மௌனமான நேரம்

 

Thursday 31 December 2009

புதுமை காண்போம், புதியன படைப்போம்: கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து!!

Posted by மௌனமான நேரம் | Thursday 31 December 2009 | Category: |
புதுமை காண்போம், புதியன படைப்போம்: கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து!!

தமிழர் வரலாற்றில் பொன்னேடு பதித்த 2009-ஆம் ஆண்டு விடை பெற்று புதிய 2010-ஆம் ஆண்டு பிறக்கிறது. 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும், தமிழக சட்டப் பேரவைக்கு நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் நமது கூட்டணிக்கு தமிழக மக்கள் பெருவாரியாக வாக்களித்து வெற்றியைத் தந்திருக்கிறார்கள்.

2011-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலுக்கு முந்தைய ஆண்டான இந்த 2010-ல் மக்களுக்கு ஆற்ற வேண்டிய அளப்பரிய பணிகளை ஒருக்கணம் எனக்கு நானே எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன்.

2010 ஆம் ஆண்டில்தான் தமிழக சட்டப் பேரவைக்கான புதிய கட்டிடம் திறக்கப்படவுள்ளது. பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் மிகப்பெரிய அளவிலே கட்டப்பட்டு, அதுவும் திறக்கப்பட உள்ளது.

தமிழ்மொழியின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையை மேதினியில் மீண்டும் நிலைநாட்டிடும் திருப்பணியாக- கோவை மாநகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திட அரசு ஆயத்தமாகி வருகிறது. ஏழை எளியோர் 3 கோடியே 28 லட்சம் பேருக்கு ரூ.256 கோடி செலவில் இலவச வேட்டி- சேலை வழங்கும் திட்டத்துடன் 2010-ஆம் ஆண்டு மலர்வது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏழை எளிய சாமானிய மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வரும் இந்த அரசு 2006-க்குப்பின் புதிய வரி விதிப்பு, எதுவும் இல்லாமலேயே, வரிச்சலுகைகள் பல வழங்கி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள், விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6000 நிதியுதவி, ஏழை மகளிர் திருமணத்திற்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி, மகளிர் பொருளாதாரம் மேம்பட சுய உதவிக் குழுக்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு தனித்தனி நல வாரியங்கள் போன்ற நலிந்தோர் நலம் காக்கும் திட்டங்களுடன் அவசர கால மருத்துவ ஊர்தி “108” சேவைத் திட்டம், உயிர்க் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட் டம் ஆகியனவும் மக்களால் பாராட்டப்பட்டு வரவேற்கப்படுகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அரசாணைகள் வாயிலாக 35 புதிய தொழிற்சாலைகள், தமிழமெங்கும் சாலை மேம்பாட்டுப் பணிகள், பாலங்கள், மின் திட்டங்கள், குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடைத் திட்டங்கள் போன்ற பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஆங்காங்கே உருவாக்கப்படுகின்றன.

இந்நாளில் “புதுமை காண்போம், புதியன படைப்போம், புதிய வரலாற்றை உருவாக்குவோம்” என அன்பிற்கினிய தமிழக மக்களை அழைத்து, அனைவருக்கும் எனது உள மார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.