மௌனமான நேரம்

 

Sunday, 9 August 2009

நடிகராக அப்துல் கலாம்...

Posted by மௌனமான நேரம் | Sunday, 9 August 2009 | Category: |
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், "மேய்ன் கலாம் ஹூன்" (Mein Kalam Hoon) என்ற பாலிவுட் படத்தில் தோன்றி நடிக்கிறார். இப்படத்தில் சிறு குழந்தைகளுடன் நடிக்கும் கலாம், நடிக்க ஒத்துக்கொண்டதே குழந்தைகளுக்காக தானாம். (கலாம், நமக்கு கிடைத்த இரண்டாவது நேரு.)

திரையுலகில் அறிமுகமாகி, பின் பிரபலமாகி, அரசியலில் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை பிடித்த நடிகர்கள் கூட்டம் ஒரு பக்கம் இருக்க, விஜயகாந்த், சரத், சிரஞ்சீவி என அடுத்த கூட்டம் போட்டி போட, இது தான் இன்றைய நிலை..

ஆனால் இவர்களில் இருந்து எல்லாம் மாறுபட்டு, கலாம் திரைப்பட உலகில் கால் பதிக்கிறார். "மேய்ன் கலாம் ஹூன்" (Mein Kalam Hoon) என்ற பாலிவுட் படத்தில் தோன்றி நடிக்கிறார்.

ஏராளமான குழந்தைகள் நடிக்கும் இந்தப் படத்தை மாதவ் பாண்டியா இயக்குகிறார். ஸ்மைல் அறக்கட்டளை இந்தப் படத்தை தயாரிக்கிறது. குழந்தைகள் நடிக்கும் படம் என்பதால் குழந்தைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கலாம் உடனடியாக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

Fujitsu Computer Systems Corporation


கலாம், அப்துல் கலாமாகவே தோன்றி நடிக்கும் இந்தப் படத்தில் கலாமால் ஈர்க்கப்படும் ஒரு ராஜஸ்தானை சேர்ந்த சிறுவன் பெரிய அளவில் கனவு காண்பது தான் இப்படத்தின் கதை.

ஜனாதிபதி பொறுப்புக்கு பிறகும் புகழோட வாழும் நமது கலாம் மேலும் பல்லாண்டு புகழோட வாழ எமது வாழ்த்துக்கள்!!!
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.