மௌனமான நேரம்

 

Sunday 31 January 2010

துவரம் பருப்பு திடீரென விலை சரிவு!

Posted by மௌனமான நேரம் | Sunday 31 January 2010 | Category: |
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், துவரம்பருப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு 1,200 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டது, வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'விலை மேலும் சரியும்' என்று வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவி வருவதால், பருப்பு இருப்பு வைத்துள்ள வியாபாரிகள் கிலியடைந்துள்ளனர்.

இந்திய அளவில் 2008 டிசம்பர் முதல் துவரம் பருப்பு விலையில் கடும் உயர்வு ஏற்பட்டது. உச்சகட்டமாக, 2009 டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் கிலோ 88 ரூபாயாக விலை உயர்ந்தது. விரைவில் 100 ரூபாயாக உயரும் என்ற கருத்தும், அப்போது வியாபாரிகள் மத்தியில் நிலவியது. பருப்பு விலை, நேற்று குவிண்டாலுக்கு 1,200 ரூபாய் சரிவு ஏற்பட்டு குவிண்டால் 5,800 ரூபாய்க்கும், கிலோ 58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விலையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து மொத்த விலையிலும் சரிவு ஏற்படுவது தான் வழக்கம். ஆனால், வியாபாரிகள் கடந்த மாதமே அதிக விலை கொடுத்து பருப்பை விற்பனைக்காக வாங்கியதால் பருப்பு விலையை குறைக்க முன்வரவில்லை . 'சில்லரை கடைகளில் இன்று முதல் விலை குறைப்பு செய்யப்படும்' என வியாபாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக, வடமாநில வியாபாரிகள் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பருப்புகளையும் விற்பனைக்கு கொண்டு வரத்துவங்கியுள்ளனர்.
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.