மௌனமான நேரம்

 

Sunday 16 August 2009

பூனைக்கு மணி கட்ட போவது யார்?

Posted by மௌனமான நேரம் | Sunday 16 August 2009 | Category: |
மேற்கத்திய நாடுகளின் விமான நிலையங்களில் இந்திய வி.ஐ.பிகள் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவமானப்படுத்தப்படுவது இது முதல் முறை இல்லை.

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அன்று, அமெரிக்காவின் காண்டினெண்டல் ஏர்லையன்ஸ் மூலம் புதுதில்லியிலிருந்து நியூயார்க் செல்வதற்காக டாக்டர் அப்துல் கலாம் இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். டாக்டர் அப்துல் கலாம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, வி.வி.ஐ.பி அந்தஸ்தில் உள்ளவர் எனத் தெரிந்தும் அவர் ஒரு சாதாரண பயணி போல் நடத்தப்பட்டிருக்கிறார்.

விமான நிலையத்தில் உள்ள ஏரோ பிரிட்ஜில் வேண்டுமென்றே காத்திருக்க வைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு முழுமையான பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவை எல்லாவற்றிற்கும் டாக்டர் கலாம் எப்போதும் போல் கண்ணியமாக ஒத்துழைப்பு தந்துள்ளார்.

இந்த அவமானப்படுத்தும் நிகழ்ச்சி நடந்திருப்பது இந்தியாவில் என்பது நமக்கு நேர்ந்த அவமானம்.


முன்பு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசை அமெரிக்க விமான நிலையத்தில் ஆடையைக் கழற்றி சோதனை செய்து அவமானப்படுத்தினார்கள்.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மாஸ்கோ விமான நிலையத்தில் அவமானப்படுத்தினார்கள்.

தற்போது இந்தித் திரைப்பட நடிகர் ஷாருக்கானுக்கு சுதந்திரத் தினத்தன்று அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் இறங்கிய அவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து வைத்து சுமார் 2 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கான் என்பது முஸ்லிம் பெயர் என்பதால் அந்த நாட்டின் பொதுவான சோதனைக்கான பட்டியலில் கான் என்ற பெயர் இடம் பெற்றிருப்பதால் தான் இது போன்ற சோதனைக்கு உள்ளானதாக ஷாருக்கான் கூறினார்.

ஏற்கெனவே மலையாள நடிகர் மம்மூட்டிக்கு இது போன்ற கசப்பான அனுபவம் நடந்துள்ளது. அவரது குடும்பப் பெயர் இஸ்மாயில் என்று இருந்ததால் அவர் சோதனைக்கு உள்ளானார்.

".... இந்தியரைப் போன்ற தோன்றம் இல்லை என்று தெரிவித்து தன்னிடம் ஒரு முறை விசாரணை நடத்தினர்" என்று இந்தி பின்னணி பாடகர் முகேசின் பேரன் நடிகர் நீல் நிதின் முகேஷ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி பேச போனால், எல்லாருடைய பாதுகாப்புக்கு என்று தான் இதை செய்தோம், இல்லை நாங்கள் செய்கிறோம் என்று எல்லோரும் சப்பை கட்டு கட்டுவார்கள்...

இது போன்ற கசப்பான சம்பவம் ஒரு அமெரிக்க வி.ஐ.பிக்கோ, மேற்கத்திய நாட்டு வி.ஐ.பிக்கோ நடந்து இருந்தால், என்ன ஆகி இருக்கும்?


ஒன்று, உலக வி.ஐ.பிகள் பட்டியல் எடுத்து, எல்லா வி.ஐ.பிகளும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்...இல்லை, எல்லோரும் சமம்.. என்று எல்லா வி.ஐ.பிகளும் மக்களோடு மக்களாக சோதனைக்கு உட்படுத்தவேண்டும்..


இந்த முடிவு உலகளாவிய அளவில் இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்...
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.