Monday, 24 August 2009
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் பீஷ்மா கவச வாகனம் 2004 - ம் ஆண்டு ராணுவத்திடம் வழங்கப்பட்டது.
பீஷ்மா பீரங்கிகள் "டி - 90' வகையைச் சேர்ந்தவை. பாதுகாப்பு, வாகன ஓட்டம், போரிடும் திறன்கள் உள்ளிட்டவற்றில் நவீனம் புகுத்தப்பட்டுள்ளது. இந்த பீஷ்மா பீரங்கிகள் ஓரே குழலைப் பயன்படுத்தி வெடிபொருள்களைச் சுடுவதுடன், நிர்ணயிக்கப்பட்ட ஏவுகணையை சரியாகத் தாக்கும் திறன் கொண்டதாகும்.
இரவு நேரத்தில் போரிடுவதற்கு வசதியாக புதிய கருவிகள் இதில் உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் பரிமாற்றத்துக்கான ரேடியோ கருவிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ரசாயன, உயிரியியல் மற்றும் அணுக்கதிர் வீச்சு தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடிய அதிநவீன அம்சங்களும் இதில் உள்ளன.
இந்த ரக பீரங்கிகள் 35 ஆண்டுகள் வரை திறமையாகச் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இப்போது பத்து பீரங்கிகளை ராணுவத்திடம் வழங்கியுள்ளது. ஆண்டொன்றுக்கு 100 பீஷ்மா பீரங்கிகளை தயாரிக்க கனரக வாகன தொழிற்சாலை திட்டமிட்டுள்ளது. இதற்கான மொத்தச் செலவு ரூ.15 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆவடி எச்விஎப் தொழிற்சாலை, விஜயந்தா, அஜய், அர்ஜுன் என பல வகையான நவீன பீரங்கிகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
தொடர்புள்ள இடுகைகள்: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: