மௌனமான நேரம்

 

Tuesday, 4 August 2009

காதல் தீ!

Posted by மௌனமான நேரம் | Tuesday, 4 August 2009 | Category: |
அவள் அவனது தோளில் சாய்ந்து இருந்தாள். அவன் அவளது தோளை மென்மையாக பிடித்து அணைத்து இருந்தான். காற்று சிலுப்பிய அவள் கேசத்தை கொஞ்சி கோதிகொண்டிருந்தான்.

அவர்கள் இருவருக்கும் இப்படி லால் பாகில் , அந்த நீர் தேக்கத்தின் அருகில் உள்ள இருக்கையில் அணைத்தபடி அமர்ந்து , அமைதியாக இயற்கையை ரசிக்க பிடிக்கும்.

அவள் விழி மூடி, முகத்தில் மோதும் தென்றலை ரசித்து கொண்டிருந்தாள். அவன் அவள் முகம் பார்த்து பார்த்து ரசித்து கொண்டிருந்தான்... 'என்னவள்......!!!'

இன்று அவளுக்கு பிறந்த நாள். அவளுக்கு பிடித்த நீல நிறத்தில் , ரோஜா பூக்களை தெளித்து போல் ஒரு சில்க் காட்டன் புடவை பரிசளிதிருந்தான் . அவளுக்கு காட்டன் புடவை தன் ரொம்ப இஷ்டம்.


Bidaroo.com
'சுமீம்மா.... இந்த புடவையில் நீ தேவதை மாதிரி இருக்கே .... தெரியுமா...'

'எந்த ஊர் தேவதைடா நீல கலர் புடவ கட்டும்???' சிரித்து கொண்டே கேட்டாள்.

'என் தேவதை... எங்க ஊர் தேவதை..... ' என்றான் அவளை ஆசையாக பார்த்து கொண்டே...

'பாக்றத பாரு...' ... அப்படியொரு வெட்கம் அவளுக்கு.

'அம்மாடிய்... என்னடி இப்படி வெக்க படறே.... '

'சீ.. போடா... நான் ஒன்னும் வெக்கபடலே....' சொன்னாலும் வெட்கம் கூடியதை கண்கள் காட்டி கொடுத்தது...

'நேரமாச்சி.. போலாமா?....'

'போகவே மனசில்லடா... இப்படியே இங்கயே...உன் கூடவே இருக்கணும் போல இருக்கு. ...'

'ம்ம்... இருக்கலாம்தான்..ஆனா கேட் பூட்டிருவான்களே ... பரவயில்லையா?? ' குறும்பாக சிரித்தாள்.

செல்லமாக தலையில் குட்டி விட்டு... அழகாக கன்னத்தில் முத்தமிட்டான்...

'போகலாம்.'.....

சொல்லிக்கொண்டே அருகிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள் அந்த எழுபது வயது இளஞ்சோடிகள்....
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.