மௌனமான நேரம்

 

Sunday 29 November 2009

இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை சூடு பிடிக்கிறது!

Posted by மௌனமான நேரம் | Sunday 29 November 2009 | Category: |
இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை சூடு பிடிக்கிறது!

நானோ கார்களுக்கான முன்பதிவுக்கு எல்லாரும் முண்டியடிக்கும் இந்தியாவில்தான், அதிக விலையுள்ள சொகுசு கார்களும் அதிகளவில் விற்பனையாகின்றன. சொகுசு கார்களின் சொர்க்கமான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இப்போது சிறிய, எரிபொருள் சிக்கனம் வழங்கும் கார்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் 15 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை விலையுள்ள உயர்தர சொகுசு கார்கள் அதிகமாக விற்பனையாகின்றன. இந்த ஆண்டு இலக்கு மூவாயிரம் கார்கள். வோல்க்ஸ்வேகன் பசாட் (24 லட்ச ரூபாய்), டயோட்டா பார்ச்சூனர் (20 லட்ச ரூபாய்), ஹோண்டா சிஆர்-வி (22 லட்ச ரூபாய்) கார்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக விற்றுத் தீர்த்திருக்கின்றன.


சர்வதேச அளவில் மிகப் பிரபலமான ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் சொகுசு கார்கள், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார்கள், டாடா நிறுவனம் மூலம் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜாகுவார் கார்கள் மூன்று மாடல்களில் விற்பனைக்கு வருகின்றன. இவற்றின் விலை 63 லட்சத்தில் இருந்து 93 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாண்ட் ரோவர் கார்களும் மூன்று மாடல்களில் விற்பனைக்கு வருகின்றன. பிரிட்டனின் கவுரவம் மிக்க இந்த சொகுசு கார்கள் தயாரிப்பில் டாடா நிறுவனமும் ஈடுபட்டிருக்கிறது.

டாடா நிறுவன சேர்மன் ரத்தன் டாடா கூறுகையில், 'சொகுசு கார்கள் பயன் பாட்டை இந்திய மக்கள் அனுபவிக்க வசதியாக இந்த சிறப்பு மிக்க கார்கள் இங்கே விற்கப்படும். டாடா நிறுவனம் சம்பந்தப்பட்டிருப்பதால், இதுவரை பிரிட்டிஷார் பெருமை என்று கருதப்பட்ட இவை, இனி இங்கே விற்பனைக்கு வருகின்றன' என்றார்.

ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.