Sunday, 23 August 2009
அவர் வேலை விஷயமாக மொபட்டில் ராசிபுரம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டார்.
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரியானூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு மூளை சாவு ஏற்பட்டு இறந்தார்.
மனதில் ஒருபுறம் வேதனை இருந்தாலும், மகனின் உடல் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்தால் அவர்கள் மூலம் மகனை காணலாமே என தண்டபாணி கருதினார்.
இதயம் உள்பட அனைத்து உறுப்புகளும் நன்கு செயல்பட்டு கொண்டு இருந்தது. இதை அறிந்த தினேஷ்குமாரின் தந்தை தண்டபாணி மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.
இதுகுறித்து சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். தினேஷ்குமாரின் இருதயம், கண், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். அவரது உடலின் உறுப்புகளை ஆபரேஷன் மூலம் அகற்றி மற்றவர்களுக்கு பொருத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதற்காக சென்னை வந்துள்ள தினேஷ்குமாரின் தந்தை தண்டபாணியிடம் இன்று காலை கையெழுத்து வாங்கியுள்ளனர்.
ஒரே மகனை இழந்து வாடும் தண்டபாணி கண்ணீர் மல்க கூறியதாவது:-
எனது மகன் தினேஷ்குமார் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் எனது மனைவியும், நானும் கதறி அழுதோம். அவன் இறந்தது பற்றி என் மனைவியிடம் கூறுவதற்கு எனக்கு தைரியம் வரவில்லை.
இறந்த பின்னர் அவனது உடல் உறுப்புகள், உயிருக்காக போராடும் வேறு ஒருவருக்கு பயன்உள்ளதாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். இதையடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தோம். இதன்மூலம் எனது மகன் எங்கோ ஒரு மூலையில் உயிருடன் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது.
எனது மகனிடம் இருந்து எடுக்கப்படும் உடல் உறுப்புகள் ஏதாவது ஒரு நோயாளிக்கு பயன்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புள்ள இடுகைகள்: செய்தி
0 பின்னூட்டங்கள்: