Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts
Saturday, 18 June 2011
வீட்டு வசதிக் கடன் வட்டி மீண்டும் உயரும்!!
Posted by மௌனமான நேரம் | Saturday, 18 June 2011 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வங்கிகள் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனால்,வீட்டு வசதிக் கடன் பெற்றவர்களின் வட்டிச் சுமை உயரும் என்பதோடு, மாதத் தவணைக் காலமும் அதிகரிக்கும். சென்ற மே மாதத்தில், மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பணவீக்கம், 9.06 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், பணப்புழக்கத்தை குறைத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறைந்த கால கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தி, 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டிவிகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், இதுவரையிலுமாக, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 10 முறை உயர்த்தியுள்ளது. சென்ற மே மாதம் 3ம் தேதி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை 0.50சதவீதம் உயர்த்தியது. இதையடுத்து, 45 வங்கிகள், அவற்றின் பலதரப்பட்ட கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் முதல் ஒருசதவீதம் வரை உயர்த்தின. இதனால் இவ்வங்கிகளிடம் இருந்து வீட்டு வசதி, வாகனம், தனி நபர் கடன்களைப் பெற்றவர்களின் வட்டிச் ”மை அதிகரித்தது.இந்நிலையில், ஒன்றரை மாதத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும், வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளதால், வங்கிகளும் அவற்றின் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வரும் ஜூலை மாதம், இந்த வட்டி உயர்வு இருக்கும் என்று தெரிகிறது. இந்த வட்டி உயர்வால், வீட்டு வசதி கடன் பெற்றவர்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில், வீட்டு வசதிக் கடனுக்கான வட்டி விகிதம் 2 சதவீதம் அதிகரித்து, 8சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. வட்டிச் செலவு கூடியதால், கடனை திரும்ப செலுத்தும் மாதாந்திர தவணைக் காலம் அதிகரித்துள்ளது.இந்த பாதிப்பில் இருந்து கடனாளிகள் மீள்வதற்குள், பேரிடியாக, மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் செய்தி வெளியாகியுள்ளது. அதுபோன்று, புதிதாக வீட்டு வசதிக் கடன் பெறுவோர், வட்டி விகித உயர்வால், மாதத் தவணையாக கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.இதே போல் வாகனக் கடன் பெறுவோரின் வட்டிச் ”மையும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வாகனக் கடன் வாங்கியவர்கள், நிலையான வட்டி விகிதத்தை தேர்வு செய்திருந்தால், அவர்களின் மாதாந்திர தவணைத் தொகையில் மாற்றம் ஏதும் இருக்காது.
ஆனால்,மாறுபடும் வட்டி விகிதத்தை தேர்வு செய்தவர்களின் மாத தவணைத் தொகையோ அல்லது தவணைக் காலமோ அதிகரிக்கும்.வங்கிகள், கடனுக்கான வட்டியை உயர்த்தும் போது, டிபாசிட்டுகளுக்கான வட்டியையும் உயர்த்தும். இது, வங்கிகளில் குறித்த கால வைப்பு நிதியில் முதலீடு செய்வோருக்கு கூடுதல் வருவாயை வழங்கும். குறிப்பாக, ஓராண்டிற்கும் குறைவான முதலீட்டு திட்டங்களில் அதிக வருவாய் கிடைக்கும்.அதுபோல், இந்த வட்டி உயர்வால், மிகக் குறுகிய கால கடன் பத்திரங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் மீதான வருவாயும் அதிகரிக்கும். வட்டி உயரும் போது, குறுகிய கால முதலீட்டு திட்டங்களில் இருந்து வேறு திட்டங்களுக்கு மாறிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.பேங்க் ஆப் பரோடா, எல்.ஐ.சி.ஹவுசிங் பைனான்ஸ் ஆகியவை மிகக் குறைந்த வட்டியில் வீட்டு வசதிக் கடன்களை வழங்குகின்றன. இவை, மாறுபடும் வட்டி திட்டத்தின் கீழ், ஒரு லட்ச ரூபாய்க்கு 8.5சதவீத வட்டியில், மாதம் 2,052 ரூபாய் வீதம் 5 ஆண்டிற்கான வீட்டு வசதிக் கடன்களை வழங்குகின்றன.
எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், நிலையான வட்டி திட்டத்தின் கீழ் வழங்கும் வீட்டு வசதிக் கடனுக்கு, குறைந்தபட்சமாக 8.90சதவீத வட்டியை நிர்ணயித்துள்ளது.10 ஆண்டுகளுக்கான இந்த வட்டி விகித திட்டம், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்ட மாறுதலுக்கான வசதியைக் கொண்டது. பேங்க் ஆப் பரோடா, இதே திட்டத்தின் கீழ், ஒரு லட்ச ரூபாய்க்கு 9.50 சதவீத வட்டியில், மாதம் 2,101 ரூபாய் வீதம் 5 ஆண்டிற்கான வீட்டு வசதிக் கடன்களை வழங்குகிறது.எச்.டீ.எப்.சி நிறுவனம், 1 லட்ச ரூபாய் வீட்டு வசதிக் கடனுக்கு, மாறுபடும் வட்டி விகித திட்டத்தின் கீழ் 9.25 சதவீதமும்(20 லட்ச ரூபாய் வரை), நிலையான வட்டி திட்டத்தில் 11.50 சதவீதமாகவும் வட்டியை நிர்ணயித்துள்ளது.
நாட்டின் பணவீக்கம் மேலும் உயரும் நிலையில், ரிசர்வ் வங்கி, மீண்டும் வங்கிகளுக்கான வட்டியை உயர்த்தினால், வீடு மற்றும் வாகனக் கடன் வாங்குவோரை வீதிக்கு கொண்டு வந்து விடும் என வங்கி வாடிக்கையாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்தனர்..
Friday, 8 October 2010
பூனைக்கு மணி கட்ட போவது யார்? - தொடர்ச்சி ...
Posted by மௌனமான நேரம் | Friday, 8 October 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்
19, ஆகஸ்ட் 2009 - இல் "பூனைக்கு மணி கட்ட போவது யார்? " என்ற தலைப்பில் மேற்கத்திய நாடுகளின் விமான நிலையங்களில் இந்திய வி.ஐ.பிகள் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவமானப்படுத்தப்படுவது குறித்து எழுதினோம்...
ஒன்று, உலக வி.ஐ.பிகள் பட்டியல் எடுத்து, எல்லா வி.ஐ.பிகளும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்...இல்லை, எல்லோரும் சமம்.. என்று எல்லா வி.ஐ.பிகளும் மக்களோடு மக்களாக சோதனைக்கு உட்படுத்தவேண்டும்..
மத்திய விமானப் போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல், கனடா நாட்டின் தலைநகர் மாண்ட்ரில் நகருக்கு அரசுமுறை பயணமாக கடந்த திங்கட்கிழமை சென்றார். வழியில் தனது சொந்த வேலையாக அமெரிக்காவின் சிகாகோ நகர் விமான நிலையத்தில் அன்று இரவு இறங்கினார்.
அமெரிக்க உளவுத்துறை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு அளித்துள்ள சந்தேகத்துக்கிடமான நபர்களின் பெயர் பட்டியலில் பிரபுல் படேல் என்பவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. அந்த நபரின் பிறந்த தேதியும், மந்திரி பிரபுல் படேலின் பிறந்த தேதியும் ஒரே தேதியாக இருந்தது. இதனால், மத்திய மந்திரி பிரபுல் படேல்தான், பட்டியலில் உள்ள சந்தேகத்துக்கிடமான நபர் என்று கருதி, விமான நிலையத்தில் இருந்த குடியுரிமை அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.
அவரிடம் குடியுரிமை அதிகாரிகள், துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். ``அமெரிக்காவுக்கு என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்? இதற்கு முன்பு அமெரிக்காவில் தங்கி இருக்கிறீர்களா?'' என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டனர்.
அதற்கு, பிரபுல் படேல், தான் இந்திய விமானப் போக்குவரத்துறை மந்திரி என்றும், கனடா செல்லும் வழியில் சொந்த வேலையாக இங்கு இறங்கினேன் என்றும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் கேட்கவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதுடன், அவரது உடைமைகளையும் சோதனையிட்டனர்.
அதற்குள், விமான நிலையத்தில் மந்திரி பிரபுல் படேல் தடுத்து நிறுத்தப்பட்ட தகவல் அறிந்த இந்திய தூதரக அதிகாரிகள், உடனடியாக அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலவரத்தை எடுத்து சொன்னார்கள். அதன் பின்னரே பிரபுல் படேலை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் விடுவித்தனர். ஆனாலும், இந்த சம்பவம் காரணமாக பிரபுல் படேல் சுமார் 2 மணி நேரம் சிகாகோ விமான நிலையத்தில் பரிதவித்தார்.
இது பற்றிய தகவல் அறிந்த அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி ஜேனெட் நபோலிடானோ, மத்திய மந்திரி பிரபுல் படேலிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். எதிர் காலத்தில் இது போன்ற தவறுகள், குளறுபடிகள் நடக்காமல் தடுக்கும் வண்ணம் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
ஆனால், மத்திய மந்திரி பிரபுல் படேல் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. விமான நிலையங்களில் இவ்வாறு நிறுத்தப்படுவதும், சோதனையிடுவதும், விசாரணை நடத்தப்படுவதும் வழக்கமான நடைமுறைகள்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"நான் மாண்ட்ரீல் நகரில் இருக்கிறேன். எனது பெயர், எனது பிறந்த தேதியில் இன்னொருவர் பெயரும், பிறந்த தேதியும் இருந்ததால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டது. அதனால் அமெரிக்க அதிகாரிகள் சோதனை நடத்தி, விசாரணை நடத்த வேண்டியதாயிற்று. பதற்றப்படும் அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை. ஆகவே இந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை'' என்று பிரபுல் படேல் கூறினார்.
Source: தினதந்தி
இதற்காக அவரிடம் அமெரிக்க மந்திரி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இது பற்றி பேச போனால், எல்லாருடைய பாதுகாப்புக்கு என்று தான் இதை செய்தோம், இல்லை நாங்கள் செய்கிறோம் என்று எல்லோரும் சப்பை கட்டு கட்டுவார்கள்...
இது போன்ற கசப்பான சம்பவம் ஒரு அமெரிக்க வி.ஐ.பிக்கோ, மேற்கத்திய நாட்டு வி.ஐ.பிக்கோ நடந்து இருந்தால், என்ன ஆகி இருக்கும்?
ஒன்று, உலக வி.ஐ.பிகள் பட்டியல் எடுத்து, எல்லா வி.ஐ.பிகளும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்...இல்லை, எல்லோரும் சமம்.. என்று எல்லா வி.ஐ.பிகளும் மக்களோடு மக்களாக சோதனைக்கு உட்படுத்தவேண்டும்..
இந்த முடிவு உலகளாவிய அளவில் இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்...
Saturday, 6 February 2010
குடிமகன் பற்றிய முழு விவரங்கள் சேகரிக்க புதிய திட்டம்!
Posted by மௌனமான நேரம் | Saturday, 6 February 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரிப்பதற்காக, நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு அடையாள எண் அட்டை வழங்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தால் வழங்கப்படும் அட்டையில், ஒவ்வொரு குடிமகனின் பிறந்த தேதி, அவரின் கல்வித் தகுதி உட்பட அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நவீன தொழில் நுட்ப வசதிகளை, தங்களின் சதித் திட்டங்களுக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால், சிறப்பு அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தால் திரட்டப்படும் தகவல்கள், உள்நாட்டு பாதுகாப்புக்கு போதுமானதாக இருக்காது என, அரசு கருதுகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் வங்கி கணக்கு, காப்பீடு, நிலம், டெலிபோன் இணைப்பு, வீடு உள்ளிட்ட முக்கிய தகவல்களை திரட்ட, அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் ஏஜன்சிகள் மூலம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டு, தேசிய புலனாய்வு தொகுப்பின் கட்டுப் பாட்டில் வைக்கப்படும். புலனாய்வு அமைப்பு, ரா, ராணுவ புலனாய்வு,வருவாய் புலனாய்வு, தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட 11 ஏஜன்சிகளுக்கு மட்டுமே, இந்த தகவல்களை பெறும் வசதி கிடைக்கும். இந்த தகவல்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, மேற்கண்ட ஏஜன்சிகள், தங்களுக்குள் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ளும். ஒருவரைப் பற்றிய தகவல்கள் வேண்டுமெனில், அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாக பெறுவதற்கு வசதியாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக செயல்படும் ஏஜன்சிகளுக்கு இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும்.
இதுபற்றிய ரகசியங்கள் வெளியில் கசிந்து விடாமல் இருப்பதற்கு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மகிந்திரா சிறப்பு பணிகள் குழுமத்தில் பணியாற்றிய கேப்டன் ரகுராமன், இந்த பணிகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து விவரங்களும் திரட்டப்பட்டு, தேசிய புலனாய்வு தொகுப்புடன் அவை இணைக்கப்படும். ரயில்வே, ஏர்- இந்தியா, வருமான வரித்துறை, மாநில போலீசார் உள்ளிட்ட அரசு துறைகளும், வங்கி, காப்பீடு, தொலைத் தொடர்பு, உள்ளிட்ட தனியார் துறைகளும், தகவல் களை அளிக்கும் விஷயத்தில் இணைந்து செயல்படும்.
இத்திட்டம் அமலுக்கு வந்தால், குடிமக்களில் யாராவது ஒருவர் புதிதாக நிலம் வாங்கினாலோ, வங்கி கணக்கு துவங்கினாலோ அல்லது தங்கள் பெயரில் காப்பீடு எடுத்தாலோ, அதுபற்றிய விவரங்கள் அடுத்த நிமிடமே, அரசுக்கு தெரிந்து, கண்காணிப்புக்கு வந்து விடும். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக, இத்திட்டம் காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்தபின், இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி தினமலர்!
Wednesday, 3 February 2010
இலவச உதவி!!
Posted by மௌனமான நேரம் | Wednesday, 3 February 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

இதன் மூலம் ஒருவரேனும் பயன் அடைந்தால், எங்களுக்கு மகிழ்ச்சி!!
ஜேர்மன் நாட்டு மருத்துவ குழு ஒன்று கொடைக்கானலுக்கு வருகை தருகிறது. இவர்கள் பாசம் மருத்துவமனையுடன் சேர்ந்து தீ விபத்து அல்லது பிறவி குறைபாடு (காது, மூக்கு மற்றும் தொண்டை) உள்ளவர்களுக்கு என ஒரு இலவச மருத்துவ முகாம் நடத்த உள்ளது. இதில் பிளாஸ்டிக் சர்ஜெரியும் உள்ளடக்கம்...
இது ஒரு முற்றிலும் இலவசம்!!!
இடம்: பாசம் மருத்துவமனை, கொடைக்கானல்
தேதி: 23-மார்ச்-2010 முதல் 04-ஏப்ரல்-2010
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: 04542-240668, 245732
இ-மெயில்: pasam.vision@gmail.com
http://www.thehindu.com/2009/01/11/stories/2009011151570300.htm
Monday, 1 February 2010
ஜோக் புரியுதா?
Posted by மௌனமான நேரம் | Monday, 1 February 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

அதே சமயம் பெண்கள் எல்லா ஜோக்குகளையும் நன்கு ரசித்து சிரிக்கிறார்கள், ஆண்கள் லேசாகச் சிரித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது. ஜோக்குகளைப் படிக்கும்போதும் கேட்கும்போதும் அவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக இருக்கின்றனர். ஜோக்கு சொல்லி முடித்த பிறகே அதன் தன்மை உணர்ந்து சிரிக்கின்றனர். ஆனால் அந்தச் சிரிப்பு முழுமையாக இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் நினைத்து நினைத்தும் சிரிக்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)