மௌனமான நேரம்

 

Friday, 14 August 2009

இந்தியா, பிரிட்டன் இடையே சிக்கன் டிக்கா மசாலாக்கு சண்டை??

Posted by மௌனமான நேரம் | Friday, 14 August 2009 | Category: |
இந்தியா பாரம்பரிய உணவு வகைகளில் சிக்கன் டிக்கா மசாலாக்கு என்று தனி ஒரு இடம் உண்டு. ஆனால் அது தங்களுடைய பாரம்பரிய உணவு என்று பிரிட்டன் சண்டை போடுகிறது.

'இது இந்திய உணவு வகை அல்ல, ஸ்காட்லாந்தின் பாரம்பரிய உணவு' என்று பிரிட்டன் எம்.பி ஒருவர் கூறியுள்ளார். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை பற்றி, இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற ஒரு ஹோட்டல் தலைமை சமையல்காரர் (Chief Cook) கூறுகையில், இது முகலாயர்களின் பாரம்பரிய உணவு என்றும், முகலாயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்த போது தான் சிக்கன் டிக்கா மசாலா கண்டுபிடிக்க பட்டு பிரபலம் ஆனது. எங்கள் முன்னோர்களான முகலாயர்கள் தான் இதை தயார் செய்துள்ளனர் என்கிறார்.


சிக்கன் டிக்கா மசாலா விவகாரம் இன்னும் கொஞ்சம் நாளில், காரம் ஆக போகுது போங்க!!!

அது இருக்கட்டும், உங்களுக்கு சிக்கன் டிக்கா மசாலா தயாரிக்கும் முறை தெரியுமா? தெரியாதவங்க மேலும் படிங்க...

தேவையான பொருட்கள்

சிக்கன் எலும்பில்லாதது - 1/2 கிலோ


கேப்சிகம் - 1


தக்காளி - 2


பெரிய வெங்காயம்- 2


தயிர்- 1 கப்


கான்ஃப்ளார்- 1 டீஸ்பூன்


மல்லி இலை- சிறிதளவு

மல்லி தூள்- 3 டீஸ்பூன்

சீரகம் பொடி- 2 டீஸ்பூன்


மஞ்சள்பொடி- 1/4 டீஸ்பூன்


கசூரிமேத்தி பவுடர்-2 டீஸ்பூன்


சீரகம் -1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு- 3 டீஸ்பூன்

மிளகாய் பொடி- 1 டீஸ்பூன்


பட்டை ஏலம் -சிறிதளவு


முந்திரிபருப்பு- 2 டீஸ்பூன்


லெமன் -1 சிறியது


உப்பு- தேவையான அளவு

தயாரிக்கும் முறை

முதலில் தக்காளி , வெங்காயம், கேப்சிகம் ஆகியவற்றை சதுரமாக சற்று பெரியதாக வெட்டி கொள்ளவும். தக்களியை முந்திரி பருப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பவுலில் மஞ்சள்பொடி,தயிர் ,லெமன், உப்பு, சிறிதளவு எண்ணை போட்டு, மிளகாய் பொடி, கசூரிமேத்தி பவுடர்,மல்லிதூள் ,இஞ்சிபூண்டு ஆகியவற்றை கொடுத்துள்ள அளவில் பாதி எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் கலந்து வெட்டி வைத்துள்ள தக்காளி , வெங்காயம், கேப்சிகம் ஆகியவற்றில் சிறிதளவும், மீதியை சிக்கனிலும் பிரட்டி வைக்கவும்.

ஒரு நான் ஸ்டிக் பானில் சிறிதளவு எண்ணை விட்டு சிக்கனை அதில் போடவும்.சிறிதளவு வெந்தவுடன் தக்களி, வெங்காயம், கேப்சிகம் ஆகியவற்றையும் அதில் சேர்க்கவும். சிறுதீயில் நன்கு வேக வைக்கவும். பிறகு வெங்காயம் மல்லி இலையை பொடியாக வெட்டி வைக்கவும். பிறகு இன்னொரு பானில் எண்ணை விட்டு பட்டை ஏலம் போடவும் பிறகு சீரகம் போடவும். பொரிந்தவுடன் வெட்டி வைத்துள்ள வெங்காயம், உப்பு போட்டு வதக்கவும்.


பிறகு சிறுதீயில் வைத்து ,இஞ்சி பூண்டு,மீதி உள்ள மசாலா வகைகளை சேர்த்து அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பிறகு கார்ன் ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றி 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.


சுவையான சிக்கன் டிக்கா மசாலா ரெடி. மல்லி இலை தூவி பறிமாறவும்..
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.