மௌனமான நேரம்

 

Saturday, 12 December 2009

எப்படி திருத்துவது இவர்களை?

Posted by மௌனமான நேரம் | Saturday, 12 December 2009 | Category: |
எப்படி திருத்துவது இவர்களை?

தனி தெலுங்கான அமைக்க மத்திய அரசு பச்சைக் கொடி காட்டியுள்ள நிலையில், நிர்வாக வசதிகளைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரிப்பது நல்லது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று நிருபர்கள் சந்திப்பில், தமிழகத்தை பிரிக்க வேண்டும் என ஒரு சில அமைப்புகள் வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், "சிறியதே அழகானது. பெரிய மாநிலங்களில் இருந்து பிரிக்கப்பட்ட சிறிய மாநிலங்கள் இப்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. எனவே, நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டு மாநிலங்களாகப் பிரிப்பதே நல்லது," என்றார்.

எனினும், தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பன பற்றிய விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது, பல தரப்பில் இருந்தும் தனக்கு நெருக்கடி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, 'தனி தெலுங்கானா என்பது 60 ஆண்டுகால போராட்டம். இதற்கு, இப்போதிருக்கும் மாநிலங்களை சிறிய மாநிலங்களாக பிரிப்பது என்பது அர்த்தமல்ல. மாநிலங்களை பிரிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஒரு மாநிலம் உருவாவதற்கு பல்வேறு படிநிலைகள் உள்ளன. இப்போது இருப்பது வெறும் அடிப்படை நிலைதான்,' என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.


நன்றி: விகடன்


எப்படி திருத்துவது இவர்களை?
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.