மௌனமான நேரம்

 

Monday, 30 November 2009

திருமணம் - அவசியமா அனாவசியமா?

Posted by மௌனமான நேரம் | Monday, 30 November 2009 | Category: |
திருமணம் - அவசியமா அனாவசியமா?

'எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை' என்று சொல்வது இப்போ கொஞ்சம் பேஷன் ஆகிவிட்டது. சினிமாவில் உள்ளவர்களும், மேல் தட்டு மக்களும் என்ன நினைகிறார்கள் என்பதை விட.. இந்த எண்ணம் நடுத்தர வர்க்கம் நடுவில் கூட இருப்பது தான் கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது.

சமீபத்தில், என்னக்கு தெரிந்த ஒரு ஜோடியை சந்திக்க நேர்ந்தது. அவர் மிகவும் மதிக்கப்டும் ஒரு ஆசிரியர். ஆனால் திருமணம் என்னும் சடங்கில் அவருக்கு நம்பிக்கை இல்லையாம். 'உன்னை காதலிக்கிறேன். ஆனால் திருமணத்தில் என்னக்கு நம்பிக்கை இல்லை' என்று சொல்லிவிட்டார். அந்த பெண்ணின் வீட்டில் அவள் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர். அவளும் திருமணத்திற்கு தயாராகத்தான் இருந்தால். ஆனால் திருமணம் செய்து கொள்ள அவர் தயாராக இல்லை. திருமணம் செய்யாமால் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ் என்று சொல்லி வழியனுப்பும் அளவுக்கு அவள் பெற்றோருக்கு பரந்த மனது இல்லை. அந்த ஜோடி என்ன செய்ய போகிறார்களோ தெரியவில்லை.

இப்படி திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூறும் ஒரு காரணம் - மனதில் இவருடன் தான் வாழவேண்டும் என்று முடிவு செய்த பின் திருமணம் எதற்கு என்பதுதான்.


சரிதான்!!!


நன்றாக வண்டி ஓட்ட தெரிந்தவனுக்கு, சாலை விதிகளை பின்பற்றுபவனுக்கு அந்த விதிகள் தேவை இல்லை தான். ஆனால் உலகில் எல்லோரும் அப்படி இல்லையே. அதற்காக, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதி வைக்க முடியுமா? அப்படி வைத்தால் அந்த விதிமுறைகளால் என்ன பயன் தான் கிடைக்கும்?

திருமணம் என்பது மனிதனை ஒரு கட்டுகொப்புக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உருவாக்கபட்டது என்பது என் எண்ணம். இன்னார் என்று இல்லாமல் எல்லோருடனும் சேர்ந்து இருக்கும் விலங்குகளில் இருந்து மாறி, தனக்கென்று கோட்பாடுகள், வரையறைகள் வகுத்து மனிதன் வளர்ச்சி அடைந்து இருக்கும் இந்த கால நிலையில் திருமணம் என்பது அவசியம் என்ற எண்ணமே என் மனதில் மேலோங்கி நிற்கிறது!!!!
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.