Sunday, 6 December 2009
இந்தியாவில் புது இரண்டு சக்கர வாகனங்கள்!!
டி.வி.எஸ்: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் புதிய வகை பைக் மற்றும் ஸ்கூட்டர் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. புதிய பைக் மற்றும் ஸ்கூட்டரின் தனித்துவம் என்னவென்றால், கிளெட்ச் இல்லாமல் தானாக இயங்கும் கியர்கள் கொண்டு இருப்பதே ஆகும். டிவிஎஸ் ஜைவ்...டிவிஎஸ் ஜைவ் மோட்டார் சைக்கிள் கிளெட்ச் இல்லாமல் தானாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக் எந்த கியரில் சென்று கொண்டிருந்தாலும் உடனடியாக நியூட்ரலுக்குக் கொண்டு வர முடியும்.
கியரை படிப்படியாகக் குறைத்து நியூட்ரலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. பைக்கை எந்த கியரில் நிறுத்தினாலும், அதே கியரில் வண்டியை தொடர்ந்து இயக்க முடியும். 110 சிசி என்ஜின், 12 லிட்டர் கொள்ளளவு உள்ள பெட்ரோல் டேங்க் ஆகியவற்றுடன் கூடுதலாக பைக் இருக்கையின் அடியில் பொருள்களை வைத்துக் கொள்ள இட வசதி உள்ளது. இதில் ஒரு குடை, தண்ணீர் பாட்டில், ஃபைல் ஆகியவைகளை வைத்துக் கொள்ளலாம். இதன் விலை ரூ. 41 ஆயிரமாகும்.டிவிஎஸ் வீகோ 110 சிசி என்ஜின், 12 அங்குல அளவுள்ள அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் குடும்பத்தில் உள்ள அனைவரும் எளிதில் ஓட்டக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் பின்புறத்தில் பெட்ரோல் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்க்,செல்போனை சார்ஜ் செய்யும் வசதி உள்ளிட்டவை இதில் உள்ளன. கருப்பு, கருநீலம், கேப்பச்சீனோ ப்ரெüன், சில்வர் உள்ளிட்ட ஐந்து நிறங்கள் கொண்ட இதன் விலை ரூ. 42 ஆயிரம் ஆகும்.
என்பீல்டு: டில்லியில் கிளாசிக் 350 ராயல் என்பீல்டு பைக் அறிமுகப் படுத்தப் பட்டது. எஜ்சர் குரூப் எம்.டி., மற்றும் சி.இ.ஓ., சித்தார்த் லால் மற்றும் பைக் வடிவமைப்பாளர் சிக்கா ஆகியோர் பைக்கை அறிமுகப் படுத்தினர்.
பஜாஜ்: பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஜப்பானின் கவாஸாக்கி நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் பல சொகுசு பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், கவாஸாக்கி பஜாஜ் சார்பில், நின்ஜா 250 ஆர் என்ற பெயரில் புதிய பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த பைக்கின் விலை ரூ.2.69 லட்சமாக இருக்கும். ஐரோப்பிய நடைமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபியூல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பம் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 42 கி.மீ., மைலேஜ் தரக் கூடியது. இந்தியாவில் ஏற்கனவே, யமஹா மற்றும் சுசூகி நிறுவனங்கள் சார்பில் சொகுசு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு போட்டியாக தற்போது, நின்ஜா 250 ஆர் பைக் களத்தில் குதித்து உள்ளது. டெலஸ்கோபிக ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் யுனி டிரக் சஸ்பென்ஷன் ஆகியவை இந்த பைக்கின் முன்பக்க மற்றும் பின் பக்க பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக், கவாஸாக்கி நிறுவனத்தின் தாய்லாந்து தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் ஒன்றாக இணைக்கப்படும். வெளிநாட்டில் இருந்து முழுமையான பைக்காக இறக்குமதி செய்தால், 100 சதவீத வரி செலுத்த வேண்டும். இதை தவிர்ப்பதற்காகவே, உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு முழு மைக்காக உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக 11 சதவீத வரி தான் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் தான், நின்ஜா 250 ஆர் பைக்கின் விலை ரூ.2.69 லட்சம் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.
தொடர்புள்ள இடுகைகள்: வர்த்தகம்
0 பின்னூட்டங்கள்: