Tuesday, 26 July 2011
லண்டனில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லி நோக்கிப் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. நானும் பத்தில் ஒன்றாக, ஏறி சன்னல் ஓரமா என் இருக்கையில் இருக்க, விமானம் புறப்படத் தயாரானது.
"திட்டமிட்டதை விட 10 நிமிடங்கள் முன்னதாகவே டெல்லி சென்று விடுவோம்" என்று விமானி சொல்ல, சீட் பெல்ட் சரியாக இருகிறதா என்று விமான பணிப்பெண்கள் (Air Hostess / Cabin Crew ) எல்லாத்தையும் சரி பார்க்க,
"டேக் ஆப்" சொன்னார் விமான கேப்டன்.
பலர் விமான பணிப்பெண்களின் உதவி கேட்டு, emergency light யை ON பண்ண, "யாரும் சீட் பெல்ட்யை எடுக்க வேண்டாம்" என்று ஒரு விமான பணிப்பெண் எச்சரிக்கை பண்ண, சிறிது நேரத்தில், கடும் மேக மூட்டத்தால், விமானம் ஆட ஆரம்பித்தது.
சன்னல் ஓரமா இருந்த என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது...விமான கேப்டன் மேலே போவதும், கீழே போவதும், வளைந்து போவதும் கஷ்டப்பட்டு விமானத்தை இயக்குவதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..
இதில், ஒரு கழுதை (அப்படித்தானே சொல்லணும்), emergency light யை ON பண்ணி, பண்ணி விமான பணிப்பெண்களின் உதவி கேட்டு தெல்லை கொடுக்க, யாரும் வரவே இல்லை.
சீட் பெல்ட்யை எடுக்க சொல்லவே இல்லை. "யாரும் சீட் பெல்ட்யை எடுக்க வேண்டாம்" என்று ஒரு விமான பணிப்பெண் எச்சரிக்கையும் கொடுத்து இருக்க, அந்த கழுதைக்கு புரிய வேண்டும்.
ஒரு வழியாக, விமானம் சீராக செல்ல, சீட் பெல்ட்யை எடுக்க சொன்னார்கள். emergency light யை ON பண்ணின பயணிகளை, விமான பணிப்பெண்கள் உதவ, ஒரு விமான பணிப்பெண் அந்த கழுதைகிட்ட கேட்க, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுற அந்த கழுதை என்ன என்னவோ பேசுது. (அவங்க அப்பன் வீட்டு விமானம்)... நிலைமையை பல முறை எடுத்து சொல்லி கூட புரியவில்லை அதுக்கு...
அதுக்கு என்ன அவசரம் தெரியுமா? அந்த பெரிய கழுதையோட, சின்ன கழுதைக்கு குடிக்க தண்ணி வேணுமாம்.
அட கழுதை, உன்னால 10 நிமிடங்கள் பொறுக்க முடியாது?
பணம் இருக்கலாம், படிச்சி இருக்கலாம், ஆனா நேரத்துக்கு தகுந்தால் போல், சுய அறிவோடு நடக்க தெரியனும்....
இவர்கள் திருந்துவது எப்போதோ?
தொடர்புள்ள இடுகைகள்: அலசல்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: