மௌனமான நேரம்

 

Tuesday 5 May 2009

ஒரு நாள்... - கதை

Posted by மௌனமான நேரம் | Tuesday 5 May 2009 | Category: |

அலாரம் அடித்தது! மணி ஆறு!


நந்தினி அலாரத்தை அணைத்துவிட்டு எழுந்தாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் உலகத்தையே புரட்டி போடவேண்டும் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு. அவசரம் அவசரமாக பல் துலக்கிவிட்டு சமையல் அறைக்கு சென்றாள். காலையில் என்னென்ன சமைக்க வேண்டும் என்று இரவே முடிவு செய்துவிட்டாள். இன்று எலுமிச்சை சாதமும் உருளை கிழங்கு பொரியலும் மதிய உணவுக்கும்,சிற்றுண்டிக்கு தோசையும் சட்னியும் செய்ய தொடங்கினாள்.


இடை இடையே கண்கள் கடிகாரத்தை பார்த்து கொண்டே இருந்தன. மணி ஏழு அடிக்கும்போது ஏறத்தாழ எல்லாம் முடிந்து விட்டிருந்தது. இனி கிருஷ்ணா வுக்கும் அவளுக்கும் மத்திய உணவு எடுத்து வைக்கவேண்டும். அதற்குள் கிருஷ்ணா, சுமியையும் எழுப்பி விட வேண்டும். இப்போது எழுப்ப ஆரம்பித்தால் தான் அவள் மற்ற வேலைகளை முடிக்கும்போது எழும்புவார்கள். கிருஷ்ணா அவள் கணவன். சாப்ட்வேர் engineer ஆக பணிபுரிகிறான். சுமி அவனை மொத்தமாக உரித்து வைத்து பிறந்த அவள் ஒரே செல்ல குழந்தை. ஐந்து வயதாகிறது. கிருஷ்ணா காலையில் சுமியை பள்ளியில் விட்டுவிட்டு, நந்தினியை பஸ் நிறுத்தத்தில் விட்டு விட்டு ஆபீஸ் க்கு சென்றுவிடுவான்.


சுமி குட்டி... சுமி குட்டி... நேரம் ஆச்சி எழுந்திருடா... கிருஷ்ணா காலிலே சீக்கிரம் மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே எழுந்திருங்க.. சொல்லிக்கொண்டே சமையல் அறையில் மீதமுள்ள வேளையில் மும்மரமானாள். பாதி பாத்திரம் துலக்கி கொண்டிருக்கும் சுமி.. கிருஷ்ணா எழுந்திருங்க ..இனி கூப்பிட மாட்டேன்... சொல்லி கொண்டே மீதி பாத்திரம் தேய்த்து கழுவி முடித்தாள். கிருஷ்ணா பாத்ரூம் பக்கம் போகும் சத்தம் கேட்டது.


கிருஷ்ணா சுமியை குளிக்க வசி அனுப்புங்களேன்.. நான் அதுக்குள் தோசை வார்த்துடுவேன் .. ப்ளீஸ்..


கிருஷ்ணா சுமியை குளிக்க வைத்து அனுப்ப, நந்தினி அவளுக்கு உடை அணிவித்து தோசை ஊட்டி விட்டு கொண்டிருக்கும்போது கிருஷ்ணா கிளம்பி வந்தான். தோசை டேபிள் லே வச்சிருக்கேன் எடுத்துகோங்க என்றாள். ம்ம்.... சொல்லிக்கொண்டே இரண்டு தோசையில் ஒரு தோசை சாப்பிட்டிவிட்டு ஒற்றை டேபிள் இல் விட்டு சென்றான்.


