மௌனமான நேரம்

 

Saturday 18 June 2011

வீட்டு வசதிக் கடன் வட்டி மீண்டும் உயரும்!!

Posted by மௌனமான நேரம் | Saturday 18 June 2011 | Category: |
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வங்கிகள் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனால்,வீட்டு வசதிக் கடன் பெற்றவர்களின் வட்டிச் சுமை உயரும் என்பதோடு, மாதத் தவணைக் காலமும் அதிகரிக்கும். சென்ற மே மாதத்தில், மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பணவீக்கம், 9.06 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், பணப்புழக்கத்தை குறைத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறைந்த கால கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தி, 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டிவிகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், இதுவரையிலுமாக, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 10 முறை உயர்த்தியுள்ளது. சென்ற மே மாதம் 3ம் தேதி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை 0.50சதவீதம் உயர்த்தியது. இதையடுத்து, 45 வங்கிகள், அவற்றின் பலதரப்பட்ட கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் முதல் ஒருசதவீதம் வரை உயர்த்தின. இதனால் இவ்வங்கிகளிடம் இருந்து வீட்டு வசதி, வாகனம், தனி நபர் கடன்களைப் பெற்றவர்களின் வட்டிச் ”மை அதிகரித்தது.இந்நிலையில், ஒன்றரை மாதத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும், வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளதால், வங்கிகளும் அவற்றின் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வரும் ஜூலை மாதம், இந்த வட்டி உயர்வு இருக்கும் என்று தெரிகிறது. இந்த வட்டி உயர்வால், வீட்டு வசதி கடன் பெற்றவர்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில், வீட்டு வசதிக் கடனுக்கான வட்டி விகிதம் 2 சதவீதம் அதிகரித்து, 8சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. வட்டிச் செலவு கூடியதால், கடனை திரும்ப செலுத்தும் மாதாந்திர தவணைக் காலம் அதிகரித்துள்ளது.இந்த பாதிப்பில் இருந்து கடனாளிகள் மீள்வதற்குள், பேரிடியாக, மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் செய்தி வெளியாகியுள்ளது. அதுபோன்று, புதிதாக வீட்டு வசதிக் கடன் பெறுவோர், வட்டி விகித உயர்வால், மாதத் தவணையாக கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.இதே போல் வாகனக் கடன் பெறுவோரின் வட்டிச் ”மையும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வாகனக் கடன் வாங்கியவர்கள், நிலையான வட்டி விகிதத்தை தேர்வு செய்திருந்தால், அவர்களின் மாதாந்திர தவணைத் தொகையில் மாற்றம் ஏதும் இருக்காது.

ஆனால்,மாறுபடும் வட்டி விகிதத்தை தேர்வு செய்தவர்களின் மாத தவணைத் தொகையோ அல்லது தவணைக் காலமோ அதிகரிக்கும்.வங்கிகள், கடனுக்கான வட்டியை உயர்த்தும் போது, டிபாசிட்டுகளுக்கான வட்டியையும் உயர்த்தும். இது, வங்கிகளில் குறித்த கால வைப்பு நிதியில் முதலீடு செய்வோருக்கு கூடுதல் வருவாயை வழங்கும். குறிப்பாக, ஓராண்டிற்கும் குறைவான முதலீட்டு திட்டங்களில் அதிக வருவாய் கிடைக்கும்.அதுபோல், இந்த வட்டி உயர்வால், மிகக் குறுகிய கால கடன் பத்திரங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் மீதான வருவாயும் அதிகரிக்கும். வட்டி உயரும் போது, குறுகிய கால முதலீட்டு திட்டங்களில் இருந்து வேறு திட்டங்களுக்கு மாறிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.பேங்க் ஆப் பரோடா, எல்.ஐ.சி.ஹவுசிங் பைனான்ஸ் ஆகியவை மிகக் குறைந்த வட்டியில் வீட்டு வசதிக் கடன்களை வழங்குகின்றன. இவை, மாறுபடும் வட்டி திட்டத்தின் கீழ், ஒரு லட்ச ரூபாய்க்கு 8.5சதவீத வட்டியில், மாதம் 2,052 ரூபாய் வீதம் 5 ஆண்டிற்கான வீட்டு வசதிக் கடன்களை வழங்குகின்றன.

எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், நிலையான வட்டி திட்டத்தின் கீழ் வழங்கும் வீட்டு வசதிக் கடனுக்கு, குறைந்தபட்சமாக 8.90சதவீத வட்டியை நிர்ணயித்துள்ளது.10 ஆண்டுகளுக்கான இந்த வட்டி விகித திட்டம், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்ட மாறுதலுக்கான வசதியைக் கொண்டது. பேங்க் ஆப் பரோடா, இதே திட்டத்தின் கீழ், ஒரு லட்ச ரூபாய்க்கு 9.50 சதவீத வட்டியில், மாதம் 2,101 ரூபாய் வீதம் 5 ஆண்டிற்கான வீட்டு வசதிக் கடன்களை வழங்குகிறது.எச்.டீ.எப்.சி நிறுவனம், 1 லட்ச ரூபாய் வீட்டு வசதிக் கடனுக்கு, மாறுபடும் வட்டி விகித திட்டத்தின் கீழ் 9.25 சதவீதமும்(20 லட்ச ரூபாய் வரை), நிலையான வட்டி திட்டத்தில் 11.50 சதவீதமாகவும் வட்டியை நிர்ணயித்துள்ளது.

நாட்டின் பணவீக்கம் மேலும் உயரும் நிலையில், ரிசர்வ் வங்கி, மீண்டும் வங்கிகளுக்கான வட்டியை உயர்த்தினால், வீடு மற்றும் வாகனக் கடன் வாங்குவோரை வீதிக்கு கொண்டு வந்து விடும் என வங்கி வாடிக்கையாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்தனர்..
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.