மௌனமான நேரம்

 

Wednesday, 29 July 2009

விவாதம் விவகாரம் ஆவது எப்போது?

Posted by மௌனமான நேரம் | Wednesday, 29 July 2009 | Category: | 2 பின்னூட்டங்கள்

உலகில் எல்லாமே தெரிந்தவரும் ஒருவரும் இல்லை. எல்லாமே சரியாக சொல்பவரும் ,செய்பவரும் ஒருவரும் இல்லை. எல்லா மனிதனுக்கும் தெரியாதது, புரியாதது கண்டிப்பாக ஏதாவது இருக்கும். இதனை எப்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அப்போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

ஆரோக்கியமான விவாதம் அறிவை வளர்க்கும், விவாதிப்பவர்களிடையே புரிதலை அதிகப்படுத்தும். ஆனால் இப்படியொரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்த நம் ஒவ்வொருவரின் குணமும் தடையாக இருக்கிறது. ஒரு விஷயத்தை பற்றி விவாதம் ஆரம்பித்து, போக போக அது விவாதிப்பவரை குறித்து மாறி விடுகிறது. ஏனென்றால் நம்மால் விவாதத்தையும் விவாதிப்பவரையும் பிரித்து பார்க்க முடிவதில்லை.


Tea Forte Cocktail Infusions

உதாரணமாக, ஒரு நண்பன் நம்மிடம் வந்து ,' நீ இப்படி செய்தது தவறு' என்றால் நாம் என்ன செய்வோம்? நான் இப்படி செய்ததற்கு காரணம் இது என்று அவனுக்கு புரிய வைக்க முயன்றால், அவன் அவனது பதில் வாதத்தை முன் வைப்பான். ஒரு வேளை அவன் சொன்னது சரியாக கூட இருக்கலாம். நாம் செய்தது தவறாக கூட இருக்கலாம். இல்லை அவன் சொன்னது தவறாக இருக்கலாம். விவாதம் முற்ற முற்ற இருவரில் யார் பக்கம் ஞாயம் இருக்கிறது என்று தெரியவரும். அப்படி இல்லாமல், நாம் ' நான் செஞ்சது மட்டும் தப்புன்னு சொல்ல வந்துட்டே, நீ அப்படி செய்யலியா?' என்றோ 'என் இஷ்டம் நான் என்ன வேணும்னாலும் செய்வேன்' என்றோ சொனால், அந்த வாதம் விவகாரமாக முடியும்.

இது கணவன் மனைவி, பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர், அக்கம் பக்கத்து வீட்டுகாரர்கள், உடன் பணிபுரிவோர் எல்லாருக்கும் பொருந்தும்.

Tea Forte Cocktail Infusions

நம்மால் ஒருவர் நாம் செய்வது தவறு என்று சொல்வதை ஏற்று கொள்ளவே முடிவதில்லை. 'நான் செய்வது', 'நான்' இந்த இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை. நாம் செய்த தவறை ஒருவர் சுட்டிக்காட்டும்போது அது நம்மையே சுட்டி காட்டுவதாக எடுத்துகொள்கிறோம்.

பணி புரியும் இடத்தில் இந்த பிரச்சனை வேறு விதமாக வரும். நம் பாஸ் நம்மிடம் 'நீ செய்த இந்த வேலையில், இது ஒரு பிழை' என்றோ, ' நீ இந்த வேலையை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்' என்றோ சொல்லும்போது கூட அவர் நம்மை தவறு சொல்கிறார் என்று தான் முதலில் நமக்கு தோன்றுகிறது.

அதை விடுத்து, அவருக்கு நாம் செய்தது சரி என்று புரிய வைத்தால், அவருக்கு நாம் செய்தது சரியாக இருக்கும் பட்சத்தில் நம் மீது நம்பிக்கை கூடும். (இது வேண்டுமென்று இல்லாத தவறை கண்டுபிடித்து பெரிது பண்ணும் பாஸ் க்கு பொருந்தாது :)


Tea Forte Cocktail Infusions

நான் ஒரு அலுவகத்தில் interview க்கு சென்றிருந்தேன். அதில் Group Discussion என்று ஒரு stage இருந்தது. அதில் ஒரு தலைப்பு கொடுப்பார்கள். அந்த தலைப்பை குறித்து எல்லோரும் விவாதிக்க வேண்டும். அதன் விதிகளில் ஒன்று, எக்காரணம் கொண்டும் சண்டை போட கூடாது.

நாங்கள் எட்டு பேர் இருந்தோம். தலைப்பு 'இந்தியாவில் பெண்களும் கல்வியும்'. எங்கள் குழுவில் சிவா , பிரியா என்று இருவர் இருந்தார்கள். விவாத்தை ப்ரியா ஆரம்பிக்க சொல்லி HR (Human Resource Manager) சொன்னார். பிரியா தனது கருத்தை சொல்லி முடிப்பதற்குள், அவரது கருத்து தவறென்று சிவா வுக்கு தோன்றியது, அதையே சொன்னார். ப்ரியா அதை மறுத்து பேசினார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. HR வந்து சண்டையை நிறுத்து, சிவாவை முதலில் ஆரம்பிக்க சொன்னார். இந்த தடவை, ப்ரியாவுக்கு சிவா சொன்னதில் உடன்பாடு இல்லை என்பதால் மீண்டும் சண்டை. இது ஒரு நாலைந்து தடவை நடந்தது. HR க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

இங்கு பிரச்சனை என்னவென்றால், அவர்கள் இருவரும் தமது கருத்துக்களுக்காக விவாதிப்பதை விடுத்து, நீ ஆண் ஆனதால் உன் கருத்து இது, நீ பெண் ஆனதால் உன் கருத்து இது என்று அந்த விவாதத்தை ஒரு ' தனி நபர் தாக்குதல் ' ( Personal attack ) ஆக மாற்றிவிட்டார்கள்.

Kids Birthday Party Themes, Birthday Packs

இது நம் குடும்பத்தில், அலுவலகத்தில், கட்சியில், அரசியலில் என்று எல்லா இடத்திலும் நடக்கிறது.

எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. அதனால் தான் நினைப்பதை சொல்லலாம் . ஆனால், கேட்பவர் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்தால் என்ன செய்வது, நாம் எல்லோரும பேசும் இடத்திலும், கேட்கும் இடத்திலும் மாறி மாறி இருக்கிறோம்.

பேசுவதை அடுத்தவர் புரிந்து கொள்வது போல் பேசுவதும், கேட்பவருக்கு ஒப்பில்லாத கருத்தை புரியவைப்பதும் , கேட்பவரது கருத்தையும் உள்வாங்கி, சரி எனின் ஏற்றுகொள்வதும் பேசுபவர் கடமை.

பேசுபவர் சொல்வதை புரிந்து கொள்ள முயற்சி செய்வதும், புரியாததை தெளிவு படுத்தி கொள்வதும், தவறை சுட்டி காட்டுவதும் , தன் கருத்து தவறாயிருந்தால் ஏற்று கொள்வதும கேட்பவர் கடமை.

இந்த இருவரும் தன் கடமையை புரிது கொண்டால், பேச்சு சுதந்திரம் பல ஆக்க பூர்வமான விஷயங்களுக்கு உபயோகப்படும். உலகில் பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.

அதற்காக, யார் என்ன சொன்னாலும் கேட்டு கொள்ள வேண்டும் என்று இல்லை. அதை ஆராய்ந்து சரியானதை எடுத்து ,தவறானதை விடுக்க வேண்டும்.
அந்த மன முதிர்ச்சி வேண்டும்.

Sunday, 26 July 2009

காதலை ஏற்கிறேன்!

Posted by மௌனமான நேரம் | Sunday, 26 July 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்

ஆறு மணிக்கு நான் கோவிலுக்கு வருவது தெரிந்து நீ ஐந்தரைக்கே ஆண்டவனை பார்க்க ஆஜரானாய். அது பிடித்தது.
என்னிடம் இரண்டு நிமிடங்கள் பேச நீ இரண்டு மைல் பயணபட்டு வந்தாய். அது பிடித்தது.

நான் கொந்தளிக்கும் கோபத்துடன் வந்தாலும், ஒரு பார்வையில் என்னை சிரிக்க வைத்தாய். அது பிடித்தது.


மனதில் பட்டதை உன்னிடம் மறைக்காமல் பேச மறைமுகமாக ஆதரவு தந்தாய். அது பிடித்தது.


என் தோழர்களிடமும் தோழிகளிடமும் அடிக்கடி பேசும்போது, வெளியே சொல்லாமல் உள்ளுக்குள் கொஞ்சம் பொறாமை கொண்டாய். அது பிடித்தது.


உன் மீது நான் கொஞ்சம் பாசமாய் சொன்ன இரண்டு வார்த்தை கேட்டு உன் கண்ணில் பெரிய திருப்தி. அது பிடித்தது.


எனக்கு பிடித்த நிறத்தில் நீ உடை உடுத்தி, அது எனக்கு புரிய வேண்டும் என்று நீ பட்ட பாடு. அது பிடித்தது.


என்னை பேச விட்டு, நான் சொல்லும் ஒவ்வொன்றையும் ரசித்து கேட்டாய். குழந்தைதனமான புலம்பல்களையும் கூட. அது பிடித்தது.


