மௌனமான நேரம்

 

Sunday 23 August 2009

சீனாவின் செல்வாக்கை முறியடிக்க இந்தியா திட்டம்

Posted by மௌனமான நேரம் | Sunday 23 August 2009 | Category: |
தெற்காசிய பிராந்தியத்தில் தொடர்ச்சியாக சீனா தனது ராணுவ முகாம்களை அமைத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளில் அந்த முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானின் கவுடார் பகுதியில் சீனா ஆழ்கடல் துறைமுகம் அமைத்து வருகிறது. அங்கு தனது அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை வைக்க திட்டமிட்டுள்ளது. இலங்கையில் அம்பாத் தோட்டை மற்றும் வங்காள தேசத்தில் உள்ள துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் அண்டை நாடுகளில் துறை முகங்களை அமைத்து அதன் மூலம் கடற்படை தளம் அமைக்க சீனா முயற்சிக்கிறது.

இதை அறிந்து கொண்ட இந்தியா தற்போது விழிப்படைந்துள்ளது. எனவே, தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க இந்து மகா சமுத்திரத்தில் கடற்படை தளம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


பொதுவாக போதை மருந்து கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் மற்றும் கடற் கொள்ளையர்களின் தாக்குதல்களுக்கு மாலத்தீவு ஆளாகி வருகிறது. அவர் களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்தியாவுடன் சேர்ந்து கடற்படையை பலப்படுத்த மாலத்தீவு விரும்புகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் மாலத்தீவில் உள்ள முன்னாள் விமானப்படை தளத்தை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ஏ.கே. அந்தோணி சமீபத்தில் மாலத்தீவு சென்று வந்தார்.

இந்த தகவலை லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது.
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.