மௌனமான நேரம்

 

Friday 22 May 2009

பிரபாகரா - நீ நல்லவனா கெட்டவனா?

Posted by மௌனமான நேரம் | Friday 22 May 2009 | Category: |
'தலைவருக்கு என்ன ஆனதோ' என்று பதறும் கூட்டம் ஒரு புறம் ,ஒழிந்தான் ஒரு தீவிரவாதி என்று ஆனந்த கூத்தாடும் கூட்டம் ஒரு புறம் என்று ஒரு பரபரப்பான சூழல் இன்று. காந்தி யும் மண்டேலா வும் அஹிம்சா வழியில் போராட வில்லையா? அவர்கள் சுதந்திரம் வாங்கவில்லையா? இப்படி பல உயிர்களை கொன்று குவிப்பதுதான் விடுதலை போராட்டமா? என்று கூட பலர் பேசியும் எழுதியும் தங்கள் கருத்துக்களை சொல்கிறார்கள்.

கண்டிப்பாக வன்முறை எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான தீர்வு இல்லை என்பது உண்மைதான். அன்பை விட சிறந்த ஒரு ஆயுதம் வேறு ஒன்றுமில்லை என்பதும் உண்மை தான். ஆனால் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்! உங்கள் குழந்தையை உங்கள் கண் முன்னே ஒரு மிருகம் சூறையாட வருகிறது என்றால், நீங்கள் அன்பாலே அந்த மிருகத்தை அடக்க வேண்டும் என்று நினைபீர்களா அல்லது உங்கள் குழந்தையை காப்பற்ற வேண்டும் என்று நினைபீர்களா?


நான் பிரபாகரன் நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ கூற வரவில்லை. ஆனால் எந்த ஒரு மனிதனும், அவன் எந்த நாடு , மதம் ,மொழி, இனத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் தன் தன்மானம் ஒன்றை காப்பற்ற வேண்டும் என்று கண்டிப்பாக நினைப்பான்.தனக்கோ, தன்னை சார்ந்தவர்களுக்கோ இழிவு ஏற்பட்டால் கண்டிப்பாக எதிர்த்து போராடுவான்- அது அஹிம்சை முறையோ அல்லது வன்முறையோ!


தீவிரவாதத்தை ஒழிக்க , அமெரிக்கா ஈராக்-உடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவா நினைத்தது? இல்லையே ! ஆயுதத்தை தானே எடுத்தது ! இதனை ஏற்று கொண்ட உலகம் ,தங்கள் உயிரையும் உடமையையும் காப்பற்றி கொள்ள பிரபாகரனும் ஈழ தமிழர்களும் ஆயுதம் ஏந்தியதை ஏன் ஏற்று கொள்ள மறுக்கிறது.ஒரு நாட்டில் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள், வாழ்வின் அடிப்படை தேவைகள் மறுக்கப்பட்டு, அடக்கப்பட்டு வேதனைப்படுகிறார்கள் என்பதை தெரிந்த உலக நாடுகள், தாங்கள் தலையிட்டு சுமுக முடிவு கொண்டு வர முயற்சித்திருந்தால் ஒரு வேளை இப்பாடி ஒரு போராட்டமோ, போராளி கும்பலோ உருவாகாமல் இருந்திருக்கலாம்.வேறு யாருமே உதவாத நிலையில், தங்களை காப்பாற்றி கொள்ள வேறு வழியில்லாமல் ஆயுதம் ஏந்தியவர்களை, தன் உயிரை மட்டும் கொடுத்து பிற பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தவர்களை உலகின் 32 நாடுகள் தீவிரவாதிகள் என்று அறிவித்தது நியாயமா? அவர்களுடைய பிரச்சனை என்ன என்றே தெரியாமல் , தெரிந்து கொள்ள விரும்பாமல், அவர்கள் செய்வது தவறு என்று மட்டும் சொல்வது சரியா? அவர்கள் ஆயுதம் எடுத்தது தவறு என்றால், அந்த தவறுக்கு உலக நாடுகள் எல்லாமும், எல்லா மனிதர்களும் பொறுப்பாவோம்.


எங்கோ யாரோ சாகிறார்கள் நமக்கென்ன என்று இல்லாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு கூட்டம் இல்லமே போயிருக்கும். இத்தனை சாவுகள் நடக்காமலே இருந்திருக்கும். சாவது எந்த பக்க மனிதனாயிருந்தாலும் அதுவும் ஒரு உயிர் தான் . இது வரையும் தலையிடாமல் ,உண்மை நிலை அறியாமல்,இப்பொழுதும் அவன் தீவிரவாதிதான் என்று அலசி ஆராயாமல் முடிவு செய்து , பல மனிதர்கள் அடிமையாகவே வாழ்வு நடத்த அனுமதிக்க போகிறோமா??


ஒரு வேளை பிரபாகரன் கெட்டவனாக கூட இருக்கலாம். ஆனால் அவனது குறி்கோள் விடுதலை.. அடிமை தளத்திலிருந்து விடுதலை. அடிமைத்தனம் என்றால் என்னவென்று அதனை அனுபவிக்காத நமக்கு புரியாதுதான் ..ஆனால் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாமா? தமிழனோ , சிங்களனோ ,ஸ்ரீலங்காவில் இருப்பவனும் மனிதன் தான், நம் எல்லோரையும் போல விடுதலையை சவாசிக்க ஆசைப்படும் ஒரு உயிர்தான்.


அரசியலுக்க்காகவும், தனி மனித லாபத்திற்காகவும் ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சனையை உபயோக படுத்துவதை விட்டு விட்டு, நம் சக மனிதர்களின் பிரச்சனை என்று உணர்ந்து, அங்கு நடக்கும் உண்மை நிகழ்வுகளை ஆராய்ந்து, தமிழனும சிங்களனும் அமைதியாக வாழ நாம் வழி ஏற்படுத்த முயல வேண்டும்.


இதை யோசிக்க தமிழனாக தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.. மனிதனாக யோசித்தாலே போதும்..

ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.