Saturday, 12 December 2009
டிசம்பரில் தீபாவளி!!!
மொகாலியில் நடந்த இரண்டாவது "டுவென்டி-20' போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது 28வது பிறந்தநாள் கொண்டாடிய யுவராஜ், "ஆல்-ரவுண்டராக' அசத்தி வெற்றிக்கு பலமாக இருந்தார். இப்போட்டியில் அதிக ரன்களை சேஸ் செய்த இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. இவ்வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட "டுவென்டி-20' தொடர் சமனானது.
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, சேவக் அதிரடி துவக்கம் தந்தார். இவருடன் இணைந்த காம்பிர் (21) துரதிருஷ்டவசமாக ரன்-அவுட்டானார். அடுத்து வந்த தோனி பொறுப்புடன் ஆடினார். மறுமுனையில் இலங்கை பந்து வீச்சை விளாசித் தள்ளிய சேவக், "டுவென்டி-20' அரங்கில் 2 வது அரைசதம் கடந்தார். இவர் 64 ரன்களுக்கு (7 பவுண்டரி, 3 சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய யுவராஜ், தோனியுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். 20 பந்தில் அரை சதம் பதிவு செய்தார் யுவராஜ். "டுவென்டி-20' அரங்கில் இவர் அடிக்கும் 5 வது அரைசதம் இது. இந்த ஜோடி 3 விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்த நிலையில், தோனி அவுட்டானார். 46 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்த இவர், அரை சதம் அடிக்கும் வாய்ப்பை 4 ரன்னில் நழுவவிட்டார்.
அடுத்து வந்த ரெய்னா (9) சொதப்பினார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முதல் பந்தை யுவராஜ் சிக்சருக்கு விரட்ட, 19.1 ஓவரில் 211 ரன்கள் குவித்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. யுவராஜ் 60 (5 சிக்சர், 3 பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 4 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் கைப்பற்றினார்.
நேற்று இலங்கை அணி நிர்ணயித்த 206 ரன்களை "சேஸ்' செய்த இந்திய அணி 211 ரன்கள் குவித்தது. இதன் மூலம் "டுவென்டி-20' அரங்கில் அதிக ரன்களை "சேஸ்' செய்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது. இதற்கு முன் கடந்த 2007 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 205 ரன்களை தென் ஆப்ரிக்க அணி (208 ரன்) "சேஸ்' செய்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.
தொடர்புள்ள இடுகைகள்: விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: