மௌனமான நேரம்

 

Saturday, 6 August 2011

குழந்தைகள் அடிவாங்குவது ஏன்?

Posted by மௌனமான நேரம் | Saturday, 6 August 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
குழந்தைகள் பெரும்பாலும் அடிவாங்குவது அவர்களின் பெற்றோரிடம் இருந்து தான். எதற்காக குழந்தைகள் அடிவாங்குகிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலும், அவர்கள் பண்ணுகிற சேட்டைக்காகவோ, குற்றத்துக்காகவோ இல்லவே இல்லை. கணவன், மனைவி இருவர்களிடேயே நடக்கும் சண்டை, மனவருத்தம், ஏரிச்சல் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளே!
சில நேரத்தில், அவர்கள் கொடுக்கும் அடி, அந்த நேரத்தில் ஒன்னும் பண்ணாமல் போகலாம், ஆனால் அந்த அடியால் அவர்கள் முதுமையில் கஷ்ட படுவார்கள் என்பதே உண்மை.

சில நேரத்தில், கொடுக்கும் அடியை விட, வார்த்தையால் பெற்றோர்கள், குழந்தைகளை கொல்லாமல் கொல்லுகிறார்கள். இதுவெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம் என எனக்கு தோன்றுகிறது.

‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஆனால், அடி குடுத்து வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தவில்லை.

பெற்றோர்கள் சொல்வதை மிகச் சரியாக புரிந்து கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு உண்டு. அதே சமயத்தில் குழந்தையின் நல்ல நடத்தைகளை பரிசு, பாராட்டு, அன்பு, அரவனைப்பு, ஆகிய வலிமையூட்டிகளை பயன்படுத்தி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து அவ்வாறு ஊக்குவித்துக்கொண்டே வந்தால், நல்ல நடத்தைகள் அதிகமாகி கெட்ட நடத்தைகளுக்கு நேரமில்லாது அவை தானாகவே குறைந்து விடும்.

அதே நேரத்தில், பிறர் மேலுள்ள கோபத்தை பெற்றோர்கள் குழந்தையிடம் காட்டுவதை தவிர்க்கவேண்டும்.

(குறிப்பு: குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றம்)

Tuesday, 2 August 2011

மரணம் தந்த வலி

Posted by மௌனமான நேரம் | Tuesday, 2 August 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
ண் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்படும் அளவுக்கு அறிவியல் வளர்ந்த போதும், ‘மரணம்’ என்னும் இயற்கை நியதியை மனிதனால் இன்று வரை வெல்ல முடியவில்லை. ‘மரணம்’ என்னும் வலி, நண்பரால், உறவுகளால் ஏற்படும்போது நம்மால் தாங்க முடிவதில்லை, ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அந்த நேரத்தில், தாங்க முடியாத துக்கத்தால் சிலர் தங்களையும் மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள்.


தந்தையின் மரணம்  எனக்கு ஏற்பட்ட மரண வலி. இரண்டு வார காலம் கடந்த நிலையிலும், என்னால் மறக்க முடிய வில்லை, ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதோ ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டு போனதை போல, எதோ இழந்ததை போல, தினந்தினம் வலிக்கிறது.

அந்ததொரு கொடிய நோயை, எந்த ஒரு மருத்துவராலும் தீர்க்க முடியாததாய் போனது.   மாற்று முயற்சிக்கு அவரது வயது ஒரு தடையாய் போனது.  இதற்கு என் தந்தையே ஒரு காரணம் என கூட சொல்லலாம். என்னை என்ன செய்திடும் என்ற அசட்டு நம்பிக்கை. இதை சில காலம் முன்பாக சொல்லி இருந்தால்... இது நடந்து இருக்காது என்பது என் நம்பிக்கை, இது உண்மையும் கூட. (நாங்களும் சரியான நேரத்தில் கவனிக்க தவறி விட்டோமோ, தெரியவில்லை)

அவர் நல்லதொரு கணவனாய் , தந்தையாய், மாணவர்களுக்கு ஆசிரியராய், ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியராய், நண்பர்களுக்கு உற்ற நண்பராய் எங்களுக்கு என அவர் ஆற்றிய பணிகள் ஏராளம்.  

"விருந்தோம்பல்" என்ற வார்த்தைக்கு, அவரிடம் நான் கற்றவை மறக்க இயலாது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாத, எல்லோரையும் சமமாக உபசரிக்கும் அவருக்கு, அவரே நிகர். சராசரி மனிதர்களை விட, பல படி மேலாக தான் வாழ்ந்தார்.

அவர் விட்டு சென்ற நினைவுகளை எப்போதும் மறக்க இயலாது.  அவரது பணிகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

இதை படிக்கும் நண்பர்களுக்கு, நான் சொல்லுவது எல்லாம், எந்த ஒரு உடல் தொல்லைகளையும் வயது இருக்கும் போதே மருத்துவம் செய்திட வேண்டும்.  சில உடல் தொல்லைகளை, வயது தாண்டிய பிறகு மருத்துவம் செய்திட இயலாது. இந்த யோசனை உங்களுக்கு மட்டுமல்ல,  உங்களை சார்ந்து இருக்கும் பெற்றோருக்கும் கூட. என்னை என்ன செய்திடும் என்ற அதே அசட்டு நம்பிக்கை அவர்களிடமும்  இருக்க கூடும். ஆனால், நாம் தான், எடுத்து சொல்லி மருத்துவம் செய்திட வேண்டும்.

அதுமட்டுமல்ல, நாம் வைத்திருக்கும் இரண்டு சக்கர வண்டிக்கு அடிக்கடி சர்வீஸ் செய்யும் நாம், நமக்கு, நம் உடம்புக்கு ஏன் செய்வதில்லை?

என் தந்தை ஆன்மா சாந்தி அடைய  தினம் இறைவனிடம் வேண்டும் நான்.

மரணம் தந்த வலி, மரண வலி.

Tuesday, 26 July 2011

விமானத்தில் சுயநலம்

Posted by மௌனமான நேரம் | Tuesday, 26 July 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
ண்டனில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லி நோக்கிப் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது.  நானும் பத்தில் ஒன்றாக, ஏறி சன்னல் ஓரமா என் இருக்கையில் இருக்க, விமானம் புறப்படத் தயாரானது.  
"திட்டமிட்டதை விட 10 நிமிடங்கள் முன்னதாகவே டெல்லி சென்று விடுவோம்" என்று விமானி சொல்ல, சீட் பெல்ட் சரியாக இருகிறதா என்று விமான பணிப்பெண்கள் (Air Hostess / Cabin Crew ) எல்லாத்தையும் சரி பார்க்க,

"டேக் ஆப்"  சொன்னார் விமான கேப்டன்.

10 நிமிடங்கள்  ஆனது, 20 நிமிடங்கள்  ஆனது, ஆனால் சீட் பெல்ட்யை எடுக்க சொல்லவே இல்லை.

பலர் விமான பணிப்பெண்களின் உதவி கேட்டு, emergency light யை ON பண்ண, "யாரும் சீட் பெல்ட்யை எடுக்க வேண்டாம்" என்று ஒரு விமான பணிப்பெண் எச்சரிக்கை  பண்ண,  சிறிது நேரத்தில், கடும் மேக மூட்டத்தால், விமானம் ஆட ஆரம்பித்தது. 

சன்னல் ஓரமா இருந்த என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது...விமான கேப்டன் மேலே போவதும், கீழே போவதும், வளைந்து போவதும் கஷ்டப்பட்டு விமானத்தை இயக்குவதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..

இதில், ஒரு கழுதை (அப்படித்தானே சொல்லணும்), emergency light யை ON பண்ணி, பண்ணி விமான பணிப்பெண்களின் உதவி கேட்டு தெல்லை கொடுக்க,  யாரும் வரவே இல்லை. 

சீட் பெல்ட்யை எடுக்க சொல்லவே இல்லை. "யாரும் சீட் பெல்ட்யை எடுக்க வேண்டாம்" என்று ஒரு விமான பணிப்பெண் எச்சரிக்கையும்  கொடுத்து இருக்க, அந்த கழுதைக்கு புரிய வேண்டும்.

ஒரு வழியாக, விமானம் சீராக செல்ல, சீட் பெல்ட்யை எடுக்க சொன்னார்கள். emergency light யை ON பண்ணின பயணிகளை, விமான பணிப்பெண்கள் உதவ, ஒரு விமான பணிப்பெண் அந்த கழுதைகிட்ட கேட்க, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுற அந்த கழுதை என்ன என்னவோ பேசுது. (அவங்க அப்பன் வீட்டு விமானம்)... நிலைமையை பல முறை எடுத்து சொல்லி கூட புரியவில்லை அதுக்கு...

அதுக்கு என்ன அவசரம் தெரியுமா? அந்த பெரிய கழுதையோட, சின்ன கழுதைக்கு குடிக்க தண்ணி வேணுமாம்.

அட கழுதை, உன்னால 10 நிமிடங்கள் பொறுக்க முடியாது?  

பணம் இருக்கலாம், படிச்சி இருக்கலாம், ஆனா நேரத்துக்கு தகுந்தால் போல், சுய அறிவோடு நடக்க தெரியனும்....
 
இவர்கள் திருந்துவது எப்போதோ?

Wednesday, 6 July 2011

பத்திரிகை சுதந்திரம்

Posted by மௌனமான நேரம் | Wednesday, 6 July 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
இந்திய சுதந்திர போராட்டத்தில், பத்திரிகைகள் பெரும் பங்காற்றின... ஆனால், இப்போது இந்த (சில) பத்திரிகைகள் அரசியல் சாயம் பூசப்பட்டு ஏதாவது ஒரு அரசியல் கட்சியை சார்ந்தே உள்ளன..

இது போதாத குறைக்கு, அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று பத்திரிகையும். TV சேனலயும் வைத்து கொண்டு, மக்களை பாடாய் படுத்துகின்றன.

நடு நிலையான , உண்மையான செய்திகளை சொல்லா விட்டாலும் பரவாயில்லை, பொய்யான / தவறான செய்திகளை மக்களிடம் திணிக்க பார்க்கின்றன. இது அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது தனது சேனல் / பத்திரிகையின் விளம்பரத்துக்காகவோ இருக்கலாம். இதனால் மக்களிடேயே உண்மையான செய்தி பற்றிய குழப்பம் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த பயனும் இல்லையே!...

1947 க்கு முன், மக்களிடேயே ஒற்றுமை ஏற்படுத்தி, இந்திய சுதந்திர போராட்டத்தில் எப்படி பத்திரிகைகள் உதவியதோ , அதே பத்திரிகைகள் 1947 க்கு பின் , தங்களின் நலனுக்காக மக்களிடேயே பிரிவினையையே ஏற்படுத்த முயல்கின்றன என்பதே உண்மை…

Saturday, 2 July 2011

குடும்பம்

Posted by மௌனமான நேரம் | Saturday, 2 July 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
நண்பர் ஒருவர் பெருமையாக சொல்லி கொண்டிருந்தார் - 'என் குடும்பதில் வரவு செலவு பத்தி என்னை தவிர வேற யாருக்கும் தெரியாது'. இதில் என்ன பெருமை இருக்கிறது, அல்லது இது பெருமை பட வேண்டிய விஷயமா? குடும்ப சுமையை தானே தாங்குவதில் அவருக்கு பெருமையும் சந்தோஷமும் இருப்பது என்னவோ தவறில்லை தான். பாராட்டபடவேண்டிய விஷயமும் கூட. ஆனால் வரவு செலவு எதையுமே மனைவி, குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது சரியா தவறா? நல்லதா கெட்டதா?

இந்த பழக்கம் 'நான்' என்கிற எண்ணத்தினால் வந்திருந்தாலும் சரி, பிரச்சனைகள் நம்மோடு போகட்டுமே என்கிற நல்லெண்ணத்தில் வந்திருந்தாலும் சரி, என்னை பொருத்த வரை மொத்தத்தில் அதனால் உள்ள நன்மைகளை விட தீய்மைகள் தான் அதிகம். குடும்பதில் உள்ள வரவுகளையும் சிறு சிறு செலவுகளையும் குடும்ப உறுப்பினர்களுடன் கூடி கலந்து ஆலோசித்து செய்வதால் எல்லொருக்கும் தானும் அந்த குடும்பதில் ஒரு அங்கம் என்கிற சந்தொஷம் கிடைக்கிறது.

ஒரு ஆடம்பர செலவு செய்யும் முன் இது தேவையா என்கிற யோசிக்கும் மன பக்குவமும் வருகிறது. குடும்பதில் உள்ள நிறைவுக்கும் குறைவுக்கும் நாமும் ஒரு காரணம் என்பது புரிகிறது. குழந்தைகளுக்கும் சிறு வயது முதலே வரவு என்றால் என்ன செலவு என்றால் என்ன என்பதும் புரிகிறது. தங்களுக்கு என்று குடும்பதில் உள்ள பொறுப்பை உணர செய்கிறது.