நான் தெரியாமல் செய்யும் சின்ன தவறை கண்டிப்பாக கண்டிப்பாய். அது பிடித்தது.


உன்னிடம் பிடிக்காதது எத்தனை இருந்தாலும் உன்னுடன் இருக்கும்போது அது எல்லாமே மறந்து விடுகிறது. அது பிடித்தது.


ஆயிரம் பேர் கூட்டத்திலும், அனாயாசமாய் என்னை கண்டுபிடிப்பாய். அது பிடித்தது.


என் குடும்பத்துடன் ஜென்ம ஜென்மமாய் பழகியது போல் அழகாக ஐக்கியமானாய். அது பிடித்தது.


250x250என்னை ஒரு நாள் பார்க்காததால் வாடிய முகத்துடன் அடுத்த நாள் அவசரமாக நீ ஓடி வந்தாய். அது பிடித்தது.

காதலிக்கிறேன் என்று சொல்லாமல் என்னை கல்யாணம் செய்ய வேண்டும் என்று நீ நேற்று சொன்னாய். அது பிடித்தது.

இத்தனை 'பிடித்ததுகளின்' மொத்தமான உன்னை ரொம்ப பிடித்தது.

உன் காதலை ஏற்கிறேன்.

உன்,
ஓவியா....

Friday, 24 July 2009

இந்திர விழா - என் பார்வையில்!

Posted by மௌனமான நேரம் | Friday, 24 July 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
ஆங்கிலத்தில் Disclosure என்றும், ஹிந்தியில் aitraaz என்றும் வெளி வந்த படத்தின் கதை தான் இந்திர விழா.

உண்மைக்கும் பொய்க்கும் இடையில் நடக்கும் சட்ட போராட்டம் தான் இதன் அடிப்படை கதை. அதை முதன் முதலில் எழுதியவரும், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் இயக்கியவர்களும் அந்த மைய கருத்து மாறாமல் இருக்க கவனம் செலுத்தியிருந்தார்கள். தமிழில் இந்த கருத்து இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு, கவர்ச்சிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.ஹேமமாலினி - அறிமுக நாயகி. படத்தில் முதலில் அறிமுகமாவது நாயகி, கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கலாம். மெழுகு பொம்மை போல வந்து போகிறார். நாயகனுக்கு நாயகிக்கும் இடையில் நடக்கும் ஆரம்ப காட்சிகள்- அதை குறும்பு என்று எடுத்து கொள்ள வேண்டுமா என்று தெரிய வில்லை. அதை விட நாயகன் நாயகியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் காட்சி , பக்கத்தில் நல்ல சுவர் இருந்தால் முட்டி கொள்ளலாம் போல இருக்கிறது.

இத்தனை அவமான படுத்தின பிறகும், நாயகன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன், வேறு எதுவுமே யோசிக்காமல், புதுமை பெண்ணாக, 'எவனோ ஒருத்தன் கிடச்சா போதும்' என்று மண்டையை மண்டையை ஆட்டி நாயகி ஏற்று கொள்வது , பெண்களை பேக்கு, லூசு என்று சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது. அது எப்படி இப்படி ஒரு இடம், பொருள், ஏவல் எல்லாம் இவர்களால் யோசிக்க முடிந்ததோ தெரியவில்லை.

ஸ்ரீகாந்த் டைரக்டர் சொன்னதை செய்திருக்கிறார்.

படத்தில் மிக முக்கிய வேடத்தில் வரும் நமீதா. இவர் கொஞ்சம் நடிக்க மெனக்கெட்டிருகிறார் என்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் அவர் கவர்ச்சிக்காக உபயோகபட்டிருப்பது தான் ரொம்பவுமே பட்டவர்த்தனமாக தெரிகிறது நடிப்பை விட.

ஸ்ரீகாந்தும் நமிதாவும் சம்பந்த பட்ட படத்தின் திருப்பு முனையான காட்சி கொஞ்சம் நாடகத்தனமாக இருக்கிறது. இந்த காட்சி ஆங்கிலத்தில் டெமி மூர் (Demi Moore) , ஹிந்தியில் பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) ரொம்ப அழகாக செய்திருப்பார்கள். இந்த காட்சியில் முக்கிய சாட்சியாக வரும் கண்ணாடி எப்படி அந்த இடத்திற்கு வந்தது என்று தெரியவில்லை (ஒரு வேளை நான் தான் அந்த இடத்தை கவனிக்கவில்லையோ? )

அடுத்து படத்தின் காமெடியும் கோர்ட்டும் . இதை ரொம்பவும் பின்னி பிணைய விட்டிருக்க வேண்டாமோ! மிகவும் சீரியஸ் ஆ ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு செல்ல வேண்டிய இந்த காட்சிகளில், காமெடி கலந்ததால் அதனுடைய சாராம்சம், முக்கியத்துவம் குறைந்து விட்டது போல் இருந்தது . கோர்ட் ரூம் டிராமா ரூம் போல இருந்தது. No seriousness where it ought to be.

நாசர் அவர் வேலையை நன்றாக செய்திருக்கிறார். Y.G.மகேந்திரன் கோர்ட்-இல் வாதாடுவது நன்றாக இருந்தது. ரகசியா ஒரு வேடம் செய்திருக்கிறார்.


BuyOne, GetOne Free for a Week - 7/20-7/26!

மொத்தத்தில் நல்ல கதையை சொதப்பியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் உள்ள கதையை அப்படியே வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ.

அந்த இரண்டு மொழிகளிலும் திரைபடத்தை பார்க்கும் பொது உள்ள நிறைவு இதில் கிடைக்கவில்லை. அதில் மனதில் நின்றது போல இதில் எந்த காட்சியும் மனதில் நிற்கவில்லை.

ஆக மொத்தம், நமிதாவையும், நமிதா ரசிகர்களையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் இது.

மற்றவர்களுக்கு ??

ஏமாற்றம்!

Thursday, 23 July 2009

ஆட்டோகிராப் பட ஸ்டைல் பிறந்த நாள் விழா...

Posted by மௌனமான நேரம் | Thursday, 23 July 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

ஆட்டோகிராப் -இல் சேரன் தன் திருமணத்திற்கு மூன்று முன்னாள் காதலிகளை தான் அழைத்திருந்தார். அதுவும் திரைப்படத்தில் தான்.

ஆனால் கேமரா இல்லாத நிஜ வாழ்வில் ஒருவர் தன் பிறந்த நாளை தன் 17 முன்னாள் காதலிகளுடன் கொண்டாடவிருக்கிறார். என்ன.. நம்ப முடியவில்லையா?

உண்மைதான்.. அவர் வேறு யாருமில்லை... 'X Factor' இல் நடுவரான 'சைமன் கோவேல்' (Simon Cowell). இந்த வார இறுதியில் அவருக்கு 50 வது பிறந்த நாள் விழா ஒன்றை அவரது முன்னாள் காதலி ஜக்கீ (Jackie) ஏற்பாடு செய்திருக்கிறார். விழாவிற்கு அவரது 17 முன்னாள் காதலிகளும் வரவிருக்கிறார்கள்.

இது இன்னும் சைமன்க்கு தெரியாது. அவரது உண்மையான பிறந்த நாள் அக்டோபெர் தான். ஜாக்கீ தன் பிறந்த நாள் விழா என்று சொல்லி சைமன் ஐ அழைத்திருக்கிறார். இது தெரியாத சைமன் உம் ஜக்கீ க்கு பெரிய அன்பளிப்பு கொடுக்க போகிறாராம்.


Exterminate on PCPitstop.com


17 முன்னாள் காதலிகளை ஒரே இடத்தில் சந்திப்பது பிரச்சனையாகாதா என்றால்.. அவர் சமாளித்து கொள்வார், அவருக்கு இன்னும் எல்லோருடனும் நல்ல நட்பு இருக்கிறது என்கிறார்கள்...

ஹ்ம்ம்...

மனுஷன் பெரிய ஆளா இருப்பார் போலன்னு எல்லாரும் பெருமூச்சி விடறது கேக்குது... :)

Wednesday, 22 July 2009

கவன குறைவின் விளிம்பில்...

Posted by மௌனமான நேரம் | Wednesday, 22 July 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

நாம் எல்லோரும் ஒரு நேரம் அல்லது இன்னொரு நேரம் கவன குறைவாக இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று தான். ஆனால் நினைக்கவே முடியாத அளவுக்கு கவன குறைவு சம்பவம் ஒன்று US இல் நடந்திருக்கிறது.

ஆறு வார பெண் குழந்தையின் ஒரு கால் விரல்களை எலிகள் மென்று தள்ளியிருக்கின்றன. குழந்தையின் பெற்றோரும், இன்னொரு குடும்பமும் சேர்ந்து 'உலவும் வீடு' (Mobile Home) இல் தங்கியிருக்கும் போது இது நடந்திருக்கிறது. கவன குறைவு வழக்கு இப்போது விசாரணையிலிருக்கிறது. குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறது.

இப்படி கூட கவன குறைவாக இருக்க முடியுமா ?

என்னவோ .... எலி இருக்கற இடத்துலே ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கே .... வேறென்ன சொல்லறது...

Monday, 20 July 2009

இது கலாசார மாறுதலா? மீறலா?

