மௌனமான நேரம்

 

Wednesday, 6 May 2009

திருமணம் காதலின் வெற்றியா தோல்வியா? -1

Posted by மௌனமான நேரம் | Wednesday, 6 May 2009 | Category: |

அவன்!
நல்ல உயரம். அடர்ந்த முடி. துரு துரு கண்கள். எப்போதும் புன்னகை அரும்பிய இதழ்கள். கொஞ்சம் அரவிந்த சாமி கொஞ்சம் மாதவன் கொஞ்சம் ஷாருக் கான் நினைவு படுத்துவான். பேங்க் இல் துணை மேலாளர் பதவி. அம்மா அப்பா தங்கை என்று அழகிய சின்ன குடும்பம். மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு.

அவள்!
அந்த காலத்து ஹேமமாலினி . இதுக்கு மேல விளக்கமே வேண்டாம். செந்தமிழ் பிராமன பெண்.

அவள் பணம் போடவும் எடுக்கவும் வங்கிக்கு வரும்போது அதோடு சேர்த்து மனசையும் போட்டு எடுத்து கொண்டார்கள் ரெண்டு பெரும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா காதல் செடியாகி மரமாகி பூத்து குலுங்க ஆரம்பிச்சிடிச்சி.

எல்லா காதலர்கள் மாதிரியும் தான்.. நீயில்லாமல் நானில்லை.. வாழ்ந்தால் உன்னோடு இல்லையேல் மண்ணோடு... அப்படி இப்படி எல்லாம் வசனம் பேசி பேசி காதலுக்கு நல்ல உரம் போட்டு வளர்த்தார்கள்.

அந்த நாள் இனிய நாள் வந்தது... ரெண்டு பேர் அம்மா அப்பாவும் இவ்வளவு பெரிய பாவம் செய்துட்டாங்களே அப்படின்னு அழுது புரண்டு சண்ட போட்டு.. சினிமா வில்லன்கள் மாதிரி வசனம் எல்லாம் பேசி அவங்களாலே முடிஞ்ச அளவுக்கு நேரடி எதிர்ப்பு தெரிவிச்சாங்க.

நம்ம அவனும் அவளும் ஏற்கனவே காதல் கடலிலே ரொம்ப முழுகி போனதாலே, இந்த எல்லா எதிர்ப்புகளும் தூசு போல தான் தெரிஞ்சுது. எனக்கு நீயும் உனக்கு நானும் இருக்கும் பொது வேற எல்லாரும் எதுக்கு ன்னு அவங்களும் வீர வசனம் எல்லாம் பேசி ஒரு சுபாயோக சுபதினத்தில் நண்பர்கள் நண்பிகள் புடை சூழ கோவிலில் கல்யாணம் முடித்து தனி வீட்டில் குடி புகுந்தார்கள்.

இல்லறம் என்னும் நல்லறம் இனிதே தொடங்கியது!!

செல்லம் செல்லம் என்று கொஞ்சலும்.. கிண்டலும் கேலியும் சிரிப்பும் கும்மாளமுமாக தான் இருந்தது அந்த ஆரம்ப நாட்கள்.

நம்ம விதி தேவன் தான் அவனோட அட்டவணைலே அடுத்த வேலை செய்ய தயாராயிட்டான்.

அவனுக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளத்தோடு வேலை கிடைத்தது. அவனுக்கு அவளை விட்டு செல்ல இஷ்டமே இல்லை தான். அவளுக்கும் தான். அவன் அங்க போய் நல்ல வீடு எல்லாம் பார்த்து விட்டு வந்து கூட்டி போவதாக சொல்லி கிளம்பினான்.

சில பல காரணங்களால் அது முடியவில்லை. இப்படியே கொஞ்ச வருடம் போனது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வருவான். சில நாள் இருந்து விட்டு மன பாரத்தோடு திரும்புவான். அவர்களுக்கு ஒரு அழகு ஆண் குழந்தையும் இன்னும் அழகு பெண் குழந்தையும் பிறந்தது. காரணங்களும் பஞ்சமில்லாமல் வர அவன் அங்கேயும் அவள் குழந்தைகளுடன் இங்கேயுமாக வாழ்க்கை போய் கொண்டிருந்தது. அவள் தனியாக கஷ்டப்பட கூடாது என்று எதாவது தொழில் செய்ய ஆசைப்பட்ட போது சரி என்றான். இந்த வீடு சின்னது பெருசு வேண்டும் என்றாள் வாங்கி கொடுத்தான். தொழில் விரிவு செய்ய பணம் வேண்டும் என்றாள், நிலம் வேண்டும் என்றாள். வாங்கி கொடுத்தான். குடும்பம் பெரிதாகி பொறுப்புகள் அதிகமாக ஆக மூன்று மாதத்திற்குள் ஒரு முறை வருவது மாறி வருடம் ஒரு முறை ஆகி இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஆகியது.

