Sunday, 31 January 2010
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தயாரிக்கும் 2வது படம் தூங்கா நகரம். இப்படத்தின் சூட்டிங்கை மதுரையில் அழகிரி தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு துரை தயாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின்னர் அவர் தூங்கா நகரம் படம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். வாரணம் ஆயிரம் படத்தை வெளியிட எனக்கு வாய்ப்பு கிடைத்ததால்தான் நான் தொடர்ந்து சினிமாத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். தூங்கா நகரம் படத்தில் 4 கதாநாயகர்கள். பசங்க படத்தில் நடித்த விமல், ரேனிகுண்டா நிஷாந்த், நாடோடிகள் பரணி, படத்தை இயக்கும் கவுரவ் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த படம் வெளியூரில் இருந்து மதுரை வந்து வாழ்க்கை நடத்தும் வாலிபர்களின் கதை. மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். மே மாதத்தில் தூங்கா நகரம் திரைக்கு வரும், என்று துரை தயாநிதி கூறினார்.
தொடர்புள்ள இடுகைகள்: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: