Friday, 29 May 2009
நானும் என் discipline -உம்
கொஞ்ச நாளுக்கு முன்னால் ஒரு கட்டுரை படிச்சேன். இந்தியர்கள் சிங்கப்பூர் லே இருக்கும் பொது disciplinedஆ இருக்காங்க... இங்கிலாந்து லே இருக்கும் பொது disciplined ஆ இருக்காங்க.. ஆனா இந்தியாவிலே இருக்கும் போது மட்டும் disciplined ஆ இருக்க மாட்டேங்கறாங்க அப்படின்னு ரொம்ப சாடி இருந்தாங்க.
அத படிச்சா உடனே, அதெப்படி அவங்க இப்படி சொல்லலாம்.. நமக்கு இல்லாத discipline-ஆ ... இனி implement பண்ணிட வேண்டிய்து தான் அப்படின்னு ஒரு மெகா முடிவு எடுத்து, எங்கேடா ஆரம்பிக்கலாம் னு மண்டைய சொரிஞ்சிட்டு இருக்கும் போது ஆண்டவனா பாத்து ஒரு வழி ஏற்படுத்தி குடுத்தான்..
என்னோட atm கார்டு inactive ஆயிடிச்சி. சரி பக்கத்துலே தானே பேங்க் இருக்கு நேரா போய் பணம் எடுத்துக்கலாம்னு உள்ள போனேன். withdrawals section தனியா இருக்குன்னு reception லே சொன்னாங்க. சரின்னு வித்ட்ராவல் ஸ்லிப் fill பண்ணி எடுத்துட்டு கியூ லே போய் நின்னேன்
ஒருத்தர் படு வேகமா வந்தார்.. வந்து அப்படியே முன்னே முன்னேறி சென்றார். என்னை கியூ லே பின்னுக்கு தள்ளிட்டு அவர் வேலைய முடிச்சிட்டு போய்ட்டார் .. நம்ம முண்டி அடிச்சிட்டு போனா நம்ம discipline என்னாகரதுன்னு நானும் கியூ லேயே நின்னேன்.
அடுத்தது இன்னொருத்தர் வந்தார். அடிச்சு பிடிச்சு முன்னாடி போய் வேலைய முடிச்சிட்டு போய்ட்டார். மொத்தத்துலே யாருமே கியூ பத்தி யோசிக்கவே இல்லை.. இது கொஞ்ச நேரம் நடந்துட்டே இருந்துது.. நான் கொஞ்சம் கடுப்பாக ஆரம்பித்திருந்தாலும்.. ஒரு முடிவோட முன் வச்ச கால பின் வைகரதில்லைன்னு இருந்தேன்.
இப்படியே கொஞ்ச நேரம் போச்சி. counter லே இருந்த அம்மா என்னபார்த்துகிட்டே இருந்தாங்க.. நமக்கு ஒரே பெருமை. என்ன ஒரு discipline ன்னு அந்த அம்மா பாக்றாங்க போலன்னு.
இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி அந்த அம்மா என்ன கூப்பிட்டாங்க..
'என்னங்க... இப்படி கொஞ்சம் முன்னாடி வாங்க. நானும் ரொம்ப நேரமா பாக்றேன்.. இப்படி பேக்கு மாதிரி நின்னுட்டே இருந்தா நீங்க அங்கேயே தான் நிக்கணும். நாங்க பேங்க் அ பூட்டிக்கிட்டு போற வரை. வந்தோமா வேலைய முடிச்சோமா போனோமான்னு கொஞ்சம் சாமர்த்தியமா இருக்க வேண்டாம். '..
நான் அசடு வழிந்து கொண்டே பொய் withdrawal ஸ்லிப் ஐ நீட்டினேன்.
'என்னங்க கியூ லே நின்னு பழக்கம் இல்லையோ?' .
'ஆமாங்க நான் இருக்கிற இடத்துலே எல்லாம் கியூ ல் வரிசையா தன் போகணும்'.
' அது எந்த ஊரப்பா அது?'
'லண்டன்'.
'அதெல்லாம் இங்க ஒத்து வராதுங்க.. பொழைக்கிற வழிய பாருங்க'.
ஹி.. ஹீ.. என்று மழுப்பிக்கிட்டு வெளியே வந்தேன்...
அடங்கொப்புரானே... நான் discipline-ஆ இருக்கலாம்னு பாத்தா.. பொழைக்க தெரியா புள்ளைன்னுட்டாங்களே!!!
Wednesday, 27 May 2009
பொன்னி அவன் மாமன் மகள். அவன் கண்ணுக்கு ஒரு பேரழகி. நிறைய கனவு கண்டு, டூயட் பாடி, மறைந்திருந்து பார்த்து, சொல்ல போய் மறந்து, கடைசியில் ஒரு வழியாக சொல்லி விட்டான். பொன்னி சொன்னாள் ' நான் இன்னும் நிறைய படிக்கணும் ஆதவா! '
இரண்டாம் முறை 2 வருடங்களுக்கு முன் நடந்தது!
செல்வி அவனுடன் படித்தவள். அவன் கண்ணுக்கு உலக அழகி. தத்தி தடுமாறி அப்படி இப்படியென்று கடைசியில் சொல்லி விட்டான். செல்வி சொன்னாள், 'சாரி ஆதவா! நான் என் அத்தை பையனை லவ் பண்ணறேன்.'
ஷாலினி யை 5 மாதங்களாக அவனுக்கு தெரியும். நல்ல நண்பர்கள். அவனுடைய பழைய காதல் பற்றி கூட சொல்லியிருக்கிறான்.நல்ல வேலை பொன்னியும் செல்வியும் அழகு என்று ஏமாந்து போகவில்லை என்று கூட கிண்டல் பண்ணியிருக்கிறான். உண்மை தான் இப்போஅவர்கள் எல்லாம் அவனுக்கு அழகாக தோன்ற வில்லை.
அது போகட்டும். பழக பழக ஷாலினியை பிடித்து போனதும், அவள் இல்லாமல் வாழ முடியாது என்பதையும் அவளிடம் சொல்லி விட வேண்டும்
ஷாலினி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் முகமெல்லாம் சந்தோசம்.
ஆதவன்: ஷாலினி! உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.
ஷாலினி: சொல்லேன்.
ஆ: நான்... ம்ம்ம் வந்து... நான்...
ஷா:நீ ஏற்கனவே வந்துட்டியே!
ஆ: அதில்லை .. நான் சொல்லணும்.
ஷா: சொல்லணும்ங்கரத தவிர வேற எதாவது சொல்லணுமா :)
ஆ: அது.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்..
ஷா: (அமைதியாக பார்த்து..) இப்போ தான் அப்பா போன் பண்ணினாங்க. கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டாங்களாம் .என் இஷ்டப்படியே சதிஷ் கூட கல்யாணம்.
ஆ: ஒ.. ஆல் தி பெஸ்ட்! பை !
ஆதவன் பயணம் தொடரும்....
Friday, 22 May 2009
பிரபாகரா - நீ நல்லவனா கெட்டவனா?
கண்டிப்பாக வன்முறை எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான தீர்வு இல்லை என்பது உண்மைதான். அன்பை விட சிறந்த ஒரு ஆயுதம் வேறு ஒன்றுமில்லை என்பதும் உண்மை தான். ஆனால் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்! உங்கள் குழந்தையை உங்கள் கண் முன்னே ஒரு மிருகம் சூறையாட வருகிறது என்றால், நீங்கள் அன்பாலே அந்த மிருகத்தை அடக்க வேண்டும் என்று நினைபீர்களா அல்லது உங்கள் குழந்தையை காப்பற்ற வேண்டும் என்று நினைபீர்களா?
நான் பிரபாகரன் நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ கூற வரவில்லை. ஆனால் எந்த ஒரு மனிதனும், அவன் எந்த நாடு , மதம் ,மொழி, இனத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் தன் தன்மானம் ஒன்றை காப்பற்ற வேண்டும் என்று கண்டிப்பாக நினைப்பான்.தனக்கோ, தன்னை சார்ந்தவர்களுக்கோ இழிவு ஏற்பட்டால் கண்டிப்பாக எதிர்த்து போராடுவான்- அது அஹிம்சை முறையோ அல்லது வன்முறையோ!
தீவிரவாதத்தை ஒழிக்க , அமெரிக்கா ஈராக்-உடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவா நினைத்தது? இல்லையே ! ஆயுதத்தை தானே எடுத்தது ! இதனை ஏற்று கொண்ட உலகம் ,தங்கள் உயிரையும் உடமையையும் காப்பற்றி கொள்ள பிரபாகரனும் ஈழ தமிழர்களும் ஆயுதம் ஏந்தியதை ஏன் ஏற்று கொள்ள மறுக்கிறது.ஒரு நாட்டில் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள், வாழ்வின் அடிப்படை தேவைகள் மறுக்கப்பட்டு, அடக்கப்பட்டு வேதனைப்படுகிறார்கள் என்பதை தெரிந்த உலக நாடுகள், தாங்கள் தலையிட்டு சுமுக முடிவு கொண்டு வர முயற்சித்திருந்தால் ஒரு வேளை இப்பாடி ஒரு போராட்டமோ, போராளி கும்பலோ உருவாகாமல் இருந்திருக்கலாம்.வேறு யாருமே உதவாத நிலையில், தங்களை காப்பாற்றி கொள்ள வேறு வழியில்லாமல் ஆயுதம் ஏந்தியவர்களை, தன் உயிரை மட்டும் கொடுத்து பிற பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தவர்களை உலகின் 32 நாடுகள் தீவிரவாதிகள் என்று அறிவித்தது நியாயமா? அவர்களுடைய பிரச்சனை என்ன என்றே தெரியாமல் , தெரிந்து கொள்ள விரும்பாமல், அவர்கள் செய்வது தவறு என்று மட்டும் சொல்வது சரியா? அவர்கள் ஆயுதம் எடுத்தது தவறு என்றால், அந்த தவறுக்கு உலக நாடுகள் எல்லாமும், எல்லா மனிதர்களும் பொறுப்பாவோம்.
எங்கோ யாரோ சாகிறார்கள் நமக்கென்ன என்று இல்லாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு கூட்டம் இல்லமே போயிருக்கும். இத்தனை சாவுகள் நடக்காமலே இருந்திருக்கும். சாவது எந்த பக்க மனிதனாயிருந்தாலும் அதுவும் ஒரு உயிர் தான் . இது வரையும் தலையிடாமல் ,உண்மை நிலை அறியாமல்,இப்பொழுதும் அவன் தீவிரவாதிதான் என்று அலசி ஆராயாமல் முடிவு செய்து , பல மனிதர்கள் அடிமையாகவே வாழ்வு நடத்த அனுமதிக்க போகிறோமா??
ஒரு வேளை பிரபாகரன் கெட்டவனாக கூட இருக்கலாம். ஆனால் அவனது குறி்கோள் விடுதலை.. அடிமை தளத்திலிருந்து விடுதலை. அடிமைத்தனம் என்றால் என்னவென்று அதனை அனுபவிக்காத நமக்கு புரியாதுதான் ..ஆனால் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாமா? தமிழனோ , சிங்களனோ ,ஸ்ரீலங்காவில் இருப்பவனும் மனிதன் தான், நம் எல்லோரையும் போல விடுதலையை சவாசிக்க ஆசைப்படும் ஒரு உயிர்தான்.
அரசியலுக்க்காகவும், தனி மனித லாபத்திற்காகவும் ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சனையை உபயோக படுத்துவதை விட்டு விட்டு, நம் சக மனிதர்களின் பிரச்சனை என்று உணர்ந்து, அங்கு நடக்கும் உண்மை நிகழ்வுகளை ஆராய்ந்து, தமிழனும சிங்களனும் அமைதியாக வாழ நாம் வழி ஏற்படுத்த முயல வேண்டும்.
இதை யோசிக்க தமிழனாக தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.. மனிதனாக யோசித்தாலே போதும்..
Friday, 8 May 2009
கடவுளுக்கு ஒரு கடிதம்! - 1
நான் இங்கு நலமில்லை. நீ அங்கு நலமாக இருப்பாய் என்று நினைக்கிறேன்.
இங்கு உன் பெயரில் ஒரு பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. சிலர் நீ இந்து என்றும் , சிலர் நீ முஸ்லீம் என்றும், வேறு சிலர் நீ கிறிஸ்தவன் என்றும், மற்றும் பலர் நீ வேறு பிற மதத்தை சேர்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். இதனால் பல வாதங்களும், குழப்பங்களும், பிரச்சனைகளும், வெட்டு குத்து என்று கொலைகளும், கொடுமைகளும் கூட நடக்கின்றன.
ஒவ்வொருவரும் நீ தன் மதத்தை சேர்ந்தவன் என்று நிரூபிப்பதற்காக நீ வேறு மதக்காரன் என்று நம்புவனை அழிக்க பார்கிறார். அவர்கள் ஆக்கியதையும் அழிக்க பார்கிறார். நீ ஒரே ஒரு முறை வந்து நீ எந்த மதம் என்று சொல்லி விட்டால், இந்த பிரச்சனை தீர்ந்து விடும். அதனால் உன்னை வர சொல்வதற்க்காக தான் இந்த கடிதத்தை எழுதினேன்.
ஆனால், இப்போது தோன்றுகிறது, நீ ஒரு வேளை வந்தால், உன்னை இன்னொரு மதக்காரனாக்கி அந்த மதக்காரர்கள் இந்த மதகாரர்களுடன் சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள். அதனால் தயவு செய்து இப்போது நீ இங்கு வருவதாக எதாவது எண்ணம் இருந்தால் மாற்றி கொள்ளவும்.
இங்கு இப்போது இருக்கும் நிலைமையில் உன்னை, கடவுள் என்று தன்னை சொல்லி கொள்ளும் பலருள் ஒருவன் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. அதனால் இப்பொது வராமலிருப்பதே உனக்கு நல்லது!
பி.கு. இன்னும் நினைக்க முடியாத பல கொடுமைகள் இங்கு நடக்கிறது. நீ பத்திரமாக இரு. மற்ற விவரம் அடுத்த மடலில்.
Wednesday, 6 May 2009
திருமணம் காதலின் வெற்றியா தோல்வியா? -1
நல்ல உயரம். அடர்ந்த முடி. துரு துரு கண்கள். எப்போதும் புன்னகை அரும்பிய இதழ்கள். கொஞ்சம் அரவிந்த சாமி கொஞ்சம் மாதவன் கொஞ்சம் ஷாருக் கான் நினைவு படுத்துவான். பேங்க் இல் துணை மேலாளர் பதவி. அம்மா அப்பா தங்கை என்று அழகிய சின்ன குடும்பம். மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு.
அவள்!
அந்த காலத்து ஹேமமாலினி . இதுக்கு மேல விளக்கமே வேண்டாம். செந்தமிழ் பிராமன பெண்.
அவள் பணம் போடவும் எடுக்கவும் வங்கிக்கு வரும்போது அதோடு சேர்த்து மனசையும் போட்டு எடுத்து கொண்டார்கள் ரெண்டு பெரும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா காதல் செடியாகி மரமாகி பூத்து குலுங்க ஆரம்பிச்சிடிச்சி.
எல்லா காதலர்கள் மாதிரியும் தான்.. நீயில்லாமல் நானில்லை.. வாழ்ந்தால் உன்னோடு இல்லையேல் மண்ணோடு... அப்படி இப்படி எல்லாம் வசனம் பேசி பேசி காதலுக்கு நல்ல உரம் போட்டு வளர்த்தார்கள்.
அந்த நாள் இனிய நாள் வந்தது... ரெண்டு பேர் அம்மா அப்பாவும் இவ்வளவு பெரிய பாவம் செய்துட்டாங்களே அப்படின்னு அழுது புரண்டு சண்ட போட்டு.. சினிமா வில்லன்கள் மாதிரி வசனம் எல்லாம் பேசி அவங்களாலே முடிஞ்ச அளவுக்கு நேரடி எதிர்ப்பு தெரிவிச்சாங்க.
நம்ம அவனும் அவளும் ஏற்கனவே காதல் கடலிலே ரொம்ப முழுகி போனதாலே, இந்த எல்லா எதிர்ப்புகளும் தூசு போல தான் தெரிஞ்சுது. எனக்கு நீயும் உனக்கு நானும் இருக்கும் பொது வேற எல்லாரும் எதுக்கு ன்னு அவங்களும் வீர வசனம் எல்லாம் பேசி ஒரு சுபாயோக சுபதினத்தில் நண்பர்கள் நண்பிகள் புடை சூழ கோவிலில் கல்யாணம் முடித்து தனி வீட்டில் குடி புகுந்தார்கள்.
இல்லறம் என்னும் நல்லறம் இனிதே தொடங்கியது!!
செல்லம் செல்லம் என்று கொஞ்சலும்.. கிண்டலும் கேலியும் சிரிப்பும் கும்மாளமுமாக தான் இருந்தது அந்த ஆரம்ப நாட்கள்.
நம்ம விதி தேவன் தான் அவனோட அட்டவணைலே அடுத்த வேலை செய்ய தயாராயிட்டான்.
அவனுக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளத்தோடு வேலை கிடைத்தது. அவனுக்கு அவளை விட்டு செல்ல இஷ்டமே இல்லை தான். அவளுக்கும் தான். அவன் அங்க போய் நல்ல வீடு எல்லாம் பார்த்து விட்டு வந்து கூட்டி போவதாக சொல்லி கிளம்பினான்.
சில பல காரணங்களால் அது முடியவில்லை. இப்படியே கொஞ்ச வருடம் போனது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வருவான். சில நாள் இருந்து விட்டு மன பாரத்தோடு திரும்புவான். அவர்களுக்கு ஒரு அழகு ஆண் குழந்தையும் இன்னும் அழகு பெண் குழந்தையும் பிறந்தது. காரணங்களும் பஞ்சமில்லாமல் வர அவன் அங்கேயும் அவள் குழந்தைகளுடன் இங்கேயுமாக வாழ்க்கை போய் கொண்டிருந்தது. அவள் தனியாக கஷ்டப்பட கூடாது என்று எதாவது தொழில் செய்ய ஆசைப்பட்ட போது சரி என்றான். இந்த வீடு சின்னது பெருசு வேண்டும் என்றாள் வாங்கி கொடுத்தான். தொழில் விரிவு செய்ய பணம் வேண்டும் என்றாள், நிலம் வேண்டும் என்றாள். வாங்கி கொடுத்தான். குடும்பம் பெரிதாகி பொறுப்புகள் அதிகமாக ஆக மூன்று மாதத்திற்குள் ஒரு முறை வருவது மாறி வருடம் ஒரு முறை ஆகி இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஆகியது.
கால தேவன் நில்லாமல் சுற்றி கொண்டே இருந்தான். அவர்களது மகனுக்கு இப்போது பதினைந்து வயது பெண்ணுக்கு பதினான்கு.
அவன் முடிவு செய்து விட்டான். போதும் சம்பாதித்தது. இனி என்னவளுடனும் குழந்தைகளுடனும் தான் வாழ்கை. போதுமான பணம் தான் இருக்கிறதே. வேறு என்ன வேண்டும். அவளுக்கு சொல்லாமல் இன்ப அதிச்சி கொடுக்க முடிவு செய்து வேலையை ராஜினாமா செய்து திரும்பி வந்தான்.
அவள் வந்தாள். இரண்டு வருடத்திற்கு முன் பார்த்தது . ஆனால் இன்னும் முன்னை விட அழகாகத்தான் இருக்கிறாள். இனி எப்பொழுதும் இங்கே என்று நினைக்கவே இனித்தது.
கொண்டு வந்த எல்லா பொருட்களையும் எல்லாருக்கும் கொடுத்து விட்டு அமைதியாக நிம்மதியாக அமர்ந்த பொது அவள் அதே புன்னகையுடன் வந்தாள். தான் சொல்ல போகும் செய்தி கேட்டு அவள் முகத்தில் மகிழ்ச்சி பட்டாசு தெறிக்க பார்க்க ஆசையை இருந்தது அவனுக்கு.
சொன்னான்.
அவள் அவனை பார்த்தாள்.
அவள் முகத்தில் பட்டாசு வெடித்து உண்மை தான் ஆனால் அது மகிழ்ச்சி பட்டாசு இல்லை. கோப பட்டாசு.
அவன் எதிர்பார்க்கவில்லை.
அன்று பல விஷயம் நடந்து முடிந்து விட்டது. அவள் முடிவாக சொல்லி விட்டாள். அவனது சம்பாத்தியம் வீட்டுக்கு அவசியம். அவள் தொழில்க்கு இன்னும் முதலீடு தேவை.
அப்படியானால் அவன் தேவை இல்லையா ? அவன் சம்பாத்தியம் தான் தேவையா? அவன் மனதில் ஆயிரம் கேள்விகள். திடமான முடிவெடுத்தான். இனி திரும்ப வெளிநாடு போவதில்லை என்று. இவ்வளவு நாள் சம்பாதித்தது வைத்து வாழலாம்.
அவள் சொனாள். அந்த பணம் எல்லாம் குடும்பத்துக்காக செலவழிந்து விட்டது.
கொஞ்சம் கூடவா மிச்சம் இல்லை? அவன் அவள் பேரில் வாங்கிய நிலமும், வீடும் நகைகளும் எதுவுமே இல்லையா.
அவன் எதிபார்காத பல திருப்பங்கள் வாழ்க்கையில். வந்து இரண்டு நாட்களில் இனி அவனோடு சேர்ந்து வாழ முடியாது என்று அவள் முடிவு செய்து விவாகரத்து கேட்டாள். குழந்தைகளுக்கும் அம்மா தன் வேண்டுமாம்.
பதினைந்து வருங்களுக்கு முன்னால் அவன் தேடி தேடி திளைத்த காதல் எங்கே?
முழுகி முழுகி முத்தெடுத்த தினங்கள் எங்கே?
சிரிப்பும் சந்தோஷமும் ஆசையும் எங்கே?
நீ என் உயிர் நான் உன் உயிர் என்கின்ற பேச்செல்லாம் எங்கே..
நடந்தான் கோர்ட் க்கும் வீட்டுக்கும். ஒரு வக்கீலிடம் தினக்கூலியாக குமாஸ்தா வேலை பார்க்கிறான்.
அவனுக்கு இப்போது தங்க இடமில்லை.
குழந்தைகள் இல்லை..
மனைவி இல்லை..
காதல்??
அவனது காதல் கல்யாணத்தில் தான் முடிந்தது. அது வெற்றியா தோல்வியா?
Tuesday, 5 May 2009
அலாரம் அடித்தது! மணி ஆறு!
நந்தினி அலாரத்தை அணைத்துவிட்டு எழுந்தாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் உலகத்தையே புரட்டி போடவேண்டும் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு. அவசரம் அவசரமாக பல் துலக்கிவிட்டு சமையல் அறைக்கு சென்றாள். காலையில் என்னென்ன சமைக்க வேண்டும் என்று இரவே முடிவு செய்துவிட்டாள். இன்று எலுமிச்சை சாதமும் உருளை கிழங்கு பொரியலும் மதிய உணவுக்கும்,சிற்றுண்டிக்கு தோசையும் சட்னியும் செய்ய தொடங்கினாள்.