Posted by மௌனமான நேரம் | Monday, 20 July 2009 | Category: | 2 பின்னூட்டங்கள்

நம் கலாசாரத்திற்கு என்று பல தனித்துவங்கள் உண்டு. ஒருவனுக்கு ஒருத்தி என்றும், கற்பு (ஆண், பெண் இருவருக்கும் ) என்றும் பல விஷயங்களை சொல்லலாம். திருமணத்துக்கு முன்பு கணவன் மனைவியாக வாழ்வது என்பது இதில் ஏற்றுகொளபடாமல் இருந்த ஒன்று.

பல வருடங்களுக்கு முன் வந்த திரைப்படங்களும் இதை தான் பின்பற்றின. ஒரு சில படங்கள், ஒருவன் பல பெண்களுடன் குடும்பம் நடத்துவதை நியாயப்படுத்தினாலும், அம்மாதிரி படங்களின் எண்ணிக்கை மிக குறைவு. மற்றபடி, திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வதை நியாயப்படுத்தியது போல தெரிய வில்லை.

இப்போது சில காலமாக, இந்த விஷயங்கள் மாறி வருகிறது. உதாரணத்திற்கு, எஸ்.ஜெ.சூர்யா வின் 'அன்பே ஆருயிரே'. இதில், காதலனும் காதலியும் திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாகவே வாழ்வார்கள். இதனை மக்கள் யாரும் எதிர்க்காமல் ஏற்றுகொண்டார்கள்.

அண்மையில் வெளி வந்த கெளதம் மேனன் இன் 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்திலும், சூர்யா, ரம்யாவை விரும்புவதாக சொல்லும்போதும் சரி, சமீரா ரெட்டியை விரும்பும் போதும் சரி, அவர்கள் இருவரும் மனமும் உடலும் இணைவதை சரி என்றே சொன்னார்கள். மக்களும் அதை அங்கீகரித்தார்கள்.


Je t'aime

ராஜேஷ் இன் 'சிவா மனசுலே சக்தி' இல கூட, பட இறுதியில், 'நாங்க மேட்டர் பண்ணிட்டோம்' என்று அதை ஒரு காமெடி சீனாகவே மாற்றியிருந்தார்கள்.

நாம் பல விஷயங்களில் முன்னேறியிருக்கிறோம், மாறி இருக்கிறோம் ,மேற்கத்திய கலாசாரத்தை ஏற்றிருக்கிறோம். நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அதை பின்பற்றுவதில் தவறே இல்லை. ஆனால், அதற்காக, நம் கலாசாரத்தை விட்டுவிட்டு மேற்கத்திய கலாசாரத்தை குருட்டாம்போக்கில் பின்பற்றுவது சரியா?

எதுவுமே 'சரி' என்று வாதிட முடிவெடுத்தால் வாதிடலாம்தான். ஆனால், வாதங்களை தாண்டி ஞாயம் என்று ஒன்று உண்டு. நமக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. பழமையான கலாசாரம் உண்டு. தேவையற்ற விலங்குகளில் இருந்து விடுபடுவது ஒருபுறம் இருக்க, அடிமைத்தளையை உடைப்பதும், சுதந்திரமாக இருப்பதும் ஒருபுறம் இருக்க, நாம் சுதந்திரம் என்ற போர்வைக்குள் சிக்கி, நமக்கென்று விதிமுறைகள் எதுவுமே இல்லாத வாழ்கையை தேடி தேடி, கண்டுபிடித்தோம் என்று கூக்குரலிடுகிறோம்.


Summer Clearance at Vistaprint! Save up to 90%!


இது கலாசார மாறுதலா? மீறலா?.

இதில் நன்மை அதிகமா, தீமை அதிகமா?

சிந்திப்போமா?

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Posted by மௌனமான நேரம் | | Category: | 1 பின்னூட்டங்கள்

யாரவது முட்டாள்தனமாக ஏதாவது செய்துவிட்டால் ... 'மூளை இருக்கா??' என்று கேட்பதை கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு பகுதி மூளையே இல்லாமல் அறிவாளியாக ஒரு பெண் இருக்கிறாள்.ஜெர்மனி இல், ஒரு பத்து வயது பெண் பிறக்கும்போதே மூளையின் வலது பாகம் இல்லாமலே பிறந்தாள். ஏதாவது ஒரு மருத்துவ காரணத்திற்காக/சிகிச்சைக்காக மூளையின் ஒரு பகுதி அகர்றபட்டால், அந்த நோயாளிக்கு அந்த மூளை பகுதி சம்பந்தப்பட்ட பாகங்கள் சரிவர இயங்காது... உதாரணமாக அந்த மூளை பகுதி சார்ந்த கண். இது மருத்துவ உண்மை.