கால தேவன் நில்லாமல் சுற்றி கொண்டே இருந்தான். அவர்களது மகனுக்கு இப்போது பதினைந்து வயது பெண்ணுக்கு பதினான்கு.

அவன் முடிவு செய்து விட்டான். போதும் சம்பாதித்தது. இனி என்னவளுடனும் குழந்தைகளுடனும் தான் வாழ்கை. போதுமான பணம் தான் இருக்கிறதே. வேறு என்ன வேண்டும். அவளுக்கு சொல்லாமல் இன்ப அதிச்சி கொடுக்க முடிவு செய்து வேலையை ராஜினாமா செய்து திரும்பி வந்தான்.

அவள் வந்தாள். இரண்டு வருடத்திற்கு முன் பார்த்தது . ஆனால் இன்னும் முன்னை விட அழகாகத்தான் இருக்கிறாள். இனி எப்பொழுதும் இங்கே என்று நினைக்கவே இனித்தது.

கொண்டு வந்த எல்லா பொருட்களையும் எல்லாருக்கும் கொடுத்து விட்டு அமைதியாக நிம்மதியாக அமர்ந்த பொது அவள் அதே புன்னகையுடன் வந்தாள். தான் சொல்ல போகும் செய்தி கேட்டு அவள் முகத்தில் மகிழ்ச்சி பட்டாசு தெறிக்க பார்க்க ஆசையை இருந்தது அவனுக்கு.

சொன்னான்.

அவள் அவனை பார்த்தாள்.

அவள் முகத்தில் பட்டாசு வெடித்து உண்மை தான் ஆனால் அது மகிழ்ச்சி பட்டாசு இல்லை. கோப பட்டாசு.

அவன் எதிர்பார்க்கவில்லை.

அன்று பல விஷயம் நடந்து முடிந்து விட்டது. அவள் முடிவாக சொல்லி விட்டாள். அவனது சம்பாத்தியம் வீட்டுக்கு அவசியம். அவள் தொழில்க்கு இன்னும் முதலீடு தேவை.

அப்படியானால் அவன் தேவை இல்லையா ? அவன் சம்பாத்தியம் தான் தேவையா? அவன் மனதில் ஆயிரம் கேள்விகள். திடமான முடிவெடுத்தான். இனி திரும்ப வெளிநாடு போவதில்லை என்று. இவ்வளவு நாள் சம்பாதித்தது வைத்து வாழலாம்.

அவள் சொனாள். அந்த பணம் எல்லாம் குடும்பத்துக்காக செலவழிந்து விட்டது.

கொஞ்சம் கூடவா மிச்சம் இல்லை? அவன் அவள் பேரில் வாங்கிய நிலமும், வீடும் நகைகளும் எதுவுமே இல்லையா.

அவன் எதிபார்காத பல திருப்பங்கள் வாழ்க்கையில். வந்து இரண்டு நாட்களில் இனி அவனோடு சேர்ந்து வாழ முடியாது என்று அவள் முடிவு செய்து விவாகரத்து கேட்டாள். குழந்தைகளுக்கும் அம்மா தன் வேண்டுமாம்.

பதினைந்து வருங்களுக்கு முன்னால் அவன் தேடி தேடி திளைத்த காதல் எங்கே?
முழுகி முழுகி முத்தெடுத்த தினங்கள் எங்கே?
சிரிப்பும் சந்தோஷமும் ஆசையும் எங்கே?
நீ என் உயிர் நான் உன் உயிர் என்கின்ற பேச்செல்லாம் எங்கே..

நடந்தான் கோர்ட் க்கும் வீட்டுக்கும். ஒரு வக்கீலிடம் தினக்கூலியாக குமாஸ்தா வேலை பார்க்கிறான்.

அவனுக்கு இப்போது தங்க இடமில்லை.
குழந்தைகள் இல்லை..
மனைவி இல்லை..
காதல்??
அவனது காதல் கல்யாணத்தில் தான் முடிந்தது. அது வெற்றியா தோல்வியா?
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.