மௌனமான நேரம்

 

Monday 20 June 2011

இந்திய சுதந்திர போராட்டம் - தொடர் (2)

Posted by மௌனமான நேரம் | Monday 20 June 2011 | Category: |
1849-ஆம் அண்டில் பஞ்சாப் இணைக்கப்பட்டவுடன், சிப்பாய்களுக்கிடையே பல கட்டத்தில் கலகங்கள் வெடித்து அவை படை பலத்தால் அடக்கப்பட்டன. இந்தக் கலகம் பல்லாண்டுகளாக இந்திய சிப்பாய்கள் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இடையே நிலவி வந்த இனஞ்சார்ந்த மற்றும் கலாச்சார வித்தியாசங்களின் காரணமாக உருவாயின.

துப்பாக்கி ரவைகளில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருப்பதாக ஏற்பட்ட வதந்தியே இந்தக் கலகத்தைத் தூண்டியதற்கான முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. சிப்பாய்கள் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்புவதற்கு முன் அந்த தோட்டா உறைகளை பற்களால் கடித்து உடைக்க வேண்டியிருந்தது. அதில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு இருந்தால் அது இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்களை காயப்படுத்துவதாக இருந்தது.

1857 இல் சிப்பாய்கள் (பிரித்தானிய ராணுவத்திலிருந்த இந்திய வீரர்கள்) தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய தோட்டா உறைகளை பயன்படுத்த மறுத்தனர். ஆங்கில அரசு புதிய தோட்டாக்களை மாற்றிக் கொடுக்கவும், சிப்பாய்கள் தாங்களே மெழுகு மற்றும் தாவர எண்ணெயிலிருந்து உருவான உயவுப்போருளை பயன்படுத்தி கொள்ளவும் சம்மதித்தது.

1857 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரக்பூரில் மங்கள் பாண்டே என்ற வீரன் தனது ஆங்கிலேய இராணுவ உயரதிகாரியையும் உதவி அதிகாரியையும் தாக்கி காயப்படுத்தினான். ஜெனரல் ஹார்சே, பாண்டே ஒருவகையான "மத வெறியில்" உள்ளார் என்று கூறி அவரை கைது செய்ய ஜமேதாருக்கு உத்தரவிட்டார், ஆனால் ஜமேதார் மறுத்து விட்டார்.

ஏப்ரல் 7ல் ஜமேதாருடன் சேர்த்து மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார். முழு படைப்பிரிவும் மொத்தமாக தண்டனையளிக்கப்படும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டது. மே 10 இல், 11வது மற்றும் 12வது குதிரைப்படை கூடியபோது அவர்கள் அணிவகுக்க மறுத்து உயர் அதிகாரிகளுக்கு எதிராக திரும்பினர்.

பிறகு அவர்கள் 3வது படைப்பிரிவை விடுவித்து மே 11இல் சிப்பாய்கள் டெல்லியை அடைந்து மற்ற இந்தியர்களுடன் சேர்ந்துகொண்டனர். கடைசி முகலாய மன்னர் பகதூரின் இருப்பிடமான செங்கோட்டை சிப்பாய்களால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அவர்கள் அவருடைய சிம்மாசனத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முதலில் மறுப்பு தெரிவித்த அவர் பிறகு மெதுவாக அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அந்தக் கலகத்திற்கு தலைமையேற்றார்.

விரைவில் வட இந்தியா முழுவதும் கலகம் பரவியது. மீரட், ஜான்சி, கான்பூர், லக்னோ ஆகிய இடங்களிலும் கலகம் பரவியது. ஆங்கிலேயர்கள் மெதுவாகவே பதிலடி கொடுத்தனர், ஆனால் அது காட்டுமிராண்டிதனமானதாக இருந்தது. பிரிட்டிஷார் கிரிமியன் போரிலிருந்து துருப்புக்களை வரவழைத்ததுடன், சீனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஐரோப்பியத் துருப்புக்களையும் இந்தியாவிற்குத் திருப்பிக்கொண்டனர்.

ஒருவார தெருச்சண்டைக்குப் பின்னர் பிரிட்டிஷார் அந்த நகரத்தை திரும்பப் பெற்றனர். முக்கியத்துவம் வாயந்த கடைசி போர் 1858 ஜூலை 20 இல் குவாலியரில் நடைபெற்றது. இப்போரின்போதுதான் ராணி லட்சுமி பாய் கொல்லப்பட்டார்.

இதுவே சிப்பாய்க் கிளர்ச்சி அல்லது சிப்பாய் கலகம் என்று அழைக்கப்படுகிறது.

இந்திய சுதந்திர போராட்டம் தொடரும்....

நன்றி விக்கிபீடியா...

ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.