் வேண்டுமெனில், அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாக பெறுவதற்கு வசதியாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக செயல்படும் ஏஜன்சிகளுக்கு இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும்.

இதுபற்றிய ரகசியங்கள் வெளியில் கசிந்து விடாமல் இருப்பதற்கு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மகிந்திரா சிறப்பு பணிகள் குழுமத்தில் பணியாற்றிய கேப்டன் ரகுராமன், இந்த பணிகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து விவரங்களும் திரட்டப்பட்டு, தேசிய புலனாய்வு தொகுப்புடன் அவை இணைக்கப்படும். ரயில்வே, ஏர்- இந்தியா, வருமான வரித்துறை, மாநில போலீசார் உள்ளிட்ட அரசு துறைகளும், வங்கி, காப்பீடு, தொலைத் தொடர்பு, உள்ளிட்ட தனியார் துறைகளும், தகவல் களை அளிக்கும் விஷயத்தில் இணைந்து செயல்படும்.

இத்திட்டம் அமலுக்கு வந்தால், குடிமக்களில் யாராவது ஒருவர் புதிதாக நிலம் வாங்கினாலோ, வங்கி கணக்கு துவங்கினாலோ அல்லது தங்கள் பெயரில் காப்பீடு எடுத்தாலோ, அதுபற்றிய விவரங்கள் அடுத்த நிமிடமே, அரசுக்கு தெரிந்து, கண்காணிப்புக்கு வந்து விடும். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக, இத்திட்டம் காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்தபின், இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி தினமலர்!

Wednesday, 3 February 2010

இலவச உதவி!!

Posted by மௌனமான நேரம் | Wednesday, 3 February 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
ஒரு தனியார் நிறுவனத்துக்கு வந்த இ-மெயில் செய்தியை உங்கள் பார்வைக்கு....

இதன் மூலம் ஒருவரேனும் பயன் அடைந்தால், எங்களுக்கு மகிழ்ச்சி!!

ஜேர்மன் நாட்டு மருத்துவ குழு ஒன்று கொடைக்கானலுக்கு வருகை தருகிறது. இவர்கள் பாசம் மருத்துவமனையுடன் சேர்ந்து தீ விபத்து அல்லது பிறவி குறைபாடு (காது, மூக்கு மற்றும் தொண்டை) உள்ளவர்களுக்கு என ஒரு இலவச மருத்துவ முகாம் நடத்த உள்ளது. இதில் பிளாஸ்டிக் சர்ஜெரியும் உள்ளடக்கம்...

இது ஒரு முற்றிலும் இலவசம்!!!

இடம்: பாசம் மருத்துவமனை, கொடைக்கானல்
தேதி: 23-மார்ச்-2010 முதல் 04-ஏப்ரல்-2010
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: 04542-240668, 245732

இ-மெயில்:  pasam.vision@gmail.com

http://www.thehindu.com/2009/01/11/stories/2009011151570300.htm

Monday, 1 February 2010

ஜோக் புரியுதா?

Posted by மௌனமான நேரம் | Monday, 1 February 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
மூளையின் செயல்திறனை ஆராயும் நோக்கில் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடத்திய ஆய்வில் ஆண்கள் ஜோக்குகளை எளிதில் புரிந்து கொள்கிறார்கள் ஆனால் பெண்களுக்கு சற்று நேரம் பிடிக்கிறது என்று தெரிவிக்கிறது.

அதே சமயம் பெண்கள் எல்லா ஜோக்குகளையும் நன்கு ரசித்து சிரிக்கிறார்கள், ஆண்கள் லேசாகச் சிரித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது. ஜோக்குகளைப் படிக்கும்போதும் கேட்கும்போதும் அவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக இருக்கின்றனர். ஜோக்கு சொல்லி முடித்த பிறகே அதன் தன்மை உணர்ந்து சிரிக்கின்றனர். ஆனால் அந்தச் சிரிப்பு முழுமையாக இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் நினைத்து நினைத்தும் சிரிக்கிறார்கள்.

Sunday, 31 January 2010

Corn Flakes விலை உயர்வு!!

Posted by மௌனமான நேரம் | Sunday, 31 January 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
காலை உணவுக்கு பயன்படுத்தப்படும் கெலாக்ஸ் கார்ன்பிளேக்சின் விலை அதிகரிக்க உள்ளது. இந்தியாவில் காலை உணவு தயாரிக்கும் பெரிய நிறுவனமான, கெலாக் இந்தியா நிறுவனம், கோதுமை, சோளம் மற்றும் கோகோ போன்றவற்றை மூலப்பொருட்களின் விலை உயர்வால், தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.

இதுகுறித்து, கெலாக் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அனுபம் தத்தா கூறுகையில், 'ஐந்தாண்டுகளாக, எங்கள் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்காமல் சமாளித்தோம். அதே விலையையே தொடர விரும்பினோம். ஆனால், மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தயாரிப்புகளின் விலையை சிறிது அதிகரிக்க வேண்டி உள்ளது' என்றார்.

துவரம் பருப்பு திடீரென விலை சரிவு!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், துவரம்பருப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு 1,200 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டது, வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'விலை மேலும் சரியும்' என்று வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவி வருவதால், பருப்பு இருப்பு வைத்துள்ள வியாபாரிகள் கிலியடைந்துள்ளனர்.

இந்திய அளவில் 2008 டிசம்பர் முதல் துவரம் பருப்பு விலையில் கடும் உயர்வு ஏற்பட்டது. உச்சகட்டமாக, 2009 டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் கிலோ 88 ரூபாயாக விலை உயர்ந்தது. விரைவில் 100 ரூபாயாக உயரும் என்ற கருத்தும், அப்போது வியாபாரிகள் மத்தியில் நிலவியது. பருப்பு விலை, நேற்று குவிண்டாலுக்கு 1,200 ரூபாய் சரிவு ஏற்பட்டு குவிண்டால் 5,800 ரூபாய்க்கும், கிலோ 58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விலையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து மொத்த விலையிலும் சரிவு ஏற்படுவது தான் வழக்கம். ஆனால், வியாபாரிகள் கடந்த மாதமே அதிக விலை கொடுத்து பருப்பை விற்பனைக்காக வாங்கியதால் பருப்பு விலையை குறைக்க முன்வரவில்லை . 'சில்லரை கடைகளில் இன்று முதல் விலை குறைப்பு செய்யப்படும்' என வியாபாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக, வடமாநில வியாபாரிகள் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பருப்புகளையும் விற்பனைக்கு கொண்டு வரத்துவங்கியுள்ளனர்.

தூங்கா நகரம்!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தயாரிக்கும் 2வது படம் தூங்கா நகரம். இப்படத்தின் சூட்டிங்கை மதுரையில் அழகிரி தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு துரை தயாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின்னர் அவர் தூங்கா நகரம் படம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். வாரணம் ஆயிரம் படத்தை வெளியிட எனக்கு வாய்ப்பு கிடைத்ததால்தான் நான் தொடர்ந்து சினிமாத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். தூங்கா நகரம் படத்தில் 4 கதாநாயகர்கள். பசங்க படத்தில் நடித்த விமல், ரேனிகுண்டா நிஷாந்த், நா‌டோடிகள் பரணி, படத்தை இயக்கும் கவுரவ் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த படம் வெளியூரில் இருந்து மதுரை வந்து வாழ்க்கை நடத்தும் வாலிபர்களின் கதை. மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். மே மாதத்தில் தூங்கா நகரம் திரைக்கு வரும், என்று துரை தயாநிதி கூறினார்.