இடை இடையே கண்கள் கடிகாரத்தை பார்த்து கொண்டே இருந்தன. மணி ஏழு அடிக்கும்போது ஏறத்தாழ எல்லாம் முடிந்து விட்டிருந்தது. இனி கிருஷ்ணா வுக்கும் அவளுக்கும் மத்திய உணவு எடுத்து வைக்கவேண்டும். அதற்குள் கிருஷ்ணா, சுமியையும் எழுப்பி விட வேண்டும். இப்போது எழுப்ப ஆரம்பித்தால் தான் அவள் மற்ற வேலைகளை முடிக்கும்போது எழும்புவார்கள். கிருஷ்ணா அவள் கணவன். சாப்ட்வேர் engineer ஆக பணிபுரிகிறான். சுமி அவனை மொத்தமாக உரித்து வைத்து பிறந்த அவள் ஒரே செல்ல குழந்தை. ஐந்து வயதாகிறது. கிருஷ்ணா காலையில் சுமியை பள்ளியில் விட்டுவிட்டு, நந்தினியை பஸ் நிறுத்தத்தில் விட்டு விட்டு ஆபீஸ் க்கு சென்றுவிடுவான்.
சுமி குட்டி... சுமி குட்டி... நேரம் ஆச்சி எழுந்திருடா... கிருஷ்ணா காலிலே சீக்கிரம் மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே எழுந்திருங்க.. சொல்லிக்கொண்டே சமையல் அறையில் மீதமுள்ள வேளையில் மும்மரமானாள். பாதி பாத்திரம் துலக்கி கொண்டிருக்கும் சுமி.. கிருஷ்ணா எழுந்திருங்க ..இனி கூப்பிட மாட்டேன்... சொல்லி கொண்டே மீதி பாத்திரம் தேய்த்து கழுவி முடித்தாள். கிருஷ்ணா பாத்ரூம் பக்கம் போகும் சத்தம் கேட்டது.
கிருஷ்ணா சுமியை குளிக்க வசி அனுப்புங்களேன்.. நான் அதுக்குள் தோசை வார்த்துடுவேன் .. ப்ளீஸ்..
கிருஷ்ணா சுமியை குளிக்க வைத்து அனுப்ப, நந்தினி அவளுக்கு உடை அணிவித்து தோசை ஊட்டி விட்டு கொண்டிருக்கும்போது கிருஷ்ணா கிளம்பி வந்தான். தோசை டேபிள் லே வச்சிருக்கேன் எடுத்துகோங்க என்றாள். ம்ம்.... சொல்லிக்கொண்டே இரண்டு தோசையில் ஒரு தோசை சாப்பிட்டிவிட்டு ஒற்றை டேபிள் இல் விட்டு சென்றான்.
கிருஷ்ணா தோசை சரியா வரலியா ஏன் சரியா சாப்பிடலை? நந்தினி வருத்தமாய் கேட்டாள். .. கிருஷ்ணா பதில் சொல்லவில்லை. படுக்கை அறையில் அவன் நிற்பதை பார்த்துவிட்டு மீண்டும் கேட்டாள்... தோசை நல்லா இல்லையா.. சுமிக்கு கூட பிடிச்சிதே.. சொல்லுங்க பிடிக்கலியா... கிருஷ்ணா திரும்பாமல் சொன்னான்... ஓகே.. .. நந்தினிக்கு கோபம் வந்தது... இவ்வளவு கேக்கறேன் சரியா பதில் கூட சொல்ல மாட்டேன் என்கிறாரே.. ஓகே ன்னா நல்ல இருக்குன்னு அர்த்தம்மா இல்லைன்னு அர்த்தமா... என்றாள்..
ம்ம்.. ஓகே... ன்னா ஓகே தான் கிருஷ்ணா கிளம்புவதில் மும்மரமானான்.. நந்தினி அவனுக்கு பிடிக்குமென்று பார்த்து பார்த்து தான் முறுகலாக தோசை செய்தாள்
நந்தினி அவசரம் அவசரமாக கிளம்பி அவர்கள் மத்திய உணவை சரி பார்த்து எடுத்து வைத்து சுமியையும் கூட்டி வந்து காரில் உட்கார வைத்து அவளும் அமர்ந்தாள்.. கொஞ்சம் அயர்ச்சியாகத் தான் இருந்தது. கிருஷ்ணா வும் வந்து அமர்ந்தான்.
கிருஷ்ணா என் டிரஸ் நல்லா இருக்கா? .. கல்யாணம் ஆன புதுசில வாங்கினது.. கிருஷ்ணா திரும்பவே இல்லை.. .ம்ம்... என்றான்.
சுமி ய இனி சீக்கிரம் எழும்ப பழக்கணும் அப்போதான் காலைலே படிக்கற பழக்கம் வளர்க்க முடியும்.. கிருஷ்ணா ம்ம்.. என்றான்.
இன்னைக்கி கார் சர்வீஸ் விடணும்னு சொன்னீங்களே இப்போவே விட்டுடுவீங்களா??? கிருஷ்ணா..ம்ம்... என்றான்...
நந்தினிக்கு ம்ம்.. தவிர எதையாவது கேட்டால் தேவலாம் போல இருந்தது...
சுமி.. டாடி .. யாரவது நம்கிட்ட பேசினா நம்ம பதில் பேசனும்னு மிஸ் சொல்லியிருக்காங்க... என்றாள்..
கிருஷ்ணா... ம்ம்ம்.. என்றான்...
சரி.. கிருஷ்ணாவுக்கு எதோ டென்ஷன் போல எண்ணிகொண்டாள்...
சுமி குட்டி மிஸ் குடுக்கற லஞ்ச் ஒழுங்கா சாப்பிடணும்..சமர்த்தா இருக்கணும்.. அம்மாவும் அப்பாவும் ஈவ்னிங் வர்றோம் சரியாடா.... டாட்டா... சொல்லி கொண்டே கொண்டே குழந்தையை அனுப்பி விட்டு வந்தாள்..
அடுத்த அவள் பஸ் ஸ்டாப் வந்தது.. கிருஷ்ணா நான் கிளம்பறேன்... கிருஷ்ணா ம்ம்.. என்றான்...
அன்று அலுவலகத்தில் நிறைய வேலை... அவளும் சாப்ட்வேர் என்ஜினியர் தான்.. மத்திய உணவு நேரம் தாண்டியதை வேலை மும்மரத்தில் கவனிக்கவில்லை.. இப்போதுதான் பசி தெரிந்தது. தோழி ராணி அவளை தேடி அவள் இடத்திற்கே வந்து விட்டாள். சாப்பிட போலாமா.. இன்னக்கி என்ன ஸ்பெஷல்???
சிம்பிள்- ஆ லெமன் ரைஸ் பொட்டேடோ சைடு டிஷ் தான் பண்ணினேன். இது சிம்பிள்-அ? சிரித்தால் ராணி.. நான் ஆனந்த பாவன் லே லஞ்ச் ஆர்டர் பண்ணிட்டு வந்திருக்கேன் சொன்னால். சாப்பிட ஆரம்பித்தவுடன் லெமன் ரைஸ் சாப்பிட்டு பார்த்தவள்.. நந்தினி நான் மட்டும் இப்படி சமச்சேன்னா என் ஆதுக்கறார் என்ன சுத்தி சுத்தி வருவார்... தினமும் பொலம்புவார்.. ப்ளீஸ் இன்னக்கு எதாவது ட்ரை பண்ணு நல்லா இல்லன்ன கூட நான் அட்ஜஸ்ட் பண்ணிகறேன்னு.. என்னகு தான் சமைக்க இன்ட்ரெஸ்ட் எ இல்ல... நந்தினி சிரித்தாள்...
அன்றைய நாள் எல்லா நாள்களை போல விரைவாக சென்று விட்டது... வேலை பழு நடுவில் மூன்று முறை கிருஷ்ணாவிற்கு போன் செய்தாள்.. போன் எடுக்கும் போதெல்லாம் பிஸி...அப்பறம் பேசறேன்.. என்றான்.... சரி என்று சொனாள்.
சாயங்காலம் வீடு வரும் வழியிலே இரவு உணவுக்கு என்ன செய்வது என்று யோசித்து வைத்திருந்தாள்.
சுமியை குளிக்க வைத்து இரவு உடை மாற்றி உணவு கொடுத்து படுக்க வைத்து விட்டு வந்து, கிருஷ்ணாவுக்கு உணவு எடுத்து வைத்து கொண்டிருந்தாள். கிருஷ்ணா பேப்பர் படித்துவிட்டு டிவி இல நியூஸ் பார்த்து கொண்டிருந்தான். அவனது தொலைபேசி சிணுங்கியது .அலுவலக நண்பன். இருவரும் அரட்டை ஆரம்பித்தால் அது பாட்டுக்கு போய் கொண்டே இருக்கும்..
நந்தினி குரல் கொடுத்தாள். கிருஷ்ணா ரொம்ப ஆறுது...சீக்கிரம் வாங்களேன் சாப்பிட. கிருஷ்ணா... ம்ம். என்றான்...
ஒரு முக்கால் மணி நேரம் சிரிப்பும் கிண்டலும்மாக பேசிய பிறகு கிருஷ்ணா வந்தான். இருவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்..
இதையா சமைச்சே....?? இது கிருஷ்ணா..
நல்லா வந்திருக்குங்க.. உங்களுக்கு பிடிக்கலியா .. ஒரு வாய் சாப்பிட்டுட்டு சொல்லுங்களேன் .. இது நந்தினி...
கிருஷ்ணா இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு அப்படியே எழுந்து விட்டான்..
என்னங்க ரொம்ப ஆசையா பண்ணினேன்.. சுவை கூட நல்லா தாங்க இருக்கு! இப்படி வேஸ்ட் பண்ணிட்டீங்களே.. எவ்வளவு டைம் ஆச்சி தெரியுமா இத செய்யறதுக்கு.. கிருஷ்ணா பதில் சொல்லவில்லை..
நந்தினிக்கு கிருஷ்ணா வைத்த மீதத்தை குப்பையில் கொட்ட மனசு வரவில்லை... அதையும் சாப்பிட முடியாமல் சாப்பிட்டாள்.. இப்படி சாப்பிட்டா நான் என்ன ஆகறது... நினைத்து கொண்டாள்...
சமையற்கட்டு வேலை எல்லாம் முடித்து கொண்டு வரும்போது கிருஷ்ணா லேப்டாப் இல் அலுவலக வேலையாக இருந்தான்... லஞ்ச் எப்படி இருந்துது.. ராணி ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா ... உங்களுக்கு பிடிசிதா ... ம்ம் என்றான்...பிடிகலையா??? நந்தினி கேட்டாள்.. ஓகே என்றான் கிருஷ்ணா... என்னங்க இப்படி சொல்லறீங்க... லஞ்ச் லே என் கூட சாப்பிட்டவங்க எல்லாம் நல்லா இருக்குன்னு தானே சொன்னாங்க...
அவங்க முன்ன பின்ன நல்லா சாப்பாடு சாப்பிட்டிருக்க மாட்டங்க... சொல்லிவிட்டு அவன் வேலையில் மூழ்கினான்...
நந்தினி நயன்தாரா, த்ரிஷா பற்றி பேசினாள்.. அடுத்த நாள் சமையல் பற்றி பேசினாள்.. அவன் தினத்தை பற்றி கேட்டாள்.. ஈழ தமிழர்கள் பற்றி பேசினாள்.. கிருஷ்ணாவின் பதில் என்னவோ ம்ம்...ம்ம்...ம்ம்.. தான்...
நந்திக்கு கோபம் வந்தது.. இவ்வளவு நேரம் உங்க நண்பன் கிட்ட அப்படி அரட்டை அடிச்சிட்டு இருந்தீங்க... இப்ப்போ என்னக்கு மட்டும் எல்லாத்துக்கும் ம்ம்.. சொல்லறீங்க... நான் எவ்வளவு நேரமா பேசறேன்.... கொஞ்ச நேரம் கத்தி பார்த்தாள்... கிருஷ்ணா பொறுமையாக திரும்பினான்... என்னக்கு வேலை இருக்கிறது டிச்டுர்ப் பண்ணதே...
நந்தினிக்கு அழுகையாக வந்தது... எல்லோரும் என்னை தைரியசாலின்னு சொல்லுவாங்க... நான் என் இப்படி அழறேன்.... போய் படுத்தால் தூக்கம் வரவில்லை.. மனது பாரமாக இருந்தது.... ரொம்ப நேரம் கழித்து கிருஷ்ணா வந்து படுத்தான்...
தான் மன வேதனை படுவதை கிருஷ்ணா விற்கு புரிய வைக்க வேண்டும்... சும்மா சண்டை போட்டுட்டு இருக்க முடியுமா???
கிருஷ்ணா...
ம்ம்..
எனக்கு கொஞ்சம் பேசணும்..
ம்ம்..
நீங்க என் எனக்கு சரியா பதில் சொல்ல மாட்டேங்கறீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.நான் வேற யார்கிட்ட போய் பேசுவேன்... நீங்க இப்படி பண்றது என்னாலே வேற எதுலேயும் கவனம் செலுத்த முடியலே.. நான் ஏதாவது தப்பு செஞ்சா சொல்லுங்க நான் திருத்திக்கறேன்.. நான் உங்களுக்கு இந்த டாபிக் பிடிகலேன்னு அந்த டாபிக்..அந்த டாபிக் பிடிக்கலேன்னு இந்த டாபிக் மாத்தி மாத்தி பேசி பாக்றேன்... உங்க டீம் லே எல்லார்கிட்டயும் நல்லா தன் பேசறீங்க.. நண்பர்கள்கிட்ட நல்லா தன் பேசறீங்க... என்ன உங்களுக்கு பிடிக்கலியா... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு....அழுது கொண்டே திரும்பினால்... கிருஷ்ணா அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான்.....
அழுகை வரத்தான் செய்தது.. ஆற்றாமை தாளவில்லை... ஆனால் என்ன செய்ய.... எழுப்பி பார்க்கலாமா? பார்க்கலாம் ...
கிருஷ்ணா.. நான் பேசிட்டே இருக்கேன் நீங்க தூங்கிடீங்க .. நான் பேசறது கேக்கலியா?
என்னை தொந்தரவு பண்ணாதே ? நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா??? நாளைக்கி மோர்னிங் மீட்டிங் இருக்கு தூங்கலாம்னு பார்த்தா ... எப்போவும் நிம்மதியா கெடுக்கறதே வேலை...
இன்றைக்கு கிருஷ்ணா பேசிய நீளமான வாக்கியம் இதுதான்....
அழுதுகொண்டே தூங்கி விட்டாள் நந்தினி... அடுத்த நாளும் ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டுமே..!