Saturday, 25 June 2011

Rs 600 Cash back - Spice Jet

Posted by மௌனமான நேரம் | Saturday, 25 June 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்





Friday, 24 June 2011

10% Cash Back - கிங்க்பிஷேர்

Posted by மௌனமான நேரம் | Friday, 24 June 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
10% Cash Back - கிங்க்பிஷேர்

KingFisher Banners

Thursday, 23 June 2011

ஏலே என்ன சொல்லுதியோ?

Posted by மௌனமான நேரம் | Thursday, 23 June 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
சர்ர்ர் இன்னு  சொல்லுறானுவே ,  புர்ர்ர்ர்  இன்னு  சொல்லுறானுவே

சார்ர்ர் இன்னு சொல்லுறானுவே, மோர்ர்ர் இன்னு  சொல்லுறானுவே 

தமிழ் இன்னு சொல்லுறானுவே , இங்க்லீஷ் இன்னு  சொல்லுறானுவே ....

'அண்ணாச்சி ஆச படுறவிய, கொஞ்சம் எழுந்து நில்லுல'

'நிக்குறேன்! நிக்குறேன்! நிக்குறேன்!'
 
'ஏலே என்ன சொல்லுதியோ?'

'ஏலே என்ன சண்டை வேண்டி கிடக்கு இப்போ?'

'எரும மாடு, உன்னதான்ல, எதுக்குல நாண்டுட்டு சண்டை போடுத?'

'தமிழ், தமிழுன்னு சொல்லி, எம்ல மண்ணை வாரி தலைல, மாத்தி, மாத்தி போட்டுகேயே?'

'இவ ப்ளாக் போட்டுருவேன் இன்னு சொல்லுதா, அவ போடு இன்னு சொல்லுதா...'

'நீ நிறுத்துல'

'நீ நிறுத்துல முதல்ல...'

'தமிழ் இலக்கியம் வளர்த்தது போதும்ல, எம்ல மானத்த வாங்குற?'

'காட்டி குடுத்து, குடுத்து தமிழ் அழிச்சது போதும்ல, ப்ளாக்-ல சண்டை போடுத நிறுத்துல'

'நா சொல்லி நீ திருந்த மாட்டன்னு தெரியும்ல...'

இப்போதெல்லாம், ப்ளாக்களில் சண்டை போடுவதும், தனியொரு மனிதனை தாக்கி ப்ளாக் போடுவதும், ப்ளாக் போட்டுருவேன் இன்னு ப்ளாக்மெயில் (?) பண்ணுவதும் நிறைய நடக்குது. இது எந்தளவுக்கு ஆரோக்கியமானதா இன்னு தெரியவில்லை!!... இதுபற்றி பலர் ப்ளாக் போட்டும், ஏதும் குறைந்த மாதிரி தெரியவில்லை!!...

தவறு செய்யும் யாரும் திருந்த மாதிரி தெரியவில்லை!!...

கொஞ்சம் ஐடியா குடுங்க !!! பல சமயம், நம் பயனுள்ள நேரம் இவர்களால் வீணடிக்கப்படுகிறது...

Monday, 20 June 2011

அவன் இவன் - நச் கமெண்ட்ஸ்

Posted by மௌனமான நேரம் | Monday, 20 June 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
அவன் இவன் படம் பற்றிய வாசகர்கள் சொன்ன / எழுதிய கமெண்ட்ஸ் எல்லாம் பொறுக்கி எடுத்தது.
"விமர்சிக்க தெரிந்தவர்கள் மட்டும் விமர்சிக்கவும். இது இந்த வருடத்தின் சிறந்த படம். நன்றி பாலா. "

"பாலா இது தேவையா உங்களுக்கு? நிச்சயம் உங்களுக்கு செருக்கு,ஆணவம் ,திமிர் உண்டு. அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் அதை எங்கள் மேல் தினிக்காதீர்கள். உங்கள் கேரக்டர் இதில் தெரிகிறது.. நிச்சயம் பாலா ரசிகனை ஏமாற்றி விட்டார். உங்களது பழைய படங்கள் நிச்சயம் நல்ல படங்கள்.உங்களது மிக மோசமான படம் அவன் இவன்."

"கேவலமான படம். விஷால்,ஆர்யா நடிப்பு அருமை ஆனால் வீண்.. விழலுக்கு இரைத்த நீர் போல.. டைரக்டர் பாலா இப்படி கீழ்த்தரமாக படம் எடுப்பார் என்று நினைக்கவில்லை.. கதை என்பது இல்லை.. "

"பாலா படம் இப்படி இருக்கும்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல என்ன சொல்ல வர்றார் இன்னு ஒன்னும் வெளங்கல பாலா மாதிரி ஒரு நல்ல இயக்குனர் எவ்வளவு நல்ல கதை சொல்லலாம் ஆனா ஒரு பிட் படம் மாதிரி எடுத்துட்டார் நல்ல நடிகர்களின் உழைப்பை வீண் பண்ணிட்டார் அவருக்கு தலைகனம் அதிகம் ஆயிடுச்சு போல தான் எத எடுத்தாலும் எல்லாம் கொண்ட்டுவேன்னு நினைதுடர் இன்னு நினைகேறேன்,இந்த படம் மத்தவங்களுக்கு புரியாம,இருக்கலாம் ஆனா பாருங்க பாலாவுக்கு தமிழ் ரசிகர்கள் நெறைய பாடம் கத்து தருவாங்க,அடுத்த படம் நல்ல எடுப்பார்,மொத்ததுல பாலா ஏமாத்திட்டார். "

"ஐயோ கடவுளே.. நான் என்ன தவறு செய்தேன்.. இந்த படத்தை பார்க்க வைத்து விட்டாயே.. பாலா நிச்சயம் ஒரு மனோதத்துவ டாக்டரை பார்க்க வேண்டும்.. கொடுமையான படம். விஷால் நடிப்பை பார்த்து என் குழந்தை பயந்து போய் தூங்க வில்லை.. ரொம்ப கீழ்த்தரமான படம். இந்த கண்ராவியை பார்க்க நூறு மைல் பயணம் செய்து இருபது பவுண்டு செலவு செய்து மண்டை காய்ந்து நொந்து போய் இருக்கிறேன்.. "

இந்திய சுதந்திர போராட்டம் - தொடர் (2)

1849-ஆம் அண்டில் பஞ்சாப் இணைக்கப்பட்டவுடன், சிப்பாய்களுக்கிடையே பல கட்டத்தில் கலகங்கள் வெடித்து அவை படை பலத்தால் அடக்கப்பட்டன. இந்தக் கலகம் பல்லாண்டுகளாக இந்திய சிப்பாய்கள் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இடையே நிலவி வந்த இனஞ்சார்ந்த மற்றும் கலாச்சார வித்தியாசங்களின் காரணமாக உருவாயின.

துப்பாக்கி ரவைகளில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருப்பதாக ஏற்பட்ட வதந்தியே இந்தக் கலகத்தைத் தூண்டியதற்கான முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. சிப்பாய்கள் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்புவதற்கு முன் அந்த தோட்டா உறைகளை பற்களால் கடித்து உடைக்க வேண்டியிருந்தது. அதில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு இருந்தால் அது இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்களை காயப்படுத்துவதாக இருந்தது.

1857 இல் சிப்பாய்கள் (பிரித்தானிய ராணுவத்திலிருந்த இந்திய வீரர்கள்) தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய தோட்டா உறைகளை பயன்படுத்த மறுத்தனர். ஆங்கில அரசு புதிய தோட்டாக்களை மாற்றிக் கொடுக்கவும், சிப்பாய்கள் தாங்களே மெழுகு மற்றும் தாவர எண்ணெயிலிருந்து உருவான உயவுப்போருளை பயன்படுத்தி கொள்ளவும் சம்மதித்தது.

1857 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரக்பூரில் மங்கள் பாண்டே என்ற வீரன் தனது ஆங்கிலேய இராணுவ உயரதிகாரியையும் உதவி அதிகாரியையும் தாக்கி காயப்படுத்தினான். ஜெனரல் ஹார்சே, பாண்டே ஒருவகையான "மத வெறியில்" உள்ளார் என்று கூறி அவரை கைது செய்ய ஜமேதாருக்கு உத்தரவிட்டார், ஆனால் ஜமேதார் மறுத்து விட்டார்.

ஏப்ரல் 7ல் ஜமேதாருடன் சேர்த்து மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார். முழு படைப்பிரிவும் மொத்தமாக தண்டனையளிக்கப்படும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டது. மே 10 இல், 11வது மற்றும் 12வது குதிரைப்படை கூடியபோது அவர்கள் அணிவகுக்க மறுத்து உயர் அதிகாரிகளுக்கு எதிராக திரும்பினர்.

பிறகு அவர்கள் 3வது படைப்பிரிவை விடுவித்து மே 11இல் சிப்பாய்கள் டெல்லியை அடைந்து மற்ற இந்தியர்களுடன் சேர்ந்துகொண்டனர். கடைசி முகலாய மன்னர் பகதூரின் இருப்பிடமான செங்கோட்டை சிப்பாய்களால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அவர்கள் அவருடைய சிம்மாசனத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முதலில் மறுப்பு தெரிவித்த அவர் பிறகு மெதுவாக அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அந்தக் கலகத்திற்கு தலைமையேற்றார்.

விரைவில் வட இந்தியா முழுவதும் கலகம் பரவியது. மீரட், ஜான்சி, கான்பூர், லக்னோ ஆகிய இடங்களிலும் கலகம் பரவியது. ஆங்கிலேயர்கள் மெதுவாகவே பதிலடி கொடுத்தனர், ஆனால் அது காட்டுமிராண்டிதனமானதாக இருந்தது. பிரிட்டிஷார் கிரிமியன் போரிலிருந்து துருப்புக்களை வரவழைத்ததுடன், சீனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஐரோப்பியத் துருப்புக்களையும் இந்தியாவிற்குத் திருப்பிக்கொண்டனர்.

ஒருவார தெருச்சண்டைக்குப் பின்னர் பிரிட்டிஷார் அந்த நகரத்தை திரும்பப் பெற்றனர். முக்கியத்துவம் வாயந்த கடைசி போர் 1858 ஜூலை 20 இல் குவாலியரில் நடைபெற்றது. இப்போரின்போதுதான் ராணி லட்சுமி பாய் கொல்லப்பட்டார்.

இதுவே சிப்பாய்க் கிளர்ச்சி அல்லது சிப்பாய் கலகம் என்று அழைக்கப்படுகிறது.

இந்திய சுதந்திர போராட்டம் தொடரும்....

நன்றி விக்கிபீடியா...

Saturday, 18 June 2011

வீட்டு வசதிக் கடன் வட்டி மீண்டும் உயரும்!!

Posted by மௌனமான நேரம் | Saturday, 18 June 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வங்கிகள் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனால்,வீட்டு வசதிக் கடன் பெற்றவர்களின் வட்டிச் சுமை உயரும் என்பதோடு, மாதத் தவணைக் காலமும் அதிகரிக்கும். சென்ற மே மாதத்தில், மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பணவீக்கம், 9.06 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், பணப்புழக்கத்தை குறைத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறைந்த கால கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தி, 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டிவிகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், இதுவரையிலுமாக, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 10 முறை உயர்த்தியுள்ளது. சென்ற மே மாதம் 3ம் தேதி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை 0.50சதவீதம் உயர்த்தியது. இதையடுத்து, 45 வங்கிகள், அவற்றின் பலதரப்பட்ட கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் முதல் ஒருசதவீதம் வரை உயர்த்தின. இதனால் இவ்வங்கிகளிடம் இருந்து வீட்டு வசதி, வாகனம், தனி நபர் கடன்களைப் பெற்றவர்களின் வட்டிச் ”மை அதிகரித்தது.இந்நிலையில், ஒன்றரை மாதத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும், வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளதால், வங்கிகளும் அவற்றின் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வரும் ஜூலை மாதம், இந்த வட்டி உயர்வு இருக்கும் என்று தெரிகிறது. இந்த வட்டி உயர்வால், வீட்டு வசதி கடன் பெற்றவர்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில், வீட்டு வசதிக் கடனுக்கான வட்டி விகிதம் 2 சதவீதம் அதிகரித்து, 8சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. வட்டிச் செலவு கூடியதால், கடனை திரும்ப செலுத்தும் மாதாந்திர தவணைக் காலம் அதிகரித்துள்ளது.இந்த பாதிப்பில் இருந்து கடனாளிகள் மீள்வதற்குள், பேரிடியாக, மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் செய்தி வெளியாகியுள்ளது. அதுபோன்று, புதிதாக வீட்டு வசதிக் கடன் பெறுவோர், வட்டி விகித உயர்வால், மாதத் தவணையாக கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.இதே போல் வாகனக் கடன் பெறுவோரின் வட்டிச் ”மையும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வாகனக் கடன் வாங்கியவர்கள், நிலையான வட்டி விகிதத்தை தேர்வு செய்திருந்தால், அவர்களின் மாதாந்திர தவணைத் தொகையில் மாற்றம் ஏதும் இருக்காது.

