Saturday, 6 August 2011
குழந்தைகள் பெரும்பாலும் அடிவாங்குவது அவர்களின் பெற்றோரிடம் இருந்து தான். எதற்காக குழந்தைகள் அடிவாங்குகிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலும், அவர்கள் பண்ணுகிற சேட்டைக்காகவோ, குற்றத்துக்காகவோ இல்லவே இல்லை. கணவன், மனைவி இருவர்களிடேயே நடக்கும் சண்டை, மனவருத்தம், ஏரிச்சல் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளே!
சில நேரத்தில், அவர்கள் கொடுக்கும் அடி, அந்த நேரத்தில் ஒன்னும் பண்ணாமல் போகலாம், ஆனால் அந்த அடியால் அவர்கள் முதுமையில் கஷ்ட படுவார்கள் என்பதே உண்மை.
சில நேரத்தில், கொடுக்கும் அடியை விட, வார்த்தையால் பெற்றோர்கள், குழந்தைகளை கொல்லாமல் கொல்லுகிறார்கள். இதுவெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம் என எனக்கு தோன்றுகிறது.
‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஆனால், அடி குடுத்து வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தவில்லை.
பெற்றோர்கள் சொல்வதை மிகச் சரியாக புரிந்து கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு உண்டு. அதே சமயத்தில் குழந்தையின் நல்ல நடத்தைகளை பரிசு, பாராட்டு, அன்பு, அரவனைப்பு, ஆகிய வலிமையூட்டிகளை பயன்படுத்தி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து அவ்வாறு ஊக்குவித்துக்கொண்டே வந்தால், நல்ல நடத்தைகள் அதிகமாகி கெட்ட நடத்தைகளுக்கு நேரமில்லாது அவை தானாகவே குறைந்து விடும்.
அதே நேரத்தில், பிறர் மேலுள்ள கோபத்தை பெற்றோர்கள் குழந்தையிடம் காட்டுவதை தவிர்க்கவேண்டும்.
(குறிப்பு: குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றம்)
தொடர்புள்ள இடுகைகள்: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: