மௌனமான நேரம்

 

Tuesday, 26 July 2011

விமானத்தில் சுயநலம்

Posted by மௌனமான நேரம் | Tuesday, 26 July 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
ண்டனில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லி நோக்கிப் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது.  நானும் பத்தில் ஒன்றாக, ஏறி சன்னல் ஓரமா என் இருக்கையில் இருக்க, விமானம் புறப்படத் தயாரானது.  
"திட்டமிட்டதை விட 10 நிமிடங்கள் முன்னதாகவே டெல்லி சென்று விடுவோம்" என்று விமானி சொல்ல, சீட் பெல்ட் சரியாக இருகிறதா என்று விமான பணிப்பெண்கள் (Air Hostess / Cabin Crew ) எல்லாத்தையும் சரி பார்க்க,

"டேக் ஆப்"  சொன்னார் விமான கேப்டன்.

10 நிமிடங்கள்  ஆனது, 20 நிமிடங்கள்  ஆனது, ஆனால் சீட் பெல்ட்யை எடுக்க சொல்லவே இல்லை.

பலர் விமான பணிப்பெண்களின் உதவி கேட்டு, emergency light யை ON பண்ண, "யாரும் சீட் பெல்ட்யை எடுக்க வேண்டாம்" என்று ஒரு விமான பணிப்பெண் எச்சரிக்கை  பண்ண,  சிறிது நேரத்தில், கடும் மேக மூட்டத்தால், விமானம் ஆட ஆரம்பித்தது. 

சன்னல் ஓரமா இருந்த என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது...விமான கேப்டன் மேலே போவதும், கீழே போவதும், வளைந்து போவதும் கஷ்டப்பட்டு விமானத்தை இயக்குவதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..

இதில், ஒரு கழுதை (அப்படித்தானே சொல்லணும்), emergency light யை ON பண்ணி, பண்ணி விமான பணிப்பெண்களின் உதவி கேட்டு தெல்லை கொடுக்க,  யாரும் வரவே இல்லை. 

சீட் பெல்ட்யை எடுக்க சொல்லவே இல்லை. "யாரும் சீட் பெல்ட்யை எடுக்க வேண்டாம்" என்று ஒரு விமான பணிப்பெண் எச்சரிக்கையும்  கொடுத்து இருக்க, அந்த கழுதைக்கு புரிய வேண்டும்.

ஒரு வழியாக, விமானம் சீராக செல்ல, சீட் பெல்ட்யை எடுக்க சொன்னார்கள். emergency light யை ON பண்ணின பயணிகளை, விமான பணிப்பெண்கள் உதவ, ஒரு விமான பணிப்பெண் அந்த கழுதைகிட்ட கேட்க, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுற அந்த கழுதை என்ன என்னவோ பேசுது. (அவங்க அப்பன் வீட்டு விமானம்)... நிலைமையை பல முறை எடுத்து சொல்லி கூட புரியவில்லை அதுக்கு...

அதுக்கு என்ன அவசரம் தெரியுமா? அந்த பெரிய கழுதையோட, சின்ன கழுதைக்கு குடிக்க தண்ணி வேணுமாம்.

அட கழுதை, உன்னால 10 நிமிடங்கள் பொறுக்க முடியாது?  

பணம் இருக்கலாம், படிச்சி இருக்கலாம், ஆனா நேரத்துக்கு தகுந்தால் போல், சுய அறிவோடு நடக்க தெரியனும்....
 
இவர்கள் திருந்துவது எப்போதோ?

Wednesday, 6 July 2011

பத்திரிகை சுதந்திரம்

Posted by மௌனமான நேரம் | Wednesday, 6 July 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
இந்திய சுதந்திர போராட்டத்தில், பத்திரிகைகள் பெரும் பங்காற்றின... ஆனால், இப்போது இந்த (சில) பத்திரிகைகள் அரசியல் சாயம் பூசப்பட்டு ஏதாவது ஒரு அரசியல் கட்சியை சார்ந்தே உள்ளன..

இது போதாத குறைக்கு, அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று பத்திரிகையும். TV சேனலயும் வைத்து கொண்டு, மக்களை பாடாய் படுத்துகின்றன.

நடு நிலையான , உண்மையான செய்திகளை சொல்லா விட்டாலும் பரவாயில்லை, பொய்யான / தவறான செய்திகளை மக்களிடம் திணிக்க பார்க்கின்றன. இது அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது தனது சேனல் / பத்திரிகையின் விளம்பரத்துக்காகவோ இருக்கலாம். இதனால் மக்களிடேயே உண்மையான செய்தி பற்றிய குழப்பம் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த பயனும் இல்லையே!...

1947 க்கு முன், மக்களிடேயே ஒற்றுமை ஏற்படுத்தி, இந்திய சுதந்திர போராட்டத்தில் எப்படி பத்திரிகைகள் உதவியதோ , அதே பத்திரிகைகள் 1947 க்கு பின் , தங்களின் நலனுக்காக மக்களிடேயே பிரிவினையையே ஏற்படுத்த முயல்கின்றன என்பதே உண்மை…

Saturday, 2 July 2011

குடும்பம்

Posted by மௌனமான நேரம் | Saturday, 2 July 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
நண்பர் ஒருவர் பெருமையாக சொல்லி கொண்டிருந்தார் - 'என் குடும்பதில் வரவு செலவு பத்தி என்னை தவிர வேற யாருக்கும் தெரியாது'. இதில் என்ன பெருமை இருக்கிறது, அல்லது இது பெருமை பட வேண்டிய விஷயமா? குடும்ப சுமையை தானே தாங்குவதில் அவருக்கு பெருமையும் சந்தோஷமும் இருப்பது என்னவோ தவறில்லை தான். பாராட்டபடவேண்டிய விஷயமும் கூட. ஆனால் வரவு செலவு எதையுமே மனைவி, குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது சரியா தவறா? நல்லதா கெட்டதா?

இந்த பழக்கம் 'நான்' என்கிற எண்ணத்தினால் வந்திருந்தாலும் சரி, பிரச்சனைகள் நம்மோடு போகட்டுமே என்கிற நல்லெண்ணத்தில் வந்திருந்தாலும் சரி, என்னை பொருத்த வரை மொத்தத்தில் அதனால் உள்ள நன்மைகளை விட தீய்மைகள் தான் அதிகம். குடும்பதில் உள்ள வரவுகளையும் சிறு சிறு செலவுகளையும் குடும்ப உறுப்பினர்களுடன் கூடி கலந்து ஆலோசித்து செய்வதால் எல்லொருக்கும் தானும் அந்த குடும்பதில் ஒரு அங்கம் என்கிற சந்தொஷம் கிடைக்கிறது.

ஒரு ஆடம்பர செலவு செய்யும் முன் இது தேவையா என்கிற யோசிக்கும் மன பக்குவமும் வருகிறது. குடும்பதில் உள்ள நிறைவுக்கும் குறைவுக்கும் நாமும் ஒரு காரணம் என்பது புரிகிறது. குழந்தைகளுக்கும் சிறு வயது முதலே வரவு என்றால் என்ன செலவு என்றால் என்ன என்பதும் புரிகிறது. தங்களுக்கு என்று குடும்பதில் உள்ள பொறுப்பை உணர செய்கிறது.