Saturday, 2 July 2011
நண்பர் ஒருவர் பெருமையாக சொல்லி கொண்டிருந்தார் - 'என் குடும்பதில் வரவு செலவு பத்தி என்னை தவிர வேற யாருக்கும் தெரியாது'. இதில் என்ன பெருமை இருக்கிறது, அல்லது இது பெருமை பட வேண்டிய விஷயமா? குடும்ப சுமையை தானே தாங்குவதில் அவருக்கு பெருமையும் சந்தோஷமும் இருப்பது என்னவோ தவறில்லை தான். பாராட்டபடவேண்டிய விஷயமும் கூட. ஆனால் வரவு செலவு எதையுமே மனைவி, குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது சரியா தவறா? நல்லதா கெட்டதா?
இந்த பழக்கம் 'நான்' என்கிற எண்ணத்தினால் வந்திருந்தாலும் சரி, பிரச்சனைகள் நம்மோடு போகட்டுமே என்கிற நல்லெண்ணத்தில் வந்திருந்தாலும் சரி, என்னை பொருத்த வரை மொத்தத்தில் அதனால் உள்ள நன்மைகளை விட தீய்மைகள் தான் அதிகம். குடும்பதில் உள்ள வரவுகளையும் சிறு சிறு செலவுகளையும் குடும்ப உறுப்பினர்களுடன் கூடி கலந்து ஆலோசித்து செய்வதால் எல்லொருக்கும் தானும் அந்த குடும்பதில் ஒரு அங்கம் என்கிற சந்தொஷம் கிடைக்கிறது.
ஒரு ஆடம்பர செலவு செய்யும் முன் இது தேவையா என்கிற யோசிக்கும் மன பக்குவமும் வருகிறது. குடும்பதில் உள்ள நிறைவுக்கும் குறைவுக்கும் நாமும் ஒரு காரணம் என்பது புரிகிறது. குழந்தைகளுக்கும் சிறு வயது முதலே வரவு என்றால் என்ன செலவு என்றால் என்ன என்பதும் புரிகிறது. தங்களுக்கு என்று குடும்பதில் உள்ள பொறுப்பை உணர செய்கிறது.
தொடர்புள்ள இடுகைகள்: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: