மௌனமான நேரம்

 

Friday, 24 July 2009

இந்திர விழா - என் பார்வையில்!

Posted by மௌனமான நேரம் | Friday, 24 July 2009 | Category: |
ஆங்கிலத்தில் Disclosure என்றும், ஹிந்தியில் aitraaz என்றும் வெளி வந்த படத்தின் கதை தான் இந்திர விழா.

உண்மைக்கும் பொய்க்கும் இடையில் நடக்கும் சட்ட போராட்டம் தான் இதன் அடிப்படை கதை. அதை முதன் முதலில் எழுதியவரும், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் இயக்கியவர்களும் அந்த மைய கருத்து மாறாமல் இருக்க கவனம் செலுத்தியிருந்தார்கள். தமிழில் இந்த கருத்து இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு, கவர்ச்சிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.



ஹேமமாலினி - அறிமுக நாயகி. படத்தில் முதலில் அறிமுகமாவது நாயகி, கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கலாம். மெழுகு பொம்மை போல வந்து போகிறார். நாயகனுக்கு நாயகிக்கும் இடையில் நடக்கும் ஆரம்ப காட்சிகள்- அதை குறும்பு என்று எடுத்து கொள்ள வேண்டுமா என்று தெரிய வில்லை. அதை விட நாயகன் நாயகியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் காட்சி , பக்கத்தில் நல்ல சுவர் இருந்தால் முட்டி கொள்ளலாம் போல இருக்கிறது.

இத்தனை அவமான படுத்தின பிறகும், நாயகன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன், வேறு எதுவுமே யோசிக்காமல், புதுமை பெண்ணாக, 'எவனோ ஒருத்தன் கிடச்சா போதும்' என்று மண்டையை மண்டையை ஆட்டி நாயகி ஏற்று கொள்வது , பெண்களை பேக்கு, லூசு என்று சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது. அது எப்படி இப்படி ஒரு இடம், பொருள், ஏவல் எல்லாம் இவர்களால் யோசிக்க முடிந்ததோ தெரியவில்லை.

ஸ்ரீகாந்த் டைரக்டர் சொன்னதை செய்திருக்கிறார்.

படத்தில் மிக முக்கிய வேடத்தில் வரும் நமீதா. இவர் கொஞ்சம் நடிக்க மெனக்கெட்டிருகிறார் என்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் அவர் கவர்ச்சிக்காக உபயோகபட்டிருப்பது தான் ரொம்பவுமே பட்டவர்த்தனமாக தெரிகிறது நடிப்பை விட.

ஸ்ரீகாந்தும் நமிதாவும் சம்பந்த பட்ட படத்தின் திருப்பு முனையான காட்சி கொஞ்சம் நாடகத்தனமாக இருக்கிறது. இந்த காட்சி ஆங்கிலத்தில் டெமி மூர் (Demi Moore) , ஹிந்தியில் பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) ரொம்ப அழகாக செய்திருப்பார்கள். இந்த காட்சியில் முக்கிய சாட்சியாக வரும் கண்ணாடி எப்படி அந்த இடத்திற்கு வந்தது என்று தெரியவில்லை (ஒரு வேளை நான் தான் அந்த இடத்தை கவனிக்கவில்லையோ? )

அடுத்து படத்தின் காமெடியும் கோர்ட்டும் . இதை ரொம்பவும் பின்னி பிணைய விட்டிருக்க வேண்டாமோ! மிகவும் சீரியஸ் ஆ ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு செல்ல வேண்டிய இந்த காட்சிகளில், காமெடி கலந்ததால் அதனுடைய சாராம்சம், முக்கியத்துவம் குறைந்து விட்டது போல் இருந்தது . கோர்ட் ரூம் டிராமா ரூம் போல இருந்தது. No seriousness where it ought to be.

நாசர் அவர் வேலையை நன்றாக செய்திருக்கிறார். Y.G.மகேந்திரன் கோர்ட்-இல் வாதாடுவது நன்றாக இருந்தது. ரகசியா ஒரு வேடம் செய்திருக்கிறார்.


BuyOne, GetOne Free for a Week - 7/20-7/26!

மொத்தத்தில் நல்ல கதையை சொதப்பியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் உள்ள கதையை அப்படியே வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ.

அந்த இரண்டு மொழிகளிலும் திரைபடத்தை பார்க்கும் பொது உள்ள நிறைவு இதில் கிடைக்கவில்லை. அதில் மனதில் நின்றது போல இதில் எந்த காட்சியும் மனதில் நிற்கவில்லை.

ஆக மொத்தம், நமிதாவையும், நமிதா ரசிகர்களையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் இது.

மற்றவர்களுக்கு ??

ஏமாற்றம்!
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.