ஆனால் இந்த பெண்ணுக்கோ, அப்படி இல்லாமல் ஒரே கண்ணில் இரு கண்ணின் பார்வையும் தெரிகிறது. உடலின் மற்ற எல்லா இயக்கங்களும் சராசரி மனிதனை போலவே இருக்கிறது.


NBA_Go PRO_1


மருத்துவர்கள், இது ஒரு மருத்துவ அதிசயம் என்கிறார்கள். மூளையின் ஒரு பாகமே மற்ற பாத்தின் இயக்கங்களையும் சேர்த்து செய்கின்றது என்கின்றனர்.
இந்த பெண், நல்ல ஆரோக்கியத்துடன், புத்திசாலியாக, மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கிறாள்.

Sunday, 19 July 2009

நின்னுகிட்டே பறக்கலாம் வாரியளா???

Posted by மௌனமான நேரம் | Sunday, 19 July 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

அட.... கிண்டல் இல்லீங்க... நெசமாத்தான் சொல்றேன்...
ரயநேர் (Ryanair) Sky News க்கு வெளியிட்ட செய்தியில் , ரயனைர் விமானத்தின் கடைசி சில இருக்கைகளை மாற்றி , ரயிலில் உள்ள Buffet carriage இன் இருக்கை போலவோ அல்லது நிற்பதற்கு வசதியாக இடமோ அமைக்கலாமா என்று ஒரு எண்ணம் இருப்பதாக தெரிவித்து இருந்தது. இது ஒரு மணி நேரத்திற்கு குறைவாக பயண தொலைவு இருக்கும் விமானங்களில் மட்டுமே செய்யப்படும். இதனால் பயணிகளுக்கு பயண செலவு குறையும், நிறுவனத்திற்குபல விதங்களில் லாபம் கிடைக்கும்.Buy used books starting £0.90
இன்னும் கொஞ்ச நாளில்...
'என்னப்பா தர டிக்கெட்-எ... seat டிக்கெட்-எ??'
'அத விட cheap-எ flight wings-லே யோ top லேயோ seat இல்லையா???'
'£$%^&*'
சொல்ல முடியாது ... காலம் போற போக்க பாத்தா எது நடந்தாலும் ஆச்சரிய படறதுகில்லை...


www.airfrance.ca

ஜூன் ஜூலை - உம் விமான விபத்துகளும்..

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
அது என்னமோ தெரியலே போன ரெண்டு மாசமா பல விமானங்களுக்கு நேரமே சரியில்ல. அதுலே travel பண்ணின பயணிகளுக்கு அதுக்குமேல- சரியா இருக்கிற நேரம் இனி வர போறதேஇல்லை. உயிரோட இருந்தா தானே நேரம் நல்லாவோ நல்லா இல்லாமலோ இருக்கறதுக்கு.

அறிவியல் என்னவோ தாறு மாறா முன்னேறிகிட்டே தான் இருக்கு... ஆனா சான் ஏறினா முழம் சறுக்கரா மாதிரி ஒரு பக்கம் நோய் தீக்க மருந்து கண்டு பிடிச்சா, இன்னொரு பக்கம் புது நோய் வருது. ஒரு பக்கம் புது தொழில் நுட்பத்துடன் விமானங்கள் கண்டு பிடித்தால் இன்னொரு பக்கம் கொடுமையான விபத்து நடக்குது. நமக்கு எந்த அளவு அதிகமா தெரியுதோ அந்த அளவுக்கு தெரியாத விஷயமும் இருக்கு.


Trend Times has the latest and greatest toys


ஜூன் 1 2009 :
Air France Airbus 330 , Rio de Janeiro லிருந்து Paris செல்லும் வழியில் atlantic ocean மீது விபத்துக்குள்ளானது. 228 பயணிகள் நிலை ?
ஜூன் 29:
Yemenia Airbus A310-300 , Paris ,Marseille லிருந்து Comoros (via யேமென்) செல்லும் வழியில் Indian Ocean மீது விபத்துக்குள்ளானது. ஒரு பயணி தவிர மற்ற 152 பயணிகள் நிலை ?

ஜூலை 15:
Caspian Airlines Tupolev-154 Tehran லிருந்து Armenia செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது. 153 பயணிகள் நிலை ?

ஒரு பக்கம் ஆக்க பூர்வமாக எத்தனையோ விஷயம் நடந்தாலும், இன்னொரு பக்கம் இப்படி உயிர்கள் பலியாவதை நினச்ச ரொம்ப வருத்தமா தானிருக்கு.

Wednesday, 15 July 2009

நண்பனே!!

Posted by மௌனமான நேரம் | Wednesday, 15 July 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்
எனக்கும் உங்களுக்கும் எல்லாருக்கும் நண்பர்கள் இருக்காங்க.. அதிலே உயிர் நண்பர்கள்... சும்மா பேச்சு துணை நண்பர்கள்... அப்படி இப்படின்னு நிறையா வகை இருகாங்க.. நண்பர்கள்ளே கெட்டவங்க கிடையாது.. அதானலே வேணும்னா நம்பத்தகுந்த நண்பர்கள்... நம்ப தகாத நண்பர்கள் ன்னு சொல்லலாம்.உக்காந்து இருந்து யோசிச்துலே தோணினது...

ஒரு நலல நண்பன்......-மௌனத்தையும் மொழி பெயர்ப்பான்.
-துன்பத்தில் தோள் கொடுப்பான்...
துணிந்து நின்று உயிர் கொடுப்பான்...

தட்டு தடுமாறி, விழி பிதுங்கி, பயந்து கட்டுண்டு இருக்கும்போது


தழுவி துணிச்சல் தந்து வீறு கொண்டு எழ செய்வான் ....

அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எவனெவன் என்னென்ன சொன்னாலும் ...

உன்னை எனக்கும் என்னை உனக்கும் தெரியும் என்பான்...

கோபங்கள்... பேதங்கள்... வாக்குகள்... வாதங்கள்....
தருவது தெளிவு தானே தவிர பிரிவு இல்லை...
நல்ல நண்பனால் இதயத்தை உடைக்க முடிந்தாலும்...


நட்பை உடைக்க முடியாது...

Sunday, 5 July 2009

தோழியா... காதலியா... அன்பே!!!

Posted by மௌனமான நேரம் | Sunday, 5 July 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்

சரவணன் க்கு 5 மணிக்கி இந்தியா க்கு flight .அம்ஸ்டேர்டம் ஏர்போர்ட் இல் காத்திருக்கிறான். 3 வருடத்திற்கு பிறகு இப்போது தான் இந்தியா போகிறான். மனைவி லட்சுமி யும் , மகன் சரசு வும் முந்தைய வாரம் போய்விட்டார்கள். இன்னும் boarding க்கு 3 மணி நேரம் இருக்கிறது. சரி பொழுது போக்கலாம் என்று பக்கத்தில் ஒரு duty free ஷாப் க்குள் நுழைந்தான். ' barbie dolls half price' 'offer ends today' என்று போட்டிருப்பது பார்த்து அதை நோக்கி போனான். சரசு வுக்கு பார்பீ பொம்மை என்றால் கொள்ளை பிரியம். ஏற்கனவே 4,5 வைத்திருந்தாலும், என்ன வேண்டும் என்று கேட்டால் பார்பி என்று தான் இன்னும் சொல்வாள். அப்படி ஒருமோகம் அதன் மேல. குழந்தையை நினைத்து மெல்லிய புன்னகை அரும்பியது அவன் உதடுகளில்.

அவனது என்ன ஓட்டங்கள் திடீரென்று சடன் பிரேக் போட்டது. 'அது யார்.... ???'..
ஒரு நிமிடன் அவன் உடலெங்கும் ஒரு உஷ்ணம் பரவியது. சந்தேகமே இல்லை அது வினிதா தான். அவன் வினி..

தடைகளை தாண்டி அவன் எண்ண குதிரை பத்து வருடதிற்கு பின்னே ஓடியது. அவனும் வினியும் ஒரே கல்லூரியில் வெவ்வேறு வகுப்பில் இருந்தார்கள். அவள் அப்படி ஒரு அழகு.

'நீ வெயிலில் போகும்போது
உன்னை பார்க்க கண் கூசியதால்
திரும்பி சூரியனை பார்க்கிறேன்...

உன்னை அமாவாசை இருளில் பார்த்தேன்
எனக்கு இப்போது தான் புரிகிறது..
அமாவாசை அன்று ஒரு நிலவு
மீதி இரவில் இரண்டென்று...

பக்கத்து வீட்டு தாய்
நிலாநிலா ஓடி வா என்று கூறி சோறூட்டினாள்
நிலத்தை காட்டி..
அங்கு நோக்கினேன்... நீ...
'

நான்கு வார்த்தை சேர்த்து எழுத தெரியாத சரவணன் எழுதியது தான் இது. இதை விட அழகாக அவன் நண்பர்கள் பலர் அவளுக்காக எழுதியிருப்பது அவனுக்கு தெரியும்.

ஆனால் வேறு யாருக்குமே கிடைக்காத ஒன்று அவனுக்கு கிடைத்தது.. அவளது நட்பு... அவள் காலை எழுந்திருபதிலிருந்து இரவு தூங்குவது வரை முழு நேரமும் அவனுடன் தான் இருப்பாள். ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் அவனிடம் முதலில் சொல்லா விட்டால் அவளுக்கு தலையெவெடிதுவிடும்.. அவனும் நல்ல நேரம் பார்த்து தான் காதலை சொல்லலாம் என்று காத்திருந்தான்.. அவன் கெட்ட நேரமோ என்னவோ அந்த நல்ல நேரம் வரவே இல்லை. இருவரும் கடைசி வருடம் படிக்கும்போது இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று ஒரு வழியாக சொல்லிவிட்டான்.

அவள் ... 'சரவ்... என்னால் உன்னோட தோழியா தான் இருக்க முடியும். உன்னை வேறு எதுவாவுமே என்னால் பாக்க முடியாது... சாரி.. ' என்றாள். அதன் பிறகு அவன் அவளுடன் பேசவில்லை. அவனால் அவளை தோழியாக பார்க்க முடியவில்லை. இரண்டு தடவை தற்கொலைக்கு கூட முயன்றான்.. எதோ அதிஷ்ட வசமாக தப்பினான். பிறகு... பெற்றோர் ஒரே பையன் நீ இப்படி பண்ணலாமா என்று அழுது... பிறகு அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்... அம்மா உடல் நல குறைவு... பல இண்டேர்விஎவ்கள் ... நல்ல சாப்ட்வேர் கம்பனியில் வேலை... திருமணம்.. குழந்தை... கால ஓட்டத்தில் எல்லாமே மறதுவிட்டிருந்தது... ம்ம்ம்...

பயணிகளை விமானத்தில் நுழைய அறிவிப்பு கேட்டு நினைவுகளில் இருந்து மீண்டு நிகழ்வுக்கு வந்தான். பாஸ்போர்ட் செக் முடிந்து அவனது இருக்கையில் வந்து அமர்ந்தான். ஜன்னல் ஓர இருக்கை. அருகில் உள்ள இருக்கையில்...... வினிதா.... இதை அவன் எதிர்பார்கவே இல்லை..

'சரவணன்??'
'எஸ்! வினிதா??'
'எப்படி இருக்கீங்க?? சர்ப்ரைஸ்.. '...வாடா போடா என்று நிமிஷத்துக்கு நூறு முறை சொல்லும் வினி..
'டூஇங் கிரேட்!! நீங்க??' ..வினி.. வினி.. என்று உருகும் சரவணன்..
'நல்லா இருக்கேன்..'

அவள் கணவன் குழந்தை பற்றி சுருக்கமாக சொன்னாள்.
அவனும் மனைவி குழந்தை பற்றி சொன்னான்...

அதன் பிறகு அவன் கண்ணயர்ந்தான்.. அவன் எதோ படம் பார்த்து கொண்டிருந்தாள்..

அவன் மனதில் ஒரு சின்ன சலனம் கூட இல்லை. அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.. தான் யாருக்காக இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தோமோ அவள் அருகில் இருக்கிறாள்.. கோபம்.. விரோதம்... ஆசை.. அழுகை... எதுவுமே இல்லை... சொல்ல போனால் மனம் தெளிந்த நீரோடை போல ரொம்பவுமே அமைதியாக இருந்தது... அவளிடம் பேச வேண்டும் என்று கூட தோன்றவில்லை... இப்போது அவள் அவனுக்கு தோழியா... காதலியா.. தெரியவில்லை... பத்து வருடம் செய்த வைத்தியமா இது?? காலம் இப்படி ஒரு மருந்தா??? அன்று தான் பைத்தியம் போல் அலைந்ததை நினைத்தால் கொஞ்சம் வியப்பாக கூட இருந்தது...

'உயிர்... அதை எவ்வளவு சாதாரணமாக நினைத்துவிட்டேன்.. ஒரு வேளை அப்போது செத்திருந்தால்.... வாழ்வில் எவ்வளவோ இழந்திருப்பேன்... '

'நேற்று தேவை என்றது இன்று தேவை இல்லை...
நேற்று வாழ்கை என்றது இன்று வாழ்கை இல்லை..
நேற்று உயிர் என்றது இன்று உயிர் இல்லை.....'

அந்த ஒரு நிமிடத்தில் புரியாதது அதை கடந்து வந்த உடன் புரிகிறது..

விமான நிலையத்தில் சரசு வும் லட்சுமியும் காத்திருந்தார்கள்.... தன்னை அறியாமல் அவன் மனதில் மகிழ்ச்சி புகுந்தது..

'ஒரு வாரம் ஆச்சி பாத்து... ' குழந்தை ஓடி வந்து கட்டி கொண்டாள். மனைவி 'ரொம்ப டயெர்ட் எ இருக்கீங்க'....

'இவர்களை பிரிந்து எப்படி ஒரு வாரம் இருந்தேன்....'