ஆனால்,மாறுபடும் வட்டி விகிதத்தை தேர்வு செய்தவர்களின் மாத தவணைத் தொகையோ அல்லது தவணைக் காலமோ அதிகரிக்கும்.வங்கிகள், கடனுக்கான வட்டியை உயர்த்தும் போது, டிபாசிட்டுகளுக்கான வட்டியையும் உயர்த்தும். இது, வங்கிகளில் குறித்த கால வைப்பு நிதியில் முதலீடு செய்வோருக்கு கூடுதல் வருவாயை வழங்கும். குறிப்பாக, ஓராண்டிற்கும் குறைவான முதலீட்டு திட்டங்களில் அதிக வருவாய் கிடைக்கும்.அதுபோல், இந்த வட்டி உயர்வால், மிகக் குறுகிய கால கடன் பத்திரங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் மீதான வருவாயும் அதிகரிக்கும். வட்டி உயரும் போது, குறுகிய கால முதலீட்டு திட்டங்களில் இருந்து வேறு திட்டங்களுக்கு மாறிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.பேங்க் ஆப் பரோடா, எல்.ஐ.சி.ஹவுசிங் பைனான்ஸ் ஆகியவை மிகக் குறைந்த வட்டியில் வீட்டு வசதிக் கடன்களை வழங்குகின்றன. இவை, மாறுபடும் வட்டி திட்டத்தின் கீழ், ஒரு லட்ச ரூபாய்க்கு 8.5சதவீத வட்டியில், மாதம் 2,052 ரூபாய் வீதம் 5 ஆண்டிற்கான வீட்டு வசதிக் கடன்களை வழங்குகின்றன.

எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், நிலையான வட்டி திட்டத்தின் கீழ் வழங்கும் வீட்டு வசதிக் கடனுக்கு, குறைந்தபட்சமாக 8.90சதவீத வட்டியை நிர்ணயித்துள்ளது.10 ஆண்டுகளுக்கான இந்த வட்டி விகித திட்டம், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்ட மாறுதலுக்கான வசதியைக் கொண்டது. பேங்க் ஆப் பரோடா, இதே திட்டத்தின் கீழ், ஒரு லட்ச ரூபாய்க்கு 9.50 சதவீத வட்டியில், மாதம் 2,101 ரூபாய் வீதம் 5 ஆண்டிற்கான வீட்டு வசதிக் கடன்களை வழங்குகிறது.எச்.டீ.எப்.சி நிறுவனம், 1 லட்ச ரூபாய் வீட்டு வசதிக் கடனுக்கு, மாறுபடும் வட்டி விகித திட்டத்தின் கீழ் 9.25 சதவீதமும்(20 லட்ச ரூபாய் வரை), நிலையான வட்டி திட்டத்தில் 11.50 சதவீதமாகவும் வட்டியை நிர்ணயித்துள்ளது.

நாட்டின் பணவீக்கம் மேலும் உயரும் நிலையில், ரிசர்வ் வங்கி, மீண்டும் வங்கிகளுக்கான வட்டியை உயர்த்தினால், வீடு மற்றும் வாகனக் கடன் வாங்குவோரை வீதிக்கு கொண்டு வந்து விடும் என வங்கி வாடிக்கையாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்தனர்..

இந்திய சுதந்திர போராட்டம் - தொடர்

போர்த்துக்கீச மாலுமியான ஸ்கோடகாமாவின் (1498)  வருகைக்குப் பிறகு, கறிமசாலா பொருட்கள் மற்றும் உணவுக்கு சுவை சேர்க்கும் பொருட்களைத் தேடியும் அதன் வணிகத்தில் ஈடுபடவும், ஐரோப்பிய வணிகர்கள், கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர்.

1757-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப்போருக்குப் பின் இராபர்ட் கிளைவின் கீழிருந்த பிரித்தானிய ராணுவம், வங்காள நவாபைத் தோற்கடித்ததன் மூலம், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி தன்னை இந்தியாவில் நிலை நிறுத்திக்கொண்டது. இந்த நிகழ்வே இந்தியாவில் பிரித்தானியப் பேரரசின் தொடக்கமாக கொள்ளப்படுகிறது.

பக்சர் போருக்குப் பின் 1765-ஆம் ஆண்டில் வங்காளம், பிஹார் மற்றும் ஒரிசா மீதான நிர்வாக உரிமைகளை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி பெற்றது. 1849-ஆம் ஆண்டு மகாராஜா ரஞ்சித் சிங்கின் மறைவுக்குப் பின்னரும், முதல் ஆங்கில-சீக்கியப் போர் மற்றும் இரண்டாம் ஆங்கில-சீக்கியப் போர் ஆகியவற்றிற்குப் பின்னரும் 1849-ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி, பஞ்சாபையும் இணைத்துக்கொண்டது.

