மௌனமான நேரம்

 

Friday 29 May 2009

நானும் என் discipline -உம்

Posted by மௌனமான நேரம் | Friday 29 May 2009 | Category: |

கொஞ்ச நாளுக்கு முன்னால் ஒரு கட்டுரை படிச்சேன். இந்தியர்கள் சிங்கப்பூர் லே இருக்கும் பொது disciplinedஆ இருக்காங்க... இங்கிலாந்து லே இருக்கும் பொது disciplined ஆ இருக்காங்க.. ஆனா இந்தியாவிலே இருக்கும் போது மட்டும் disciplined ஆ இருக்க மாட்டேங்கறாங்க அப்படின்னு ரொம்ப சாடி இருந்தாங்க.


அத படிச்சா உடனே, அதெப்படி அவங்க இப்படி சொல்லலாம்.. நமக்கு இல்லாத discipline-ஆ ... இனி implement பண்ணிட வேண்டிய்து தான் அப்படின்னு ஒரு மெகா முடிவு எடுத்து, எங்கேடா ஆரம்பிக்கலாம் னு மண்டைய சொரிஞ்சிட்டு இருக்கும் போது ஆண்டவனா பாத்து ஒரு வழி ஏற்படுத்தி குடுத்தான்..


என்னோட atm கார்டு inactive ஆயிடிச்சி. சரி பக்கத்துலே தானே பேங்க் இருக்கு நேரா போய் பணம் எடுத்துக்கலாம்னு உள்ள போனேன். withdrawals section தனியா இருக்குன்னு reception லே சொன்னாங்க. சரின்னு வித்ட்ராவல் ஸ்லிப் fill பண்ணி எடுத்துட்டு கியூ லே போய் நின்னேன்


ஒருத்தர் படு வேகமா வந்தார்.. வந்து அப்படியே முன்னே முன்னேறி சென்றார். என்னை கியூ லே பின்னுக்கு தள்ளிட்டு அவர் வேலைய முடிச்சிட்டு போய்ட்டார் .. நம்ம முண்டி அடிச்சிட்டு போனா நம்ம discipline என்னாகரதுன்னு நானும் கியூ லேயே நின்னேன்.


அடுத்தது இன்னொருத்தர் வந்தார். அடிச்சு பிடிச்சு முன்னாடி போய் வேலைய முடிச்சிட்டு போய்ட்டார். மொத்தத்துலே யாருமே கியூ பத்தி யோசிக்கவே இல்லை.. இது கொஞ்ச நேரம் நடந்துட்டே இருந்துது.. நான் கொஞ்சம் கடுப்பாக ஆரம்பித்திருந்தாலும்.. ஒரு முடிவோட முன் வச்ச கால பின் வைகரதில்லைன்னு இருந்தேன்.


இப்படியே கொஞ்ச நேரம் போச்சி. counter லே இருந்த அம்மா என்னபார்த்துகிட்டே இருந்தாங்க.. நமக்கு ஒரே பெருமை. என்ன ஒரு discipline ன்னு அந்த அம்மா பாக்றாங்க போலன்னு.


இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி அந்த அம்மா என்ன கூப்பிட்டாங்க..


'என்னங்க... இப்படி கொஞ்சம் முன்னாடி வாங்க. நானும் ரொம்ப நேரமா பாக்றேன்.. இப்படி பேக்கு மாதிரி நின்னுட்டே இருந்தா நீங்க அங்கேயே தான் நிக்கணும். நாங்க பேங்க் அ பூட்டிக்கிட்டு போற வரை. வந்தோமா வேலைய முடிச்சோமா போனோமான்னு கொஞ்சம் சாமர்த்தியமா இருக்க வேண்டாம். '..


நான் அசடு வழிந்து கொண்டே பொய் withdrawal ஸ்லிப் ஐ நீட்டினேன்.


'என்னங்க கியூ லே நின்னு பழக்கம் இல்லையோ?' .


'ஆமாங்க நான் இருக்கிற இடத்துலே எல்லாம் கியூ ல் வரிசையா தன் போகணும்'.


' அது எந்த ஊரப்பா அது?'


'லண்டன்'.


'அதெல்லாம் இங்க ஒத்து வராதுங்க.. பொழைக்கிற வழிய பாருங்க'.


ஹி.. ஹீ.. என்று மழுப்பிக்கிட்டு வெளியே வந்தேன்...


அடங்கொப்புரானே... நான் discipline-ஆ இருக்கலாம்னு பாத்தா.. பொழைக்க தெரியா புள்ளைன்னுட்டாங்களே!!!


ulavu.com valaipookkal.com Tamil Blogs

1 பின்னூட்டங்கள்:

  1. அது என்னவோ உண்மை தான். நானும் லண்டன்ல ஈர்ந்து ஊருக்கு போனா சரி நம்ம மக்களுக்கு ஒரு நல்ல பழக்கத்தை சொல்லி கொடுக்கலாம் என்றால், என்னையே எங்கே வந்தேன்னு கேட்கிற மாதிரி இருந்தது. ஒரு முறை, இதே போல் வங்கியில் போய் வரிசையில் நிற்கும் பொது நீங்கள் சொன்னது போலவே நடந்தது. ஆனால் நா அவரை கூப்பிட்டு சொன்னேன், "நான் வரிசையில் நிற்கிறேன், நீங்கள் எப்படி எனக்கு முன்னால் போனிர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் என்னை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை, பின்ன நான் அவரை சத்தம் போட்டு என் பின்னால் நிற்க வைத்து விட்டேன். இது எப்படி????


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.