மௌனமான நேரம்

 

Monday 20 July 2009

இது கலாசார மாறுதலா? மீறலா?

Posted by மௌனமான நேரம் | Monday 20 July 2009 | Category: |

நம் கலாசாரத்திற்கு என்று பல தனித்துவங்கள் உண்டு. ஒருவனுக்கு ஒருத்தி என்றும், கற்பு (ஆண், பெண் இருவருக்கும் ) என்றும் பல விஷயங்களை சொல்லலாம். திருமணத்துக்கு முன்பு கணவன் மனைவியாக வாழ்வது என்பது இதில் ஏற்றுகொளபடாமல் இருந்த ஒன்று.

பல வருடங்களுக்கு முன் வந்த திரைப்படங்களும் இதை தான் பின்பற்றின. ஒரு சில படங்கள், ஒருவன் பல பெண்களுடன் குடும்பம் நடத்துவதை நியாயப்படுத்தினாலும், அம்மாதிரி படங்களின் எண்ணிக்கை மிக குறைவு. மற்றபடி, திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வதை நியாயப்படுத்தியது போல தெரிய வில்லை.

இப்போது சில காலமாக, இந்த விஷயங்கள் மாறி வருகிறது. உதாரணத்திற்கு, எஸ்.ஜெ.சூர்யா வின் 'அன்பே ஆருயிரே'. இதில், காதலனும் காதலியும் திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாகவே வாழ்வார்கள். இதனை மக்கள் யாரும் எதிர்க்காமல் ஏற்றுகொண்டார்கள்.

அண்மையில் வெளி வந்த கெளதம் மேனன் இன் 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்திலும், சூர்யா, ரம்யாவை விரும்புவதாக சொல்லும்போதும் சரி, சமீரா ரெட்டியை விரும்பும் போதும் சரி, அவர்கள் இருவரும் மனமும் உடலும் இணைவதை சரி என்றே சொன்னார்கள். மக்களும் அதை அங்கீகரித்தார்கள்.


Je t'aime

ராஜேஷ் இன் 'சிவா மனசுலே சக்தி' இல கூட, பட இறுதியில், 'நாங்க மேட்டர் பண்ணிட்டோம்' என்று அதை ஒரு காமெடி சீனாகவே மாற்றியிருந்தார்கள்.

நாம் பல விஷயங்களில் முன்னேறியிருக்கிறோம், மாறி இருக்கிறோம் ,மேற்கத்திய கலாசாரத்தை ஏற்றிருக்கிறோம். நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அதை பின்பற்றுவதில் தவறே இல்லை. ஆனால், அதற்காக, நம் கலாசாரத்தை விட்டுவிட்டு மேற்கத்திய கலாசாரத்தை குருட்டாம்போக்கில் பின்பற்றுவது சரியா?

எதுவுமே 'சரி' என்று வாதிட முடிவெடுத்தால் வாதிடலாம்தான். ஆனால், வாதங்களை தாண்டி ஞாயம் என்று ஒன்று உண்டு. நமக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. பழமையான கலாசாரம் உண்டு. தேவையற்ற விலங்குகளில் இருந்து விடுபடுவது ஒருபுறம் இருக்க, அடிமைத்தளையை உடைப்பதும், சுதந்திரமாக இருப்பதும் ஒருபுறம் இருக்க, நாம் சுதந்திரம் என்ற போர்வைக்குள் சிக்கி, நமக்கென்று விதிமுறைகள் எதுவுமே இல்லாத வாழ்கையை தேடி தேடி, கண்டுபிடித்தோம் என்று கூக்குரலிடுகிறோம்.


Summer Clearance at Vistaprint! Save up to 90%!


இது கலாசார மாறுதலா? மீறலா?.

இதில் நன்மை அதிகமா, தீமை அதிகமா?

சிந்திப்போமா?

ulavu.com valaipookkal.com Tamil Blogs

2 பின்னூட்டங்கள்:

  1. இல்ல தல.., இதில் அனைத்துப் படங்களும் படு தோல்வி.

    அ.ஆ. வேறுமாதிரியான ஆங்கிகாரம் கிடைக்கப்பெற்ற படம்..,

  2. வருகைக்கு நன்றி சுரேஷ்!

    தோல்வி படத்துக்கா இல்லை இந்த concept க்கான்னு தெரியலீங்களே!!

    வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா!

    நீங்க சொல்றத நான் 100% ஒத்துக்கறேன்.

    //கலாச்சார மீறுதல் என்பது அவர் அவர் மனைதைப் பொறுத்த விசயங்க...//

    அது சரிதாங்க! போன தலைமுறைக்கு 'இது தவறு' என்று சொல்லித்தரப்பட்டது . இந்த தலைமுறைக்கு 'இது சரியா தவறா என்று நீ முடிவு செய்து கொள்' என்று சொல்லி தரப்பட்டது. அடுத்த தலைமுறைக்கு 'இதுதான் சரி' என்று சொல்லிகொடுதுவிடுவோமோ என்று ஒரு பயம் எனக்கு .

    அப்படி நடந்து விட்டால், அடுத்த தலைமுறை இது சரியா தவறா என்று யோசிக்காமல், இது தான் சரி, இது தான் நம் கலாசாரம் என்று நினைக்க ஆரம்பித்து விடாதா?


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.