இராபர்ட் கிளைவ், பிசிப்போருக்குப் பின் மீர் ஜாபருடன் பிரித்தானிய பாராளுமன்றம் புதிதாக வெற்றி கொள்ளப்பட்ட நிர்வாகங்களை ஆளுவதற்கு ஏதுவாக, 1773-ஆம் ஆண்டில் ஒழுங்குமுறைச் சட்டம், 1784-ஆம் ஆண்டில் இந்தியச்சட்டம் மற்றும் 1813-ஆம் ஆண்டில் தனியுரிமைச் சட்டம் ஆகிய சட்டத் தொடர்களை நிறைவேற்றியது. இவையனைத்தும் பிரித்தானிய அரசாங்க ஆட்சியை வலுப்படுத்த உதவின.

1835- ஆண்டில் ஆங்கிலம் பயிற்சி மொழியாக்கப்பட்டது. மேற்கத்திய கல்வி கற்ற இந்து உயர்குடியினர் தீண்டாமை (ஜாதி), குழந்தை திருமணம் மற்றும் சிதையேறுதல் ஆகிய சர்ச்சைக்குரிய இந்து சமய சமூக பழக்க வழக்கங்களைக் களைந்தெறிய முயற்சி செய்தனர். கல்கத்தா மற்றும் பம்பாயில் (தற்போது மும்பை) தோன்றிய இலக்கிய மற்றும் விவாத இயக்கங்கள், வெளிப்படையான அரசியல் சொற்பொழிவுகளுக்கு அடிகோலியது. இந்த முன்னோடி சீர்திருதாளர்களின் கல்வியறிவு மற்றும் இதழியல் துறையை திறமையாக பயன்படுத்திக்கொண்ட விதம் ஆகியவை, காலனிய இந்தியாவிற்குள்ளாக சீர்திருத்தங்களை பெரிய அளவில் கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகளை உருவாக்கியது, அச்சீர்த்திருத்தங்கள், இந்தியச் சமூக விழுமியங்கள் மற்றும் இங்குள்ள சமயச் சடங்குகளோடு சமரசம் செய்துகொள்ளாதவாறு உருவாகிற்று. இந்த தற்காலப் போக்குகள் இந்தியச் சமூகத்தின் மீது செல்வாக்கு செலுத்தியபோதிலும், இந்தியர்கள் பிரித்தானிய ஆட்சியை வெறுப்பது அதிகரித்தபடியே இருந்தது. 

கறிமசாலா பொருட்கள் வணிகரான ஃபிராங்க் பிரவுன் வேலைக்காரர்கள் கொடுமைப்படுத்தப்படும் கதைகள் மிகைப்படுதப்படவில்லை எனவும் அதிகாரவர்க்கத்திடம் பிடிபட்டு "வேண்டுமென்றே அடித்துத் துன்புறுத்தப்படும்" மக்களைப்பற்றித் தனக்குத் தெரியும் என்றும் தனது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிரித்தானியர்கள் இந்தக் கண்டத்தை ஆதிக்கம் செலுத்துவது அதிகரித்துக்கொண்டிருக்கையில் உள்ளூர்வாசிகளின் பழக்கவழக்கங்களைத் தூற்றுவது அதிகரித்துக்கொண்டே சென்றது, எடுத்துக்காட்டாக மசூதிகளில் விருந்துகளை நடத்துவது, தாஜ் மகாலின் மேல்தளத்தில் படையணி இசைக்கு நடனமாடுவது, சந்தடிமிகுந்த கடைத்தெருக்களில் மக்களை சாட்டைகளைக் கொண்டு விளாசி வழியேற்படுத்துவது (ஜெனரல் ஹென்றி பிளேக் விவரித்தபடி) மற்றும் சிப்பாய்களை தவறாக நடத்துவது என்பன. 1849-ஆம் அண்டில் பஞ்சாப் இணைக்கப்பட்டவுடன், சிப்பாய்களுக்கிடையே பல கட்டத்தில் கலகங்கள் வெடித்து அவை படை பலத்தால் அடக்கப்பட்டன.
இந்திய சுதந்திர போராட்டம் தொடரும்....

நன்றி விக்கிபீடியா...