மௌனமான நேரம்

 

Saturday 15 August 2009

பிரதமரின் சுதந்திர தின விழா உரை - ஒரு பார்வை

Posted by மௌனமான நேரம் | Saturday 15 August 2009 | Category: |
நாட்டின் 63-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் உங்கள் பார்வைக்கு:

* கடத்தல்காரர்கள், பதுக்கல்காரர்களுக்கு எச்சரிக்கை.

* பன்றிக் காய்ச்சல் குறித்து பீதி தேவையில்லை.

* 9 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு.

* சவாலைச் சமாளிக்க வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் உதவ கோரிக்கை.

* வறட்சியைச் சமாளிக்க விவசாயிகளுக்கு தேவையான உதவி.

* விவசாயிகள் வங்கிக் கடனை திரும்பச் செலுத்த சலுகை, குறுகிய கால பயிர்க் கடன் வசதி.

* அத்தியாவசிய பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.

* மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி மூலம் 4 சதவீத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் எட்ட உறுதி.

* பட்டினிச் சாவைத் தடுக்க உணவு பாதுகாப்புச் சட்டம்.

* வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சலுகை விலையில் அரிசி, கோதுமை விநியோகம்.

* அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்து உணவு.

* தேசிய கிராமப்புற வேலை உத்திரவாத திட்டம் நகர்ப்புறங்களுக்கு விரிவாக்கம்.

* அனைவருக்கும் கட்டாயக் கல்வி. இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு.

* மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் தேவைகளில் சிறப்புக் கவனம்.

* அனைத்து குழந்தைகளுக்கும் மேல்நிலைக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யத் திட்டம்.

* மாணவர்கள் உயர்கல்வி பயில வங்கிக் கடனுதவி.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக் கடன் வசதி.

* பாரத் நிர்மாண் திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு மூலம் கிராமம் மற்றும் நகரங்கள் மேம்பாடு.

* நாளொன்றுக்கு 20 கி.மீ. நீள சாலை வசதி ஏற்படுத்த இலக்கு.

* ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதி.

* 8 தேசிய இயக்கங்கள் வாயிலாக புவி வெப்பமடைவதால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க முடிவு.

* சூரிய சக்தியை சிறப்பாகப் பயன்படுத்த முடிவு.

* தீவிரவாதத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை.

* தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கு உறுதியான நடவடிக்கை.

* சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த முடிவு.

* சாதி மோதல்களைத் தடுக்கச் சட்டம்.

* பெண் சிசுக் கொலையை தடுக்க நடவடிக்கை.

* மகளிர் மசோதாவை நிறைவேற்ற உறுதி.

* கிராம, நகர பஞ்சாயத்துகளில் மகளிர்க்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்குப் புதிய சட்டம்.

* தேசிய மகளிர் கல்வி திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தத் திட்டம்.

* ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்.

* பிராந்திய ஏற்றத் தாழ்வைக் குறைக்க நடவடிக்கை.

* வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற மாநிலங்களுக்கு நிகராக முன்னேற்ற நடவடிக்கை.

* அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை மேற்கொண்டு இப்பிராந்தியத்தில் அமைதி நிலவ முயற்சி எடுத்தல்.

* தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மேலும் சிறப்புடையதாக்குவதோடு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த நடவடிக்கை.

* கிராமப்புறத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த உரிய நிர்வாக நடவடிக்கை.

* ஒன்றரை ஆண்டில் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை.


[நன்றி: தினமணி]
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.