Thursday, 23 June 2011
சர்ர்ர் இன்னு சொல்லுறானுவே , புர்ர்ர்ர் இன்னு சொல்லுறானுவே
சார்ர்ர் இன்னு சொல்லுறானுவே, மோர்ர்ர் இன்னு சொல்லுறானுவே
தமிழ் இன்னு சொல்லுறானுவே , இங்க்லீஷ் இன்னு சொல்லுறானுவே ....
'அண்ணாச்சி ஆச படுறவிய, கொஞ்சம் எழுந்து நில்லுல'
'நிக்குறேன்! நிக்குறேன்! நிக்குறேன்!'
'ஏலே என்ன சொல்லுதியோ?'
'ஏலே என்ன சண்டை வேண்டி கிடக்கு இப்போ?'
'எரும மாடு, உன்னதான்ல, எதுக்குல நாண்டுட்டு சண்டை போடுத?'
'தமிழ், தமிழுன்னு சொல்லி, எம்ல மண்ணை வாரி தலைல, மாத்தி, மாத்தி போட்டுகேயே?'
'இவ ப்ளாக் போட்டுருவேன் இன்னு சொல்லுதா, அவ போடு இன்னு சொல்லுதா...'
'நீ நிறுத்துல'
'நீ நிறுத்துல முதல்ல...'
'தமிழ் இலக்கியம் வளர்த்தது போதும்ல, எம்ல மானத்த வாங்குற?'
'காட்டி குடுத்து, குடுத்து தமிழ் அழிச்சது போதும்ல, ப்ளாக்-ல சண்டை போடுத நிறுத்துல'
'நா சொல்லி நீ திருந்த மாட்டன்னு தெரியும்ல...'
இப்போதெல்லாம், ப்ளாக்களில் சண்டை போடுவதும், தனியொரு மனிதனை தாக்கி ப்ளாக் போடுவதும், ப்ளாக் போட்டுருவேன் இன்னு ப்ளாக்மெயில் (?) பண்ணுவதும் நிறைய நடக்குது. இது எந்தளவுக்கு ஆரோக்கியமானதா இன்னு தெரியவில்லை!!... இதுபற்றி பலர் ப்ளாக் போட்டும், ஏதும் குறைந்த மாதிரி தெரியவில்லை!!...
தவறு செய்யும் யாரும் திருந்த மாதிரி தெரியவில்லை!!...
கொஞ்சம் ஐடியா குடுங்க !!! பல சமயம், நம் பயனுள்ள நேரம் இவர்களால் வீணடிக்கப்படுகிறது...
தொடர்புள்ள இடுகைகள்: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: