மௌனமான நேரம்

 

Thursday, 19 August 2010

ஆசை மேல் ஆசை...

Posted by மௌனமான நேரம் | Thursday, 19 August 2010 | Category: |
ஆசை மேல் ஆசை...


மாசற்ற மழலையாய்
மகிழ்ந்திருந்த நேரத்தில்
தள்ளி விழுந்த பந்தெடுக்க
தவழ்ந்திட ஆசை ..

அழகழகாய் தவழ்ந்தோட
ஆரம்பித்த அந்நாளில்
அடி மேல் அடி எடுத்து
அதிர்ந்து நடக்க ஆசை ..

தத்தி தடுமாறி
தடம் பதிக்கும் நாட்களில்
பெரிய அண்ணன் அக்கா போல
பாய்ந்தோட ஆசை ...

ஆடி ஓடி விளையாடி
ஆர்ப்பரிக்கும் வேளையில்
புத்தக பை தூக்கி
பள்ளி செல்ல ஆசை ..

புத்தகங்கள் கனம் பார்த்து
பயந்திருந்த சமயத்தில்
வேலை செல்லும் பெரியவர் போல்
வீறு நடை போட ஆசை ..

இன்று விடியலில் எழுந்து
இமைக்காது உழன்று
இல்லை என்பதில்லாத
இந்நிலையில் இருக்கையில் ..

பளிங்கு நிலா காட்டி
பாலூட்டிய அன்னையும் ..
விழுந்து எழுந்து நடை பயில
வேகம் தந்த தந்தையும்..

பால் மணம் மாறாத
பசுமையான மனமும்..
நாளைய நாளை பற்றி நினையாத
நல்லினிய நிலையும் ..

திரும்பி கையில் கிட்டாதா
தினம் இனிமை சேராதா ..
இதுவரையில் ஆசைப்பட்டது
இம்மெனும் முன் நடந்தது ..

இத்தனை தூரம் கடந்த பின்
இன்று வந்த இந்த ஆசை ..
எத்தனை கொடுத்தாலும்
எந்தனுக்கு கிட்டிடுமா ??
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.