மௌனமான நேரம்

 

Sunday, 26 July 2009

காதலை ஏற்கிறேன்!

Posted by மௌனமான நேரம் | Sunday, 26 July 2009 | Category: |

ஆறு மணிக்கு நான் கோவிலுக்கு வருவது தெரிந்து நீ ஐந்தரைக்கே ஆண்டவனை பார்க்க ஆஜரானாய். அது பிடித்தது.
என்னிடம் இரண்டு நிமிடங்கள் பேச நீ இரண்டு மைல் பயணபட்டு வந்தாய். அது பிடித்தது.

நான் கொந்தளிக்கும் கோபத்துடன் வந்தாலும், ஒரு பார்வையில் என்னை சிரிக்க வைத்தாய். அது பிடித்தது.


மனதில் பட்டதை உன்னிடம் மறைக்காமல் பேச மறைமுகமாக ஆதரவு தந்தாய். அது பிடித்தது.


என் தோழர்களிடமும் தோழிகளிடமும் அடிக்கடி பேசும்போது, வெளியே சொல்லாமல் உள்ளுக்குள் கொஞ்சம் பொறாமை கொண்டாய். அது பிடித்தது.


உன் மீது நான் கொஞ்சம் பாசமாய் சொன்ன இரண்டு வார்த்தை கேட்டு உன் கண்ணில் பெரிய திருப்தி. அது பிடித்தது.


எனக்கு பிடித்த நிறத்தில் நீ உடை உடுத்தி, அது எனக்கு புரிய வேண்டும் என்று நீ பட்ட பாடு. அது பிடித்தது.


என்னை பேச விட்டு, நான் சொல்லும் ஒவ்வொன்றையும் ரசித்து கேட்டாய். குழந்தைதனமான புலம்பல்களையும் கூட. அது பிடித்தது.


நான் தெரியாமல் செய்யும் சின்ன தவறை கண்டிப்பாக கண்டிப்பாய். அது பிடித்தது.


உன்னிடம் பிடிக்காதது எத்தனை இருந்தாலும் உன்னுடன் இருக்கும்போது அது எல்லாமே மறந்து விடுகிறது. அது பிடித்தது.


ஆயிரம் பேர் கூட்டத்திலும், அனாயாசமாய் என்னை கண்டுபிடிப்பாய். அது பிடித்தது.


என் குடும்பத்துடன் ஜென்ம ஜென்மமாய் பழகியது போல் அழகாக ஐக்கியமானாய். அது பிடித்தது.


250x250என்னை ஒரு நாள் பார்க்காததால் வாடிய முகத்துடன் அடுத்த நாள் அவசரமாக நீ ஓடி வந்தாய். அது பிடித்தது.

காதலிக்கிறேன் என்று சொல்லாமல் என்னை கல்யாணம் செய்ய வேண்டும் என்று நீ நேற்று சொன்னாய். அது பிடித்தது.

இத்தனை 'பிடித்ததுகளின்' மொத்தமான உன்னை ரொம்ப பிடித்தது.

உன் காதலை ஏற்கிறேன்.

உன்,
ஓவியா....
ulavu.com valaipookkal.com Tamil Blogs

1 பின்னூட்டங்கள்:

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.