மௌனமான நேரம்

 

Monday 31 August 2009

சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அத்துமீறல்!!

Posted by மௌனமான நேரம் | Monday 31 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் உள்ள லடாக் மலைப் பகுதியில் சில இடங்களில் எல்லையை நிர்ணயிப்பதில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்தப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைவதும், பின்னர் அவர்கள் பகுதிக்கு திரும்பிச் செல்வதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

இப்பிரச்சனை பகுதியில், சீன ஹெலிகாப்டர்கள் தாழ்வாகப் பறந்து காலாவதியான உணவுப் பாக்கெட்களை வீசிச் சென்றுள்ளது.

இது குறித்து சீன அரசிடம் ஏற்கெனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர் கூறியுள்ளார்.

இந்த அத்துமீறல் உடனடியாக கண்டுபிடிக்க படவில்லை. இத்தகையான அத்துமீறல்களை தடுக்கவும், உடனடியாக கண்டுபிடிக்கவும் இந்தியா தன் இராணுவ திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும்..

வரும் முன் காப்பதே சிறந்தது!!..

Sunday 30 August 2009

மத்திய அரசு 100 நாள் சாதனைகளும் வேதனைகளும்

Posted by மௌனமான நேரம் | Sunday 30 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 2-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று, சனிக்கிழமையோடு 100 நாள் நிறைவு ஆகிறது.

மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த இருக்கும் 25 அம்ச திட்டங்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளியிட்டு இருந்தார்.

அதன் படி, 100 நாள் செயல் திட்டத்தை அனைத்து அமைச்சகங்களும் வகுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த 100 நாள் நிறைவான நிலையில் சில துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், பலவற்றில் கடும் சோதனைகளை மத்திய அரசு சந்தித்து வருகிறது.



சில சாதனைகள்:

1. உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்ற பின் உள்நாட்டுப் பாதுகாப்பு மேம்பட்டிருப்பது

2. நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது

3. 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி மசோதா நிறைவேற்றப்பட்டது

4. பஞ்சாயத்துகளில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது,

இவை எல்லாம் சாதனைகளாக கருத படுகிறது.

சில வேதனைகள்:

1. நாடு முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் சுகாதார அமைச்சகத்துக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது

2. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு

3. பருவ மழை தவறும் நிலையில், உணவுப் பொருள்களின் உற்பத்தி குறையும். இந்நிலையில், விலைவாசி கட்டுக்குள் கொண்டு வர பெரும்பாடு பட வேண்டும்.

அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த படும் என்று சொன்ன 25 அம்ச திட்டங்கள் முழுமையாக நிறைவேற்ற படாத நிலையில், மிக அவசியமான திட்டங்களை சீக்கிரமே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Saturday 29 August 2009

சோம்நாத் ஒரு ஜென்டில்மேன்!

Posted by மௌனமான நேரம் | Saturday 29 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
அவசியம் இல்லாமல், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அலையும் அரசியல் தலைவர்கள் மற்றும் வி. ஐ. பி - களுக்கு மத்தியில் சோம்நாத் ஒரு ஜென்டில்மேன்!.

மக்களவைத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு பெரும்பாலும் கோல்கத்தாவில் இருந்து வரும் சோம்நாத், தில்லி வரும் சமயங்களில் அவர் தங்கியிருக்கும் இடத்தில் பாதுகாவலர்கள் போடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில், பாதுகாப்பு தருமாறு நான் கோரவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெறவேண்டும் என்று மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டு நலனில் அக்கறையுள்ள சோம்நாத் சாட்டர்ஜி உண்மையில் ஒரு ஜென்டில்மேன் தான்.

எப்படியாவது பிரதமர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு - ஜஸ்வந்த் சிங்

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
"அவுட்லுக்' என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் ஜஸ்வந்த் சிங்,

"....எப்படியாவது பிரதமர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு இருந்தது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வது என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

பார்ப்பதற்கே வினோதமாக இருந்த ஒருவர் பையில் கட்டுகட்டாக பணம் எடுத்துவந்தார். அவையெல்லாம் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகக் கொடுத்தவை என்று கூறப்பட்டது. சுதீந்திர குல்கர்னி அந்த நபருடன் இருந்தார். அந்த நபரைப் பற்றிக் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட அத்வானி, ""இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டுபோய் மக்களவையில் அப்படியே காட்டுங்கள்'' என்று அந்த 3 உறுப்பினர்களிடம் கூறிவிட்டார்.

ஆளும் கூட்டணி அரசைக் கவிழ்ப்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர் அவசரப்பட்டதைப் போலவே தெரிந்தது.

தலைமைப் பதவிக்கு வர நினைப்பவர்களுக்கு இவையெல்லாம் அழகு அல்ல என்பதை அவர் உணரவில்லை. அந்தப் பணம் அப்படியே ஆளும் கூட்டணி தரப்பிலிருந்து தரப்பட்டிருந்தாலும் முதலில் அதை மக்களவைத் தலைவரிடம் கூறி, அவரின் கவனத்துக்குக் கொண்டுவந்துவிட்டு அவர் என்ன கூறுகிறாரோ அதன்படி செயல்பட்டிருக்கலாம்.

மக்களவைத் தலைவர் பாரபட்சமாக நடந்து கொண்டுவிடுவார் என்ற அச்சம் இருந்திருந்தால் அந்தப் பணத்தை அவைக்குக் கொண்டுவந்துவிட்டு, அதைப் பற்றிப்பேசி புகார் தெரிவித்துவிட்டு பிறகு அவையின் தலைவரிடம் ஒப்படைத்திருக்கலாம்.

இதனால் மக்களவையின் மாண்பும் நாட்டின் மரியாதையும் காப்பாற்றப்பட்டிருக்கும். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான என்னிடம் கூட ஆலோசனை கலக்காமலேயே அத்வானி இதைச் செய்தார்.

ராணுவத்தில் தளபதிகளுக்குக் கூறப்படும் இலக்கணமே வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் முன்னணியில் நின்று அதை ஏற்பதுதான். அத்வானிக்கு அந்த குணமே கிடையாது. தவறு நடந்தது என்றால் அந்தப் பழி தன் மீது வந்துவிடக்கூடாது என்று நினைப்பார். நெருக்கடி வந்தால் மௌனம் சாதிப்பார் அல்லது பொறுப்பை யார் மீதாவது சுமத்திவிடுவார்.

ராஜ்நாத் சிங் ஒரு மாநிலத்துக்குத்தான் கட்சித் தலைவராக இருக்கத் தகுதியானவர். அவரை தேசியத் தலைவராக்கியது தவறு.

பாரதிய ஜனதா அரசியல் கட்சியாகவே இல்லை. ஒரு வழிபாட்டுக் கூட்டம், தலைவன் சொல்படி செயல்படும் கும்பல் என்ற அளவுக்குச் சுருங்கிவிட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமான சொத்துபோல ஆகிவிட்டது.

நான் வெளிநாடு சென்றிருந்தபோதுதான் பாகிஸ்தானுக்கு இந்திய விமானங்கள் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, எல்லைகளில் நமது துருப்புகள் கொண்டுபோய் நிறுத்தப்பட்டனர். நான் அவ்விரு முடிவுகளையும் ஏற்கவில்லை.

எல்லை பாதுகாப்புப் படையினரை வங்கதேசத்துக்குள் அனுப்புவது என்ற முடிவும் என்னைக் கேட்காமலேயே எடுக்கப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் இறந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவரை மூங்கிலில் கட்டி தூங்கிவந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு மனம் பதைத்தேன். எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) என்பது உள்துறை அமைச்சகத்தின் கட்டளைப்படிதான் செயல்படும். வங்கதேசத்துக்கு பி.எஸ்.எஃப்-பை அனுப்பியது யார் என்று நான் கேட்டதற்கு எனக்குக் கடைசி வரையில் பதிலே சொல்லவில்லை.." என்றார் ஜஸ்வந்த் சிங்.

பன்றிக் காய்ச்சல் மாத்திரைகள் இனி கடைகளில் கிடைக்கும்!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்குத் தேவைப்படும் "ஓசல்டாமிவிர்'' (டாமிபுளூ) மாத்திரைகள் இன்னும் 10 அல்லது 12 நாள்களில் இந்திய மருந்துக் கடைகளில் சில்லரையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த மருந்தைத் தயாரிக்கும் அனுமதியை ரன்பாக்ஸி, சிப்ளா, மெட்கோ, ஹெடரோ, ஸ்ட்ரைட்ஸ், ரோச் ஆகிய 6 பெரிய மருந்து நிறுவனங்கள் பெற்றுள்ளன.


இந்த மருந்துகளை சில்லரை விற்பனை மூலம் விற்கலாம் என்ற அறிவிப்பை இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்னும் 10 அல்லது 12 நாள்களில் பிறப்பிக்கும்.


Friday 28 August 2009

பச்சை குத்திய நடிகை, இப்போ?

Posted by மௌனமான நேரம் | Friday 28 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
இடது கையில், ஆட்டக்காரரின் பெயரை பச்சை குத்திய நடிகை, இப்போது தன் வலது கையில், மந்திர கயிறு கட்டியிருக்கிறார் போல. இது, கேரள மந்திரவாதி மந்திரித்து கட்டிய கயிறாம்.

ஆட்டக்காரர் தன்னை விட்டு பிரிந்து போய் விடக் கூடாது என்பதற்காகவே இந்த வசிய கயிறை கட்டியிருக்கிறாராம் அந்த நயமான நடிகை!



பிரியமான நடிகை!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
பிரியமான நடிகையும், பிருதிவி நடிகரும் நெருக்கமாக பழகி வருவது, கோடம்பாக்கம் முழுவதும் அறிந்த சங்கதி.

இந்த நெருக்கமான பழக்கத்துக்கு இரண்டு பேரும் புதுசாக ஒரு காரணம் சொல்கிறார்கள். "எங்கள் இரண்டு பேரின் அம்மாக்களும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அதனால் தான் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்'' என்று!

நட்பு உறவிலும், உறவு விவாகரத்திலும் முடியாதவரை தப்பு இல்லைதான்!


மு.க.ஸ்டாலின்-மனைவி துர்கா ஸ்டாலின் உடல் உறுப்புகள் தானம்!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை மியாட்மருத்துவ மனையில் “மோட்” என்ற பெயரில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கம் இன்று தொடங்கப்பட்டது.


விழாவில் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,


"....என் மனைவி உடல் உறுப்புகளை முதன் முதலாக தானம் செய்தார். அவரை மனைவியாக அடைந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். பொதுவாக ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருக்கிறார். எனது மனைவியின் வழியில் நானும் எனது உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்....."


முதலில் துர்கா ஸ்டாலின், உடல் உறுப்புகளை தனது வாழ்க்கைக்கு பிறகு அளிப்பதான உறுதிமொழி பத்திரம் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

அதை தொடர்ந்து துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினும், தனது உடல் உறுப்பினர்களை தானம் செய்வதாக அறிவித்தார். அதற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டார்.


தொடர்ந்து 1500 பேர் உறுப்புகள் தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.


வரவேற்கும் படியான ஒன்று...


நன்றி!!

Wednesday 26 August 2009

வேப்பமரத்தை சுத்தி ஹீரோயினுடன் டூயட் பாடும் விஜயகாந்த்!!

Posted by மௌனமான நேரம் | Wednesday 26 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
தென்மண்டலத்தில் கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறித்து, மீண்டும் ஒருமுறை இடைத்தேர்தல் நாயகனாகியிருக்கிறார் மத்திய அமைச்சரும், தி.மு.க-வின் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி.


இடைத்தேர்தல் வெற்றி பற்றி கேட்டபோது,

".....எண்பத்தாறு வயதிலும் ஓயாத உழைப்போடும், உறுதியோடும் மக்களுக்காக நல்லாட்சி நடத்தும் தலைவர் கலைஞர் ஒருபக்கம்...



'ஜனநாயகம் செத்துப் போச்சு, அராஜகம் அதிகமாகிப் போச்சு' என்று கூப்பாடு போடும் ஜெயலலிதாவும், அந்தம்மாவுக்கு கைத்தடியா வைகோ, ராமதாஸுன்னு சிலரும் இன்னொரு பக்கம்...

இவங்களுக்கு மத்தியில், வயசான பிறகும் ஹீரோ வேஷம் போட்டுக்கிட்டு வேப்பமரத்தை சுத்தி ஹீரோயினுடன் டூயட் பாடிக்கிட்டிருக்கிற விஜயகாந்த் ஒருபக்கம்... இந்தத் தேர்தலில் தி.மு.க-வை தோற்கடிக்க பலரும் அணி அணியா திரண்டு நின்னாங்க. எல்லாத்தையும் மீறி நடுநிலைமையா நின்னு மக்கள் கொடுத் துட்டாங்களே, தீர்ப்பை..!



தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தோளிலேயே மாறி மாறி சவாரி செய்த கம்யூனிஸ்ட்களின் உண்மையான பலமும் இந்தத் தேர்தலில் தெரிந்துவிட்டது. மொத்தத்தில் உண்மை எது, பொய் எதுன்னு மக்கள் பகுத்துப் பார்த்து ஓட்டுப் போட்டிருக்காங்க. இந்த வெற்றி தந்த உற்சாகம், இன்னும் நூறு தேர்தலை சந்திக்கும் தெம்பையும், உற்சாகத்தையும் தந்திருக்கு...''


மனசு ஒத்து பிரிஞ்சிடலாம்!!!!!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
நான் சுகந்தன். ஒரு வக்கீல். தெரிஞ்சோ தெரியாமலோ , விரும்பியோ விரும்பாமலோ நான் ஒரு விவாகரத்து specialist ஆகிட்டேன். இத சொல்றதுக்கு எனக்கு சத்தியமா பெருமை இல்ல. ஆனா இந்த நிமிஷம் வரை வருத்தமாவும் இல்ல. இப்போ திடீர்னு ஏன் வருத்தம்? எல்லாத்துக்கும் காரணம் என உயிர் நண்பன் வினோத் தான். வினோதினியும் தான்.

நான், வினோத், வினோதினி மூவரும் ஒரே ஊரில் பிறந்து, ஒரே தெருவில் உருண்டு புரண்டு, ஒரே பாலர் பள்ளியில் சேர்ந்து, சேர்ந்து படித்து, சேர்ந்து விளையாடி, சேர்ந்து சண்டை போட்டு, ஒரே மாங்காயை காக்கை கடி கடித்து, இப்படி சேர்ந்து சேர்ந்து வளர்ந்தோம். ஆனால் மேற்படிப்பு என்று வரும்போது நான் வக்கீல் ஆனேன். அவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆனார்கள். இதற்கிடையில், அவர்களுக்குள்ளே காதலும் வளர்ந்தது.

எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் அவர்களை பார்த்து ஆச்சரியப்படாத, பொறாமைபடாத ஆளே கிடையாது. பெயரிலிருந்து செயல் வரை எல்லாவற்றிலுமே அப்படி ஒரு பொருத்தம். அவர்கள் இருவருக்கும் பெரிய சண்டை வந்து கூட நாங்கள் பார்த்தது இல்லை. ரெண்டு பெரும் மாறி மாறி வினும்மா என்று கொஞ்சுவதை எல்லோரும் கேலி செய்தாலும் ரொம்ப ரசிப்போம் என்பது தான் உண்மை.

அவர்கள் பெற்றோருக்கும் இவர்கள் காதலில் எதிர்ப்பு ஒன்றும் இருக்கவில்லை. சாதி, மதம், அந்தஸ்து என்று எல்லாவற்றிலுமே ஒரே நிலையில் இருந்தது தான் காரணமோ என்னமோ தெரியவில்லை. எது எப்படியோ, ஆசைப்பட்டு காதலித்து , ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணமும் பண்ணி... ஹ்ம்ம்.. முன்னெல்லாம் ஒரே ஊரில் இருந்ததால் எப்போதும் சேர்ந்தே இருந்தோம். வேலை என்று வந்த பிறகு வெவ்வேறு ஊர்களில் இருக்க வேண்டியது வந்தது. ஆனாலும், கண்டிப்பாக 2 நாளுக்கு ஒரு முறையாவது பேசிவிடுவோம். ஆனால் அவர்கள் கல்யாணத்திற்கு பிறகு அது மாதம் ஒரு முறை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று ஆகி இப்போ இன்னும் குறைந்து விட்டது.

அந்த வினோத் தான் இன்று என்னை பார்க்க வந்திருக்கிறான்.

'டேய்.. ரொம்ப நாள் ஆச்சி பாத்து.. போன் பண்ணனும்னு நினைக்கிறேன்,,, ஆனா பண்ண முடியறதில்லை.. ரொம்ப சந்தோஷம்டா ... '..

நானே பேசிகொண்டிருந்தேன்... இப்போதுதான் கவனித்தேன்.. அவன் முகம் வாடியிருப்பதை..

'ஏன்டா எதாவது பிரச்சனையா? வினு எங்கே? வரலியா? என்ன??' பதட்டம் தொற்றி கொண்டது.

'அவ வரமாட்டா!!'

' அவளுக்கு உடம்புக்கு எதாவது????'

'உடம்பெல்லாம் கொழுப்பு அதிகமானது தவிர நல்லா தான் இருக்கா ...'

'என்னடா இந்த வயசிலேயே cholestrol-எ . டாக்டர் கிட்ட போனீங்களா ?'

'ஏன்டா நீ வேற... கல்லு மாதிரி நல்லா தான் இருக்கா...'

'சண்டையா?

'ஒத்து வராதுடா.. அதான் உன்கிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்'

'என்ன விளையாடரியா? '

'இல்லடா சீரியஸ் தான் பேசறேன். ஒத்து வராதுன்னு ஆயிடிச்சி. அதான் ரெண்டு பெரும் மனசு ஒத்து பிரிஞ்சிடலாம்னு...'

நானும் அவன்கிட்ட எவ்வளவோ பேசி பார்த்தேன். அவன் கொஞ்சம் கூட பிடி தளர்த்தவே இல்ல. நான் நொந்து போனது தான் மிச்சம். எவ்வளவு கேட்டும் 'ஒத்துவராது' ன்னு மட்டும் தான் சொல்றான். ஏன் ன்னு சொல்ல மாட்டேங்கறான்.

'சரி. நீ இப்போ கிளம்பு. நான் நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்'.

'நான் நாளைக்கு லீவ் தான் 10 மணிக்கு வா, அப்போ தான் அவ இருக்க மாட்டா.'

தலையில் அடிச்சிக்கலாம் போல இருந்தது எனக்கு. அவனை அனுப்பிட்டு நேரா கிளம்பி விநோதினியை பாக்க போனேன். ஒரு மணி நேர பயணம். ஆனால் போன் இல் பேசுவதை விட நேரில் பேசுவதுதான் நல்லது என்று தோணியது. எப்போதும் கலகலப்பாக சிரித்த முகத்துடன் வரவேற்கும் வினோதினி வேண்டா வெறுப்பாக பார்த்தாள்.

'எப்படி இருக்கே வினோதினி?'

'இருக்கேன்... '

'நேத்து வினோத் வீட்டுக்கு வந்திருந்தான்.'

'ம்ம்...'

'என்ன பிரச்சனைன்னு கேட்டேன். ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறான். '

விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். பிரச்சனை இதுதான். வேலைக்கு போகும் வரை இருவருக்கும் நிறைய நேரம் இருந்தது.. பேச, புரிந்து கொள்ள... இப்போது ரெண்டு பேரும் அவரவர் வேலையில் பிஸி ஆகி விட்டதால் பேச கூட நேரமில்லை. சேர்ந்திருக்கும் கொஞ்ச நேரமும் சின்ன சின்ன பிரச்சனை.. அதை தீர்க்க நேரமில்லாமல் இப்போது பூதாகரமாக ஆகிவிட்டிருக்கிறது..அவளை சமாதான படுத்திவிட்டு கிளம்பினேன்..

அடுத்த நாள் நன்றாக யோசித்து வினோத்துக்கு போன் பண்ணினேன். ரொம்ப நேரம் பேசி கஷ்டப்பட்டு அவனை சம்மதிக்க வைத்தேன்.

நான் சொன்னது இதுதான். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது இருவரும் சேர்ந்து இருக்கவேண்டும், அந்நேரம் எதாவது ஒரு காரியம் சேர்ந்தே செய்ய வேண்டும். அந்த நேரத்தில் பள்ளி காலத்தில் எப்படி பேசினார்களோ அதை போல் பேசி கொள்ள வேண்டும். திருமணம் ஆனதை அடியோடு மறந்து விட வேண்டும்.

விநோதினிக்கும் போன் பண்ணி இதையே சொன்னேன். 'இதென்ன சிறுபிள்ளைத்தனம்' என்றாள். கடைசியில் ஒரு வழியாக சம்மதித்தாள். இது நடந்து ஒரு வாரமாக அவர்கள் இருவரும் என்னிடம் பேசவே இல்லை. நான் கூட என் master plan failure ஆகி விட்டதோ என்று நினைத்தேன்.

அவர்களை பிரித்து வைக்க மனம் ஒப்பவில்லை. ஓடி போயிடலாம் போல இருக்கு. சரி எதுக்கும் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன்.

ஆச்சரியம்... ரெண்டு பேருமே வீட்டில் இருக்காங்க ... ஆண்டவனை வேண்டிகிட்டே உள்ளே போனேன். ரெண்டு பேர் முகத்தையும் பாத்து ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலே. சரி அவங்களே ஆரம்பிக்கட்டும் என்று பேசாமல் இருந்தேன்.

'ரொம்ப தேங்க்ஸ் டா...'

ரெண்டு பேரும் சேர்ந்து தான் சொன்னாங்க.

'எங்களுக்குள்ள இருந்தது பிரச்சனை இல்லை ...மனதளவில் தூரம் தான் இருந்தது.. இப்போ ஒரு வாரமா எவ்வளவு வேலை இருந்தாலும் நீ சொன்ன மாதிரி ஒரு மணி நேரம் சேர்ந்து இருக்கிறோம்..சும்மா பேசிட்டு.... சிரிச்சிட்டு. .. இவ்வளவு நாள் எத இழந்திருக்கோமோன்னு இப்போ புரியுது. நாங்க கொஞ்ச நேரம் சேர்ந்து spend பண்ண ஆரம்பிச்ச பிறகு முன்னாடி வந்த பிரச்சனைகள் எதுவுமே வரலே. அப்படியே வந்தாலும் பேசி தீத்துக்கறோம். 2 வாரம் லீவ் எடுத்துட்டு எங்கேயாவது போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம்.

எல்லாமே உன்னாலே தாண்டா.. '

நான் ஒண்ணுமே சொல்லலே..

இப்போ தான் ஒரு நிம்மதி மனசுலே. காரணமே இல்லாம பிரிய இருந்த ஜோடியை சேர்துட்டோம்னு ஒரு நிம்மதி எனக்கு.

உறவு பலப்பட மனசு விட்டு பேசறது எவ்வளவு முக்கியம்.. இது புரிஞ்சாலே பாதி பிரச்சனை தீந்துடும்.

கார் மேல் ஓடும் குதிரை !!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ரேஸ் லே ஓடுற குதிரை பாத்திருக்கோம்...

ரோடு மேல ஓடற குதிரை பாத்திருக்கோம்...

கார் மேல ஓடற குதிரை பாத்திருக்கோமா....

இங்கே பாருங்க....


Tuesday 25 August 2009

ஆசை...ஆசை...ஆசை...ஆசை

Posted by மௌனமான நேரம் | Tuesday 25 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

அன்னாடம் காய்சிக்கு மாச சம்பளம் வாங்க ஆசை... மாச சம்பளம் வாங்குபவனுக்கு மாச சம்பளம் குடுக்க ஆசை.. சம்பளம் குடுப்பவனுக்கு லட்சாதிபதி ஆக ஆசை...லட்சாதிபதிக்கு கோடீஸ்வரனாகனும்னு ஆசை... அவனுக்கோ அதுக்கும் மேல வேணும்னு ஆசை...
ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...

அது என்னவோ நமக்கிட்ட எவ்வளவு இருந்தாலும் அடுத்தவங்ககிட்ட இருக்கறது மேல தான் ஆசை வருது...

மைக்கேல் ஜாக்சன் சாவுக்கு காரணம் என்ன?

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
உலகப்புகழ் பெற்ற பிரபல பாப் பாடகர் ஜாக்சன் (வயது 50). கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி மரணம் அடைந்தார். சாவுக்கு அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே கொடுத்த மருந்தே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மைக்கேல் ஜாக்சன் தூங்க செல்வதற்கு முன்பு மயக்கம் தரக்கூடிய அதிசக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது வழக்கம் என்பது குறித்த ஆவணங்கள் அங்கு கைப்பற்றப்பட்டன.

மைக்கேல் ஜாக்சனின் உடலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தலைமை பிரேத பரிசோதகர் டாக்டர் சத்யவாகீஸ்வரன் பிரேத பரிசோதனை நடத்தினார்.

டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் - ஜாக்சன் உடலில் மருத்துவ தடயவியல் சோதனைகளைச் செய்த டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.



அவர், ஜாக்சன் உட்கொண்டிருந்த மருந்து மாத்திரைகளில் உள்ள விஷத்தன்மை குறித்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த அறிக்கையும், டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் ஹூஸ்டனில் உள்ள மாவட்ட கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

அதில், அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் என்று லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் அறிக்கை தெரிவித்துள்ளது.


இதன் மூலம் ஜாக்சன் மரண வழக்கை கொலை வழக்காக லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸார் மாற்றவுள்ளனர்.

இதையடுத்து ஜாக்சனின் டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு எதிராக கலிபோர்னியா கோர்ட் தேடுதல் வாரண்ட்டை பிறப்பித்துள்ளது. அந்த வாரண்ட் உத்தரவில், லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் அதிகாரி டாக்டர் சத்யவாகீஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு அதிக அளவிலான, அபாயகரமான புரோபபால் மருந்து கொடுக்கப்பட்டதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாக்சன் மரண வழக்கு கொலை வழக்காக மாறுகிறது. டாக்டர் கான்ராட் முர்ரே கைது செய்யப்படவுள்ளார்.


Monday 24 August 2009

பீஷ்மா!!

Posted by மௌனமான நேரம் | Monday 24 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியால் இந்த பீரங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் பீஷ்மா கவச வாகனம் 2004 - ம் ஆண்டு ராணுவத்திடம் வழங்கப்பட்டது.

பீஷ்மா பீரங்கிகள் "டி - 90' வகையைச் சேர்ந்தவை. பாதுகாப்பு, வாகன ஓட்டம், போரிடும் திறன்கள் உள்ளிட்டவற்றில் நவீனம் புகுத்தப்பட்டுள்ளது. இந்த பீஷ்மா பீரங்கிகள் ஓரே குழலைப் பயன்படுத்தி வெடிபொருள்களைச் சுடுவதுடன், நிர்ணயிக்கப்பட்ட ஏவுகணையை சரியாகத் தாக்கும் திறன் கொண்டதாகும்.

இரவு நேரத்தில் போரிடுவதற்கு வசதியாக புதிய கருவிகள் இதில் உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் பரிமாற்றத்துக்கான ரேடியோ கருவிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ரசாயன, உயிரியியல் மற்றும் அணுக்கதிர் வீச்சு தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடிய அதிநவீன அம்சங்களும் இதில் உள்ளன.

இந்த ரக பீரங்கிகள் 35 ஆண்டுகள் வரை திறமையாகச் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இப்போது பத்து பீரங்கிகளை ராணுவத்திடம் வழங்கியுள்ளது. ஆண்டொன்றுக்கு 100 பீஷ்மா பீரங்கிகளை தயாரிக்க கனரக வாகன தொழிற்சாலை திட்டமிட்டுள்ளது. இதற்கான மொத்தச் செலவு ரூ.15 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஆவடி எச்விஎப் தொழிற்சாலை, விஜயந்தா, அஜய், அர்ஜுன் என பல வகையான நவீன பீரங்கிகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

கறுப்பு பூனையை(?) தேடி சுவிட்சர்லாந்து வராதீங்க!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ஓ!! கறுப்பு பூனை இல்லங்க.....கறுப்பு பணம் !!!


சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசியமாக பணம் போட்டு வைத்திருக்கும் இந்தியர்களின் கணக்குகளைப் பார்க்க வேண்டும் என்று கூறி யாரும் எங்களை அணுகாதீர்கள் என்று அந்நாட்டு வங்கிகளின் சங்கம் தெளிவுபடக் கூறிவிட்டது.


இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுவிஸ் வங்கிகளில் ரகசியக் கணக்கு இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகும்.


இப்படி வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் கறுப்புப் பணம் மட்டுமே பல லட்சம் கோடி இருக்கும் என்று சமீபத்தில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் கூறப்பட்டது.


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாள்களுக்குள் எல்லா கறுப்புப் பணத்தையும் வெளியே கொண்டுவருவோம் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் சூள் உரைத்தனர்.


இத்தனை ஆண்டுகளாகச் சும்மா இருந்துவிட்டு இப்போது மட்டும் கறுப்புப் பணம் குறித்து ஏன் பேசுகிறீர்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் எரிச்சலுடனே அவர்களைப் பார்த்துக் கேட்டனர். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் நாட்டைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் முறைகேடாக சேர்த்த பணம் பற்றி விசாரிக்க வேண்டியிருப்பதால் அவர்களுடைய வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என்று கோரின. அதை சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டன. இதையே முன்னுதாரணமாகக் காட்டி இந்தியாவைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்குகளைத் தருமாறு கேட்போம் என்று அத்வானி உள்ளிட்ட மூத்த பாரதிய ஜனதா தலைவர்கள் கோஷமிட்டனர்.


தேர்தல் முடிந்து இப்போது மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியே ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் கறுப்புப் பணக்காரர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் சமீபத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நிருபர்கள் சந்தித்து இது குறித்து கேட்டபோது, கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதில் தொய்வே கிடையாது; தேவைப்படும் வழக்குகளில் விவரங்களைக் கேட்போம் என்று அறிவித்தார்.


சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆதாரபூர்வமாக நிரூபித்தால் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் பற்றிய விவரங்களைத் தரத்தயார் என்று சுவிஸ் நாட்டு வங்கிகள் தெரிவித்தன. அத்துடன் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், இதர சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் கணக்காக இருந்தால் உடனே தரத்தயார் என்றும் கூறின.


ஆனால் தில்லிக்கு வந்துள்ள ஸ்விஸ் வங்கிகள் சங்கத்தைச் சேர்ந்தவரான ஜேம்ஸ் நேசனோ, யார் வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொண்டு விடலாம் என்ற உரிமையை அரசு அளித்துவிடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இரட்டை வரி விதிப்பைத் தடுக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன. எனவே சுவிட்சர்லாந்து நாட்டில், சட்டவிரோதமாகப் பணத்தை யாராவது வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் வங்கி நிர்வாகிகளே அவர்களுடைய கணக்கைத் திறந்து காட்டுவார்கள்; அப்படி எதுவும் இல்லாமல் வெறும் தகவல் அறியும் உரிமைக்காக யாராவது வங்கியை அணுகினால் ஒரு தகவலையும் பெற்றுவிட முடியாது என்று ஜேம்ஸ் நேசன் கூறியிருக்கிறார்.


இந்த நிலையில் இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் கறுப்புப்பணத்தை எப்போது, எப்படி கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி யிடம் நிருபர்கள் கருத்து கேட்க முனைந்தனர். அவர் தனது நார்த் பிளாக் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றபோது வழி மறித்த நிருபர்களிடம், "என்னிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்... உரிய முறையில் இந்த விவகாரம் குறித்து ஸ்விஸ் வங்கியுடன் பேசுவோம். ஒரு தேசத்தின் நலனுக்காக இந்த விவரங்களை ஸ்விஸ் வங்கி இந்திய அரசுக்குத் தருவதுதான் சரியானது..." என்றார்.


இந்த விவரங்களைப் பெறுவது அத்தனை சுலபமானதல்ல. ஒரு போன் செய்து கேட்டதும் ஸ்விஸ் வங்கி அதிகாரிகள் விவரங்களைத் தந்துவிட மாட்டார்கள். அதில் இரு நாட்டு உறவுகள் மற்றும் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறுக்கிடுவதால், இந்திய அரசுக்கு ஒரேயடியாக தகவல் தரமாட்டேன் என ஸ்விஸ் வங்கியும் மறுத்துவிட முடியாது என்கிறார் நிதித்துறை அதிகாரி ஒருவர்.


இன்னொன்று சூழலுக்கேற்ப நெகிழும் தன்மை கொண்ட சட்ட விதிகளின் கீழ்தான் ஸ்விஸ் வங்கி உருவாக்கப்பட்டிருப்பதால், இந்திய அரசு உண்மையாகவே நெருக்கடி தரும்பட்சத்தில் அனைத்து கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் விவரமும் தெரிந்துவிடும், என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



கறுப்பு பூனை பிடி படுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்!!

Sunday 23 August 2009

சீனாவின் செல்வாக்கை முறியடிக்க இந்தியா திட்டம்

Posted by மௌனமான நேரம் | Sunday 23 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
தெற்காசிய பிராந்தியத்தில் தொடர்ச்சியாக சீனா தனது ராணுவ முகாம்களை அமைத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளில் அந்த முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானின் கவுடார் பகுதியில் சீனா ஆழ்கடல் துறைமுகம் அமைத்து வருகிறது. அங்கு தனது அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை வைக்க திட்டமிட்டுள்ளது. இலங்கையில் அம்பாத் தோட்டை மற்றும் வங்காள தேசத்தில் உள்ள துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் அண்டை நாடுகளில் துறை முகங்களை அமைத்து அதன் மூலம் கடற்படை தளம் அமைக்க சீனா முயற்சிக்கிறது.

இதை அறிந்து கொண்ட இந்தியா தற்போது விழிப்படைந்துள்ளது. எனவே, தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க இந்து மகா சமுத்திரத்தில் கடற்படை தளம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


பொதுவாக போதை மருந்து கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் மற்றும் கடற் கொள்ளையர்களின் தாக்குதல்களுக்கு மாலத்தீவு ஆளாகி வருகிறது. அவர் களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்தியாவுடன் சேர்ந்து கடற்படையை பலப்படுத்த மாலத்தீவு விரும்புகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் மாலத்தீவில் உள்ள முன்னாள் விமானப்படை தளத்தை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ஏ.கே. அந்தோணி சமீபத்தில் மாலத்தீவு சென்று வந்தார்.

இந்த தகவலை லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது.

இப்படிக்கு மௌனமான நேரம்...

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வி.நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் வீட்டில் அப்பளம் தயார் செய்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தார். இவருக்கு தினேஷ்குமார் (23) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. தினேஷ்குமார் பிளஸ்2 வரை படித்து விட்டு அங்குள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார்.

அவர் வேலை விஷயமாக மொபட்டில் ராசிபுரம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டார்.

தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரியானூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு மூளை சாவு ஏற்பட்டு இறந்தார்.


மனதில் ஒருபுறம் வேதனை இருந்தாலும், மகனின் உடல் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்தால் அவர்கள் மூலம் மகனை காணலாமே என தண்டபாணி கருதினார்.


இதயம் உள்பட அனைத்து உறுப்புகளும் நன்கு செயல்பட்டு கொண்டு இருந்தது. இதை அறிந்த தினேஷ்குமாரின் தந்தை தண்டபாணி மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.



இதுகுறித்து சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். தினேஷ்குமாரின் இருதயம், கண், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். அவரது உடலின் உறுப்புகளை ஆபரேஷன் மூலம் அகற்றி மற்றவர்களுக்கு பொருத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இதற்காக சென்னை வந்துள்ள தினேஷ்குமாரின் தந்தை தண்டபாணியிடம் இன்று காலை கையெழுத்து வாங்கியுள்ளனர்.

ஒரே மகனை இழந்து வாடும் தண்டபாணி கண்ணீர் மல்க கூறியதாவது:-

எனது மகன் தினேஷ்குமார் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் எனது மனைவியும், நானும் கதறி அழுதோம். அவன் இறந்தது பற்றி என் மனைவியிடம் கூறுவதற்கு எனக்கு தைரியம் வரவில்லை.

இறந்த பின்னர் அவனது உடல் உறுப்புகள், உயிருக்காக போராடும் வேறு ஒருவருக்கு பயன்உள்ளதாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். இதையடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தோம். இதன்மூலம் எனது மகன் எங்கோ ஒரு மூலையில் உயிருடன் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது.

எனது மகனிடம் இருந்து எடுக்கப்படும் உடல் உறுப்புகள் ஏதாவது ஒரு நோயாளிக்கு பயன்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


" ‌‌ஹ‌ிதே‌ந்‌திர‌னி‌ன் உட‌ல் உறு‌ப்பு தான‌த்‌தி‌‌ற்கு‌ப் ‌பிறகு பொதும‌க்க‌ளிடையே உட‌ல் உறு‌ப்பு தான‌ம் ப‌ற்‌றிய ‌வி‌ழி‌ப்‌புண‌ர்வு அ‌திக அள‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ஹ‌ிதே‌ந்‌திர‌‌னி‌ன் உட‌ல் உறு‌ப்புகளா‌ல் பல‌ர் வா‌ழ்வது ம‌ட்டு‌மி‌ன்‌றி, இதுபோ‌ன்ற ஒரு ‌வி‌ழி‌ப்புண‌ர்வை ஏ‌ற்படு‌‌த்‌தி மேலு‌ம் பலரையு‌ம் வா‌ழ‌ச் செ‌ய்து‌ள்ளா‌ர் எ‌ன்பதுதா‌ன் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மனசு கொஞ்சம் கஷ்டமாக இருக்கு அண்ணே!!... தினேஷ்குமார் ஆன்மா சாந்தி அடையவும் தண்டபாணி குடும்பம் ஆறுதல் அடையவும் இறைவனை பிராத்திக்கிறோம்.

வருத்தமும் நன்றியும்.."

- இப்படிக்கு,
  மௌனமான நேரம்...

Saturday 22 August 2009

கத்ரீனா கைப் பெட்ரூமில் சல்மான் கான்?

Posted by மௌனமான நேரம் | Saturday 22 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
குழந்தைத்தனமான முகத்தால் ரசிகர்களை சுண்டியிழுக்கும் லிவுட்டின் ஹாட் கதாநாயகி கத்ரீனா கைப், அவரது பெட்ரூமில் திரும்பும் பக்கமெல்லாம் சல்மான் கானின் ஸ்டில்ஸ் தான் இருக்கும் என பகிரங்க பேட்டி கொடுத்துள்ளார். "பட்" என்று மனதில் இருக்கும் மணாளன் குறித்து புட்டு புட்டு வைத்த கத்ரீனா, சல்மான் கான் தான் என் காதலர் என்றார். ஆறு வருடங்களாக சல்மான் கானை காதலித்து வருவதாக கூறியுள்ளார் கைப்.


போகும் இடமெல்லாம் சாமி படத்துக்கு பதிலாக ஆசாமி படத்தை எடுத்துச் செல்கிறாராம் கத்ரீனா. பாய் பிரண்ட் பற்றியும், அவர் மீது வைத்துள்ள காதலைப் பற்றியும் சொன்ன கத்ரீனா கல்யாணம் குறித்து மூச்சு விடவில்லை.

சக்களத்தி சண்டை!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
`நயமான' நடிகையுடன் தாடிக்கார நடன நடிகர் வைத்துள்ள `கள்ள உறவு,' அவர் மனைவி-குழந்தைகளை மிகவும் பாதித்து இருக்கிறது.


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகரின் மனைவி, செல்போனை கையில் எடுத்தார். `நயமான' நடிகைக்கு போன் செய்தார். 25 நிமிடங்கள் நடிகையை திட்டியும், வசைபாடியும், சாபம் கொடுத்தும் ஆவேசமாக பேசிவிட்டு, போனை `கட்' செய்தார், அந்த பரிதாபத்துக்குரிய குடும்ப தலைவி!


நயமான' நடிகையின் காதல் விஷயம் பச்சை குத்துதல், ஷாப்பிங், நட்சத்திர ஓட்டல் வாசம் என இருந்ததால் அம்பலமாகி விட்டது. இனிமேல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்திப்பு நடத்த இருவரும் முடிவெடுத்துள்ளனர். எங்கே போகிறார்கள் என்பதை நெருக்கமான வர்களிடம் கூட சொல்வதில்லையாம். இதற்கிடையில் நடிகைக்கு செல்போன்களில் காதலை முறிக்க சொல்லி மிரட்டல்களும் வருகிறதாம்.

[நன்றி: மாலைமலர்]

ஆஸ்திரியாவில் த்ரிஷா!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
வெங்கடேஷ் ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. கதைப்படி பாதி படம் ஆஸ்திரியாவில் நடக்கின்றன. இதனால் தொடர்ச்சியாக 40 நாள்கள் ஆஸ்திரியாவில் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக வெங்கடேஷ் த்ரிஷா மற்றும் படக்குழுவினர் ஆஸ்திரியா சென்று விட்டனர். ஒரே கட்டத்தில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சென்னை திரும்புகிறார் த்ரிஷா.


அடுத்து உடனடியாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் "கட்டா மிட்டா' இந்தி படத்தில் நடிக்கிறார். ஆடுகளம் படத்திலிருந்து விலகிய அவர் புதுப்படம் எதையும் ஓப்புக்கொள்ளவில்லை.


[நன்றி: தினமணி]

ஜீப்ரா க்ராஸிங் (Zebra Crossing)

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ஜீப்ரா எப்படி சாலையை கடக்கிறது கொஞ்சம் பாருங்க!!









மீண்டும் சிக்கினார் ஷில்பா!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
முத்த சர்ச்சை நாயகி நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் ஒரு முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு முன்பு ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கிரே, பொது மேடையில் ஷில்பாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.


இப்போது சாமியார் ஒருவர் கோயிலில் வைத்து ஷில்பாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்த விவகாரம் சர்சைக்குள்ளாகி இருக்கிறது.

மும்பை அருகே உள்ள போவய் பகுதியில் சஹி கோபால் ஆலயத்துக்கு சமீபத்தில் ஷில்பாஷெட்டி சென்றார். சிறப்பு பூஜைகளை செய்த அவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்.


அப்போது அங்கு வந்த கோயில் சாமியார் ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் சாமியார் இப்படி நடந்து கொண்டது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் ஷில்பாவோ எதுவுமே நடக்காதது போல கோயிலில் இருந்து திரும்பினார்.


இதையடுத்து புனிதமான இடத்தில் சாமியாரை முத்தமிட வைத்து புனிதத்தை கெடுத்து விட்டதாக ஷில்பா ஷெட்டி மீது வழக்கு தொடரவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.



இதுபற்றி ஷில்பா ஷெட்டி கூறுகையில், மகன்களுக்கோ, மகள்களுக்கோ தந்தை முத்தம் கொடுப்பதில்லையா? என்று ஆவேசப்பட்டார்.




Friday 21 August 2009

பொக்கிஷம் டிரைலர்...

Posted by மௌனமான நேரம் | Friday 21 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
பொக்கிஷம்

நடிப்பு: சேரன், பத்மப்ரியா, விஜயகுமார், இளவரசு

ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்

இசை: சபேஷ் முரளி

எழுத்து - இயக்கம்: சேரன்

தயாரிப்பாளர்: ஹிதேஷ் ஜபக்

சோனியா விரக்தி

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
சோனியா அகர்வால் விரக்தி:

கல்யாணம் பண்ணாமலேயே இருந்திருக்கலாம் என்று சோனியா அகர்வால் விரக்தியுடன் கூறினார்.

தமிழ் திரையுலகத்திற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை (நடிகர் தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார்.

செல்வராகவனுடன் நடந்த திருமண பந்தம் பாதியிலேயே முடிந்து விவாகரத்து வரை சென்றிருப்பது குறித்து சோனியா அகர்வால் கூறுகையில், நான் இப்போது முன்பை விட மன அமைதியாக இருக்கிறேன். என் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை.


எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்னைகள் இருக்கும். என் வாழ்க்கையிலும் பிரச்னைகள் வந்தன. பிரச்னைகளை பேசித் தீர்க்க முயன்றேன். அடுத்தடுத்து என்னுடைய முயற்சி தோல்வியில் முடிந்ததால் இப்படியொரு முடிவை இருவரும் சேர்ந்து எடுத்திருக்கிறோம்.

நான் செல்வாவை திருமணம் செய்த‌போது என் வயது 24. எங்கள் திருமணத்துக்கு முதலில் என் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அவர்களுடன் போராடி சம்மதம் பெற்றேன். பாதியிலேயே திருமண வாழ்க்கை முறிகிறது. இந்த கல்யாணத்தை பண்ணாமலேயே இருந்திருக்கலாம் என்றார்.

தீவிர உடற்பயிற்சி:

நடிகை சோனியா அகர்வால் தற்போது தீவிர உடற்பயிற்சியில் குதித்திருக்கிறார். மீண்டும் முழு வீச்சில் நடிக்கப் போவதாக சொல்லும் அவர், சினிமா வாய்ப்பு கேட்டு தனது திரையுலக நண்பர்களை தொடர்பு கொண்டு வருகிறாராம்.

தற்கொலை முயற்சி:

இதற்கிடையில் சோனியா அகர்வால் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி பரவியது. இதுபற்றி சோனியா அகர்வால் பதிலளித்துள்ளார்.


நான் ஏன் தற்கொலை செய்ய வேண்டும். அது சிலரால் பரப்பப்பட்ட கற்பனையான காமெடி. என்னை பொறுத்தவரை நான் திடமான மனது கொண்டவள். என் வாழ்க்கையில் அதிகமான மன அழுத்தங்கள் ஏற்பட்டபோது கூட கலங்காமல் தான் இருந்து இருக்கிறேன்.


என் மனம் அமைதியாகவும், சிந்தனை தெளிவாகவும் இருக்கிறது. இந்த நிலையில் ஏன் தற்கொலை முயற்சியில் ஈடுபட என்ன அவசியம் இருக்கிறது. என்னை பற்றிய விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. எல்லோரது வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அவரவர் தனது சொந்த முயற்சியின் மூலம் தீர்வுகண்டு தீர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது மனம் புண்பட்டு உள்ளது. அதை ஆற்றுவதற்கு தனிமை தேவை. மீண்டும் திடமான பெண்ணாக திரும்பி வருவேன். நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவேன்.

கோர்ட்டு உத்தரவு :

கோர்ட்டு உத்தரவுபடி செல்வராகவன், சோனியா அகர்வால் இருவருக்கும் 6 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்து திருமண முடிவு சட்டம் 13 (பி) பிரிவின் கீழ் இருவரும் சேர்ந்து விவாகரத்து கேட்டுள்ளதால் பிப்ரவரி மாதம் அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டு விடும்.

எனவே செல்வ ராகவன்- சோனியா அகர்வாலின் 3 1/2 ஆண்டு திருமணம் வாழ்க்கை பிப்ரவரி மாதம் முடியப்போகிறது.

சில மாதங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவும் அவரது மனைவியும் இப்படி சேர்ந்து வந்து மனு செய்து சுமூகமாக விவாகரத்து பெற்று சென்றனர். அதே வழியை தற்போது செல்வராகவன்- சோனியா அகர்வால் ஜோடி பின்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தல் முடிவுகள்

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
5 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வருமாறு:

கம்பம் - தி.மு.க. வெற்றி (வாக்கு வித்தியாசம் - 57,373)

ராமகிருஷ்ணன் (தி.மு.க.) - 81,515

அருண்குமார் (தே.மு.தி.க.) - 24, 142

ராஜப்பன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 2,303

சசிக்குமார் (பா.ஜனதா) - 946







பர்கூர் - தி.மு.க. வெற்றி (வாக்கு வித்தியாசம் - 59,103)


கே.ஆர்.கே.நரசிம்மன் (தி.மு.க.) - 89,481

வி.சந்திரன் (தே.மு.தி.க.) - 39, 378

எஸ்.கண்ணு (இந்திய கமயூனிஸ்ட்) - 1,640

கி.அசோகன் (பா.ஜனதா) - 1,482





தொண்டாமுத்தூர் - காங்கிரஸ் வெற்றி (வாக்கு வித்தியாசம் - 71,487)



எம்.என்.கந்தசாமி (காங்கிரஸ்) - 1,12,350

தங்கவேலு (தே.மு.தி.க.) - 40, 863

வே.பெருமாள் (மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட்) - 9,126

சின்னராசு (பா. ஜனதா) - 9,045




இளையான்குடி - தி.மு.க. வெற்றி ((வாக்கு வித்தியாசம் - 41,456 )


சுப.மதியரசன் (தி.மு.க.) - 61, 084

அழகுபாலகிருஷ்ணன் (தே.மு.தி.க.) - 19, 628

ராஜேந்திரன் (பா. ஜனதா) - 1,487







ஸ்ரீவைகுண்டம் - காங்கிரஸ் வெற்றி (வாக்கு வித்தியாசம் : 31,359)


எம்.பி.சுடலையாண்டி (காங்கிரஸ்) - 53,827

எம்.சவுந்திரபாண்டியன் (தே.மு.தி.க.) - 22,468

ஞா.தனலட்சுமி (இந்திய கம்யூனிஸ்ட்) - 3,407

அ.சந்தனகுமார் (பாரதிய ஜனதா கட்சி) - 1,797


ராஜீவ் காந்தியின் 65-வது பிறந்த நாள்

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியின் 65-வது பிறந்த நாள் வியாழக்கிழமை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

டெல்லி வீர பூமியில் அமைந்துள்ள ராஜீவ் சமாதியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் காந்தி மனைவியுமான சோனியா காந்தி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். மகன் ராகுல், மகள் பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதரா ஆகியோரும் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.



மக்களவைத் தலைவர் மீரா குமார், தில்லி துணைநிலை ஆளுநர் தேஜெந்திர கன்னா, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் மூத்த தலைவர்கள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.


ராஜீவ் காந்தியின் நினைவிடம் வெள்ளைத் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


ஏழை மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் பிறந்த நாளை கொண்டாடினர்.


கோட்டை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் கருணாநிதி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Thursday 20 August 2009

சக்தி வாய்ந்த பெண்கள்

Posted by மௌனமான நேரம் | Thursday 20 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஃபோபர்ஸ் பத்திரிகை இதழ் வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டை ஆளும் அதிகாரத்தை வைத்திருத்தல், மக்களிடையே பிரபலமாக இருத்தல், அரசியலில் தலைமை கொண்டிருத்தல், அதிகார நிலை மற்றும் மிகப் பெரிய நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளில் செல்வாக்குப் பெற்றிருத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்க பட்டுள்ளது.

அதன்படி முதல் மூன்று இடத்தின் விவரம் வருமாறு:

முதலிடம்: ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலோ மார்கல் (தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்)

இரண்டாம் இடம்: ஃபெடரல் டெபாசிட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஷெய்லா பாயிர்.

மூன்றாவது இடம்: அமெரிக்கா வாழ் இந்தியரும், பெப்சிகோ நிறுவன தலைமை அதிகாரியுமான இந்திரா நூயி.


அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 13-வது இடத்திலும், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அதிகாரி சாந்தா கோச்சார் 20-வது இடத்திலும், பயோகான் நிறுவன தலைவர் கிரண் மசூம்தார் 91-வது இடத்திலும் உள்ளனர்.


அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 28-வது இடமும், அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செலி ஒபாமா 44-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் 42-வது இடத்தில் உள்ளார்.


இந்தியாவைச் சேர்ந்த 3 பெண்கள் இம்முறை இப்பபட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

Wednesday 19 August 2009

பாவிகள்!!!

Posted by மௌனமான நேரம் | Wednesday 19 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
பீகார் மாநிலம் பாட்னா அருகே பிட்டா ரயில் நிலையத்தில், டெல்லி - பாட்னா சிரஞ்சீவி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகளுக்கு மாணவர்கள் சிலர் இன்று தீ வைத்தனர். ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிலருக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த மாணவர்கள், தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் இரண்டு ஏசி ரயில் பெட்டிகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியது.

மாணவர்கள் சிலர் அந்த ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாகவும், அதனை ரயில்வே பாதுகாப்புப் படையினர் தட்டிக்கேட்டபோது, வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய மாணவர்கள், 2 ஏ.சி பெட்டிகளுக்கும் தீ வைத்தனர். இதில் மொத்தம் 4 பெட்டிகள் எரிந்து சாம்பலாயின. பயணிகளின் ஏராளமான உடமைகளும் எரிந்து நாசமாயின.

இந்த மோதலில் ஆர்.பி.எஃப் காவலர்கள் மாணவர்களை அடித்ததில், சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் பாவிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அந்த தண்டனை பொது சொத்துக்கு சேதம் விளைவிக்க எண்ணுவர்க்கும் படமாக இருக்க வேண்டும். என்றைக்கு தான் இந்த பாவிகள் திருந்த போகிறார்களோ!!