Saturday, 28 November 2009
கலியுக சிலந்தி மனிதன் (Spider Man)

இவர் மலேசியா வில் தன்னுடைய அடுத்த சாதனையை நிகழ்த்தும்போது காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர் . 88 அடுக்கு மாடி கட்டடத்தை பெட்ரோனாஸ் ட்வின் டவர்-ஐ (Petronas Twin tower) ஒரு மணி 45 நிமிடங்களில் ஏறி இருக்கிறார்.
Tuesday, 13 October 2009
பதினாறும் பெற்று........

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேல் சாக் (Dale Chalk, 31), தாரன் (Darren ) தம்பதியினர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்று இரு முறை சாதனை புரிந்த பிறகு மூன்றாம் முறையாக ஒரே பிரசவத்தில் இரட்டையரை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் செயற்கை முறையில் கருத்தரித்ததாக தெரிகிறது.
இவர்களுக்கு இதோடு 11 குழந்தைகள் ஆகிறது. 'எங்களுக்கு இன்னும் வேண்டுமென்று ஆசைதான் ஆனால் இன்னும் பெரிய பேருந்து வாங்க வேண்டியது இருக்கும்' என்று சொல்லியிருக்கின்றனர் இந்த பெற்றோர்.
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க ன்னு சொல்லுவாங்களே.. அதுலே இன்னும் அஞ்சு கொறையுது. அந்த தம்பதிகளை நாமும் வாழ்த்துவோம்!!!
Saturday, 8 August 2009
ATM -ல் பணம் எடுப்பவரா? உஷார்...

ATM அருகில் சிறுவர்கள் விளையாடி கொண்டுருப்பார்கள். நீங்கள் ATM-ல் இருந்து பணம் எடுத்துகிட்டு வரும் போது, ஒரு சிறுவன், ஒன்றும் தெரியாது போல, தண்ணியை உங்கள் டிரஸ் மேல பீச்சி அடிப்பான்.... உடனேயே, இன்னொரு சிறுவன் ஓடி வந்து, 'சார் உங்க டிரஸ் அழுக்கா போச்சு சார், நான் துடைச்சி விடுகிறேன்' இன்னு சொல்லி சுத்தம் செய்ய (நடிக்க), இன்னொருவன் உங்க சட்டை பையில் இருந்த பணத்தை சுட்டு விட்டு ஓடி விடுகிறான்...
15 முதல் 20 வயது உள்ள இளம் சிறுவர்கள் இந்த திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றும் ATM -ல் பணம் எடுப்பர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் போலீஸ் எச்சரித்துள்ளது...
அடுத்தடுத்து சில சம்பவங்கள், இது போன்று ஆந்திரா எல்லை ஓரத்தில் நடந்துள்ளது.... உஷார் மாம்ஸ்.... ... உஷார் ...

Friday, 7 August 2009
விமானத்தில் முதலை!! கதையல்ல நிஜம்!!

Thursday, 23 July 2009
ஆட்டோகிராப் பட ஸ்டைல் பிறந்த நாள் விழா...

ஆட்டோகிராப் -இல் சேரன் தன் திருமணத்திற்கு மூன்று முன்னாள் காதலிகளை தான் அழைத்திருந்தார். அதுவும் திரைப்படத்தில் தான்.
ஆனால் கேமரா இல்லாத நிஜ வாழ்வில் ஒருவர் தன் பிறந்த நாளை தன் 17 முன்னாள் காதலிகளுடன் கொண்டாடவிருக்கிறார். என்ன.. நம்ப முடியவில்லையா?
உண்மைதான்.. அவர் வேறு யாருமில்லை... 'X Factor' இல் நடுவரான 'சைமன் கோவேல்' (Simon Cowell). இந்த வார இறுதியில் அவருக்கு 50 வது பிறந்த நாள் விழா ஒன்றை அவரது முன்னாள் காதலி ஜக்கீ (Jackie) ஏற்பாடு செய்திருக்கிறார். விழாவிற்கு அவரது 17 முன்னாள் காதலிகளும் வரவிருக்கிறார்கள்.
இது இன்னும் சைமன்க்கு தெரியாது. அவரது உண்மையான பிறந்த நாள் அக்டோபெர் தான். ஜாக்கீ தன் பிறந்த நாள் விழா என்று சொல்லி சைமன் ஐ அழைத்திருக்கிறார். இது தெரியாத சைமன் உம் ஜக்கீ க்கு பெரிய அன்பளிப்பு கொடுக்க போகிறாராம்.
17 முன்னாள் காதலிகளை ஒரே இடத்தில் சந்திப்பது பிரச்சனையாகாதா என்றால்.. அவர் சமாளித்து கொள்வார், அவருக்கு இன்னும் எல்லோருடனும் நல்ல நட்பு இருக்கிறது என்கிறார்கள்...
ஹ்ம்ம்...
மனுஷன் பெரிய ஆளா இருப்பார் போலன்னு எல்லாரும் பெருமூச்சி விடறது கேக்குது... :)