கிருஷ்ணா தோசை சரியா வரலியா ஏன் சரியா சாப்பிடலை? நந்தினி வருத்தமாய் கேட்டாள். .. கிருஷ்ணா பதில் சொல்லவில்லை. படுக்கை அறையில் அவன் நிற்பதை பார்த்துவிட்டு மீண்டும் கேட்டாள்... தோசை நல்லா இல்லையா.. சுமிக்கு கூட பிடிச்சிதே.. சொல்லுங்க பிடிக்கலியா... கிருஷ்ணா திரும்பாமல் சொன்னான்... ஓகே.. .. நந்தினிக்கு கோபம் வந்தது... இவ்வளவு கேக்கறேன் சரியா பதில் கூட சொல்ல மாட்டேன் என்கிறாரே.. ஓகே ன்னா நல்ல இருக்குன்னு அர்த்தம்மா இல்லைன்னு அர்த்தமா... என்றாள்..


ம்ம்.. ஓகே... ன்னா ஓகே தான் கிருஷ்ணா கிளம்புவதில் மும்மரமானான்.. நந்தினி அவனுக்கு பிடிக்குமென்று பார்த்து பார்த்து தான் முறுகலாக தோசை செய்தாள்


நந்தினி அவசரம் அவசரமாக கிளம்பி அவர்கள் மத்திய உணவை சரி பார்த்து எடுத்து வைத்து சுமியையும் கூட்டி வந்து காரில் உட்கார வைத்து அவளும் அமர்ந்தாள்.. கொஞ்சம் அயர்ச்சியாகத் தான் இருந்தது. கிருஷ்ணா வும் வந்து அமர்ந்தான்.


கிருஷ்ணா என் டிரஸ் நல்லா இருக்கா? .. கல்யாணம் ஆன புதுசில வாங்கினது.. கிருஷ்ணா திரும்பவே இல்லை.. .ம்ம்... என்றான்.


சுமி ய இனி சீக்கிரம் எழும்ப பழக்கணும் அப்போதான் காலைலே படிக்கற பழக்கம் வளர்க்க முடியும்.. கிருஷ்ணா ம்ம்.. என்றான்.


இன்னைக்கி கார் சர்வீஸ் விடணும்னு சொன்னீங்களே இப்போவே விட்டுடுவீங்களா??? கிருஷ்ணா..ம்ம்... என்றான்...


நந்தினிக்கு ம்ம்.. தவிர எதையாவது கேட்டால் தேவலாம் போல இருந்தது...


சுமி.. டாடி .. யாரவது நம்கிட்ட பேசினா நம்ம பதில் பேசனும்னு மிஸ் சொல்லியிருக்காங்க... என்றாள்..


கிருஷ்ணா... ம்ம்ம்.. என்றான்...


சரி.. கிருஷ்ணாவுக்கு எதோ டென்ஷன் போல எண்ணிகொண்டாள்...


சுமி குட்டி மிஸ் குடுக்கற லஞ்ச் ஒழுங்கா சாப்பிடணும்..சமர்த்தா இருக்கணும்.. அம்மாவும் அப்பாவும் ஈவ்னிங் வர்றோம் சரியாடா.... டாட்டா... சொல்லி கொண்டே கொண்டே குழந்தையை அனுப்பி விட்டு வந்தாள்..


அடுத்த அவள் பஸ் ஸ்டாப் வந்தது.. கிருஷ்ணா நான் கிளம்பறேன்... கிருஷ்ணா ம்ம்.. என்றான்...


அன்று அலுவலகத்தில் நிறைய வேலை... அவளும் சாப்ட்வேர் என்ஜினியர் தான்.. மத்திய உணவு நேரம் தாண்டியதை வேலை மும்மரத்தில் கவனிக்கவில்லை.. இப்போதுதான் பசி தெரிந்தது. தோழி ராணி அவளை தேடி அவள் இடத்திற்கே வந்து விட்டாள். சாப்பிட போலாமா.. இன்னக்கி என்ன ஸ்பெஷல்???


சிம்பிள்- ஆ லெமன் ரைஸ் பொட்டேடோ சைடு டிஷ் தான் பண்ணினேன். இது சிம்பிள்-அ? சிரித்தால் ராணி.. நான் ஆனந்த பாவன் லே லஞ்ச் ஆர்டர் பண்ணிட்டு வந்திருக்கேன் சொன்னால். சாப்பிட ஆரம்பித்தவுடன் லெமன் ரைஸ் சாப்பிட்டு பார்த்தவள்.. நந்தினி நான் மட்டும் இப்படி சமச்சேன்னா என் ஆதுக்கறார் என்ன சுத்தி சுத்தி வருவார்... தினமும் பொலம்புவார்.. ப்ளீஸ் இன்னக்கு எதாவது ட்ரை பண்ணு நல்லா இல்லன்ன கூட நான் அட்ஜஸ்ட் பண்ணிகறேன்னு.. என்னகு தான் சமைக்க இன்ட்ரெஸ்ட் எ இல்ல... நந்தினி சிரித்தாள்...


அன்றைய நாள் எல்லா நாள்களை போல விரைவாக சென்று விட்டது... வேலை பழு நடுவில் மூன்று முறை கிருஷ்ணாவிற்கு போன் செய்தாள்.. போன் எடுக்கும் போதெல்லாம் பிஸி...அப்பறம் பேசறேன்.. என்றான்.... சரி என்று சொனாள்.


சாயங்காலம் வீடு வரும் வழியிலே இரவு உணவுக்கு என்ன செய்வது என்று யோசித்து வைத்திருந்தாள்.


சுமியை குளிக்க வைத்து இரவு உடை மாற்றி உணவு கொடுத்து படுக்க வைத்து விட்டு வந்து, கிருஷ்ணாவுக்கு உணவு எடுத்து வைத்து கொண்டிருந்தாள். கிருஷ்ணா பேப்பர் படித்துவிட்டு டிவி இல நியூஸ் பார்த்து கொண்டிருந்தான். அவனது தொலைபேசி சிணுங்கியது .அலுவலக நண்பன். இருவரும் அரட்டை ஆரம்பித்தால் அது பாட்டுக்கு போய் கொண்டே இருக்கும்..


நந்தினி குரல் கொடுத்தாள். கிருஷ்ணா ரொம்ப ஆறுது...சீக்கிரம் வாங்களேன் சாப்பிட. கிருஷ்ணா... ம்ம். என்றான்...


ஒரு முக்கால் மணி நேரம் சிரிப்பும் கிண்டலும்மாக பேசிய பிறகு கிருஷ்ணா வந்தான். இருவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்..


இதையா சமைச்சே....?? இது கிருஷ்ணா..


நல்லா வந்திருக்குங்க.. உங்களுக்கு பிடிக்கலியா .. ஒரு வாய் சாப்பிட்டுட்டு சொல்லுங்களேன் .. இது நந்தினி...


கிருஷ்ணா இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு அப்படியே எழுந்து விட்டான்..


என்னங்க ரொம்ப ஆசையா பண்ணினேன்.. சுவை கூட நல்லா தாங்க இருக்கு! இப்படி வேஸ்ட் பண்ணிட்டீங்களே.. எவ்வளவு டைம் ஆச்சி தெரியுமா இத செய்யறதுக்கு.. கிருஷ்ணா பதில் சொல்லவில்லை..


நந்தினிக்கு கிருஷ்ணா வைத்த மீதத்தை குப்பையில் கொட்ட மனசு வரவில்லை... அதையும் சாப்பிட முடியாமல் சாப்பிட்டாள்.. இப்படி சாப்பிட்டா நான் என்ன ஆகறது... நினைத்து கொண்டாள்...


சமையற்கட்டு வேலை எல்லாம் முடித்து கொண்டு வரும்போது கிருஷ்ணா லேப்டாப் இல் அலுவலக வேலையாக இருந்தான்... லஞ்ச் எப்படி இருந்துது.. ராணி ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா ... உங்களுக்கு பிடிசிதா ... ம்ம் என்றான்...பிடிகலையா??? நந்தினி கேட்டாள்.. ஓகே என்றான் கிருஷ்ணா... என்னங்க இப்படி சொல்லறீங்க... லஞ்ச் லே என் கூட சாப்பிட்டவங்க எல்லாம் நல்லா இருக்குன்னு தானே சொன்னாங்க...


அவங்க முன்ன பின்ன நல்லா சாப்பாடு சாப்பிட்டிருக்க மாட்டங்க... சொல்லிவிட்டு அவன் வேலையில் மூழ்கினான்...


நந்தினி நயன்தாரா, த்ரிஷா பற்றி பேசினாள்.. அடுத்த நாள் சமையல் பற்றி பேசினாள்.. அவன் தினத்தை பற்றி கேட்டாள்.. ஈழ தமிழர்கள் பற்றி பேசினாள்.. கிருஷ்ணாவின் பதில் என்னவோ ம்ம்...ம்ம்...ம்ம்.. தான்...



நந்திக்கு கோபம் வந்தது.. இவ்வளவு நேரம் உங்க நண்பன் கிட்ட அப்படி அரட்டை அடிச்சிட்டு இருந்தீங்க... இப்ப்போ என்னக்கு மட்டும் எல்லாத்துக்கும் ம்ம்.. சொல்லறீங்க... நான் எவ்வளவு நேரமா பேசறேன்.... கொஞ்ச நேரம் கத்தி பார்த்தாள்... கிருஷ்ணா பொறுமையாக திரும்பினான்... என்னக்கு வேலை இருக்கிறது டிச்டுர்ப் பண்ணதே...


நந்தினிக்கு அழுகையாக வந்தது... எல்லோரும் என்னை தைரியசாலின்னு சொல்லுவாங்க... நான் என் இப்படி அழறேன்.... போய் படுத்தால் தூக்கம் வரவில்லை.. மனது பாரமாக இருந்தது.... ரொம்ப நேரம் கழித்து கிருஷ்ணா வந்து படுத்தான்...


தான் மன வேதனை படுவதை கிருஷ்ணா விற்கு புரிய வைக்க வேண்டும்... சும்மா சண்டை போட்டுட்டு இருக்க முடியுமா???


கிருஷ்ணா...


ம்ம்..


எனக்கு கொஞ்சம் பேசணும்..


ம்ம்..


நீங்க என் எனக்கு சரியா பதில் சொல்ல மாட்டேங்கறீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.நான் வேற யார்கிட்ட போய் பேசுவேன்... நீங்க இப்படி பண்றது என்னாலே வேற எதுலேயும் கவனம் செலுத்த முடியலே.. நான் ஏதாவது தப்பு செஞ்சா சொல்லுங்க நான் திருத்திக்கறேன்.. நான் உங்களுக்கு இந்த டாபிக் பிடிகலேன்னு அந்த டாபிக்..அந்த டாபிக் பிடிக்கலேன்னு இந்த டாபிக் மாத்தி மாத்தி பேசி பாக்றேன்... உங்க டீம் லே எல்லார்கிட்டயும் நல்லா தன் பேசறீங்க.. நண்பர்கள்கிட்ட நல்லா தன் பேசறீங்க... என்ன உங்களுக்கு பிடிக்கலியா... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு....அழுது கொண்டே திரும்பினால்... கிருஷ்ணா அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான்.....


அழுகை வரத்தான் செய்தது.. ஆற்றாமை தாளவில்லை... ஆனால் என்ன செய்ய.... எழுப்பி பார்க்கலாமா? பார்க்கலாம் ...


கிருஷ்ணா.. நான் பேசிட்டே இருக்கேன் நீங்க தூங்கிடீங்க .. நான் பேசறது கேக்கலியா?


என்னை தொந்தரவு பண்ணாதே ? நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா??? நாளைக்கி மோர்னிங் மீட்டிங் இருக்கு தூங்கலாம்னு பார்த்தா ... எப்போவும் நிம்மதியா கெடுக்கறதே வேலை...


இன்றைக்கு கிருஷ்ணா பேசிய நீளமான வாக்கியம் இதுதான்....


அழுதுகொண்டே தூங்கி விட்டாள் நந்தினி... அடுத்த நாளும் ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டுமே..!

ulavu.com valaipookkal.com Tamil Blogs

1 பின்னூட்டங்கள்:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதயுடன்)
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவன்
    உலவு.காம்


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.